எக்ஸ் மெஷினா – 39 மார்க்

ex-machina poster

பாக்கவே பாக்காதீங்க –  எக்ஸ் மெஷினா:

இந்த ஆண்டு வெளியான படங்களில், ஆஹா, ஓஹோவென்று தலைக்கு மேல் தூக்கிவைத்து கொண்டாடப்படுவது எக்ஸ் மெஷினா எனும் பிரிட்டிஷ் படம். பல நாட்டு உணவுகளை சமைக்கத் தெரிந்த கலைஞனிடம் வெந்நீர் போடச்சொல்லி குடிப்பது போல்… வெறுப்பைக் கிளப்புகிறார்கள்.

ex-machina8ஆரம்பம் என்னவோ அட்டகாசமாக இருக்கிறது. கூகிள் போன்று மாபெரும் சர்ச் இஞ்சின் நடத்திவரும் புளூபுக் நிறுவனத்தின் உரிமையாளர் நேதனுடன் (ஆஸ்கர் ஐசக்) ஒரு வாரம் தங்கும் வாய்ப்பு, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் கேலப் (டொனல் க்லிசன்) எனப்படும் இளம் கம்ப்யூட்டர் புரோகிராமருக்குக் கிடைக்கிறது. சந்தோஷமாக கிளம்புகிறான். அட்டகாசமான யாருமே இல்லாத தீவு, ஜன்னல்களே இல்லாத கண்ணாடி வீடு. டெக்னாலஜியின் உச்சமாக இருக்கும் அந்த வீட்டில் நுழைந்ததும் கேலப்பிடம் ஒரு பத்திரத்தில் கையெழுத்து கேட்கிறான் நேதன்.

ex-machina9புளுபுக் நிறுவனரான நேதன், 13 வயதில் புரோகிராம் எழுதி உலகின் உச்சத்தைத் தொட்ட மாபெரும் புத்திசாலி. அவன் அடுத்தகட்டமாக இயந்திரப் பெண்களை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறான். ‘இங்கு நடப்பதை, கேட்பதை, பார்ப்பதை வெளியே போனதும் யாரிடமும் பேசவோ, எழுதவோ, பகிரவோ கூடாது’ என்று பத்திரத்தில் கேட்கிறான். கேலப் கையெழுத்திட தயங்குவதைப் பார்த்ததும், ‘ஓகே… இந்த ஒரு வாரமும் நன்றாக குடித்து, கும்மாளம் போட்டுவிட்டு கிளம்பு. ஒரு நல்ல வாய்ப்பை தவறவிட்டோம் என்று வாழ்நாள் எல்லாம் வருத்தப்படுவாய்’ என்றதும் அவசர அவசரமாக கையெழுத்துப் போடுகிறான்.

ex-machina10அதன்பிறகு கேலப்புக்கு ஏவா  (அலிசியா விக்கெண்டர்) எனப்படும் அதிநவீன ரோபோட்டை அறிமுகம் செய்கிறான் நேதன். டுரிங் டெஸ்ட் மூலம் ஏவா, மனித  நெருக்கமாக உருவாக்கப்பட்டு இருக்கிறாளா என்பதை கண்டுபிடித்துத் தருமாறு கேட்கிறான். புளுபுக் நிறுவனத்தில் பணியாற்றும் சிறந்த புரோகிராம் என்பதால் அவனை தேர்வு செய்து இங்கு வரச்சொன்னதே இதற்காகத்தான் என்பதை புரிந்துகொள்கிறான் கேலப்.

ex-machina3ஏவாவுடன் ஆர்வமாக பேசத் தொடங்குகிறான் கேலப். ஏவாவுக்கு மனித உணர்வுகளை நொடியில் புரிந்துகொள்ளும் திறன் இருக்கிறது. ஒருவரை ஒருவர் எடை போட்டுக்கொள்ளும் வகையில் புத்திசாலித்தனமாக, காதல் சொட்ட உரையாடல் நிகழ்த்துகிறார்கள். குடும்பத்தினர் ஆதரவும் காதலின் அரவணைப்பும் இல்லாத கேலப், மிக எளிதாக ஏவாவின் காதல் பேச்சிற்கு மயங்குகிறான். இவர்களை ஒட்டுமொத்த நேரமும் சிசிடிவி மூலம் நேதன் கவனித்துக்கொண்டிருந்தாலும், தன்னுடைய திறமையால் பவர்கட் உருவாக்கி கேமராவை இயங்கவிடாமல் செய்கிறாள் ஏவா.

