உசுரை உலுக்கும் கருணைக் கொலை

Million_Dollar_Baby_poster

பாக்காம விட்றாதீங்க – மில்லியன் டாலர் பேபி :

கருணைக் கொலை செய்வதை ஏற்கவே முடியாதுதான். ஆனால் சில சூழல்… சில மனிதர்கள் விதிவிலக்காக இருக்கலாம் என்பதை அழுத்தமாக சொல்வதுதான் மில்லியன் டாலர் பேபி. நடிகராகவும் இயக்குனராகவும் கிளிண்ட் ஈஸ்ட்வுட் ஜொலிஜொலித்த படம்.

Million Dollar Baby

மோ குஷ்லா… மோ குஷ்லா என்று ஒவ்வொரு வெற்றியின் போதும் கூட்டம் பாராட்டு மழை பொழிவதைக் கண்டு பனிக்கட்டியாக கரைகிறாள் மேகி (ஹிலாரி ஸ்வாங்க்) என்ற குத்துச்சண்டை வீராங்கனை. இத்தனைக்கும் அந்த மோ குஷ்லா என்ற வார்த்தையின் அர்த்தம்கூட அவளுக்குத் தெரியாது. அந்தப் பெயரை சூட்டிய பயிற்சியாளர் பிராங்கிக்கு (கிளிண்ட் ஈஸ்ட்வுட்) மட்டுமே தெரிந்த ரகசியம் அது.

உலகையே வெல்லத்துடிக்கும் மேகி, ஒரு உணவு விடுதியில் வேலை செய்யும் பணிப்பெண்ணாக இருந்தவள். குத்துச்சண்டையின் மீது அலாதி ஆர்வமும் வெறியும் கொண்டவள். எப்படியும் பிராங்கியிடம் பயிற்சி பெற்றுவிடத் துடிக்கிறாள். அதற்காக பிராங்கியின் கண்முன்னே கடுமையாக உழைக்கிறாள். ஆனால் அவரோ, ‘நான்
பெண்களுக்கு பயிற்சி கொடுப்பதில்லை’ என்று சர்வசாதாரணமாக Million Dollar Baby 6நிராகரிக்கிறார். அதன்பிறகும் முயற்சி செய்துகொண்டே இருக்கிறாள். ‘32 வயதுக்குப் பிறகு ஒரு பெண் குத்துச்சண்டை போட்டியில் வெற்றிபெறுவது நடக்காது’ என்று மீண்டும் தடைக்கல்லைத் தூக்கிப் போடுகிறார். இந்த நேரங்களில் எல்லாம் மேகிக்கு ஆதரவாகவும், ஊக்கம் கொடுப்பவராகவும் இருக்கிறார் மோர்கன் ஃப்ரீமென்.

ஒரு கட்டத்தில் மேகிக்கு பயிற்சி மட்டும் கொடுப்பதற்கு சம்மதிக்கிறார் பிராங்கி. குத்துச்சண்டை போட்டியில் பங்கெடுக்கும்போது வேறு ஒரு மேனேஜரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார். நண்பனுக்கு Million Dollar Baby 10போட்டியின்போது கண் பறிபோனதுக்கு தானே காரணம் என்று பிராங்கி குற்ற உணர்ச்சியில் தவிப்பதால் மேனேஜராக இருக்க மறுக்கிறார். இதற்கு ஒப்புக்கொண்டு பயிற்சியைத் தொடங்கும் மேகி கடினமாக உழைத்து சண்டைக்குத் தயாராகிறாள். வேறு ஒரு மேனேஜர் உதவியுடன் முதல் போட்டி ஆரம்பமாகிறது.

பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்து சண்டையைப் பார்க்கிறார் பிராங்கி. அந்த மேனேஜர் டபுள் கேம் ஆடுபவன் என்பதும், மேகியைத் தோற்கடிக்கவே Million Dollar Baby 4வேலை செய்கிறான் என்பது தெரியவரவும் ஆவேசமாக களத்தில் மேனேஜராக இறங்குகிறார் பிராங்கி. அவர் சொல்லிக்கொடுக்கும் வேகத்தில் குத்துக்களை பறக்கவிட, அடுத்தடுத்து நாக்-அவுட் வெற்றிகளை ருசிக்கிறாள் மேகி.

ஊரில் இருக்கும் அம்மாவுக்காகவும் சிறையில் இருக்கும் சகோதரனுக்காகவும் பணத்தை கொஞ்சமும் செலவழிக்காமல் சேமித்து வைக்கிறாள் மேகி. அதேபோன்று தன்னுடைய மகளுடைய புறக்கணிப்பை தாங்கமுடியாத வலியுடன் இருக்கிறார் பிராங்கி. இருவருக்கும் ஆறுதலாக Million Dollar Baby 6இருப்பது குத்துச்சண்டை மட்டும்தான்.

