சிம்புவின் எதிரிகள் யார்?

Simbu1

TRநடிகர் சங்கத் தேர்தலில் பழம் தின்று கொட்டை போட்ட ராதாரவி, சரத்குமார் போன்றவர்கள் ஒருபக்கம் நிற்க, விஷால், நாசர் போன்றவர்கள் நேருக்கு நேராக நின்று எதிர்ப்புக்குரல் கொடுக்கிறார்கள். இது வரவேற்கத்தகுந்த நிகழ்வுதான்.

நடிகர்களுக்குள் மோதல் சகஜம் என்ற நிலையில் திடீரென செய்தியாளர்களை சந்தித்திருக்கும் டி.ராஜேந்தர், அவரது மகன் சிலம்பரசனுக்கு எதிராக சிறு கும்பல் சதி  செய்வதாகவும், அதனால்தான் ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ போன்ற படங்கள் வெளிவர முடியாமல் தவிப்பதாகவும் வழக்கம்போல் அழுது புலம்பி மக்களிடையே அனுதாபம் பெற முயற்சி செய்திருக்கிறார்.

நான் கருணாநிதியை எதிர்த்தவன், ஜெயலலிதாவுடன் சண்டை போட்டவன், ஒபாமாவை வம்புக்கு இழுத்தவன் என்றெல்லாம் சவடால் பேசும் தைரியசாலியான ராஜேந்தர், ஏன் இப்போது அந்த சிறு கும்பலின் பெயரை வெளிப்படையாக சொல்வதற்கு பயப்படுகிறார் என்பதுதான் ஆச்சர்யம்.

Vaalu-poster‘வாலு’ போன்ற படங்கள் வந்தால் தமிழ் சினிமாவின் சரித்திரம் மாறிவிடப்போகிறதா அல்லது சூப்பர் ஸ்டார் பட்டத்தை சிம்பு பிடித்துவிடப் போகிறாரா? அவருக்குப்பின்னே அறிமுகமாகி, ஒழுங்காக தன்னுடைய தொழிலை மட்டும் பார்த்த காரணத்தால் இன்று தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்றவர்கள் தொடர் வெற்றிகளைக் கொடுத்துவருகிறார்கள். சிம்புவின் தோல்விக்கும் பிரச்னைகளுக்கும் காரணம் அவரது அலட்டல், வெட்டி வீராப்புதான் என்பதை தமிழ் திரையுலகம் அறியும்.

எம்.ஜி.ஆர். படத்தை தி.மு.க. தடுத்தது போலவும் விஜய் படத்தை ஜெயலலிதா தடுத்தது போலவும் ஒரு போலி பிரமையை ஏற்படுத்தி  வீண் பப்ளிசிட்டி ஏற்படுத்த முயற்சிப்பதைவிட்டு, படத்தை வெளியிடும் வேலையை ராஜேந்தர் பார்க்கலாம். மகனுக்கு ஆதரவாக நிற்க வேண்டியது தந்தை என்ற வகையில் ராஜேந்தரின் கடமைதான். ஆனால் தேவையில்லாமல் புரளியைக் கிளப்புவதை நிறுத்தவில்லை என்றால்… சிம்புவுக்கு எதிரி ராஜேந்தராகத்தான் இருப்பார்.

கஸ்தூரிராஜாவை விட்டு செல்வராகவன், தனுஷ் விலகி நிற்பதைப் போல் சிம்புவும் தன் சொந்தக்காலில் நிற்பதுதான் அவருக்கு நல்லது.

பின்குறிப்பு :

வாலு படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியிடம் இருந்து 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கும் மேஜிக் ரேய்ஸ் நிறுவனத்திடம்தான் இன்னமும் உரிமை இருக்கிறது என்பதை தெளிவாக சொல்லும் வழக்கறிஞரின் விளக்கத்தைக் கேளுங்கள்.

(Visited 85 times, 8 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>