ex-machina11மீண்டும் மின்சாரம் வருவதற்கு இடைப்பட்ட குறுகிய நேரத்தில், ‘நேதன் சரியான நபர் கிடையாது. நிறைய பொய் சொல்கிறான். உன் கண்களில் அன்பான காதலை பார்த்து விட்டேன், அதனால் உடனே  என்னை உன்னுடன் கூட்டிப்போ’ என்று  கேட்கிறாள். உடலில் தெரியும் இயந்திர பாகங்களை எல்லாம் துணிகளால் மறைத்துக்கொண்டு, ஒரு நிஜப் பெண்ணைப் போலவே கேலப்பிடம் பேசத் தொடங்குகிறாள்.

ex-machina5அந்த கண்ணாடி மாளிகையில் நேதன், கேலப் தவிர க்யாகோ என்றொரு கொரியன் வேலைக்காரப் பெண் மட்டுமே இருக்கிறாள். ஆனால் அவளுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் அவளுடன் உரையாட முடியாமல் இருக்கிறான் கேலப். ஏவா மீது கேலப் காதல் மயக்கத்தில் இருப்பதை கண்டுபிடிக்கிறான் நேதன். ஏவா இந்த இடத்தில் இருந்து தப்பித்துச் செல்வதற்காக உன்னை பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறாள் என்று சொல்கிறான் நேதன். ஆனால் அதை நம்பாமல் ஏவா மீது முழு நம்பிக்கை வைக்கிறான் கேலப்.

ex-machina4குடித்துவிட்டு நேதன் சுயநினைவு இழக்கும்போது அவனது கம்ப்யூட்டர் புரோகிராம்களை மாற்றிவிடுகிறான். அடுத்தநாள் ஏவாவை வெளியே அழைத்துச்செல்லும் வகையில் திட்டம் போடுகிறான். ஆனால் இதனை நேதன் கண்டுபிடித்து விடுகிறான். ஏவா பொய் சொல்கிறாள் என்று நேதனும், நேதன் பொய் சொல்கிறான் என ஏவாவும் சொல்வதைக் கேட்டு தடுமாறும் நேரத்தில் இதுவரை வேலைக்காரியாக இருந்த க்யாகோ – ஒரு ரோபோ என்பதை அறிகிறான்.

ex-machina7யார் உண்மை சொல்கிறார்கள் என்பதை இந்த நேரம் நீங்கள் எளிதாக கண்டுபிடித்து இருக்கலாம். அதனால் இதை அறிந்துகொள்வதற்காக தியேட்டருக்குப் போகவேண்டிய அவசியம் இல்லை. மிகப்பெரிய ஜீனியஸாக காட்டப்படும் நேதன், அவன் தேர்வுசெய்யும் மிகப்பெரிய அறிவாளியான கேலப் இருவரும் சேர்ந்து, ஏதோ மிகப்பெரிய காரியம் சாதிக்கப்போகிறார்கள் என்று பார்த்துக்கொண்டே இருந்தால்… அப்படி எதுவும் இல்லை என்பதுதான் மிகப்பெரிய ஏமாற்றம்.

உங்களை எச்சரிப்பதற்காக இங்கே டிரைலர்

பின்குறிப்பு:

பிரிட்டிஷ் எழுத்தாளராக அறியப்படும் அலெக்ஸ் கார்லெண்ட் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் முதல் படம். மொத்தமே மூன்று நபர்களை மையமாக வைத்து முழு படத்தையும் எடுத்திருக்கும் முயற்சிக்கு நிச்சயம் பாராட்டலாம்.

அதிகம் எதிர்பார்க்கவைத்து ஏமாற்றியதால் 39 மதிப்பெண்கள்தான்.

Ex Machina, British, Science Fiction, sci-fi, thriller, film, Alex Garland, Domhnall Gleeson, Alicia Vikander, Oscar Isaac, programmer, Turing test, android, robot, A.I, artificial intelligence, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Don’t see, Tamil Hollywood

(Visited 287 times, 36 visits today)

Related posts

One thought on “எக்ஸ் மெஷினா – 39 மார்க்

  1. […] முன் எக்ஸ் மெஷினா (விமர்சனம் இங்கே படிக்கவும்) என்ற படத்தில் பெயர் […]

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>