ராஜமெளலி எனும் அற்புதன் – பாகுபலி2 – 78 மார்க்

ராஜமெளலி எனும் அற்புதன் – பாகுபலி2 – 78 மார்க்

முதல் இனிப்பு தந்த சுவையை இரண்டாம் இனிப்பு தருவதில்லை என்ற கருத்தை பாகுபலி இரண்டாம் பாகத்தில் உடைத்திருக்கிறார் ராஜமெளலி.  கண்களால் காணும் கனவை காட்சியாக மாற்றும் வித்தை ராஜமெளலிக்கு  பிரமாதமாக கைவந்திருக்கிறது.  அதனால் பிரமாண்டத்துக்கும் அப்பால் கனவு கண்டு, அதனை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். பாகுபலி முதல் பாகத்தில் என்ன நடந்தது என்பதை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல்  இரண்டாம் பாகத்தை ஒரு புதிய படமாகவே நினைத்ததில் புத்திசாலித்தனம் தெரிகிறது. பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற ஒரு வரி மட்டும்தான்  முதல் பாகத்தின் தொடர்ச்சி. நெஞ்சை தொடும் வகையிலும், நம்பகத்தன்மை கெடாமலும், படத்தின் எந்த ஒரு கேரக்டரின் தன்மை மாறாமலும் விடை அளித்ததால், இந்தப் படம்  வெற்றியைத் தொட்டுவிட்டது. பாகுபலியாக வரும் பிரபாஸ் வாழ்க்கையில் இனியொரு முறை இத்தனை சிறப்பான பாத்திரம் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். அனுஷ்காவை பார்த்ததும் காதல்…

Read More

இங்கிலீஸ் பராசக்தி – 12 ஆங்ரி மென் (12 Angry Men)

இங்கிலீஸ் பராசக்தி – 12 ஆங்ரி மென் (12 Angry Men)

பாக்காம விட்றாதீங்க – 12 ஆங்ரி மென். தமிழ்நாட்டில் சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்தின் நீதிமன்ற காட்சிகள் நாட்டையே குலுக்கியது என்பார்கள். அப்படி சொல்பவர்களை கட்டிப்போட்டு இந்தப் படத்தை பார்க்க வைக்க வேண்டும். சினிமாவை  விஷுவல் மீடியம் என்பார்கள். வசனங்களைவிட காட்சிக்குத்தான் முக்கியத்துவம் வேண்டும் என்று அழுத்திச்சொல்வார்கள். அப்படியெல்லாம் சினிமாவுக்கு எந்த இலக்கணமும் தேவையில்லை, சொல்வதை திருந்தச் சொன்னால் போதும் என்று அழுத்தமாக பதிய வைத்திருக்கும் படமே 12 ஆங்ரி மென். தூக்குத் தண்டனைக்கு எதிராக ஆயிரத்தெட்டு கருத்தரங்குகள் போடுவதைவிட, இந்தப் படத்தை போட்டுக்காட்டினால் போதும். சமீபத்தில் 18 வயதை கடந்த ஒருவன், தன் சொந்த அப்பாவை கொன்றுவிட்டதாக வழக்கு நடக்கிறது. அவன் கத்தியால் குத்தியதை எதிர் ஃபிளாட்டில் இருக்கும் ஒரு பெண் பார்த்ததாக சாட்சி சொல்கிறாள். ஆனால் அப்போது ஒரு டிரெயின் கடந்துபோனதாகவும், ஒவ்வொரு பெட்டிக்கு…

Read More

தி பெர்க்ஸ் ஆஃப் பியிங் அ வால்ஃப்ளவர் – பாக்காம விட்றாதீங்க – (The Perks of Being a Wallflower)

தி பெர்க்ஸ் ஆஃப் பியிங் அ வால்ஃப்ளவர் – பாக்காம விட்றாதீங்க – (The Perks of Being a Wallflower)

பாக்காம விட்றாதீங்க – தி பெர்க்ஸ் ஆஃப் பியிங் அ வால்ஃப்ளவர் இந்த உலகில் மூன்றில் இரண்டு  பெண் குழந்தைகள், 10 வயதுக்குள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்று வருத்தப்படும் புள்ளிவிபர புலிகள், ஆண் குழந்தைகளின் பாதிப்பை கணக்கில் எடுப்பதில்லை. ஆண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவினால் ஏற்படும் பாதிப்பை கவித்துவமாகவும் கலகலப்பாகவும் சொல்லியிருக்கும் படம், தி பெர்க்ஸ் ஆஃப் பியிங் அ வால்ஃப்ளவர். தலைப்பை போலவே  படம் மனதை மயக்குகிறது. புதிய பள்ளியில் சேரும் சார்லி (லோகன் லெர்மென்) இயல்பாகவே தனிமை விரும்பி. இனியாவது அனைவருடனும் சேர்ந்து வாழும் எண்ணத்துடன் பள்ளிக்கு வருகிறான். ஆனால் தயக்கமும் கூச்சமும் கொண்ட சார்லியால் யாருடனும் நட்பாக பழகமுடியவில்லை. எப்போதும் தனியனாக இருக்கிறான், ஆனால் இந்த விஷயம் தாய், தந்தையருக்கு கவலை தரக்கூடாது என்பதால், கலகலப்பாக இருப்பது போல் நடிக்கிறான். சார்லி மிகவும்…

