ரத்த மழை பொழிகிறது – கொடூர Kill Bill

ரத்த மழை பொழிகிறது – கொடூர Kill Bill

பார்க்கவே பாக்காதீங்க – கில் பில்: கத்தியின்றி, துப்பாக்கியின்றி ரத்தம் வழிய வேண்டுமா? ஹாலிவுட் சூப்பர் இயக்குனர் என்று வருணிக்கப்படும் குவெண்டின் டேரன்டினோவின் கில் பில் பார்த்தால் போதும். படம் முடியும்போது நிச்சயம் உங்கள் சட்டை முழுவதும் ரத்தம் படிந்திருக்கும். ஏனென்றால் படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக்காட்சி வரை, திரை முழுவதும் ரத்தம் தெறித்துக்கொண்டே இருக்கிறது. டைட்டானிக் படம் பார்த்தால் உடனே யாரையாவது காதலிக்கத் தோன்றும். சைனீஸ் டைப் சண்டை படம் பார்த்தால் உடனே குங்பூ கற்றுக்கொண்டு யாரையாவது அடிக்கத் தோன்றும். இந்த கில் பில் பார்த்தால்… இன்னும் நாம் உயிரோடு இருக்கிறோமா என்று தலையையும் கையையும் தொட்டு உறுதிப்படுத்தவும், கையாலாகாத குற்றவுணர்ச்சியும் தோன்றுகிறது. மட்டன் சுக்காவை ரசித்தாலும், ஆடு வெட்டுவதைப் பார்க்க சகிக்காமல் தலையை திருப்பிக்கொள்ளும் வீர சாதியான நம்மைப் போன்றவர்களுக்கு கில் பில் பார்க்கக்கூடாத…

Read More

ஏமாத்திட்டாரே நிவின் பாலி

ஏமாத்திட்டாரே நிவின் பாலி

பாக்கவே பாக்காதீங்க – ஒரு வடக்கன் செல்பி இந்த வருடம் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்திருக்கும் ஒரு வடக்கன் செல்பி படத்தை ஆஹா..ஓஹோ என்று கொண்டாடுகிறது மலையாளத் திரையுலகம். ஐந்து மொழிகளில் இந்தத் திரைப்படம் ரீமேக் செய்யப்படவும் இருக்கிறதாம். மலையாளத்தின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துவரும் நிவின்பாலி நடித்தபடம் என்று ஆர்வமாக உட்கார்ந்தால், உப்பும் உறைப்பும் இல்லாத ஊறுகாய் போலஇருக்கிறது. செல்பி எடுப்பதன் விபரீதம், ஃபேஸ்புக் சிக்கல் போன்றவற்றை எல்லாம் கடுமையான விமர்சனம் செய்வதாக கதையளக்கிறார்கள்.. வங்கிக்கடனில் இன்ஜினியரிங் மாணவராக இருக்கும் நிவின்பாலி, படிப்பதைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் சந்தோஷமாக செய்கிறார். அதனால் படிப்பு முடியும்போது மொத்தமே 42 அரியர்ஸ் இருக்கிறது. ஆனாலும் அதைப்பற்றிய கவலை எதுவும் இல்லாமல் பெண்களை சைட் அடிப்பதை சைட்ஜாப்பாக செய்து வருகிறார். தாய், தந்தையுடன் பேசும்போதும் பெண்களை ஓரமாகப் பார்த்து ஜொள்ளுவிடுகிறார்….

Read More

எக்ஸ் மெஷினா – 39 மார்க்

எக்ஸ் மெஷினா – 39 மார்க்

பாக்கவே பாக்காதீங்க –  எக்ஸ் மெஷினா: இந்த ஆண்டு வெளியான படங்களில், ஆஹா, ஓஹோவென்று தலைக்கு மேல் தூக்கிவைத்து கொண்டாடப்படுவது எக்ஸ் மெஷினா எனும் பிரிட்டிஷ் படம். பல நாட்டு உணவுகளை சமைக்கத் தெரிந்த கலைஞனிடம் வெந்நீர் போடச்சொல்லி குடிப்பது போல்… வெறுப்பைக் கிளப்புகிறார்கள். ஆரம்பம் என்னவோ அட்டகாசமாக இருக்கிறது. கூகிள் போன்று மாபெரும் சர்ச் இஞ்சின் நடத்திவரும் புளூபுக் நிறுவனத்தின் உரிமையாளர் நேதனுடன் (ஆஸ்கர் ஐசக்) ஒரு வாரம் தங்கும் வாய்ப்பு, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் கேலப் (டொனல் க்லிசன்) எனப்படும் இளம் கம்ப்யூட்டர் புரோகிராமருக்குக் கிடைக்கிறது. சந்தோஷமாக கிளம்புகிறான். அட்டகாசமான யாருமே இல்லாத தீவு, ஜன்னல்களே இல்லாத கண்ணாடி வீடு. டெக்னாலஜியின் உச்சமாக இருக்கும் அந்த வீட்டில் நுழைந்ததும் கேலப்பிடம் ஒரு பத்திரத்தில் கையெழுத்து கேட்கிறான் நேதன். புளுபுக் நிறுவனரான நேதன், 13 வயதில் புரோகிராம் எழுதி உலகின்…

Read More

குவாண்டினின் மொக்கை படம்

குவாண்டினின் மொக்கை படம்

பாக்கவே பாக்காதீங்க – இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் ஐ.எம்.டி.பி-யில் எட்டு மதிப்பெண்களுக்கு மேல் வாங்கியவை எல்லாமே நல்ல படம் அல்ல, குப்பையும் இருக்கலாம் என்பதற்கு உதாரணம் இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ். பல்ப் பிக்‌ஷன், கில் பில் படங்களின் மூலம் நவீன சினிமா மேதையாக அறியப்படும் குவாண்டின் டராண்டினோ, ஆக்‌ஷன் ஹீரோ பிராட்பிட் போன்றவர்கள் சேர்ந்து கொடுத்திருக்கும் ஸ்லோ பாய்சன். நீங்கள் ஒருமுறை பார்த்து கடுப்பாகக்கூடாது என்பதற்காக கதை சுருக்கம் இங்கே. வரலாற்றுக் கதையில் தன்னுடைய கற்பனை சிறகை விரித்திருக்கிறார் குவாண்டின். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நாஜிக்களை கொடூரமான முறையில் கொலைசெய்து, உலகப்படைகளுக்கு அரக்கனாகத் தெரிந்தார் ஹிட்லர். அந்த நேரத்தில் பிராட்பிட் தலைமையிலான சில அமெரிக்க வீரர்கள், ‘இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்’ என்ற பெயரில் ஒன்றிணைந்து ஜெர்மன் வீரர்களை கொடூரமான முறையில் கொலைசெய்து ஹிட்லருக்கு திகில் கொடுக்கிறார்கள். இந்தப் படத்தில் ஒரே ஒரு நல்ல விஷயம் என்றால் நாஜிப் படையின் கர்னல் ஹான்ஸ் லான்டாவாக வரும்…

Read More