மீன் வளர்க்காதே, சாப்பிடு

Finding_Nemo

பாக்காம விட்றாதீங்க – ஃபைண்டிங் நிமோ

விலங்கு, பறவைகளைக் காப்பாற்றுவதற்காக ஏகப்பட்ட சமூக ஆர்வலர்கள் இருக்கிறார்கள். இவர்களில் யாரும் மீன்களைக் கண்டுகொள்வதில்லை. தொட்டியில் வைத்து மீன் வளர்ப்பதையே பெரிய சமூக சேவையாக நினைக்கிறார்கள். மீன்களுக்கு சமுத்திரமே போதாது எனும்போது, தொட்டியில் உலவவிட்டு ரசிக்கும் கொடுமைக்குப் பதிலாக சமைத்து  தின்றேவிடலாம். மீன்களின் உலகம் எத்தனை பெரிது என்பதை மனிதனும் சிந்தித்திருக்கிறான். ஆம், ஃபைண்டிங் நிமோ பாருங்கள்.

"FINDING NEMO 3D" (L-R) NEMO and MARLIN. ©2012 Disney/Pixar. All Rights Reserved.

பிறக்கும்போதே தாயை விழுங்கிவிட்டான் என்று நம் தமிழ் படங்களில் அவ்வப்போது பேசப்படும் வசனத்திற்கு சரியான உதாரணம் நிமோ. முட்டையில் இருந்த 99 சகோதரர்களையும் அம்மாவையும் ஒரு சுறா விழுங்கிவிடுகிறது. அதனால் எஞ்சியிருக்கும் ஒரே ஒரு குட்டி மீனான நிமோவை கண்ணும் கருத்துவமாக வளர்க்கிறார் அப்பா மார்லின்.

finding-nemo6நிமோ பிறவி ஊனம். ஆம், அதன் ஒரு செதில் சிறியதாக இருப்பதால் தந்தை மிகவும் கவலைப்படுகிறார். ஆனால் எதைப்பற்றிய கவலையும் இல்லாமல் சுட்டி மீனாக வளர்கிறது நிமோ. மற்ற பிள்ளைகள் (மீன்கள்தான்) எல்லாம் பள்ளிக்கூடம் போவதுபோல், தானும் செல்லவேண்டும் என்று அடம் பிடிக்கிறது. பாதுகாப்பு கருதி மார்லின் அனுமதி மறுப்பதை, மற்ற மீன்கள் எல்லாம் கிண்டல் செய்கின்றன. அதனால் விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழியின்றி  மகனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, முழு நேரமும் மறைந்திருந்து  நிமோவை கவனிக்கிறது மார்லின்.

finding-nemo13சுட்டித்தனமும் சேட்டையும் நிரம்பியதாக இருக்கிறது நிமோ. ஆசிரியர் கண்காணிபில் இருந்து எங்கேயும் செல்லக்கூடாது, எந்தப் பொருளுக்கும் ஆசைப்படக்கூடாது என்று தந்தை சொல்லிகொடுத்ததை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன் இஷ்டத்துக்கு சுற்றுகிறது. இந்த நேரத்தில் தனியே சென்று தன் வீரத்தைக் காட்ட முயற்சிக்கும் நிமோ, ஒரு வலையில் சிக்கிக்கொள்கிறது. உடனே பாய்ந்துசென்று காப்பாற்றுவதற்கு தந்தை முயற்சி செய்தாலும், அது முடியாமல் போகிறது.

finding-nemo9நிமோவை பிடித்துவிட்டுப் போய்விட்டார்கள். நகரத்தில் அது எப்படி வாழ்கிறது என்பதுதான் கதையாக இருக்கும் என்று நினைத்தால் நீங்கள் ஃபெயில். ஆம், தன்னைவிட்டுப் போன நிமோவை எப்படியும் கண்டுபிடித்து கடலுக்குக் கூட்டிவர ஆசைப்படுகிறது மார்லின். மகன் மீதான பாசத்தில் அந்தப் படகை பின்பற்றுகிறது. அதுவோ படுபயங்கர வேகத்தில் சென்றுவிடுகிறது. மார்லின் கனவை நிறைவேற்றுவதற்காக வந்து சேர்கிறது டோரி எனும் பெண் மீன்.

finding-nemo7நம்பிக்கை, சந்தோஷம், விடாமுயற்சி போன்ற அத்தனை குணங்களும் டோரிக்கு இருந்தாலும் ஒரே ஒரு குறை. அது ஷார்ட் டைம் மெமரி லாஸ். கொஞ்ச நேரத்தில் தான் யார், நீ யார் என்று கேட்கும் அளவுக்கு பெரிய பிரச்னை. ஆனால் அதனை ஒரு குறையாக எண்ணாமல் ஜாலியாக வாழ்கிறது. எத்தனை பெரிய குறை இருந்தாலும், அதை நீ பார்க்கும் விதத்தில்தான் உனக்கு நன்மையாகவோ, தீமையாகவோ இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்லும் கேரக்டர் டோரி. அதன் ஒவ்வொரு செயலும் புத்துணர்வு டானிக். எப்போதும் நம்பிக்கை இழக்காதே என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது டோரி.

