பாக்கவே பாக்காதீங்க – பாசஞ்சர்ஸ் – 37 மார்க் (Passengers)

பாக்கவே பாக்காதீங்க – பாசஞ்சர்ஸ் – 37 மார்க் (Passengers)

ஜெனிபர் லாரன்ஸ், கிறிஸ் பிராட் போன்ற அதிபிரபலங்கள் நடித்திருந்தாலும், திரைக்கதை சரியாக அமைக்கப்படவில்லை என்றால் தேறவே தேறாது என்பதற்கு சமீபத்திய உதாரணம் பாசஞ்சர்ஸ். 5,000 பயணிகளுடன் அவலோன் எனப்படும் விண்வெளி கப்பல் ஹோம்ஸ்டெட் 2 என்ற கிரகத்தை நோக்கி பயணமாகிறது. அந்த கிரகத்தை சென்றடைவதற்கு 120 ஆண்டுகள் ஆகும் என்பதால், அனைவரும் தூக்கநிலையில் ஆழ்த்தப்பட்டுள்ளார்கள். தற்செயலாக விண்வெளி கப்பல் மீது மிகப்பெரிய வின்பாறை மோதிய விபத்தில் மின்சார பழுது ஏற்பட்டு நாயகன் ஜிம் பிரஸ்டனுக்கு (கிறிஸ் பிராட்) மட்டும்  விழிப்பு வருகிறது. விண்வெளி களத்தில் அத்தனை பேரும் தூங்கிக்கொண்டிருக்க தன்னந்தனியே விழித்துக்கொண்டு இருக்கிறான் ஜிம். அவனுக்கு துணையாக இயந்திர மனிதன் ஆர்தர் மட்டுமே இருக்கிறான். இன்னும் 90 ஆண்டுகள் கழித்துத்தான் அத்தனை பேரும் விழிப்பார்கள், அதற்குள் தான் செத்துப்போய்விடுவோம் என்ற எண்ணத்தில் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு ஆளாகிறான்….

Read More

ம…ரண விளையாட்டு – கேபின் இன் த வுட்ஸ்

ம…ரண விளையாட்டு – கேபின் இன் த வுட்ஸ்

பாக்கவே பாக்காதீங்க – கேபின் இன் த வுட்ஸ் புது வீட்டுக்கு குடி போனால் அல்லது கூட்டமாக பிக்னிக் கிளம்பினால், அது மரணத்தை நோக்கிய பயணம் என்பதுதான் ஆங்கிலப்படத்தின் எழுதப்படாத விதி. என்ன காரணத்திற்காக  சாகிறார்கள் என்ற நோக்கம்தான் மாறுபடுமே தவிர, மற்றபடி எல்லாமே ஒரே கழுதையாகத்தான் இருக்கும். அப்படித்தான் இந்தப் படத்திலும் கல்லூரித் தோழர்கள் ஐந்து பேர் வார இறுதியை சந்தோஷமாக கழிப்பதற்காக,  ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு மர வீட்டிற்குப் போகிறார்கள். அங்கே போனதும் அவர்களது செயலும் குணமும் மாற்றம் அடைகிறது. மிகவும் புத்திசாலியும் ஒழுக்கமும் நிறைந்த  கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், குடிகாரனாகவும் காதலியின் அடிமையுமாக மாறுகிறான். ஒழுக்கமும் அழகும் நிறைந்த கிரிஸ்டன் கன்னாலியின் மனமும், உடன் வந்த தோழன் மீது அலைபாய்கிறது. இதை எல்லாம் கவனித்து மார்ட்டி எச்சரிக்கை செய்வதை, யாருமே பெரிதாக கண்டுகொள்ளாமல் தங்கள் சந்தோஷமே…

Read More

காதல் ஓட்டை – தட்டத்தின் மறையத்து (Thattathin Marayathu)

காதல் ஓட்டை – தட்டத்தின் மறையத்து (Thattathin Marayathu)

