சவால்விடும் குட்டி பிசாசு

orphan

பாக்காம விட்றாதீங்க – ஆர்பன்

வேலியிலே போறதை எடுத்து வேட்டியிலே விட்டுகிட்டு குத்துதே குடையுதேன்னு வருத்தப்படுறது நியாயமான்னு பெருசுங்க பழமொழி சொல்றதைக் கேட்டிருப்பீங்க. இதுக்கு உதாரணம் ஆர்பன். ஒரு திரில்லர் படத்தை திகில் படம் போன்றும் எடுக்கமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். அறையை மூடிக்கொண்டு தனியே இந்தப் படத்தைப் பார்த்தால் ரத்தம் கண்ணுக்கு ஏறி, உங்கள் இதயம் துடிப்பதை நீங்களே கேட்கமுடியும். வாருங்கள் ஆர்பன் கதைக்குள் போகலாம்.

(L-r) PETER SARSGAARD as John Coleman, ISABELLE FUHRMAN as Esther and VERA FARMIGA as Kate Coleman in Dark Castle Entertainment's horror thriller "Orphan", a Warner Bros. Pictures release. PHOTOGRAPHS TO BE USED SOLELY FOR ADVERTISING, PROMOTION, PUBLICITY OR REVIEWS OF THIS SPECIFIC MOTION PICTURE AND TO REMAIN THE PROPERTY OF THE STUDIO. NOT FOR SALE OR REDISTRIBUTION

பேய்க் கதைக்கே உரியதான தன்னந்தனி வீட்டில் ஜான்கேட் தம்பதியர் சந்தோஷமாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு டேனியல் என்ற பையனும் மேக்ஸ் என்ற சின்னப் பொண்ணும் இருக்கிறார்கள். இதில் மேக்ஸ் காது கேட்காத, வாய் பேசமுடியாத சிறுமி. மூன்றாவது குழந்தையை சுமக்கும் கேட்டுக்கு திடீரென அபார்ஷன் நிகழ்ந்துவிடுகிறது. அதனால் மாபெரும் சோகத்தில் மூழ்குகிறாள். குழந்தையை புதைத்த இடத்தில் ரோஜா செடி வளர்ப்பதும் குடித்துக்கொண்டே காலத்தைக் கழிப்பதுமாக இருக்கிறாள். அவளை திசை மாற்றுவதற்காக ஆசிரமத்தில் இருந்து ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பதற்கு முடிவெடுக்கிறார்கள்.

ARYANA ENGINEER as Max, JIMMY BENNETT as Daniel, PETER SARSGAARD as John, VERA FARMIGA as Kate and ISABELLE FUHRMAN as Esther in Dark Castle Entertainment’s horror thriller “Orphan,” a Warner Bros. Pictures release.

ஆசிரமத்தில் இருக்கும் அத்தனை பெண்களையும்விட அபாரமான திறமையுடன் இருக்கும் 12 வயது எஸ்தரை இருவருக்கும் பிடித்துப்போகிறது. ’எனக்கு டாக்டர் என்றாலே பயம். அதனால் என்னை டாக்டரிடம் குறிப்பாக பல் டாக்டரிடம் கூட்டிப்போகக்கூடாது. இதற்கு சம்மதம் என்றால் உங்களுடன் வருகிறேன்’ என்று ஒப்புதல்வாங்கி அவர்களுடன் செல்கிறாள். குடும்பத்தில் அனைவருடனும் ஒட்டிப் பழகுகிறாள். எல்லா விஷயங்களிலும் அதீத திறமையுடன் இருக்கும் எஸ்தரைப் பார்த்து வியக்கிறார்கள். ஆனால் அவளது செய்கைகள் எல்லாமே சந்தேகத்திற்குரிய வகையில் இருப்பதாக நினைக்கும் சிறுவன் டேனியல் அவளை வெறுக்கிறான்.

Orphan3இதுவரையிலும் பரபரவென போய்க்கொண்டு இருந்தாலும், இதற்குப்பிறகு படம் ஜெட் வேகம் எடுக்கிறது. எல்லோரும் விளையாடும்போது, தன்னை அவமானப்படுத்தும் ஒரு சிறுமியை வேண்டுமென்றே மேலிருந்து கீழே தள்ளிவிடுகிறாள். இதை வாய் பேசமுடியாத சிறுமி மேக்ஸ் பார்த்துவிடுகிறாள். இதுபற்றி யாரிடமும் எதுவும் சொல்ல முயற்சிக்கக் கூடாது என்று மிரட்டிவைக்கிறாள் எஸ்தர். மேலே இருந்து கீழேவிழுந்த மாணவி பலத்த காயம் அடைந்தாலும் உயிர் போகவில்லை. அதனால் அவளை சந்திக்கும் ஆசிரியைக்கு உண்மை தெரியவருகிறது. இதனை ஜான் – கேட் தம்பதியிடம் சொல்வதற்காக காரில் வருகிறாள் ஆசிரியை.

Orphan1மேக்ஸ் துணையுடன் அவளை வழியிலே மடக்கும் எஸ்தர், ஆசிரியை எதிர்பாக்காத நேரத்தில் அவளை கொலைசெய்து உடம்பை மறைத்து வைக்கிறாள். இதனை யாரிடமாவது சொல்வதற்கு முயற்சி செய்தால் அம்மாவை கொலைசெய்து விடுவேன் என்று மேக்ஸை எச்சரிக்கை செய்கிறாள். ஆனால் இதனை டேனியல் கண்டுபிடித்துவிடுவான் என்று தெரியவந்ததும், அவனை மர வீட்டுக்குள் வைத்துப்பூட்டி தீ வைக்கிறாள். கிட்டத்தட்ட மரணத்தின் தருவாயில் காப்பாற்றப்பட்டாலும் நினைவு இல்லாத நிலைக்குப் போகிறான் டேனியல்.