Read More

பாக்காம விட்றாதீங்க – காந்தி – அஹிம்சையின் தரிசனம் (Gandhi Movie Review)

பாக்காம விட்றாதீங்க – காந்தி – அஹிம்சையின் தரிசனம் (Gandhi Movie Review)

ரூபாய் நோட்டுகளில் மட்டுமே மகாத்மா காந்தியை பார்த்திருக்கும் இளைய சமுதாயத்தினருக்கு நிஜமான காந்தியை அறிமுகப்படுத்திய பெருமை ரிச்சர்டு அட்டன்பரோவுக்கு உண்டு. இந்தியர்களை அடக்கியாண்ட வெள்ளையர்கள் கூட்டத்தில் இருந்து ஒருவர்தான் தேசத்தந்தை காந்தியை பற்றி திரைப்படம் எடுத்தார் என்பதை வேதனையுடன் அல்லது பெருமையுடன் பதிவு செய்யலாம். ஆயிரம் புத்தகங்கள் கொடுக்காத விழிப்புணர்வை ஒரு திரைப்படம் கொடுத்துவிட முடியும் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் காந்தி. ஒரு பரதேசி போன்று தோற்றமளிக்கும் ஒரு நபரை பற்றி படமெடுப்பதற்கு எப்படி பணம் கொடுக்கமுடியும் என்று பெரிய சினிமா நிறுவனங்கள் எல்லாம் கைவிரித்தபோதும், தன்னுடைய சேகரிப்புகளையும் அரிய கலை பொக்கிஷங்களையும் விற்பனை செய்து சொந்தமாக இந்த படத்தை தயாரித்தார் அட்டன்பரோ. ஆங்கிலேயராக இருந்தாலும் காந்தியை மிகச்சரியாக காட்டியதற்காக அட்டன்பரோவுக்கு ஒவ்வொரு இந்தியனும் கடமைப்பட்டிருக்கிறான். தேசத் தந்தை காந்தி பிரார்த்தனை கூடத்திற்கு வேகவேகமாக செல்லும்போது கோட்சேவால்…

Read More

பாக்காம விட்றாதீங்க – ஆக்‌ஷன் சூப்பர் ஸ்டாரின் என்டர் த டிராகன் (Enter the Dragon)

பாக்காம விட்றாதீங்க – ஆக்‌ஷன் சூப்பர் ஸ்டாரின்  என்டர் த டிராகன் (Enter the Dragon)

தற்காப்புக்கலையின் உச்சத்தை தொட்டவரான புரூஸ் லீ, தத்துவம் முதுகலை படித்தவர் என்பதும் ஆழ்ந்த தத்துவ ஞானம் உடையவர் என்பதும் பலருக்கு தெரியாது. கராத்தே கலையை உலகம் முழுவதும் கொண்டுபோய் சேர்த்த லீ, குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சி தொடர்களிலும் பல படங்களிலும் நடித்திருக்கிறார். சண்டைக்கு புரூஸ் லீ கொடுத்திருக்கும் விளக்கம் அதியற்புதமானது. களத்தில் எதிரி இருக்கக்கூடாது ஆனால் சண்டை நடக்கவேண்டும். ஒரு சீரியஸ் நாடகம் போன்று சண்டை அமையவேண்டும். போட்டி களத்தில் யார் வேண்டுமானாலும் எதிரியாக வரலாம், எப்படியாயினும் தாக்கலாம் என்பதால் அங்கு வேறு சிந்தனையோ, கனவோ இருக்கக்கூடாது. சண்டை குறித்த டென்ஷன் இல்லாமல் சண்டைக்கு தயாராக இருக்கவேண்டும். எதிரி தடுக்கும்போது தாக்கவும், எதிரி தாக்கும்போது தடுக்கவும் வேண்டும். சண்டை இல்லாத சண்டைதான் என் கனவு என்று சொன்னார் புரூஸ் லீ. இளவயதில் மரணம் அடைந்த காரணத்தால் சில…

Read More

பாக்காம விட்றாதீங்க – சினிமா மேதையின் மாடர்ன் டைம்ஸ் (Modern Times)

