நிறவெறிக்குத் தீர்வு – தி பிளைண்ட் சைட்

the blind side poster

பாக்காம விட்றாதீங்க – தி பிளைண்ட் சைட்:

நம்ம நாட்டில் சாதிப் பிரச்னை என்றால் வெள்ளைக்காரர்களுக்கு நிற பிரச்னை. நிற பிரச்னையை எப்படி அணுகவேண்டும் என்பதை, அழகு கவிதையாக வடித்துக் காட்டியிருக்கும் படம்தான், ‘தி பிளைண்ட் சைட்’. இது நிஜமான ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்பது இன்னொரு சிறப்பு.

the_blind_side 7மெகா சைஸ் உருவத்துடன் இருக்கும் மைக்கேல் ஓஹெர் (ஆரான்) தங்குவதற்கு இடம் இல்லாத மந்த புத்திக்காரன். ஆனால் பந்து விளையாடுவது என்றால் மட்டும் உயிராக இருக்கிறான். அவன் உருவத்தையும், பந்து விளையாடும் விதத்தையும் பார்க்கும் கோச் பர்ட் காட்டன், ஏழை மாணவர்களுக்கான கோட்டாவில் அவனை பள்ளியில் சேர்க்கிறார். அங்கே மைக்கேலை அனைவரும் ’பிக் மைக்’ என்றே அழைக்கிறார்கள்.

அந்தப் பள்ளிச் சிறுவன் எஸ்.ஜெ. எனப்படும் ஷான் ஜூனியர் நட்பு மைக்கேலுக்குக் கிடைக்கிறது. ஒரு நாள் தங்குவதற்கு இடம் இல்லாமல் அலையும்போது ஷானின் அம்மா லீயான் டுஹி… அதான் நம்ம சாண்ட்ரா புல்லக் பார்க்கிறார். தங்குவதற்கு இடம் இல்லாமல் பள்ளியின் ஜிம்மில் தங்கப்போவதாக சொல்லும் மைக்கேலை வீட்டுக்குக் கூட்டிவந்து ஹாலில் The-Blind-Side-5படுக்க வைக்கிறார். அடுத்தநாள் சொல்லாமல் வெளியேற நினைப்பவனை, ’தேங்க்ஸ் கிவிங்’ விடுமுறையை எங்களுடன் கொண்டாடலாம் என்று சொல்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தில் ஒருவனாக மாறுகிறான் மைக்கேல். வயசுக்கு வந்த மகள் வீட்டில் இருக்கும்போது இப்படி ஒருவனை அதுவும் கருப்பனை தங்கவைப்பது சரியா என்று சாண்ட்ராவின் தோழிகள் கேட்பதை சாமர்த்தியமாக சமாளித்தாலும், வீட்டுக்கு வந்ததும் மகளிடம் நேரடியாகவே கேட்கிறாள்.

the blind side 8மைக் வீட்டில் இருப்பதால் உனக்கு ஏதேனும் சங்கடம் இருந்தால் சொல் எனும்போது, மகள் காலின் சொல்லும் பதில் ஒரு பாசக் கவிதை. இந்தப் பெண்ணே ஒரு அழகுக் கவிதை என்பது கதைக்குத் தேவையில்லாத விஷயம்.

அனைவரிடமும் அன்பாக பழகினாலும், மைக் தன்னைப்பற்றி எந்த விபரமும் சொல்லாமல் தவிர்க்கிறான். படிப்பில் மிகவும் மோசமாக இருக்கிறான். அதனால் விளையாட்டுக்கென தனியே இருக்கும் The-Blind-Side-1பல்கலைக்கழகத்தில் சேரமுடியாத நிலைமை ஏற்படுகிறது. உடனே மைக்கேலுக்கு பிரைவேட் டீச்சராக மிஸ் சூ (கேதி பேட்ஸ்) நியமனம் செய்யப்படுகிறாள்.

அந்த ஊரில் புட்பால் எனப்படும் ரக்பியில் மிட்ஃபீல்டு வீரனாக களம் இறக்கப்படுகிறான். எதிர் டீம் ஆட்களிடம் இருந்து தன் அணியை பாதுகாக்கும் முக்கியமான பணி இந்த ஆட்டக்காரனுக்குத்தான் உண்டு. நல்ல உடல் இருந்தாலும் இதனை எப்படி விளையாடுவது என்று புரியாமல் விழிக்கிறான். கோச் எத்தனை முறை சொல்லிக்கொடுத்தாலும் கற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறான்.