Orphan6இதற்கெல்லாம் ஏதோ ஒரு வகையில் எஸ்தர்தான் காரணம் என்று நினைக்கிறாள் கேட். அவளிடம் விசாரிக்கிறாள். அதனால் கேட் மீது வன்மம் கொள்கிறாள் எஸ்தர். கேட் ஆசையாக வளர்த்துவரும் ரோஜா செடியை பிய்த்து அவளுக்கே பரிசாக தருகிறாள் எஸ்தர். இதைக் கண்டு அதிர்ச்சி அடையும் கேட், கணவரிடம் புகார் சொல்கிறாள். எஸ்தர் குற்றவாளி என்பதை ஜான் நம்ப மறுக்கிறான். அந்த அளவுக்கு நல்லபிள்ளையாக நடிக்கிறாள் எஸ்தர். இந்த நேரத்தில் தன்னுடைய கையை தானே உடைத்துக்கொண்டு பழியை தாய் மீது போடுகிறாள். அதனால் கணவன் மனைவிக்கு இடையே சண்டை வருகிறது. ஜானை விட்டு பிரியவேண்டிய நிலைக்கு ஆளாகிறாள் கேட்.

Orphan5இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறாள் எஸ்தர். மருத்துவமனையில் இருக்கும் டேனியல், அம்மா கேட், குட்டிப்பொண்ணு மேக்ஸ் மூவரையும் கொலைசெய்ய நினைக்கிறாள். வீட்டில் யாரும் இல்லாத சூழலில் தந்தை ஜான் சோகத்தில் மது குடிக்க நினைக்கிறான்.

நான் மது எடுத்துவருகிறேன் என்று அறைக்குள் செல்லும் எஸ்தர், திடீரென கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு செக்ஸ் அசைவுகளுடன் தந்தையை நெருங்குகிறாள். ஜான் குடிபோதையில் இருந்தாலும், அவளது செய்கைகளுக்கு அர்த்தம் புரியாமல் தவிக்கிறான். அவள்  மோகத்துடன் நெருங்கிவரும்போது அவளை தவிர்க்கிறான். உடனே கோபமாகிறாள் எஸ்தர். ஜானையும் கத்தியால் குத்துகிறாள். Orphan gifஇப்படி கொலைவெறியுடன் எஸ்தர் குடும்பத்தில் ஒவ்வொரு நபரையும் கொலை செய்வதற்கு காரணம் என்னவென்று தெரியும்போது, மாபெரும் அதிர்ச்சி கிடைக்கிறது. அது எப்படிப்பட்ட திருப்பம் என்பதை திரையில் பாருங்கள். ஏனென்றால் அதுதான் படத்தின் மர்ம முடிச்சு. அந்த முடிச்சை சத்தியமாக உங்களால் யோசித்திருக்கவே முடியாது என்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பு.

குட்டிப்பிசாசு போன்று ரத்தவெறி பிடித்து அலையும் எஸ்தர், அப்பாவி மேக்ஸை கொலை செய்வதற்குத் தேடுவதும், அந்தக் குட்டி மறைந்து மறைந்து தப்பிக்க முயற்சிப்பதும் மெய் சிலிர்க்கவைக்கும் திரில் காட்சிகள். இந்தப் படத்தில் எஸ்தராக நடித்திருக்கும் இசபெல்லா நிஜமாகவே ஆரம்பகாட்சிகளில் பிரமிக்கவும் இறுதிக்காட்சிகளில் திகிலூட்டவும் செய்கிறாள். எப்படிப்பட்ட திரைக்கதை என்றாலும் யூகித்துவிடுவேன் என்று சவால்விடுபவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து தோல்வி அடையலாம்.

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

பின்குறிப்பு :

இந்தப் படத்திற்கு இரண்டு கிளைமேக்ஸ் எடுக்கப்பட்டுள்ளது. இப்போது வெளியான கிளைமேக்ஸை படத்தில் பாருங்கள். வெளியிடப்படாத கிளைமாக்ஸ் அதைவிட சிறப்பு என்றுதான் சொல்லவேண்டும். குடும்பத்தில் அத்தனை பேரும் கொல்லப்பட்டுவிட, காயத்துடன் இருக்கும் எஸ்தரை போலீஸ் காப்பாற்றுகிறது. தீவிரவாதிகள் வந்து அனைவரையும் கொன்றுவிட்டு போனதாக சொல்லும் எஸ்தர் மிகவும் அதிர்ச்சியுடன் இருக்கிறாள். அதனால் அவளை வேறு ஒரு வீட்டுக்கு அனுப்பிவைக்கிறார்கள். அங்கே புன்னகையை தனக்குள் மறைத்துக்கொண்டு நுழைகிறாள் எஸ்தர்.  அடுத்த திகில் ஆரம்பமாகிறது.

Orphan, psychological thriller, thriller, film, Jaume Collet-Serra, Vera Farmiga, Peter Sarsgaard, Isabelle Fuhrman, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 252 times, 31 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>