தன்னுடைய வெற்றியை உறவினர்களுடன் கொண்டாட வேண்டும் என்று ஊருக்குக் கிளம்புகிறாள் மேகி. அங்கே அவள் பணத்தை மட்டுமே மதிக்கிறார்கள். அவளது வெற்றி, புகழை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துகிறார்கள். இதனை அறிந்து வேதனையில் துடிக்கிறாள். அவளை ஒரு தந்தையைப் போல் தேற்றுகிறார் பிராங்கி.

மில்லியன் டாலருக்கான சண்டையில் பங்கேற்க விரும்புகிறாள் மேகி. விதிகளை மதிக்கத் தெரியாத எதிராளி, கண்டுகொள்ளாத நடுவர்கள் அப்படிப்பட்ட போட்டியில் இருப்பார்கள் என்பதால் அந்தப் போட்டிக்குத் Million Dollar Baby 7தயங்குகிறார் பிராங்கி. ஆனாலும் தன் மீது அளவுக்கதிகமான நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்குகிறாள் மேகி. போட்டி கடுமையாக இருந்தாலும் ஒருவழியாக வெற்றி பெறுகிறாள். நடுவர் கையைத் தூக்கும் நேரத்தில் கொஞ்சம் அசட்டையாக இருக்கவே, திடீரென எதிர்பாராமல் கடுமையாக தாக்கப்படுகிறாள் மேகி. அவள் கழுத்தெழும்பு முறிந்துவிட, உடலுக்குக் கீழே செயல் இழந்து போகிறது. முழங்கால் வெட்டி எடுக்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது.

குடும்பத்தினரிடம் அவளை ஒப்படைக்க நினைக்கிறார் பிராங்கி. ஆனால் வந்துசேரும் குடும்பத்தினர் சொத்துக்காக அவள் செயல்படாத கையில் இருந்து ரேகை எடுக்கவும் ஊர் சுற்றிப் பார்க்கவும் செய்கிறார்கள். இவர்களிடம் இருந்து மேகியைக் காப்பாற்றி தினமும் பிரேயர் செய்கிறார், காதல் கவிதைகளை வாசித்துக் காட்டுகிறார் பிராங்கி.

Million Dollar Baby 9உடல்நிலை மேலும் மோசமாகி படுக்கைப் புண்கள் கொடுமைப்படுத்தும் நேரத்தில் பிராங்கியிடம் மிகவும் மென்மையாகவும் அன்பாகவும் ஒரு வேண்டுகோள் வைக்கிறாள். ‘’நான் வாழ்க்கையில் அடைய நினைத்த உயரத்தை அடைந்துவிட்டேன். உண்மையான அன்பை உங்கள் மூலம் பார்த்துவிட்டேன். இனிமேலும் ஆக்சிஜன் குழாயுடன் உயிர் வாழ்வதில் அர்த்தம் இல்லை. எனக்கு பயிற்சி கொடுத்தது போலவே உயிரை எடுத்துவிடுங்கள்’’  என்று கேட்கிறாள் மேகி.

மகள் போன்று வளர்த்து பாசம் காட்டிய மேகியின் ஆக்சிஜன் குழாயை அகற்றினாரா அல்லது பிழைக்க வைத்தாரா என்பதை படத்தில் அறிந்துகொள்ளுங்கள்.

இந்தப் படத்தின் காட்சிகள் அனைத்தும் மோர்கன் பாத்திரம் மூலம் நகர்த்தி செல்லப்படுவது புதுமையான அம்சம்.  குத்துச்சண்டை பயிற்சிக்கு வலிமை வேண்டும் என்பதற்காக, உணவு விடுதி தட்டில் மீதமிருக்கும் எச்சில் கறித்துண்டுகளை, ‘நாய்களுக்கு’ என்று பார்சல் எடுத்துச்சென்று சாப்பிடுவதில் தொடங்கும் மேகியின் நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் உன்னதத்தைத் தொடுகிறது.

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

பின்குறிப்பு :

மோ குஷ்லா என்றால் என்னவென்றே தெரியாமல் தன்னுடைய பெயராக ஏற்றுக்கொள்கிறாள் மேகி.  ‘என்னுடைய ரத்தம்…என் உயிர், என் உறவு’ என்பதுதான் மோ குஷ்லா என்பதன் அர்த்தம் என்பது  தெரியவரும்போது மேகியைப் போலவே நாமும் நெகிழ்ந்துபோகிறோம்.

2004-ம் ஆண்டுக்கான சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த குணச்சித்திர நடிகர் ஆகிய நான்கு பிரிவுகளிலும் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. இந்தப் படத்தை இயக்கி நடித்தபோது  கிளிண்ட் ஈஸ்ட்வுட் வயது 74.

 —

Million Dollar Baby, sports drama, film, Clint Eastwood, Hilary Swank, Morgan Freeman, boxing, Academy Awards, Best Picture, Paul Haggis, F.X.Toole, Jerry Boyd, Rope Burns, Light Weight, Welter Weight, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 313 times, 64 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>