இரும்பை தேடும் கண்ணாடி – அன்பிரேக்கபில் (Unbreakable) – Movie Review

இரும்பை தேடும் கண்ணாடி – அன்பிரேக்கபில் (Unbreakable) – Movie Review

பாக்காம விட்றாதீங்க – அன்பிரேக்கபிள்: படிக்காத மக்கு பையனுக்கு புத்திசாலி பையனை பார்க்க பிரமிப்பாக இருக்கும். அதேபோல் இப்படியும் ஒரு  மக்கு எப்படி இருக்கும் என்று புத்திசாலியும் ஆச்சர்யபடுவான். ஏனென்றால் எதிரெதிர் திசைக்கு ஈர்ப்பு அதிகம். கண்ணாடியைப் போன்று எளிதில் உடைந்துவிடும் எலும்புகளுடன் பிறக்கும் ஒருவனும், எப்போதும் உடைந்துபோகாத இரும்பு போன்ற உடலுடன் ஒருவனும் சந்திக்க நேர்ந்தால் என்னவாகும் என்பதுதான் அன்பிரேக்கபிள். அங்கங்கே நைட் சியாமளனின் டச் இருப்பதால் பார்க்கவேண்டிய பட்டியலில் சேர்கிறது அன்பிரேக்கபிள். உடைந்த எலும்புகளுடன் பிறக்கிறான் எலிஜா. அவனுக்கு ஆஸ்டியோஜெனிசிஸ் இம்பெர்ஃபெக்டா என்ற எலும்புக் குறைபாடு என்பதால், ஜாக்கிரதையாக வளர்க்கவேண்டும்  என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அடிக்கடி எலும்புகள் உடையும் எலிஜாவை கண்ணாடி பையன் என்று அழைக்கிறார்கள். எலிஜா வளர்ந்து சாமுவேல் ஜாக்‌சனாக மாறுகிறான். காமிக்ஸ் புத்தகங்களுக்கு படங்கள் வரைகிறான். வாழ்க்கையில் அதிக அளவில் எலும்பு…

Read More

கடவுளைவிட காதல் மேலானது – பாஜிராவ் மஸ்தானி

கடவுளைவிட காதல் மேலானது – பாஜிராவ் மஸ்தானி

பாக்காம விட்றாதீங்க – பாஜிராவ் மஸ்தானி: காதல் என்பது அமிர்தமும் அமிலமும் கலந்த மழை. எப்போது, எப்படி, யார் மீது பொழியும் என்று தெரியாது. ஆனால் காதல் மழையில் சிக்கியவர்கள் மீண்டதாக சரித்திரம் இல்லை. அப்படித்தான் திருமணம் முடிந்து மனைவியின் மீது மகாபிரியமுடன் இருக்கும் ஒரு போராளிக்கு திடீரென காதல் வருகிறது. அதன்பிறகு அவன் என்னவாகிறான் என்பதுதான் பாஜிராவ் மஸ்தானி என்ற வரலாற்று கதை. இப்போது வித்தியாசமான திரைக்கதையும் பிரமாண்டமும் மட்டுமே சினிமாவாக ரசிக்கப்படுகிறது. அதனால் காலத்திற்கேற்ப மிகவும் எளிமையான ஒரு கதையை, பிரமாண்ட படைப்பாக்கி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கதையைத் தொடங்கி, க்ளைமாக்ஸ் மட்டும் தன்னுடைய கற்பனைக்கு படமாக்கியிருக்கிறார் பன்சாலி. சத்ரபதி ஷாஹூவின் அரண்மனையில் அடுத்த பீஷ்வா யார் என்ற விவாதம் நடக்கிறது. தந்தைக்குப் பிறகு அந்தப் பதவி…

