இசை மழை பொழிகிறது

august-rush poster TH

பாக்காம விட்றாதீங்க – ஆகஸ்ட் ரஷ்

இசைக்கு எந்த மொழியும் கிடையாது, வர்க்கபேதமும் தெரியாது. இசை ஞானம் இல்லாதவர்கூட சிம்பொனி இசையை ரசிக்கமுடியும் என்பதற்கு இனிமையான உதாரணம் ஆகஸ்ட் ரஷ். ஒரே ஒரு வரிக் கதையை வைத்துக்கொண்டு, இசை சாம்ராஜ்யமே நடத்தியிருக்கிறார்கள்.

august-rush2தேவதையை இதுவரை நேரில் பார்த்திருக்கிறீர்களா? அப்படியில்லை என்றால் ஆகஸ்ட் ரஷ் படத்தில் லைலா கதாபாத்திரமாக வரும் கெர்ரி ரஷ்ஷலை பார்த்து சந்தோஷப்படலாம். இவள் செலோ வாத்தியம் இசைப்பவளாக இருக்கிறாள். ஆள் உயரத்துக்கு இருக்கும் வயிலினைத்தான் செலோ என்கிறார்கள். கிடார் இசைக் கலைஞனாகவும் பாடகனாகவும் இருக்கிறான் லூயிஸ். இசை நிகழ்ச்சி முடிந்த ஓர் பெளர்ணமி இரவில் மொட்டை மாடியின் உச்சியில் இருக்கும் தண்ணீர் தொட்டியின் மீது அமர்ந்து ரோட்டோர இசையை ரசிக்கிறான் லூயிஸ். அப்போது மாடிக்கு வருகிறாள் லைலா. இசையை ரசிப்பதற்காக அவளையும் மேலே வரச்சொல்கிறான்.

august-rush8ஒரே பார்வை…ஒரே இரவு. தங்கள் உடலை பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு இருவரும் நெருக்கமாகிறார்கள். தன் மீது காதல் இருந்தால் அடுத்த நாள் மாலை சதுக்கத்தின் நுழைவாயிலுக்கு வரச்சொல்கிறான். ஆனால் அப்பாவின் பிடிவாதம் காரணமாக அங்கே போகமுடியாமல் போகிறது. லூயிஸை பார்த்தாலும் எதுவும் சொல்லிக்கொள்ள முடியாமல் கிளம்புகிறாள். தன்னை அவள் விரும்பவில்லை என்ற சோகத்தில் மூழ்குகிறான் லூயிஸ். பாட்டுப்பாடுவதை நிறுத்திவிடுகிறான்.

நம்ம ஊர் சினிமா மாதிரியே ஒரே இரவு உறவில் லைலா கர்ப்பமாகி விடுகிறாள். அந்த கர்ப்பத்தை பிடிவாதமாக வளர்க்கிறாள். ஆனால் ஒரு august-rush10விபத்து காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்கிறாள் லைலா. அவள் மயக்கத்தில் இருக்கும்போது, அந்தக் குழந்தையை அனாதை இல்லத்துக்கு அனுப்பிவிட்டு, குழந்தை இறந்துவிட்டதாக பொய் சொல்கிறார் அப்பா. அதனால் லைலாவும் இசை அமைப்பதை விடுத்து, மியூசிக் டீச்சராக வேலை செய்கிறார்.

இவர்களுக்குப் பிறந்த பையன் இவான், அபாரமான இசை ஆற்றலுடன் வளர்கிறான். 11 வயதிலேயே இயற்கையுடன் இசை மொழியுடன் பேசுகிறான். பார்க்கும் எல்லா இடங்களிலும் இசை இருக்கிறது என்கிறான். புல்லின் அசைவில் இருந்து சூரிய வெளிச்சம் வரையிலும் அவனுக்கு இசைக் குறிப்பாகவே தெரிகிறது. இந்த இசை மேதமை தன்னுடைய பெற்றோரிடம் இருந்துதான் வந்திருக்கும் என்று உறுதியாக நம்புகிறான். அதனால் அவர்களை தேடிச்செல்ல முடிவெடுக்கிறான்.