பாக்கவே பாக்காதீங்க – தட்டத்தின் மறையத்து மலையாளத்தில் சூப்பர்ஹிட் அடித்து, தமிழில் ரீமேக் ஆகும் தட்டத்தின் மறையத்து ஒரு படம் அல்ல… நல்ல பாடம். அதாவது காதல் படத்தை எப்படி எடுக்கக்கூடாது என்று விலாவாரியாக சொல்லிக்கொடுக்கும் பாடம். காதலிக்கச் சொன்னா கடுப்பேத்துறாங்க மை லார்டு என்ற அலற வைக்கும் அளவுக்கு முதல் காட்சி தொடங்கி கடைசி நொடி வரையிலும் காதல் பற்றி பேசிக்கொண்டே இருக்கும் திராபையான ஒரு படம்தான் தட்டத்தின் மறையத்து. போலீஸ் ஸ்டேஷனில் கைதியாக வைக்கப்பட்டிருக்கும் நிவின் பாலி பிளாஷ்பேக்கில் கதை சொல்கிறார். வேறு வேலைவெட்டி இல்லாத சப் இன்ஸ்பெக்டர் மனோஜ் கே.ஜெயனும் மற்ற காமெடி போலீஸாரும் சேர்ந்து கதை கேட்கிறார்கள். குட்டிப்  பையனாக இருக்கும்போதே வினோத் அதாங்க நம்ம நிவின் பாலி ஒரு அழகான இஸ்லாம் சிறுமி மீது ஆசைப்படுகிறார். அந்த சிறுமியை திருமணம்…

Read More

கொலையும் செய்வான் தோழன் – மிஸ்டிக் ரிவர் (Mystic River)

கொலையும் செய்வான் தோழன் – மிஸ்டிக் ரிவர் (Mystic River)

பாக்கவே பாக்காதீங்க – மிஸ்டிக் ரிவர்: பிரமாதமான நடிகர், வித்தியாசமான இயக்குனர், அற்புதமான தயாரிப்பாளர், சிறந்த இசையமைப்பாளர் என்றெல்லாம் பெயர்வாங்கிய கிளின்ட் ஈஸ்ட்வுட், பட்டியலில் ஒரு கருப்புப்புள்ளி இந்த மிஸ்டிக் ரிவர் என்று சொல்லலாம். இயல்பான கதையோட்டம், நிஜமான காட்சியமைப்பு, அற்புதமான நடிப்பு என்று மிஸ்டிக் ரிவருக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்திருந்தாலும், ஆஸ்கர் விருதுகளை இந்தப் படம் அள்ளியிருந்தாலும்.. நெஞ்சைத் தொடும் காட்சிகள் இல்லாத காரணத்தால் பார்க்கத் தேவையில்லாத பட பட்டியலில் சேர்கிறது மிஸ்டிக் ரிவர். சின்ன வயது  தோழர்கள், வளர்ந்தபிறகு எதிரிகளாக மாறுவதுதான் ஒரு வரி கதை. ஜிம்மி, ஷேன், டேவ் ஆகிய மூன்று சிறுவர்கள் தெருவில் விளையாடுகிறார்கள். அப்போது காரில் வரும் ஒருவன், டேவ்வை மிரட்டி காரில் ஏற்றி கொண்டுபோகிறான். போலீஸ் பிடித்துச்செல்கிறது என்று சிறுவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. வக்கிரகுணம் படைத்தவன் டேவ்வை…

Read More

மொக்க டயனோசர் – த குட் டயனோசர் – The Good Dinosaur – 19 மார்க்

மொக்க டயனோசர் – த குட் டயனோசர் – The Good Dinosaur – 19 மார்க்

பாக்கவே பாக்காதீங்க: பேர் நல்லாயிருக்கு, பெரிய கம்பெனி படம். அதனால டயனோசரும் ஒரு குட்டிப் பயலும் சேர்ந்து கலக்கப்போறாங்கன்னு படத்தைப் பார்க்க உட்கார்ந்தா… கடிகடின்னு கழுத்துல ரத்தம் வர்ற அளவுக்கு கடிச்சு துப்புறாங்கப்பா.  ஹாலிவுட்டை கேவலப்படுத்துற  படம் த குட் டயனோசர். டயனோசர்கள் உயிருடன் இருந்தால், மனிதகுலம் இத்தனை தூரம் வளர்ச்சி அடைந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை மையப்படுத்தி எழுதப்பட்ட லாஜிக் இல்லாத கதை.  ஒரு டயனோசர் ஜோடி நிலத்தை உழுது விவசாயம் செய்யுதாம்(?). அந்த ஜோடியோட மூணு முட்டையில இருந்தும் மூணு குட்டிகள் (குஞ்சுகளா?) வருகின்றன. மெகா சைஸ் முட்டையில் இருந்து குட்டியூண்டு டயனோசர் வருது. குறை பிரசவமோ என்னமோ, அந்த டயனோசர் எதைப் பார்த்தாலும் பயப்படுது. ஆர்லோ என்று பெயர் சூட்டப்பட்ட அந்த டயனோசருடைய பயத்தை போக்குறதுக்காக அப்பா என்னென்னமோ முயற்சிகள் செய்றார். ஆனா,…