பாக்காம விட்றாதீங்க – சினிமா மேதையின் மாடர்ன் டைம்ஸ் (Modern Times)

சார்லி சாப்ளின் இல்லாத சினிமா உலகத்தை யாருமே நினைத்துப் பார்க்கமுடியாது. உலகின் முதல் சூப்பர்ஸ்டார். நகைச்சுவை சிந்தனாவாதி. உலகை குலுக்கிய கலகக்காரர். சினிமா கலையின் உச்சத்தைத் தொட்டவர் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம். மவுன படங்களின் காலத்தில் இருந்து பேசும் படம் வரையிலும் வெற்றியை சுவைத்தவர். சாப்ளின் கைவண்ணத்தில் வெளியான ஒவ்வொரு படமும் தனித்தன்மை வாய்ந்தது என்றாலும், படங்கள் பேசத்தொடங்கிய பிறகும் பிடிவாதமாக மவுன படமாக இயக்கி மாபெரும் வெற்றி அடைந்த மாடர்ன் டைம்ஸ் படத்தை அதிஉன்னது என்ற பட்டியலில் சேர்க்கலாம். உழைப்பாளர்களுக்கு ஆதரவாகவும் முதலாளிவர்க்கத்திற்கு சம்மட்டியடியாகவும் வெளியான படம் இது.. பொருளாதார மந்தத்தால் 1930களில் வேலையும், சம்பளமும் கிடைக்காமல் மக்கள் அல்லாடுகிறார்கள். அதனால் எவ்வளவு வேலை கொடுத்தாலும் செய்வதற்கு தொழிலாளர்கள் தயாராக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தொழிற்சாலையில் நட்டுகளை முடுக்கும் வேலை செய்கிறார் சார்லியாக வரும் சாப்ளின். மனிதர்கள்…

Read More

பாக்காம விட்றாதீங்க – த பியானிஸ்ட் (The Pianist)

பாக்காம விட்றாதீங்க –   த பியானிஸ்ட் (The Pianist)

இனப்படுகொலை உலகெங்கும் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த இனப்படுகொலைகளின் உச்சம் என்றால் இரண்டாம் உலகப்போரில் நிகழ்ந்த யூத படுகொலையைத்தான் சொல்லவேண்டும். இந்த படுகொலையை வரலாற்றில் ஹோலோகாஸ்ட் என்று பெயரிட்டு அழைத்தார்கள். ஹிட்லரின் நாஜி படையினர் லட்சக்கணக்கான யூதர்களை கொன்றொழித்த சம்பவங்களையொட்டி பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், இசைக்கலைஞன் பார்வையில் படுகொலையை காட்டியிருக்கும் தி பியானிஸ்ட் படத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. இந்தப் படத்தை இயக்கிய ரோமன் பொலான்ஸ்கியும் யூதர் என்றாலும், பாரபட்சமில்லாமல் உண்மையின் பக்கத்தில் இருந்து காட்டியதாக பாராட்டப்படுபவர். போலந்து நாட்டை சேர்ந்த லாட்ஸ்லா ஸ்பில்மென் இசை தவிர குறிப்பாக பியானோ தவிர வேறொன்றும் அறியாதவன். சிறந்த இசைக்கலைஞன் என்பதால் நல்ல அங்கீகாரத்துடன் மேல்மட்ட வசதியான வாழ்க்கை வாழ்கிறான். நண்பர்கள், குடும்பம் என்று சந்தோஷமாக வாழ்க்கை நகர்கிறது. இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டு இருந்தாலும் அதுபற்றி எந்த அக்கறையும் இல்லாமல் தானுண்டு…

Read More

சபாஷ் வாத்தியார் – ஃப்ரன்ட் ஆஃப் த க்ளாஸ் (Front of The Class)

சபாஷ் வாத்தியார் – ஃப்ரன்ட் ஆஃப் த க்ளாஸ் (Front of The Class)