Read More

சினிமா மேஜிக் – தி பிரஸ்டீஜ் (The Prestige) – Movie Review

சினிமா மேஜிக்  – தி பிரஸ்டீஜ் (The Prestige) – Movie Review

பாக்காம விட்றாதீங்க – தி பிரஸ்டீஜ்: தொழிலில் போட்டிக்குப் பதிலாக பொறாமை புகுந்தால் என்னவாகும் என்பதை அதகளமாக கிறிஸ்டோபர் நோலன் காட்டியிருக்கும் படம்தான் தி பிரஸ்டீஜ். நிமிடத்திற்கு நிமிடம் திடுக் திருப்பங்கள், பிளாஸ்பேக்கிற்குள் பிளாஸ்பேக், வேண்டுமென்றே குளறுபடியாக்கப்பட்ட திரைக்கதை, கொஞ்சம் விஞ்ஞானம், நிறைய மேஜிக் என இரண்டு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான கதையை ஒரே படத்தில் திணித்திருக்கிறார் நோலன். கண்டுபிடிப்புகளின் தந்தை என்று போற்றப்படும் எடிசனால் அழித்தொழிக்கப்பட்ட விஞ்ஞானி டெஸ்லாவிற்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்திருக்கிறார் நோலன். மேஜிக் தொழில் கொடிகட்டிப் பறந்த 19ம் நூற்றாண்டில் கதை நடக்கிறது. ஒரு மேஜிக் நிறுவனத்தில் ஆஞ்சியராக வரும் ஹியூ ஜாக்மேனும் பார்டனாக வரும் கிறிஸ்டியன் பேலும் வேலை செய்கிறார்கள். அந்த மேஜிக் ஷோவின் பெரிய அட்ராக்‌ஷனாக இருக்கிறாள் ஆஞ்சியரின் மனைவி ஜூலியா. தண்ணீர் தொட்டிக்குள் கை, காலை கட்டி இறக்கினாலும் தப்பிக்கும்…

Read More

மலையாள காதல் கோட்டை – சார்லி (Charlie) – Malayalam Movie

மலையாள காதல் கோட்டை – சார்லி (Charlie) – Malayalam Movie

பாக்காம விட்றாதீங்க – சார்லி: படம் முழுவதும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாமல், கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே காதலர்கள் ஒன்றுசேர்வது தமிழுக்கு பழசு என்றாலும், நெஞ்சை அள்ளும் வகையில் இளமை கொஞ்சுகிறது மலையாள சார்லி. கதை இல்லாவிட்டாலும் ரசனையான திரைக்கதையால் துருதுரு துல்கரும், படபட பார்வதியும் கிறங்கவைக்கிறார்கள். வீட்டுக்கு உருப்படாத பிள்ளையாக கருதப்படும் பார்வதி, கட்டுக்கோப்பான குடும்பம், கல்யாணம், குழந்தை என்றெல்லாம் இல்லாமல் புதுசாக வாழ ஆசைப்படுகிறாள். கல்யாண ஏற்பாடு நடப்பது தெரிந்ததும் வீட்டைவிட்டு, ஊரைவிட்டு வெளியேறுகிறாள். ஒரு மேன்ஷனில் முன்பு துல்கர் தங்கியிருந்த அறையில் பார்வதி தங்குகிறாள். கலைப்பொருட்களின் குப்பைக்கூடமாக கிடக்கும் அந்த அறையைக் கண்டு களேபரமாகிறாள். அதனை சுத்தப்படுத்த முயற்சிக்கும்போது ஒவ்வொரு பொருளும் அவளுக்கு புதுப்புது அர்த்தம் கொடுக்கிறது. அங்கே கிடைக்கும் ஒரு ஓவியக் கதையை படித்து ஆச்சர்யத்தில் மூழ்குகிறாள். அந்தக் கதை இப்படித்தான் இருக்கிறது. துல்கர்…

Read More

காலத்தை வென்ற இசை – த சவுண்ட் ஆஃப் மியூசிக் (The Sound of Music)

காலத்தை வென்ற இசை – த சவுண்ட் ஆஃப் மியூசிக் (The Sound of Music)

பாக்காம விட்றாதீங்க – த சவுண்ட் ஆஃப் மியூசிக்: மொழி தெரியாதவரையும் ரசிக்கவைப்பதுதான் நல்ல சினிமா. இசை பற்றிய அரிச்சுவடி இல்லாதவரையும் தாளம் போடவைப்பது நல்ல இசை. இந்த இரண்டும் சேர்ந்த அற்புத கலவையாக, காலத்தை வென்றுநிற்கும் இசைக் காவியம் த சவுண்ட் ஆஃப் மியூசிக். முதல் முறை பார்க்கும்போது சிலிர்க்கவைக்கும் சில படங்கள், அடுத்தடுத்த முறை பார்க்கும்போது மிகவும் சாதாரணமாகத் தெரியும். அதே படத்தை சில வருடங்கள் கழித்துப்பார்த்தால், சிரிப்புதான் வரும். இந்த குப்பையை முன்பு ரசித்திருக்கிறோமே என்று தோன்றும். ஆனால் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் எப்போதும் புதுமையாகத் தெரியும், காதலும் இசையும் கலந்த சினிமா காவியம் த சவுண்ட் ஆஃப் மியூசிக். இந்தப் படத்தின் கதையை நாலே வரிகளில் முடித்துவிடலாம். இசை மீதும் இயற்கையிடமும் காதல் கொண்டவள் கன்னிகாஸ்த்ரி மரியா. விளையாட்டுப் புத்தியால் மதக்…

