எனக்குள் 23 பேர் – ஸ்பில்ட் விமர்சனம் – 59 மார்க்

எனக்குள் 23 பேர் – ஸ்பில்ட் விமர்சனம் – 59 மார்க்

கடவுள் பாதி, மிருகம் பாதி என்று கமல்ஹாசன் குழப்பியதை, தெளிவான திரைக்கதையாக்கி…  ஒரு மனிதனுக்குள் 23 பேரை புகுத்தி ஹிட் அடித்திருக்கிறார் நைட் ஷியாமளன். படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலேயே பரபரப்பு பற்றிக்கொள்கிறது. அழகான மூன்று இளம் பெண்களை கடத்திப்போய் சிறை வைக்கிறான் ஜேம்ஸ் மெக்வாய். உங்கள் மூவரையும் உணவாக்கப் போகிறேன் என்கிறான் ஜேம்ஸ்.  நாய் அல்லது முதலைக்கு  உணவாக்கப்போகிறான் என்று நினைத்து மூன்று இளம்பெண்களும் நடுங்குகிறார்கள். திடீரென பெண்ணாகவும், சிறுவனாகவும் மாறி ஜேம்ஸ் பேசுவதைக் கண்டு மற்றவர்கள் குழப்பம் அடைந்தாலும், அன்யா டெய்லர் மட்டும்,  அவன் ஸ்பில்ட் பெர்சனாலிட்டி பிரச்னையில் சிக்கியிருப்பதை புரிந்துகொள்கிறாள்.  இரண்டு பெண்கள் தப்பிப்பதாக நினைத்து எசகுபிசகாக ஜேம்ஸிடம் மாட்டிக்கொண்டு தனியறையில் அடைக்கப்படுகிறார்கள். டென்னிஸாக பெண்களை கடத்திவந்த ஜேம்ஸ், பேரியாக இருக்கும்போது மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்கிறான். இவனுக்குள் ஏராளமான நபர்கள் ஒளிந்திருப்பதை…

Read More

காதல் போராட்டம் – லா லா லேண்ட் – 40 மார்க் (La La Land Review)

காதல் போராட்டம் – லா லா லேண்ட் – 40 மார்க் (La La Land Review)

ஜஸ்ட் வாட்ச் – லா லா லேண்ட் (La La Land Movie Review) லட்சியத்திற்கு குறுக்கே காதல் வந்தால் என்னவாகும் என்பதை இசைமழையாக சொல்லும் படமே லா லா லேண்ட். இந்தப் படத்தின் முக்கியச் சிறப்பு வண்ணமயமான படமாக்கலும் நெஞ்சை தொடும் பாடல், இசை மற்றும் நடனம். நடிகையாக ஆசைப்படும் மியா (எம்மா ஸ்டோன்) பங்கேற்கும் அத்தனை ஆடிசன்களிலும் கேவலமாக தோற்றுப்போகிறார். அதேபோல் ஜாஸ் இசைக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் வகையில் பிரத்யேக ஜாஸ் கிளப் ஆரம்பிக்க நினக்கும் செபஸ்டின் (ரேயன் கோஸ்லிங்) கனவு நிறைவேறாமல் இருக்கிறது. அவன் பியானிஸ்ட்டாக பணியாற்றும்   ஹோட்டல்களில், அவ்வப்போது  தன்னுடைய  ஆசைக்காக்  ஜாஸ் இசையை புகுத்த நினைக்கும்போதெல்லாம் வேலையில் இருந்து விரட்டப்படுகிறான். இரண்டு பேருக்கும் தோல்வி, தோல்வி தோல்வி மேல் தோல்வி என்று வாழ்க்கை கழிகிறது. இனிமேல் ஒழுங்காக ரெஸ்டாரென்ட்டில்…

Read More

நிஜமான தெறி – ஆக்‌ஷன் ஹீரோ பிஜு (Action Hero Biju)

நிஜமான தெறி – ஆக்‌ஷன் ஹீரோ பிஜு (Action Hero Biju)