Read More

சொர்க்கம் அல்ல நரகம் – எலிசியம் (Elysium)

சொர்க்கம் அல்ல நரகம் – எலிசியம் (Elysium)

பாக்கவே பாக்காதீங்க – எலிசியம்: மரணத்துக்குப் பிறகு நல்ல மனிதர்கள் அனைவரும் வாழும் இடமாக கிரேக்க இதிகாசங்களில் குறிப்பிடப்படுவதுதான் எலிசியம். திகட்டத்திகட்ட இன்பம் மட்டுமே ஆட்சிபுரியும் எலிசியத்தில் நோய்க்கும் துன்பத்திற்கும் இடம் இல்லை. நிஜமாகவே இப்படி ஒரு இடம் இருந்தால் எப்படியிருக்கும் என்ற ஒரு வரி கதையை இரண்டு மணி நேரத்துக்கு நீட்டி முழக்கினால், அதுதான் எலிசியம் என்ற அறிவியல் புனைவு திரைப்படம். வித்தியாசமான திருப்பங்கள் எதுவும் இல்லாமல் சவசவவென நகர்வதால் எலிசியம் பார்க்கத்தேவையில்லாத பட்டியலில் சேர்கிறது. இனி கதை. நம்மூரில் படித்தவர்கள் எல்லோரும் அமெரிக்காவுக்குப் போய் ராஜபோக வாழ்க்கை வாழ்வதற்கு ஆசைப்படுவதைப் போல, 2154-ம் ஆண்டு வசிக்கும் மக்கள் எலிசியம் போகவேண்டும் என்ற கனவுடன் வாழ்கிறார்கள். எலிசியம் என்பது பூமிக்கு வெளியே பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக உருவாக்கப்பட்ட செயற்கை விண்வெளி நிலையம். அங்கே பணக்காரர்கள் மட்டுமே இருக்கிறார்கள். எல்லோரும்…

Read More

கல்யாணம் முடிக்காதீங்க – கான் கேர்ள் (Gone Girl)

கல்யாணம் முடிக்காதீங்க – கான் கேர்ள் (Gone Girl)

டோன்ட் வாட்ச் – கான் கேர்ள்: அழகாகவும் அறிவாகவும் இருக்கும் பெண்ணைப் பார்த்து காதல் வசப்பட்டு திருமணம்முடிப்பதும், மடியில் நாகப்பாம்பை கட்டிக்கொள்வதும் ஒன்றுதான் என்பதை நச்சு கலந்து சொல்லும் படம் கான் கேர்ள். விதவிதமாக படம் எடுத்து வெற்றிகளை குவித்திருக்கும் டேவிட் ஃபின்ச்சர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் சைக்காலஜிக்கல் த்ரில்லர். பென் ஆஃலெக், ரோஸமன்ட் பைக் போன்ற அதிரடி பார்ட்டிகள் நடித்திருந்தாலும்………. சரி, வாங்க கதையைப் பார்க்கலாம். ஏமியாக வருகிறார் ரோஸ்மன்ட். பத்திரிகைகளில் கதை எழுதிவரும் ஏமியும் எழுத்தாளராக இருக்கும் நிக் டன்னும் தற்செயலாக சந்திக்கிறார்கள். இருவரது ரசனையும் ஒன்றுபோல் இருக்கவே காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். காதல் திருமணம் செய்துகொண்ட அத்தனை தம்பதியரும் சந்திக்கும் பிரச்னையை இவர்களும் எதிர்கொள்கிறார்கள். ஆம், திருமணத்துக்குப் பிறகு ஒருவர் மீது ஒருவருக்கு ஆர்வம் குறைகிறது. காதலிக்கும் வரை நல்ல முகமூடி போட்டுக்கொண்டு சுற்றியவர்கள்,…

Read More

முட்டாள் பேய் – கோத்திகா (Gothika)

முட்டாள் பேய் – கோத்திகா (Gothika)