august-rush6தேடிச்செல்லும் வழியில் சிறுவர்களை வைத்து பிச்சை எடுத்துப் பிழைக்கும் ராபின் வில்லியம்ஸை சந்திக்கிறான். அங்கே வாழ்வில் முதன்முதலாக ஒரு கிட்டாரைத் தொட்டுப் பார்க்கிறான் இவான். ஒவ்வொரு கம்பியில் இருந்தும் என்ன சத்தம் வருகிறது என்று ஆழ்ந்து கவனிக்கிறான். ஒவ்வொரு இடத்தைத் தட்டும்போதும் எப்படி ஒலி மாறுபடுகிறது என்பதை கேட்கிறான். அதனை எப்படி வாசிக்கவேண்டும் என்பது தெரியாமல் கிட்டாரை படுக்கவைத்து, கைகளால் தட்டி  இசை எழுப்புகிறான். அந்த இசையைக் கேட்கும் ராபின், இவன் பிறவி மேதை என்பதை உணர்கிறான். ஆனால் பணத்துக்காக விலை பேச நினைக்கிறான். இவனை யாரும் அடையாளம் கண்டுகொள்ளக் கூடாது என்பதற்காக, இவான் என்ற பெயரை ஆகஸ்ட் ரஷ் என்று மாற்றி வைக்கிறான்.

august-rush3தமிழ் சினிமாக்களில் வரும் அப்பாவைப் போலவே லைலாவின் அப்பாவும் நோய்வாய்ப்பட்ட நேரத்தில், குழந்தை உயிருடன் பிறந்த உண்மையை சொல்லிவிடுகிறார். உடனே அவனைத் தேடி பயணத்தைத் தொடங்குகிறாள் லைலா. இந்த நேரத்தில் ஒரு சர்ச்சில் பாடும் குரல் கேட்டு நுழைகிறான் இவான். அங்கே சிறுமி ஹோப்பின் குரல் தனித்தன்மையுடன் ஒலிக்கிறது. அந்த சிறுமியின் பின்னே செல்ல, அவள் பியோனோவை அறிமுகம் செய்கிறாள். ஒரே நாளில் ஏகப்பட்ட குறிப்புகளை எழுதித்தள்ள, ஆச்சர்யத்தில் ஆழ்கிறாள். உடனே சர்ச் பாதர் இசைக்குப் புகழ்பெற்ற ஜுலியர்ட் ஸ்கூலில் சேர்கிறார். அவனது திறமையை அத்தனை பேரும் உணர்கிறார்கள். முதன்முதலாக லூயிஸ் – லைலா சந்தித்துக்கொண்ட சென்ட்ரல் பார்க்கில் ஆகஸ்ட் ரஷ்ஷின் இசையை அரங்கேற்ற  பள்ளி நிர்வாகம்  முடிவெடுக்கிறது.

august-rush4இந்த நேரத்தில் அப்பாவென தெரியாமலே லூயிஸை சந்திக்கிறான். மகனைத் தேடும் லைலா, அவன் விடுதியில் இருந்து காணாமல் போனது தெரியவர. தானும் தேடத் தொடங்குகிறாள். இசை மூலம் அவனை கண்டுபிடிக்க முடியும் என்று மீண்டும் இசைக்கத் தொடங்குகிறாள். பழைய நண்பனை பார்க்கும் லூயிஸ், அவனது தூண்டுதல் காரணமாக மீண்டும் பாடத் தொடங்குகிறான். ஒரே நகரத்தில் இருக்கும் மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எப்படி சந்திக்கிறார்கள் என்பதை  நீங்கள் படம் பார்த்து சந்தோஷப்படுங்கள்.

லாஜிக் ஓட்டைகள் நிறையவே இருந்தாலும் சந்தோஷமாக ஒரு படத்தை அனுபவித்து ரசிக்க ஆசைப்படுபவர்கள், தைரியமாக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

பின்குறிப்பு :

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் மார்க் மன்சினா. முழுக்க முழுக்க இசையை மையமாக கொண்டபடம் என்பதால் இசையமைப்பதற்கு மட்டும் கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டாராம். இசை எல்லா இடங்களிலும் இருக்கிறது, கேட்பவர்களுக்குத்தான் அது புரியும் என்பதுதான் ஆகஸ்ட் ரஷ் சொல்லவரும் கருத்து.

August Rush, drama, film, Kirsten Sheridan, New York City, Freddie Highmore, Keri Russell, Jonathan Rhys Meyers, Robin Williams, Terrence Howard, William Sadler, Music, Musical, Mastero, Genius, Musician, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 111 times, 16 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>