ஜஸ்ட் வாட்ச் – ஆக்‌ஷன் ஹீரோ பிஜு சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரியைவிட அதிகாரம் நிறைந்தவராக ஒரு சப்-இன்ஸ்பெக்டரை காட்டும் பலவீனமான லாஜிக் என்றாலும், தன்னுடைய மீசையால் படத்தை தூக்கி நிறுத்துகிறார் நிவின்பாலி.. மாஸ் ஹீரோவாக ஒவ்வொரு காட்சியிலும் பில்டப் கொடுப்பதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இருந்தாலும், அடக்கிவாசித்தும் ஆக்‌ஷன் காட்டுகிறார். கதை என்று எதுவுமே இல்லாமல் அட்வைஸ் தோரணங்களை நீளமாக கட்டி, அதையே திரைக்கதையாக மாற்றிவிட்டார்கள். கதை இல்லாமல் இப்படி காட்சிகளாக  வைத்திருப்பதால், ஆரம்பத்தில் மட்டும் பிஜுவை ரவுடிகள் குத்துவதைக் காட்டிவிட்டு படத்தை ஆரம்பிக்கிறார்கள். படத்தின் தலைப்பு முழு கதையையும் சொல்லிவிடுகிறது. எதற்கும் அடங்காத, யாருக்கும் அடிபணியாத நேர்மையான சப் இன்ஸ்பெக்டர் பிஜுதான் நிவின். என் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் ஒரே ஒரு ரவுடி மட்டும்தான் இருக்கவேண்டும், அது நான்தான் என்கிறார் நிவின். அதனால் தவறு செய்யும் அத்தனை ரவுடிகளையும்…

Read More

கவர்ச்சி நடிகையின் மகன் –   பாவாட விமர்சனம் – 36 மார்க் – Paavada (Malayalam Movie)

கவர்ச்சி நடிகையின் மகன் –   பாவாட விமர்சனம் – 36 மார்க் – Paavada (Malayalam Movie)

பெற்ற தாயை கவர்ச்சி நடிகையாக பார்க்கும் மகனின் அவலத்தை சித்தரிக்கும் வகையில் பாவாட புத்தம்புது முயற்சி. ஆனால் காட்சிக்குக் காட்சி திரைக்கு வெளியேயும்  நாத்தமடிக்கும் அளவுக்கு குடிப்பதும்,  ஜவ்வு மிட்டாய் மாதிரி  தேவையில்லாமல காட்சிகளை திணித்திருப்பதும் பொறுமையை சோதிக்கின்றன. குடிப்பதற்காக தலையைக்கூட அடகுவைக்கும் அளவுக்கு மொடா குடியன் ஜாய். சில்லறை வேலைகளை செய்து சம்பாதிக்கும் பணத்தை இரண்டு விஷயத்துக்காக மட்டும்தான் செலவழிக்கிறான். ஒன்று குடி. அடுத்ததும் குடி. இப்படிப்பட்ட சூழலில் நர்ஸாக இருக்கும் சினிமோல் மீது காதல் வசப்படுகிறான். சினிமா இலக்கணப்படி குடிகாரனாக இருந்தாலும்,  காதல் சீக்கிரமாக கனிந்து கல்யாணத்தில் முடிகிறது. ஜாய் பாத்திரத்திற்கு பிரித்விராஜும், சினிமோலுக்கு மியா ஜார்ஜும் கனகச்சிதமாக பொருந்துகிறார்கள். குடிகாரனுக்கு புத்தி மட்டு என்பதுபோல், கடவுளிடம் தனியே பேசும் மியாவிற்கு, யாருடனோ கள்ளத்தொடர்பு என்று சந்தேகப்படுகிறான் ஜாய். தன்னை கணவர் சந்தேகப்பட்டு திருட்டுத்தனமாக வேவு பார்ப்பது…

