டெர்மினேட்டர் ஜெனிசிஸ் (Terminator Genisys) ஜஸ்ட் ஃபெயில் 34 மார்க்

Terminator final

வீணாகிப் போன இட்லியில் செய்யப்பட்ட உப்புமாவைப் போலவே இருக்கிறது டெர்மினேட்டர் ஜெனிசிஸ். முதல் முறையாக இந்த டெர்மினேட்டரை ரசிக்கும் குட்டிப் பையன்களுக்கு வேண்டுமானால் இது சூப்பராக இருக்கலாம்.

கொஞ்சம் ரசிக்க – டிரெய்லர்

1984-ல் வெளியான டெர்மினேட்டர் முதல் பாகமும் 1991-ல் வெளியான டெர்மினேட்டர் ஜட்ஜ்மெண்ட் டே படமும் சூப்பர் டூப்பர் ஹிட். ஏனென்றால் அர்னால்ட்ஜேம்ஸ் காம்ரூன் இருவரும் இணைந்து ஒட்டுமொத்த வித்தையையும் இறக்கிவைத்திருந்தார்கள். அதன்பிறகு மற்றவர்கள் இயக்கத்தில் அடுத்தடுத்து வந்த இரண்டு பாகங்களும் அவுட். இப்போது வந்திருக்கிறது ஐந்தாவது பாகமாக டெர்மினேட்டர் ஜெனிசிஸ்.

terminator-genisys9என்ன நடந்தாலும் கதையில் சிறு மாற்றம்கூட பண்ணுவதில்லை என்பதில் மிகவும் தெளிவாகவே இருக்கிறார்கள். இந்தக் கதை 2029-ம் ஆண்டு நடக்கிறது. வழக்கம்போல் எதிர்கால உலகத்தை இயந்திரங்கள் ஆட்சிசெய்ய முயற்சி செய்கின்றன. மனிதர்களை முழுமையாக அழிப்பதற்காக ஸ்கைநெட் தலைமையில் இயந்திரங்கள் களம் இறங்குகின்றன. இந்த இயந்திரங்களின் அராஜகத்தை முறியடிப்பதற்காக மனிதர்கள் ஜான் கானர் (பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ் புகழ் ஜேசன் கிளர்க்) தலைமையில் ஒன்று சேர்கிறார்கள்.

terminator-genisys8

இயந்திரங்கள் மனிதர்களுக்கு இடையிலான சண்டை அத்தனை விரைவில் முடிவதாக தெரியவில்லை. ஜவ்வு மாதிரி தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்தப் போரில் மனிதர்களுக்கு சாதகமான சூழல் வரவே, ஸ்கைநெட் முதல் பாகத்தில் terminator-genisys4யோசித்தது போலவே யோசிக்கிறது. அதாவது டைம் மிஷினில் ஏறி கடந்த காலத்திற்குசெல்ல நினைக்கிறது. ஜான் கானர் பிறப்பதற்கு முன்னரே அவன் அம்மாவை அழித்துவிட்டால், எளிதில் சண்டையை வென்று விடலாம் என்று நினைக்கிறது. இதற்காக யங் அர்னால்ட் டெர்மினேட்டரை அனுப்புகிறது.

இதனை அறிந்துகொள்ளும் ஜான் கானர், டெர்மினேட்டரை அழிப்பதற்காக, அவனது படையில் இருந்து கெயில் ரீஸை கடந்த காலத்துக்கு அனுப்பிவைக்கிறான் – அதாவது 1984ஆம் ஆண்டுக்கு. 1984-ம் ஆண்டுக்குள் நுழையும் கெயில், ஜான் கானரின் அம்மா சாராவை சந்திக்கிறான். ஆனால் சாராவைக் காப்பாற்றவேண்டிய அவசியமே இல்லாத அளவுக்கு… அவள் திறமைசாலியாக இருப்பதைக் கண்டு ஆச்சர்யமாகிறான். ஏன் என்பதுதான் இந்தப் படத்தின் டிவிஸ்ட்.

terminator-genisys3ஆம், அங்கே இன்னொரு வயசான அர்னால்ட், டெர்மினேட்டராக இருந்து சாராவுக்கு பயிற்சி அளித்திருக்கிறார். சாராவை அழிக்கவரும் யங் அர்னால்டிடம் இருந்து தப்புகிறாள். அதன்பிறகு இரண்டு அர்னால்டுகளும் மோத… தாத்தா அர்னால்டு குட்டி அர்னால்டை அடித்து துவம்சம் செய்துவிடுகிறார். அதேநேரம் கெயிலைக் கொல்வதற்கு டி1000 மாடல் மெட்டல் மேன் வந்து சேர்கிறான். மெட்டல் மேனாக வரும் கொரியன் சூப்பர்ஸ்டார் லீ யங் ஹுன்னுக்கு ஏகப்பட்ட திறமைகள் இருக்கின்றன. இன்னொரு நபர் போன்று மாறவும், ஆபத்தான ஆயுதமாகவும் மாறுபவன். இவனுக்கும் தாத்தா அர்னால்டு, சாரா, கெயில் ஆகியோர் சேர்ந்து சமாதி கட்டுகிறார்கள்.