பாக்காம விட்றாதீங்க – ஃப்ரன்ட் ஆஃப் த க்ளாஸ் தன்னிடம் இருக்கும் குறையை பிறரிடம் இருந்து மறைக்கத்தான் எல்லோரும் முயற்சி செய்வார்கள். தன்னுடைய குறையை  எவரிடமும் மறைக்காமல் வென்று காட்டிய ஒரு நிஜ மனிதனின் வாழ்க்கை படமே ஃப்ரன்ட் ஆஃப் த க்ளாஸ். இவன் தன்னம்பிக்கையின் உச்சகட்டம் என்பதால் நிச்சயம் பார்க்கவேண்டிய படத்தின் பட்டியலில் சேர்கிறது இது. அவ்வப்போது   தன்னை அறியாமலே பக்பக் என்று கழுத்தை வெட்டிக்கொண்டு சத்தமாக சொல்கிறான் சிறுவன் பிராட் கோஹன். அவனுடைய தந்தையில் இருந்து பள்ளி ஆசிரியர், மாணவர்கள் வரையிலும் அவன் வேண்டுமென்றே அப்படி செய்வதாக நினைத்து கண்டிக்கிறார்கள். என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று  பிராட் சொல்வதை நம்ப மறுக்கிறார்கள். அதனால் அப்பா வீட்டில் இருந்து பிரிந்துபோக, முன்னிலும் அதிகமாக பக்பக் என்று சொல்லத் தொடங்குகிறான். ஒரு மனநல மருத்துவரிடம் கூட்டிச்செல்கிறாள் அம்மா….

Read More

மேதமைக்கு பரிசு ஆண்மை நீக்கம் – த இமிடேஷன் கேம் (The Imitation Game)

மேதமைக்கு பரிசு ஆண்மை நீக்கம் – த இமிடேஷன் கேம் (The Imitation Game)

பாக்காம விட்றாதீங்க – த இமிடேஷன் கேம் இந்த உலகை ஆட்டிப்படைப்பதற்கு ஹிட்லர் வசம் இருந்த ஒரு வலிமையான ஆயுதம் எனிக்மா. ஒரு டைப்ரைட்டர் போல் இருக்கும் எனிக்மா என்ற இயந்திரத்தின் மூலம் தாக்குதல் நடத்தவேண்டிய இடங்களை சங்கேத வார்த்தைகளாக மாற்றி அனுப்புகிறார்கள்  ஜெர்மனியர்கள். இந்த சங்கேத வார்த்தைகளை கண்டுபிடிக்க முடியாமல் இங்கிலாந்து, பிரான்ஸ், சோவியத் யூனியன் போன்ற நாடுகள் தடுமாறிக்கொண்டிருக்க, கொஞ்சமும் சிரமம் இல்லாமல் முன்னேறிக்கொண்டே இருந்தார் ஹிட்லர். இந்த எனிக்மா அனுப்பும் சங்கேத வார்த்தைகளை கண்டறிவதற்கு 150 மில்லியன் மில்லியன் மில்லியன் சாத்தியக்கூறுகள் இருந்ததால், என்கோடிங்கை உடைப்பது சாத்தியமில்லாமல் போகிறது. இதனை உடைத்தது மட்டுமின்றி இன்றைய உலகை ஆட்டிவைக்கும் கம்ப்யூட்டருக்கு அடித்தளம் போட்ட ஆலன் ட்யூரிங் என்பவரது வாழ்க்கை கதையே த இமிடேஷன் கேம். ஒவ்வொரு போரின் வெற்றிக்குப் பின்பும் ஏராளமான போர்வீரர்களின் தியாகம் இருக்கும், ஆனால் இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து வெற்றிக்குப் பின்னே…

Read More

விக்ரமுக்கு ஒரு டி.வி.டி. பார்சல் – மிரக்கிள் இன் செல் நம்பர் 7

விக்ரமுக்கு ஒரு டி.வி.டி. பார்சல் – மிரக்கிள் இன் செல் நம்பர் 7

பாக்காம விட்றாதீங்க – Miracle in Cell No.7 நடிப்பு என்பதை வெறுமனே நடிப்பாக மட்டும் எடுத்துக்கொள்ளும் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் வரிசையாக ஹிட் கொடுக்கிறார்கள். நடிப்பை ஒரு தவம் போல் செய்யும் கமல்ஹாசன், விக்ரம் போன்றவர்கள் வரிசையாக ஃபிளாப் கொடுக்கிறார்கள். இதை பார்க்கும்போது ஏதோ உள்நாட்டு சதி போல் தெரிந்தாலும், உண்மை என்ன தெரியுமா? மக்கள் நல்ல படம் பார்க்க ஆசைப்படுகிறார்களே தவிர வித்தியாசமான நடிப்பை பார்க்க விரும்புவதில்லை. இந்த உண்மை புரியாமல்தான் கமல்ஹாசனும், விக்ரமும் பாறையில் மோதி மண்டையை உடைக்கிறார்கள் . விக்ரம் நடிக்க விரும்பும்வகையில் வித்தியாசமான வாய்ப்பும் அதே நேரம் நல்ல கதை அம்சமும் உள்ள கொரியன் படம்தான் மிரக்கிள் இன் செல் நம்பர் 7. தெய்வத்திருமகள் போன்று தெரியும் என்றாலும், இது வேற லெவல். ஆள் வளர்ந்த அளவுக்கு மூளை வளர்ச்சி அடையாத லியாங்…

Read More