Read More

மீண்டும் ஒரு த்ரிஷ்யம் – புதிய நியமம் – 39 மார்க் – Puthiya Niyamam

மீண்டும் ஒரு த்ரிஷ்யம் – புதிய நியமம் – 39 மார்க் – Puthiya Niyamam

ஜஸ்ட் வாட்ச் – புதிய நியமம்: பேய் பட ஃபார்முலாவை தமிழ் பட உலகம் தொங்கிக்கொண்டிருக்க, வித்தியாசமான திரைக்கதையுடன் கூடிய த்ரிஷ்யம் ஸ்டைல் படங்கள் மலையாளத்தில் வரிசை கட்டுகின்றன. சமீபத்தில் ஹிட் அடித்திருக்கும் த்ரில்லர் படம் புதிய நியமம். தமிழ் அய்யர் பெண்  வாசுகியாக வரும் நயன்தாராவும் மலையாளி லூயிஸ் போத்தனாக வரும் மம்முட்டியும் காதலித்து திருமணம் செய்து, அதற்கு சாட்சியாக ஒரு பெண் பிள்ளையுடன் அபார்ட்மெண்ட்டில் வசிக்கிறார்கள். கதகளி ஆர்ட்டிஸ்ட் வாசுகி கையில் கட்டுடன் வீட்டு வேலை செய்வதில் படம் ஆரம்பமாகிறது. தொலைக்காட்சியில் சினிமா விமர்சனம் செய்பவராகவும் விவாகரத்து கேஸ் மட்டுமே எடுத்து வாதாடும் வழக்கறிஞராகவும் வரும் லூயிஸ் மிகவும் கூல் பெர்சனாலிட்டி. ஆனால் வாசுகி சிடுசிடு. அம்மாவின் நடவடிக்கையில்  மாற்றங்களை கண்டு எரிச்சலாகிறாள் மகள் சிந்த்தா. எந்த நேரமும் விவாகரத்து, கள்ளக்காதல் பற்றி அப்பா போனில் பேசுவதைக்…

Read More

கிக் இல்லாத பெக் – தெறி விமர்சனம் 38 மார்க் (Theri Review)

கிக் இல்லாத பெக் – தெறி விமர்சனம் 38 மார்க் (Theri Review)

ஜஸ்ட் வாட்ச் – தெறி: ஏசி பார், விதவிதமான சைடீஸ், காஸ்ட்லி சரக்கு, கம்பெனிக்கு நாலு ஃப்ர்ண்ட்ஸ் – இத்தனை இருந்தும் அடிக்க அடிக்க போதையே ஏறலைன்னா எப்படியிருக்கும் – தெறி படம் மாதிரி இருக்கும். அதிரடிக்கு விஜய், நைனிகா, கிளுகிளுப்புக்கு சமந்தா, எமி ஜாக்சன், சென்டிமென்ட்டுக்கு ராதிகா, பிரபு, அசத்தலுக்கு ஜி.வி.பிரகாஷ் என எத்தனையோ இருந்தும் கதையும் திரைக்கதையும் தொங்குதேப்பா… கொஞ்சம் சத்ரியன், கொஞ்சம் பாட்ஷா, கொஞ்சம் மதுர என மூன்று படங்களிலும் இம்ப்ரஸ்(?) ஆகி மூன்று விஜய்க்கு வேலை கொடுத்திருக்கிறார்கள். சினிமா இலக்கணப்படி அம்மா இல்லாத நைனிகாவை (நடிகை மீனாவின் மகள்) கண்ணுக்குள் வைத்து வளர்க்கிறார் ஜோசப் (விஜய்). பொண்டாட்டி இல்லாமல் ஒரு வாலிபன் இந்த உலகத்தில் தனியே இருக்க முடியுமா என்ன? நைனிகா படிக்கும் ஸ்கூலில் டீச்சராக இருக்கும் ஏமி ஜாக்சன், விஜயை…

Read More

கனவு நிஜமாகும் – கோல் (Goal !)

கனவு நிஜமாகும் – கோல் (Goal !)

ஜஸ்ட் வாட்ச் – கோல்: நம் இளைஞர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு உயிர் என்றால், வெள்ளைக்காரர்களுக்கு ஃபுட்பால். அந்த விளையாட்டை ஸ்டேடியத்திற்குச் சென்று பார்ப்பதை வாழ்க்கை லட்சியமாக நினைப்பவர்கள் உண்டு. ஃபுட்பால் ரசிகர்களை மயக்குவதற்கு எடுக்கப்பட்ட படம் கோல். லட்சியம் தெளிவாகவும் தீர்க்கமாகவும் இருந்தால், அதனை நிச்சயம் அடைந்துவிட முடியும் என்பதுதான் படத்தின் ஒற்றை வரிக் கதை. ஒவ்வொரு காட்சியிலும் என்ன நடக்கும் என்பது ஆரம்பம் முதல் முடிவு வரை தெரிகிறது என்றாலும், விளையாட்டு ரசிகர்களை வசீகரிக்கும் மந்திரசக்தி கோல் படத்துக்கு இருக்கிறது. அகதியாக அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் தப்பிச்செல்கிறான் சிறுவன் சான்டியாகோ முனிட்ஸ். அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே கையில் அனைவரும் எடுத்துச்செல்லும்போது, தன்னுடன் ஃபுட்பால் எடுத்துக்கொண்டு நகர்கிறான் சான்டியாகோ. ஃபுட்பால் என்றால் அவனுக்கு அத்தனை இஷ்டம். கனவு தேசமான அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இளைஞனாக வளர்கிறான் சான்டியாகோ….