Read More

இதுதாண்டா ராஜ நடை – தி வாக் (The Walk)

இதுதாண்டா ராஜ நடை – தி வாக் (The Walk)

பாக்காம விட்றாதீங்க – தி வாக்: கம்பி மீது நடப்பவர்களை சர்க்கஸில் பார்த்து பிரமிப்பதுடன் மறந்துபோவதுதான் மனித சுபாவம். இந்தியாவைப் பொறுத்தவரை பிச்சை எடுப்பவர்களின் யுக்தியாகத்தான் இருக்கிறது கம்பி மீது நடக்கும் கலை. இசை, ஓவியம், கவிதை போன்று கம்பி மீது நடப்பதையும் உயரிய கலையாக பார்க்கும் எண்ணத்தை அழுத்தம்திருத்தமாக மனதில் விதைக்கும் படம் தி வாக். ஒரு சாதனை மனிதனின் வாழ்க்கையை படமாக்கும்போது, அது டாக்குமென்ட்ரியாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. அப்படி நேர்ந்துவிடாமல்  விறுவிறுப்பான திரில்லர் போன்று படமாக்கியிருப்பதால், பார்க்கவேண்டிய பட  வரிசையில் சேர்கிறது தி வாக். சுமார் 40 வருடங்களுக்கு முந்தைய பாரீஸில் கதை தொடங்குகிறது. ஒரு சர்க்கஸில் கம்பி மீது நடப்பவனை பார்த்து பிரமிக்கிறான் பாரீஸ் நகரில் வசிக்கும் சிறுவன் பிலிப். மரங்களுக்கு இடையே கயிறு கட்டி தானும் நடப்பதற்கு பழகுகிறான் பிலிப்….

Read More

ஒரு முத்தத்தின் கதை – மேலிஃபிசன்ட்

ஒரு முத்தத்தின் கதை – மேலிஃபிசன்ட்

பாக்காம விட்றாதீங்க  – மேலிஃபிசன்ட்: பாப்கார்ன் மீது மிளகாய் பொடி தூவுவது போன்று, குழந்தைகளை குதூகலப்படுத்தும் சினிமாக்களில் நீதி போதனையும் இணைந்தே இருப்பது சகஜம். அளவு சட்டத்தை தாண்டிவிடாமல் பாசத்தின் மகிமையை குழந்தைகளுக்கு எடுத்துச்சொன்ன வகையில் முக்கியத்துவம் பெறுகிறது மேலிஃபிசன்ட் திரைப்படம். இப்படியொரு படத்தில் நடித்ததற்காக உதட்டழகி ஏஞ்சலினா ஜோலிக்கு முத்தம் கொடுக்க நம்மால் முடியாது என்றாலும் ஜோராக கைதட்டி பாராட்டு தெரிவிக்கலாம். வினோத உயிரினங்களும் வித்தியாசமான தேவதைகளும் நிரம்பிய ஒரு நாட்டில் வசிக்கிறாள் மேலிஃபிசன்ட்டாக வரும் ஏஞ்சலினா. வித்தியாசமான கொம்பு, வலிமையான இறக்கைகளுடன் விசித்திரமாக காட்சிதரும் தேவதையான ஏஞ்சலினா, மூர்ஸ் நாட்டிற்கு தலைவி இல்லை என்றாலும், அவள் அன்புக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்கிறார்கள். இறக்கையை சுழற்றிக்கொண்டு ஜிவ்வென்று வானைத் தொடுவதும் அடுத்தநொடி சட்டென்று சருகி பூமியில் ஸ்டைலாக நிற்பதுமான உடல் மொழியில் அசத்துகிறாள் ஏஞ்சலினா. அவளுக்கு மட்டுமின்றி அத்தனை…

Read More

காதல் ராட்சஷி – ஹெவன்லி ஃபாரஸ்ட் (Heavenly Forest)

காதல் ராட்சஷி – ஹெவன்லி ஃபாரஸ்ட் (Heavenly Forest)

