பாகுபலியிடம் பாடம் படிப்பாரா ஷங்கர்?

Bahubali TH Final

இதுதாண்டா பிரமாண்டம்:

திரையிடப்பட்ட மூன்று தினங்களில் டாப் 10 யு.எஸ். பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் பட்டியலில் முதன்முதலாக இடம்பிடித்து 3.5 மில்லியன் டாலர் அள்ளியிருக்கிறது பாகுபலி திரைப்படம். அமெரிக்க மண்ணில் மட்டும் நிகழ்த்தியிருக்கும் இந்த சாதனையைத் தொடர்ந்து, இந்தியாவிலும் பாகுபலி பல்வேறு சாதனைகளையும் முறியடிக்கும் என்றே நம்பப்படுகிறது. இதுவரையிலும் பிரமாண்டம் என்றால் ஷங்கர் என்று நினைத்துக்கொண்டிருந்த அறிவுஜீவுகளுக்கு நிஜமான பிரமாண்டத்தைக் காட்டிவிட்டார் இயக்குனர் ராஜமெளலி.

Bahubaliஎருமை மாட்டுக்கு பெயிண்ட் அடிப்பது, ஆயிரத்தெட்டு தொப்பையர்களை ஆடவிடுவது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் பூச்செடிகளை கிராஃபிக்ஸ் மூலம் வளர்த்துக்காட்டுவது, ஆங்கிலப்படங்களைக் காப்பியடித்து அதேபாணியில் அச்சுபிசகாமல் சண்டைக் காட்சி அமைப்பது இனியும் செல்லுபடியாகாது என்பதை ஷங்கர் புரிந்துகொள்ள வேண்டும். சிறந்த கதைகளைத் தேர்வு செய்வதிலும், அதற்கு விறுவிறுப்பாக திரைக்கதை அமைப்பதிலும் ஷங்கர் கைதேர்ந்தவர் என்றாலும், இந்த பிரமாண்டங்களின் பிடியில் சிக்கித்தான் சின்னாபின்னாமாகி இருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சி வந்தாலே திகிலைக் கிளப்பும் அளவுக்கு கற்பனை சிறகை பறக்கவிடுகிறார்.

bahubaliதமிழ் சினிமாவுக்கு வணிகரீதியில் மாபெரும் சாத்தியங்கள் இல்லை என்று சொல்வதை இனியும் நம்பமுடியாது.  நான் ஈ, பாகுபலி படங்களை எந்த மொழியினரும் ரசிக்கும்வண்ணம் தரமுடியும் என்று நிரூபித்துக்காட்டி வெற்றியும் பெற்றுவிட்டார் ராஜமெளலி. தரமான படம் என்றால் உலக அளவில் திரையிடவும் கலெக்‌ஷன் அள்ளவும் முடியும் என்பதால் பட்ஜெட் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் செலவழிக்கும் பணத்திற்கு அர்த்தம் இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம்.

காட்சியமைப்புகளில் மட்டுமே பிரமாண்டம் வைப்பதைவிட்டு, கதைக்கேற்ப காட்சிகளை பிரமிப்பூட்டும் வகையில் அமைக்கத்தொடங்குங்கள் ஷங்கர். ராஜமெளலியுடன் போட்டிபோட்டு வெற்றிபெறும் தகுதி உங்களுக்கு இருக்கிறது என்பதாலே, இந்தக் கட்டுரையை உங்களுக்கு எழுதுகிறோம். பாகுபலியில் படித்த பாடத்தை அடுத்த படத்தில் காட்டுங்கள். மூன்று ஆண்டுகள் படம் எடுத்து 300 கோடிகள் செலவழித்து தமிழன் பெருமையை நிலைநிறுத்துங்க, இல்லைன்னா…

Bahubali, Bahubali Review, Bahubali Collection, Rajamouli, SS Rajamouli, Prabhas, Rana, Rana Daggubati, Tamannaah, Anushka Shetty, Ramya Krishnan, Nassar, Sathyaraj, Adivi Sesh, Tanikella Bharani, Sudeep, MM Keeravani, Sabu Cyril, V Srinivas Mohan, epic, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 312 times, 20 visits today)

Related posts

5 thoughts on “பாகுபலியிடம் பாடம் படிப்பாரா ஷங்கர்?