finding-nemo2நிமோவை கண்டுபிடிக்க உதவி செய்வதாக சொல்கிறது டோரி. மார்லின் இதற்காக சந்தோஷப்படும் நேரத்தில், ‘நீ எதற்காக இங்கே வந்திருக்கிறாய்?’ என்று கேட்டு வெறுப்பேற்றுகிறது. உடனே டென்ஷனான மார்லின் கிளம்பிச் செல்ல முற்பட, அதனை சமாளித்து உதவி செய்கிறது. படகில் சிட்னி முகவரி இருப்பதைப் பார்த்து, அங்கே போனால் நிமோவை மீட்டுவிட முடியும் என்று உறுதியாகச் சொல்கிறது. எப்படி உடனே போய் சேர்வது என்று மார்லின் கவலைப்படுகிறது.

finding-nemo3இந்த நேரத்தில் கிரஷ் எனும் ஆமையையும் அதன் கூட்டத்தைப் பார்க்கிறது மார்லின். அந்தக் கூட்டம் சிட்னிக்குப் போவதாக தெரியவே, அதனுடன் மார்லினும் டோராவும் பயணமாகிறது. இந்தக் கூட்டத்தில் சிறியவருகும் பெரியவருக்கும் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாததை ஆச்சர்யமாகப் பார்க்கிறது மார்லின். ஒவ்வொரு உயிரும் பிறக்கும்போதே வாழ்வதற்கான தகுதியைப் பெற்றுவிடுகின்றன. யாரும் யார் மீதும் கட்டுப்பாடு விதிக்கத் தேவையில்லை என்பதை கிரஷ்ஷிடம் இருந்து கற்கிறது மார்லின்.

finding-nemo1திமிங்கலம் நினைத்தால் நம்மை உடனடியாக சிட்னிக்கு அழைத்துச்சென்று விடும், எனக்கு திமிங்கல பாஷை நன்றாக தெரியும். திமிங்கலம் எல்லாம் என் நண்பர்கள்தான் என்று தன்னைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசுகிறது டோரி. அந்த பாஷை பேசுவதாகச் சொல்லி ஒரு திமிங்கலத்தை அழைக்கிறது. ஒரு திமிங்கலம் வேகவேகமாக வந்து டோரியையும் மார்லினையும் லபக்கென்று விழுங்கிவிடுகிறது.

finding-nemo14அடப்பாவி, உன் பேச்சைக் கேட்டு நானும் இப்படி திமிங்கலத்துக்கு இரையாகிவிட்டேனே என்று மார்லின் கலங்கி கன்னாபின்னாவென்று திட்டிக்கொண்டே திமிங்கலத்திற்குள் செல்ல, கொஞ்ச நேரத்தில் சிட்னி கடற்கரையில் துப்பிவிடுகிறது. அதன்பிறகு நிமோவை எப்படி கண்டுபிடித்து கடலுக்கு கூட்டிச்செல்கிறது என்பதை படத்தில் கண்டு ரசியுங்கள்.

இந்த உலகில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி கடல் என்பதும் அந்த கடலுக்குள் பூமியைவிட அதிகமான ஜீவராசிகள் வாழ்வதும் நமக்குத் தெரியும். அந்த ஜீவன்களுக்கும் நம்மைப் போன்ற உணர்வும், உறவும் இருக்கும் என்பதை கலகலப்புடன் சொல்லித்தரும் படம் இது. மனதில் ஆயிரத்தெட்டு கவலைகள், துன்பங்கள், எரிச்சல்கள் இருந்தாலும் கொஞ்சநேரம் ஃபைண்டிங் நிமோ பாருங்கள்… குழந்தையாக மாறிப்போவீர்கள். துன்பங்களும் தூரப் போய்விடும்.

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

பின்குறிப்பு :

இந்தப் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஆண்ட்ரு ஸ்டாண்டன். இவர் டாய் ஸ்டோரி, கார்ஸ், வால் இ, அப், மான்ஸ்டர்ஸ் போன்ற ஏராளமான அனிமேசன் படங்களுக்கு கதை எழுதி இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் தொடர்ச்சியாக 2016-ம் ஆண்டு ’ஃபைண்டிங் டோரி’ திரைப்படம் வெளிவர இருக்கிறது. ஃபைண்டிங் நிமோவில் தொடங்கிய டோரியின் கலாட்டா காமெடி, இந்தப் படத்தில் உச்சகட்டத்தில் இருக்கும் என்று நம்பலாம்.

Finding Nemo, computer animated, comedy, drama, adventure, Pixar Animation, Walt Disney Pictures, Andrew Stanton, clown fish, Marlin, regal tang, Dory, Nemo, Sydney, Finding Dory, Albert Brooks, Ellen De Generes, Alexander Gould, Willem Dafoe, Geoffrey Rush, John Ratzenberger, Eric Bana, Elizabeth Perkins,  Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 136 times, 14 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>