ரஜினி, கமல் நடிப்பில் ‘எஸ்கேப் பிளான்’

Escape Plan Rajini Kamal

Escape Plan Rajini Kamal

’நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கும்வகையில் அழுத்தமான கதை அமைந்தால் நிச்சயம் சேர்ந்து நடிப்போம்’ என்று அவ்வப்போது ரஜினியும், கமலும் வீராவேசமாகப் பேசுவார்கள். ஆனால், அதைத்தாண்டி கதையைத் தேடும் முயற்சியில் எப்போதும் இறங்கவே மாட்டார்கள்.

ஆனால் இவர்களைப்போன்று  ஈகோ எதுமே இல்லாமல் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களான சில்வர்ஸ்டர் ஸ்டோலன், அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் இருவரும் சேர்ந்து கலக்கியிருக்கும் படம்தான், ‘எஸ்கேப் பிளான்’. கேரக்டருக்காக எத்தனைதூரம் மெனக்கெட வேண்டும் என்று இரண்டு பேருமே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

கொடுமையான குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக்குள் சிக்கியிருக்கிறார் அர்னால்ட். எந்த இடத்தில் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது, எத்தனை நேரத்துக்கு ஒரு முறை காவல் மாறுகிறது என்பதை எல்லாம் துல்லியமாக கவனித்து அந்த சிறையில் இருந்து தப்பிக்கிறார். சிறையில் இருந்து குறிப்பிட்ட தூரத்தைக் கடந்ததும் அவரே விரட்டிவரும் காவலர்களிடம் சரண் அடைகிறார். அதன்பிறகுதான் ஓர் உண்மை புரியவருகிறது. அந்த சிறையில் தப்புவதற்கான வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்காக நியமிக்கப்பட்ட ஏஜெண்ட்தான் ஸ்டோலன் என்பது.

இதையடுத்து நிஜ பிரச்னை வருகிறது. உலகின் அதிபயங்கா தீவிரவாதிகளை மிகவும் பாதுகாப்பான இடத்தில் அரசு யாருக்கும் தெரியாமல் அடைத்துவைத்திருக்கிறது. அந்த இடத்தின் பாதுகாப்புத்தன்மையை சோதிக்க விரும்பி பேரம் பேசுகிறார்கள். இது ரகசிய ஆபரேஷன் என்பதால் நண்பர்களுக்கும் உடன் வேலை பார்ப்பவர்களுக்கும்கூட இவர் எங்கே செல்கிறார் என்பது தெரியாது. சவாலை ஏற்கிறார் ஸ்டோலன். நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட பயங்கரமான சிறையில் அர்னால்ட் இருக்கிறார். அவர் ஏன் அங்கு இருக்கிறார். அங்கே இருந்து ஸ்டோலன் தப்புவதற்கு உதவுகிறாரா அல்லது தடுக்கிறதா என்பதெல்லாம் திகில் காட்சிகளாக விரிகின்றன.

இந்தக் கதையை அப்படியே நம்மூர் ரஜினி, கமலை வைத்து நடிக்கவைத்து எடுத்தா; சிறப்பான ஆக்‌ஷன் படமாக அமையும். ஆனால் இந்த முயற்சியில் ஒரு பெரும் அபாயம் இருக்கிறது. இந்த இரண்டு கேரக்டரிலும் நானே நடிக்கிறேன் என்று அடம் பிடிப்பார் கமல். படத்தில் மருந்துக்குக்கூட பெண்கள் இல்லை என்பதால், அருகிலேயே ஒரு பெண்கள் சிறையும் இருக்கவேண்டும் என்று கேட்பார். இவற்றை எல்லாம் சமாளித்து கமலை அர்னால்ட் கேரக்டரிலும் ரஜினியை ஸ்டோலன் கேரக்டரிலும் நடிக்கவைத்தால் படம் சூப்பர் ஹிட் என்பதில் சந்தேகம் இல்லை.

அதெப்படி, இதற்கு ரைட்ஸ் பிரச்னை வராதா என்றெல்லாம் கேட்கக்கூடாது. அவ்வை சண்முகி, தெய்வத்திருமகள் படங்களுக்கு பிரச்னை வந்ததா என்ன? அவ்வை சண்முகியை ஆஸ்கார் நாமினேஷனுக்கு அனுப்பியதுபோல் இந்தப் படத்தையும் அனுப்ப முயற்சிக்கலாம்.

Image Credit: Dharma Durai poster by Mjdesign Studios at Deviantart & adidhotra.com

(Visited 194 times, 24 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>