Read More

மூன்று பஞ்சு மிட்டாய்கள் – பிரேமம் (Premam)

மூன்று பஞ்சு மிட்டாய்கள் – பிரேமம் (Premam)

ஜஸ்ட் வாட்ச் – பிரேமம்: அழுத்தமான கதைக்கு இலக்கணமாக மலையாள சினிமா இருந்த காலம் மலையேறிப் போயாச்சு. இன்றைய இளைஞர்களைக் கவர்வதற்கு அழகான புதுமுகப் பெண்களும், ஜாலியான திரைக்கதையும் இருந்தாலே போதும் என்று பிரேமம் படம் மூலம் சொல்லியடித்து ஜெயித்திருக்கிறார் அல்போன்ஸ் புத்ரன். கதை என்று எதுவுமே இல்லை என்றாலும் அழகுப் புயல்களாக வலம் வரும் முன்று தேவதைகளுக்காக மட்டுமே பார்க்கலாம் பிரேமம். நம்ம சேரன் கைவண்ணத்தில் வெளியான ஆட்டோகிராப்பின் மலிவுப் பதிப்பு என்றும் பிரேமத்தை சொல்லலாம். கேரளாவை கலக்கிக்கொண்டிருந்த இளம் நடிகர்  பகத் பாசிலை (நஸ்ரியாவை தள்ளிக்கொண்டு போனவர்) பின்னுக்குத் தள்ளிவிட்டு, வேகமாக முன்னேறிவரும் நிவின் பாலி நாயகனாக படம் முழுவதும் மூன்று கெட்டப்களில் வலம் வருகிறார். மீசை இல்லாத பள்ளி வயதில் குட்டிப் புயலாக வரும் அனுபமா பரமேஸ்வரன் அழகில் மயங்குகிறார். செல்ல நாய்க்குட்டி…

Read More

எதிரியை கொல்ல முத்த டெக்னிக் – கெட் ஸ்மார்ட் (Get Smart)

எதிரியை கொல்ல முத்த டெக்னிக் – கெட் ஸ்மார்ட் (Get Smart)

ஜஸ்ட் வாட்ச் – கெட் ஸ்மார்ட்: எதிரியை கொல்வதற்கும் வெல்வதற்கும் வாள் தேவையில்லை வாய் மட்டுமே போதும் என்பதை சொல்லும் நகைச்சுவை படம் கெட் ஸ்மார்ட். வாய் என்றதும் பக்கம் பக்கமாக வசனம் பேசி எதிரியை திருத்தும் படம் என்று நினைத்துவிட வேண்டாம். வாயோடு வாய் வைத்து பச்சக் என்று முத்தம் கொடுத்து எதிரியை கொல்லும் புது டெக்னிக்கை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அமெரிக்காவின் டாப் சீக்ரெட் அமைப்பில் டெக்னிக்கல் அனலிஸ்ட் பணியில் இருக்கிறான் மாக்ஸ்வெல் வேடத்தில் நடித்திருக்கும் ஸ்டீவ் கேரல்.  ஏஜென்ட் 23 ஆக இருக்கும் ட்வைன் ஜான்சன் (ராக்) போன்று அதிரடியாக துப்பறியும் வேலையில் இறங்கி, நாட்டுக்கு சேவை ஆற்றவேண்டும், அனைவரும் தன்னை போற்றிப் புகழவேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருக்கிறான். ஆனால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அசட்டுத்தனமாக செயல்படுவதால், மேக்ஸை  அனலிஸ்ட் வேலையிலேயே உட்கார வைக்கிறார்கள். இந்த…

Read More