சாராவுடன் கெயில் ரீஸ் டைம் மிஷினில் ஏறி எதிர்காலத்துக்குப் போகிறார்கள். அதாவது ஸ்கைநெட் உருவாகும்போதே, அதனை அழிக்க terminator-genisys1நினைத்து 2017-ஆம் ஆண்டுக்குச் செல்கிறார்கள். அங்கே போனால் அடுத்த டிவிஸ்ட்.

அங்கேயும் ஒரு ஜான் கானர் இருக்கிறான். அதேபோல் இன்னமும் வெள்ளை முடியும் தாத்தா அர்னால்டும் வந்து சேர்கிறார். திடீரென தாத்தா அர்னால்டு ஆவேசமாக ஜான் கானரைத் தாக்குகிறார். ஏனென்றால், வந்திருக்கும் ஜான் கானர் மனிதன் இல்லை. ஜான் கார்னரை திட்டமிட்டு இயந்திரமாக மாற்றியிருப்பதும், அவன் மனிதர்களுக்கு எதிராக போராட தயாராக terminator-genisys6 இருப்பதும் தெரிய வருகிறது.

தாத்தா அர்னால்டும் ஜான் கார்னரும் மோதினால் யார் ஜெயிப்பார்கள் என்று உங்களுக்கே தெரியும். அதை தியேட்டரில் போய் பார்க்கத்தான் வேண்டுமா என்பது உங்கள் விருப்பம். தாத்தா வேடத்தில் வரும் அர்னால்டுக்கு நிஜமாகவே வயதானது அப்பட்டமாக தெரிகிறது. ஓரத்தில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்காமல் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சண்டை போடுவது ரொம்பவும் ஓவர். அதேபோல் கெயில் ரீஸ் நடிப்பும் அமெச்சூர்த்தனமாக இருக்கிறது. முதல் பாகத்தில் பிரமிக்க வைக்கும் அர்னால்டு அறிமுகம் அப்படியே இங்கேயும் இடம்பெறுகிறது, ஆனால் terminator-genisys2எதிர்பாராமல் தாத்தா அர்னால்டு ஆஜராகி காட்சிகளை ரீபீட் ஆகாமல் காப்பாற்றுவதுதான் ரசிக்கத்தக்க அம்சம். விறுவிறுப்பான ’கேம்ஸ் ஆஃப் த்ரோன்’, ‘தார்-2’ மூலம் புகழ்பெற்ற ஆலன் டைலர் இயக்கத்தில் இந்தப் படம் தள்ளாடுகிறது.

முகம் அடிபட்டு நொறுங்குவது, உடல் உருகுவது மீண்டும் ஒன்று சேர்வது, சுவர், கட்டிடங்களை அடித்து நொறுக்குவது, துப்பாக்கித் தோட்டாக்களால் சிதறடிப்பது போன்றவற்றை இன்னும் எத்தனை பாகம்தான் பார்ப்பது… கொஞ்சம் புதுசா யோசிங்கப்பா.

பின்குறிப்பு :

டெர்மினேட்டருக்குப் பின்னே எதற்காக ஜெனிசிஸ் என்று வருகிறது என்று தேடினால், 2017-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர். இந்த சாஃப்ட்வேர் மூலம் உருவாக்கப்பட்டதுதான் ஸ்கைநெட் எனும் அழிவு.

கொஞ்சம் தெரிஞ்சிக்க – மேக்கிங்

முதல் இரண்டு டெர்மினேட்டர் பார்த்தவர்களின்  மதிப்பெண் :   34/100

டெர்மினேட்டர் ஜெனிசிஸ் மட்டும் பார்த்தவர்களின் மதிப்பெண் : 43/100

Terminator Genisys, Terminator, T-800, science fiction, sci-fi, action film, Alan Taylor, Laeta Kalogridis, Patrick Lussier, Terminator 5, Genisys, Arnold Schwarzenegger, Jason Clarke, Emilia Clarke, Jai Courtney,Lee Byung-hun, Matt Smith, J.K Simmons, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 351 times, 44 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>