பாக்காம விட்றாதீங்க  – ஹெவன்லி ஃபாரஸ்ட்: சாக்லேட்டை எந்தப் பக்கம் கடித்தாலும் இனிக்கும் என்பதுபோல் காதலை எந்த மொழியில் பார்த்தாலும் ரசிக்கலாம் என்பதற்கு உதாரணம் ஹெவன்லி ஃபாரஸ்ட் என்ற ஜப்பானிய மொழிப் படம். கதையில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும் உலகத் திரைப்படங்களில் நீங்கள் பார்த்திராத வித்தியாசமான காட்சியமைப்பு கொண்ட படம் என்று உறுதியாக சொல்லலாம். வாருங்கள் காதல் வனத்திற்குள் நுழையலாம். கல்லூரிக்கு முதல் நாளே தாமதமாக வருகிறான் நாயகன் மெகோடா. அதனால் வகுப்புக்குள் நுழைவதற்கு விருப்பமின்றி கல்லூரியை சுற்றி வருகிறான். அப்போது பரபரப்பாக கார்கள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சாலையை கடப்பதற்காக கையைக் காட்டியபடி நிற்கிறாள் சிறுமியாகத் தெரியும் சிஷரு. ஷீப்ரா கிராசிங் அருகே மட்டுமே வாகனங்கள் நிற்கும், அங்கே ரோட்டை கிராஸ் செய்யலாம் என்று அழைக்கிறான் மெகோடா. ஆனால் சிஷருவோ, நான் ரோட்டை கிராஸ் செய்வதற்காக…

Read More

கல்யாணம் ஆனவரா இயேசு? – தி டாவின்சி கோட் (The Da Vinci Code)

கல்யாணம் ஆனவரா இயேசு? – தி டாவின்சி கோட் (The Da Vinci Code)

பாக்காம விட்றாதீங்க – தி டாவின்சி கோட்: தேவனின் மைந்தனாக கருதப்படும் இயேசு நாதரைப் பற்றி ஏடாகூடமாக கதை எழுதுவது பெரிதல்ல. ஆனால் அதனை படமாக எடுத்து வெளியிடுவதற்கு செம தில் இருக்கவேண்டும். ஏனென்றால் படம் வெளியாகாமல் தடை செய்யப்படும் அபாயம் உண்டு. பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பையும் வெறுப்பையும் சம்பாதிக்க நேரிடலாம். ஒரு சாராரின் நம்பிக்கையை உடைத்து, அவர்களது உணர்வுகளுடன் விளையாடக்கூடாது என்று நடுநிலையாளர்களும் படத்தை ரசிக்க மறுக்கலாம். இத்தனை அபாயங்களைத் தாண்டியும் படம் எடுத்து வெளியிட்ட துணிச்சலுக்காகவே  பார்க்கவேண்டிய படம் தி டாவின்சி கோட். காலகாலமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தேவ ரகசியத்தைத் தேடி பாரீஸில் இருக்கும் பழங்கால மியூசியம் வருகிறான் சிலாஸ். துப்பாக்கி முனையில் மியூசியத்தின் காப்பாளரை மிரட்டுகிறான். உயிர் பயத்தில் அவர் ரகசியத்தை சொன்னதும் சுட்டுவிட்டு தப்புகிறான். மரணத்தின் பிடியில் இருக்கும் காப்பாளர்,…

Read More

ஜீனியஸ் இல்லே, அதுக்கும் மேல – குட் வில் ஹன்டிங் (Good Will Hunting)

ஜீனியஸ் இல்லே, அதுக்கும் மேல – குட் வில் ஹன்டிங் (Good Will Hunting)

பாக்காம விட்றாதீங்க – குட் வில் ஹன்டிங்: தான் ஒரு ஜீனியஸ் என்பது தெரிந்தும், அதனை ஒரு பொருட்டாக மதிக்காமல், இயல்பான வாழ்க்கை வாழ விரும்புபவன் மட்டுமே நிஜமான ஜீனியஸ் என்பதை நறுக்கென்று சொல்லியிருப்பதால், குட் வில் ஹன்டிங் பாக்கவேண்டிய படமாக மாறிவிட்டது.  தற்கொலை செய்து செத்துப்போன ராபின் வில்லியம்ஸின் அற்புதமான நடிப்பும் போனசாக கிடைப்பதால்,  டபுள் சந்தோஷத்துடன் படத்தைப் பார்க்கலாம். புத்தகத்தை மேலோட்டமாக படித்தாலே சட்டென்று பத்திக்கொள்ளும் கற்பூர புத்தி படைத்தவன் நாயகன் வில் ஹன்டிங்காக வரும் மேட் டாமன் (எங்கள் பாக்கவே பாக்காதீங்க பக்கத்தில் இடம்பெற்ற எலிசியம் பட நாயகனேதான்). உலகப்புகழ் பெற்ற எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் டாமன், மற்ற நேரங்களில் அடாவடி செய்கிறான். சந்தோஷமாக வாழ்வதற்காக மனம் போன போக்கில் நண்பர்களுடன் சேர்ந்து கூத்தடிக்கிறான். எப்படிப்பட்ட சிக்கல் வந்தாலும் தன்னால் தப்பிக்கமுடியும்…

Read More