The-Blind-Side-4இதை பார்க்கும் சாண்ட்ரா பொறுத்துக்கொள்ள முடியாமல் களத்தில் இறங்குகிறாள். ‘மைக்கேல்… நீ விளையாடுவது உன்னுடைய டீமுக்காக அல்ல, நமது வீட்டுக்காக என்று நினைத்துக்கொள். உனக்குப் பின்னே இருப்பது நமது குடும்பத்தினர் என்பதால் ஒவ்வொருவரையும் பாதுகாப்பது நமது கடமை என்கிறாள். உடனே விளையாட்டு குறித்த அவனது கண்ணோட்டம் முழுமையாக மாறுகிறது.

அதேபோல் முதல் போட்டியில் இறங்குகிறான். தொழில்முறையாக விளையாடிப் பழக்கப்பட்டவர்கள் ஏமாற்றி பந்தைக் கடத்துவதை சமாளிக்க The-Blind-Side-8முடியாமல் விழிக்கிறான் மைக்கேல். அந்தப் போட்டியின் கோச் பர்ட் காட்டனை கிண்டலாக நடுவர் பேசவே, ஆவேசமாகிறான். எதிர் டீம் மிட்ஃபீல்ட் வீரனை தள்ளிக்கொண்டே போய் எல்லைக்கோட்டுக்கு வெளியே தூக்கி வீசுகிறான். அந்த ஒரு வீடியோ அவன் தலையெழுத்தை மாற்றுகிறது. அத்தனை விளையாட்டுப் பல்கலையும் அவனை தேடித்தேடி அழைக்கிறது.

இந்த நேரத்தில், சாண்ட்ரா புல்லக் ஏதோ ஒரு முக்கியமான உள்நோக்கத்துடன் மைக்கேலை வளர்ப்பதாக, அவனை தேர்வு செய்பவர் சந்தேகிக்கிறார். உடனே கோபமாகும் மைக்கேல் சாண்ட்ராவை விட்டுவிலகி தன்னுடைய பழைய இடத்துக்குப் போகிறான். அங்கே பழைய தோழர்களை பார்க்கிறான். அப்போது அவர்கள் சாண்ட்ராவுக்கும் மைக்கேலுக்கும் The-Blind-Side-3கள்ளத்தொடர்பு இருக்கிறதா என்று கேட்க ஆவேசமாகிறான். எத்தனை இனிய குடும்பத்தை இழந்திருக்கிறோம் என்பது தெரியவர… உடனே மீண்டும் சாண்ட்ராவைத் தேடி ஓடுகிறான்.

இதன்பிறகு ஒரிஜினல் விளையாட்டு வீரனான ஓஹெர் மற்றும் அவனை தத்தெடுத்து வளர்த்த குடும்பத்தினரையும் காட்டி படம் முடிகிறது. இந்தப் படத்தில் மிகவும் சாதாரண வேடத்தை தன்னுடைய முதிர்ச்சியான நடிப்பால் உயர்த்தி நிறுத்தியிருக்கிறார் சாண்ட்ரா. பாசம் காட்டுவதற்கு நிறம் ஒரு தடையல்ல என்று சொல்லியிருக்கும் படங்களில் இதற்கு என்றென்றும் ஒரு தனித்துவம் உண்டு.

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

பின்குறிப்பு :

அம்மா வேடத்தில் அசத்தியிருக்கும் சாண்ட்ரா புல்லக், இந்தப்படத்திற்காக ஆஸ்கர் விருது வாங்கியிருக்கிறார். மைக்கேல் லூயிஸ் எழுதிய ‘தி பிளைண்ட் சைட் – இவாலுவேஷன் ஆஃப் கேம்’ புத்தகத்தைத் தழுவி 2009-ம் ஆண்டு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஜான் லீ ஹான்காக்.

முழு படத்தையும் பார்க்க:

The Blind Side, biographical, sports drama, film, John Lee Hancock, The Blind Side: Evolution of a Game, Michael Lewis, Michael Oher, offensive lineman, Baltimore Ravens, Tennessee Titans, Carolina Panthers, NFL, Quinton Aaron, Sandra Bullock, Tim McGraw, Kathy Bates, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 123 times, 16 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>