குவாண்டினின் மொக்கை படம்

Inglourious_Basterds_poster

பாக்கவே பாக்காதீங்க – இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்

ஐ.எம்.டி.பி-யில் எட்டு மதிப்பெண்களுக்கு மேல் வாங்கியவை எல்லாமே நல்ல படம் அல்ல, குப்பையும் இருக்கலாம் என்பதற்கு உதாரணம் இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்பல்ப் பிக்‌ஷன், கில் பில் படங்களின் மூலம் நவீன சினிமா மேதையாக அறியப்படும் குவாண்டின் டராண்டினோ, ஆக்‌ஷன் ஹீரோ பிராட்பிட் போன்றவர்கள் சேர்ந்து கொடுத்திருக்கும் ஸ்லோ பாய்சன்.

Inglourious-Basterds5நீங்கள் ஒருமுறை பார்த்து கடுப்பாகக்கூடாது என்பதற்காக கதை சுருக்கம் இங்கே. வரலாற்றுக் கதையில் தன்னுடைய கற்பனை சிறகை விரித்திருக்கிறார் குவாண்டின். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நாஜிக்களை கொடூரமான முறையில் கொலைசெய்து, உலகப்படைகளுக்கு அரக்கனாகத் தெரிந்தார் ஹிட்லர். அந்த நேரத்தில் பிராட்பிட் தலைமையிலான சில அமெரிக்க வீரர்கள், ‘இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்’ என்ற பெயரில் ஒன்றிணைந்து ஜெர்மன் வீரர்களை கொடூரமான முறையில் கொலைசெய்து ஹிட்லருக்கு திகில் கொடுக்கிறார்கள்.

Inglourious-Basterds2இந்தப் படத்தில் ஒரே ஒரு நல்ல விஷயம் என்றால் நாஜிப் படையின் கர்னல் ஹான்ஸ் லான்டாவாக வரும் கிறிஸ்டோப் வால்ஸ் நடிப்பு. யூத குடும்பம் ஒன்று பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்து அந்த வீட்டுக்கு வருகிறார். முகம் மூழுவதும் புன்னகை சிந்தியபடி பேசிப்பேசியே குரூரத்தைக் காட்டுகிறார். அந்த புன்னகை மிரட்டலில்… இத்தனை நாளும் அடைகலம் கொடுத்தவனே, காட்டுக்கொடுக்க நேர்கிறது. அப்போது நடக்கும் துப்பாக்கிச்சூட்டில் ஒரு யூத குடும்பம் மொத்தமாக காலியாக, இளம்பெண் சூசானா மாட்டும் தப்பித்து ஓடுகிறாள்.

inglourious-basterds9அதிரடியாகத் தொடங்கும் இந்த ஆரம்ப காட்சியைத் தவிர அத்தனை காட்சிகளும் மொக்கையாக நகர்கின்றன. ஹிட்லரைவிட அதிக கொடூரமானவர்கள் இந்த பாஸ்டர்ட்ஸ் என்பதைக் காட்டுவதற்கான பிராட்பிட் அறிமுக காட்சி மகா கொடூரம். பேஸ்பால் பேட்டை வைத்து உயிரோடு கைதிகளின் தலையை அடித்து உடைப்பதும், நெற்றிக்கு மேல் முடியுடன் தலையை அறுத்து எடுப்பதும் வன்முறையில் உச்சகட்டம். இதுபோல் இரண்டு படங்கள் வந்தால் போதும், ஹிட்லர் நிச்சயம் நல்லவராகி விடுவார் என்பது மட்டும் நிச்சயம்.

Inglourious-Basterds3தப்பிவந்த சூசானா பாரிஸ் நகரில் வேறு ஒரு பெயரில் சினிமா தியேட்டர் நடத்துகிறார். அவள் மீது காதலில் விழுகிறான் நாஜிப் படையின் மாபெரும் வீரன் பிரடெரிக். இவன் செய்த சாகசங்களை ஒரு படமாக தயாரித்து சூசானாவின் திரையரங்கில் திரையிட விரும்புகிறான். அந்தப் படத்தைப் பார்க்க ஜெர்மனியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் வருவதால், திரையரங்கை தீ வைத்து கொளுத்தி அனைவரையும் கொல்வதற்குத் திட்டம்inglourious-basterds7
போடுகிறாள் சூசானா. அதே நேரம் பாஸ்டர்ட்ஸ் குழுவும் அந்த இடத்துக்கு வந்து ஒட்டுமொத்தமாக ஹிட்லர் படையைஅழிக்க நினைக்கிறது. யாரும் எதிர்பாராமல் ஹிட்லரும் அந்த படம்பார்க்க வருவதாக திட்டம் மாறுகிறது.

inglourious-basterds10இதனை நோக்கி காட்சிகள் எல்லாம் ஆமை வேகத்தில் நிதானமாக நடை
போடுகின்றன. பிராட்பிட் குழுவை கையும் களவுமாக பிடித்துவிடுகிறார் கர்னல் ஹான்ஸ். அதன்பிறகு நடப்பதுதான் உச்சபட்ச காமெடி. பிராட்பிட்டை கைதியாக பிடித்துக்கொண்டு, தான் மட்டும் அமெரிக்காவுக்கு தப்பிக்க நினைக்கிறார். அப்படி முயற்சி செய்தால் என்ன நடக்கும் என்பதை சின்னக் குழந்தைகூட செய்துவிடும். அப்படித்தான் ஏமாந்துபோகிறார் கர்னல் ஹான்ஸ்.

inglourious-basterds8கிளைமேக்ஸ்க்காக  யாராவது படம் பார்த்துவிட வாய்ப்பு இருக்கிறது என்பதால் அதையும் தெரிந்துகொள்ளுங்கள். ஹிட்லர் அந்த ஏரியாவுக்கு வருவதற்கு முன்பு படுபயங்கரமாக செக்கப் நடக்கிறது. ஆனால் ஹிட்லர் வந்ததும் எல்லோரும் தியேட்டருக்குள் முடங்கிவிடுகிறார்களாம். காவலுக்கு யாருமே இல்லாத தியேட்டரின் கதவை  எல்லாம் நிதானமாக மூடிவிட்டு தீ வைக்கிறான் சூசானாவின் inglourious-basterds6காதலன். இதற்குள் சூசானாவும் பிரடெரிக்கும் ஒருவரையொருவர் சுட்டுக்கொண்டு செத்துப்போகிறாள். தீயில் தப்பிக்க முயலும் ஹிட்லரை பாஸ்டர்ட்ஸ் சிப்பாய்கள் ஆசை தீர விதவிதமாய் சுட்டுக்கொல்கிறார்கள்.

புனைவாகவும் இல்லாமல் வரலாறாகம் இல்லாமல் ஒரே போர். அட, போங்கப்பா.

உங்களை எச்சரிப்பதற்காக இங்கே டிரைலர்

 —

Inglourious Basterds, war film, Quentin Tarantino, Brad Pitt, Christopher Waltz, Mélanie Laurent, Michael Fassbender, Eli Roth, Diane Kruger, Daniel Bruhl, Mike Myers, fictional, alternate history, Enzo G Castellari, macaroni combat film, Macaroni War, Euro War, The Inglorious Bastards, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 264 times, 52 visits today)

Related posts

One thought on “குவாண்டினின் மொக்கை படம்

  1. Srinivasan

    ரொம்ப நாள் கழிச்சு மனசு விட்டு சிரிச்சேன்….தாங்க்ஸ் அட்மின்.

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>