பாக்கவே பாக்காதீங்க – கோத்திகா: பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியக்கார வைத்தியருக்கு பைத்தியம் பிடிச்சா, அவர் எந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியக்கார வைத்தியரிடம் போவார் என்ற விசுவின் குழப்பமான வசனத்தை திரைக்கதையாக நீட்டினால்… அதுதான் கோத்திகா. ராபர்ட் டவ்னி ஜூனியர், ஹாலி பெர்ரி போன்ற சூப்பர் கலைஞர்கள் நடித்தால், அந்தப் படம் உருப்படியாகத்தான் இருக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை. பிள்ளையார் பிடிக்க நினைத்து குரங்கு உருவான கதையாக, திக்கு திசை தெரியாமல் பயணிக்கும் ஒரு  சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகை திரைப்படம் கோத்திகா. நம்பிக்கை தரும் விதமாகத்தான் கோத்திகா ஆரம்பமாகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை பராமரிக்கும் மனநல மருத்துவர் டாக்டர் மிரண்டாவாக வருகிறார் ஹாலி பெர்ரி. அங்கே இருக்கும் நோயாளி குளோயி (Chloe), பூட்டிய அறைக்குள் என்னை ஒருவன் தினமும் கற்பழிக்கிறான் என்று சொல்வதை நம்பமுடியாமல் கணவன் டக்ளஸிடம் சொல்கிறாள்….

Read More

சினிமா கிறுக்கு இருக்கா? – Eternal Sunshine of the Spotless Mind

சினிமா கிறுக்கு இருக்கா? – Eternal Sunshine of the Spotless Mind

பாக்கவே பாக்காதீங்க – எடர்னல் சன்ஷைன் ஆஃப் த ஸ்பாட்லெஸ் மைன்ட்: கிறுகிறுவென தலை சுற்றவைக்கும் நான் லீனியர் திரைக்கதை, மூன்றாவது முறை பார்த்தால் மட்டுமே புரியும் வகையில் நொடியில் மறையும் காட்சியமைப்பு, லேப்டாப் வைத்துக்கொண்டு மூளையை கட்டுப்படுத்துவதாக காதில் பூச்சுற்றும் கதை, ஆமை வேகத்தில் நகரும் திரைக்கதை போன்ற திகிடுதத்தங்கள் இருந்தாலும் எகிறும் ஐ.எம்.டி.பி. ரேட்டிங்கிறாக ஒரு படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்ற சினிமா கிறுக்கு உங்களிடம் இருந்தால் மட்டும் எடர்னல் சன்ஷைன் ஆஃப் த ஸ்பாட்லெஸ் மைன்ட் படத்தைப் பார்க்கலாம். மற்றவர்கள் கதையை மட்டும் படித்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம். விதவிதமான நகைச்சுவை வேடங்களில் அசத்தும் ஜிம் கேரி காதல் நாயகனாக அவதாரம் எடுக்க… காதலிக்கு இலக்கணமாகத் திகழும் டைட்டானிக் கேட் வின்ஸ்லெட் நாயகியாக வருகிறார். இவர்களுக்கு இடையிலான காதல், மோதல், பிரிதல், சேர்தல், கோபம்,…

Read More

செத்துசெத்து விளையாடுறாங்க – Edge Of Tomorrow

செத்துசெத்து விளையாடுறாங்க – Edge Of Tomorrow

பாக்கவே பாக்காதீங்க – எட்ஜ் ஆஃப் டுமாரோ: கம்ப்யூட்டர் கேம் ஆடுபவர்களுக்கு கண்டிப்பாக இந்த அனுபவம் இருக்கும். முதல் முறை விளையாடும்போது, எந்த  இடத்தில் எதிரி வருவான், என்ன ஆபத்து இருக்கும் என்று தெரியாமல் மாட்டிக்கொள்வார்கள். அடுத்த முறை விளையாடும்போது, குறிப்பிட்ட இடத்தில் என்ன நடக்கும் என்பது தெரியும் என்பதால் அதுவரையிலும் வேகமாகவும் சரியாகவும் முன்னேறிச் செல்வார்கள். அடுத்து மேற்கொண்டு தாண்டிச் செல்லும்போது மீண்டும் அடிபடுவார்கள். அடுத்த முறை அந்த இடத்தையும் எளிதாக கடந்து செல்வார்கள். அதன்பிறகு மீண்டும் வேறு ஒரு இடத்தில் அடிபடுவார்கள். அடுத்து விளையாடும்போது…. போதும் நிறுத்து என்று கத்தத் தோன்றுகிறதா…? அப்படித்தான் டாம் க்ரூஸ் நடித்திருக்கும் எட்ஜ் ஆஃப் டுமாரோ பார்க்கும்போதும் கத்தத் தோன்றுகிறது. ஆனால் இந்தப் படத்தை சூப்பரான சயின்ஸ் ஃபிக்‌ஷன் என்று சிலர் கொண்டாடுவதுதான் வேடிக்கை. வாருங்கள் மொக்கை கதையைப்…

Read More