 1. Vasanth

  ஹலோ அட்மின்,
  நான் சமீபத்தில் எதிர்பாராமல் தங்களது வலைப்பக்கத்தை பார்த்தேன். உண்மையிலே இது சிறப்பான மற்றும் அட்டகாசமான தளம். தங்களுடைய விமர்சனம் ஹாலிவுட் படம் என்பதினால் அனைத்தையும் பாராட்டியோ அல்லது இகழ்ந்தோ இல்லாமல் இருப்பது மிகச்சிறப்பு. சிறந்த நடுநிலையான விமர்சனம். தவிர இது கதையை மட்டுமல்லாமல் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பம் என அனைத்தையும் அலசுகின்றீர்கள். இதைபோன்ற சிறந்த ஆங்கில பட விமாசனத்தை வேறெந்த தளத்திலும் பார்த்ததில்லை. ஹாட்ஸ் ஆப்

  …….

  இந்த தலைப்பில் உள்ள விமர்சனம் சற்று அதிகமாவே எழுதப்பட்டுள்ளது. இப்பொழுது பிரம்மாண்டமாக எடுப்பவர்கள் எல்லாம் ஷங்கரின் படைப்பை பார்த்து அதைப்போலவே செய்ய விரும்பி சாதித்து காட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஷங்கர் வந்த புதிதில் தற்போதைய கிராபிக்ஸ் தொழில்நுட்பம் இல்லை. அந்த சமயத்திலே வித்தியாசமான பரிமாணத்தில் கதாபாத்திரங்களையோ சூழல்கலையோ உருவாக்கி, மாற்றி நம்மையெல்லாம் வியக்க வைத்தவர் ஷங்கர். இசையில் என்றும் மைல்கல்லாக இளையராஜா இருப்பது போல நமது புதிய பரிமானத்திற்கு மைல்கல் ஷங்கர் ஆவார். உங்களுக்கு பெயிட்டும், வயிறும் மட்டும்தான் ஞாபகம் இருக்கின்றதா?. பாடல்களில் புதுமைககாட்டி பாலிவுட் முதலியவற்றை நம் பக்கம் திரும்பவைத்து நம்மை அவர்கள் காப்பியடித்தது ஒரு புரட்சியே நடந்தது நினைவில்லையா? ஹொலிவூட் பாக்ஸ் ஆபீசில் நம் படத்தினை முதன்முதல் கொண்டு செல்லவில்லையா.? கிராபிக்ஸ் படத்தில் இருப்பதையே நாம்பமுடியாத அளவிற்கு இரட்டை கதாபாத்திரங்களை படத்தில் உலவவிட்டு இந்த படத்தில் கிராபிக்ஸ் இல்லை என சவால் விடுமளவிற்கு நிஜமாக்கி காட்டியிருப்பார்.
  பாகுபளியை பாராட்டுங்கள். அதற்காக குருவை நிந்தனை செய்யாதிர்கள்.

 2. Hello! Do you use Twitter? I’d like to follow you if that would be ok.
  I’m undoubtedly enjoying your blog and look forward to new
  posts.

  my homepage; Caryn

 3. Terrific article! This is the kind of info that should be shared across the web.
  Shame on Google for now not positioning this put up upper!
  Come on over and talk over with my site . Thanks =)

  Feel free to surf to my weblog … Thanh

 4. Good article. I will be facing many of these
  issues as well..

 5. Hello there! This blog post couldn’t be written much better!
  Reading through this article reminds me of my previous roommate!
  He constantly kept talking about this. I am going to forward this post to him.
  Fairly certain he’s going to have a very good read.
  Many thanks for sharing!

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>