அப்பப்பப்பப்பப்பா

The Pursuit of Happyness TH Poster

பாக்காம விட்றாதீங்க – த பர்சூட் ஆஃப் ஹேப்பினெஸ்:

அம்மாவின் அன்புக்கும் அப்பாவின் அன்புக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கும். அம்மாவைப் போல் வெளிப்படையாக பாசம் காட்டுவது, உருகுவது, கெஞ்சுவது, சரணடைவது எதுவுமே இருக்காது. பிள்ளையை தள்ளிநின்றுதான் ரசிப்பார். தன் சந்தோஷத்தை வெளிப்படையாக காட்டமாட்டார்.  அதேபோல்  தன்னுடைய சோதனைகளும் வேதனைகளும் பிள்ளைக்குத் தெரியக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். ஒரு தந்தையின் இப்படிப்பட்ட இயல்பான குணத்தை வைத்து உருவாக்கப்பட்டு, மாபெரும் வெற்றி பெற்றதுதான் த பர்சூட் ஆஃப் ஹேப்பினெஸ்.

The-Pursuit-Of-Happyness2ஆக்‌ஷன் படங்களில் நடித்து பெயர் வாங்கிய வில் ஸ்மித்தும், அவரது மகன் ஜேடன் ஸ்மித்தும் இணைந்து நடித்த முதல் படம். கிறிஸ் கார்ட்னர் எனும் கதாபாத்திரத்தில் வருகிறார் வில் ஸ்மித். தன்னுடைய மொத்த சேமிப்பையும் போட்டு ஒரு ஸ்கேன் மிஷின் தயாரித்து சந்தைப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார் வில் ஸ்மித். தொடர்ந்து தோல்வி மேல் தோல்வி கிடைக்கிறது. மனைவியின் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்த முடியாமல், மகனை கவனிக்க முடியாமல் குடும்பம் தடுமாறுகிறது. இந்த நேரத்தில் அவனது ஸ்கேனர் மிஷின் திருடு போகிறது.

The-Pursuit-Of-Happyness5இனி என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கும் நேரத்தில் ஸ்டாக் புரோக்கராக வேலை செய்வதற்கு  உதவுவதாக சொல்கிறார் புதிய நண்பர். வீட்டு வாடகையை சமாளிப்பதற்காக, அவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கிறார். அந்த வேலையை செய்து முடிக்கும்போது போலீஸ் பிடியில் சிக்குகிறார். பல முறை பார்க்கிங் பணம் செலுத்தாமல் தப்பியதற்காக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்.  அதனால் அடுத்த நாள் பெயிண்ட் செய்த உடையுடன் இண்டர்வியூ செல்கிறான். தன்னுடைய பேச்சுத் திறமையால் அந்த போட்டியில் வெற்றிபெற்று புரோக்கர் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறான். ஆனால் பயிற்சி காலத்தில் பணம் கிடையாது என்பதால் பொருளாதார நிலை மேலும் மோசமாகிறது.

The-Pursuit-Of-Happyness4இனியும் பொறுக்கமுடியாது என்று குழந்தையை வில் ஸ்மித்திடம் ஒப்படைத்துவிட்டு போகிறாள் மனைவி. மனைவி தவிக்கவிட்டுப் போன துயரத்தில் இருக்கும் வில் ஸ்மித்துக்கு அடுத்த அடி விழுகிறது. அவரது வங்கிக்கணக்கில் இருந்த சொற்ப பணமும் வரியாக எடுக்கப்படுகிறது. குடியிருந்த வீட்டில் இருந்து வெளியேறி ஒரே நிமிடத்தில் பிச்சாண்டி ஆகி ரோட்டுக்கு வருகிறார். ஆனாலும் தன்னுடைய வறுமையும் சோகமும் தன் மகனுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்.

ஏதோ வெளியூர் பயணம் செய்வதுபோல் ஸ்டேஷனுக்குச் சென்று டாய்லெட்டில் யாருக்கும் தெரியாமல் மறைந்து ஓர் இரவைக் கழிக்கிறார். இதனை சாதாரண விஷயம் போன்று மகனுக்குச் சொல்ல முனைவதும், அவன் அதனை ஏற்றுக்கொள்வது போல் நடிப்பதும் எந்தப் படத்திலும் காணமுடியாத உணர்வுபூர்வ காட்சிகள். ரயில்வே ஸ்டேஷனில் ஒரு நாள், ரோட்டுவாசிகளுக்கான இல்லத்தில் ஒரு நாள், ஹோட்டலில் ஒரு நாள் என்று நாட்கள் கழிகின்றன. இக்கட்டான நிலையிலும் ரத்தம் கொடுத்து The-Pursuit-Of-Happyness1பணம் சம்பாதித்து மகனுக்கு சாக்லேட் வாங்கித் தந்து ரசிக்கிறார். எப்படியாவது வறுமையை விரட்டிவிட வேண்டுமென்று துடிக்கிறார் வில் ஸ்மித். தட்டுங்கள் கிடைக்கப்படும், கேளுங்கள் தரப்படும் என்பதுபோல் அவனது தேடுதலின் ஒரு திருப்பமாக அவனது ஸ்கேனர் மிஷின் திரும்பக் கிடைக்கிறது. அதை கஷ்டப்பட்டு விற்பனை செய்கிறான். அதன்பிறகு நிலைமை மாறுகிறது. ஸ்டாக் புரோக்கர் வேலையில் சேர்ந்து உச்சத்தை தொட முயற்சிக்கிறார். கிளைமாக்ஸ் என்னவென்று எல்லோருமே யூகித்திருப்பதுதான் என்றாலும் திரையில் பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.

The-Pursuit-Of-Happynessஒருவர் வேலை இல்லாமல் கஷ்டப்படுவதையும், கடுமையான முயற்சிக்குப் பிறகு வேலை கிடைத்து சந்தோஷம் அடைவதையும் இதுவரையில் ஏகப்பட்ட படங்களில் பார்த்துவிட்டோம் என்றாலும், இந்தப் படத்தின் ஆணி வேர்  தந்தை மகனுக்கான பாசம் என்பதால்தான் தனித்து நிற்கிறது. தாயின் குறை தெரியக்கூடாது என்பதற்காக வில் ஸ்மித் எத்தனை முயற்சி எடுத்தாலும், ‘அம்மா ஏன் நம்மை விட்டுப் போனார்?’ என்று மகன் கேட்கும்போது வில் ஸ்மித் கலங்கிப் போகிறார்.  கையாலாகாத நிலையில் தான் இருப்பதையும், தன் மகனின் கோலத்தையும் எண்ணி  வில் ஸ்மித் தனிமையில் கலங்கும் காட்சிகள்  கவித்துவமானவை.

தாய்ப் பாசம்தான் உலகிலேயே பெரிதாக பேசப்படுகிறது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, தந்தை பாசமும் அதற்கு இணையாது என்பதை ஆணித்தரமாக சொல்லும் பர்சூட் ஆஃப் ஹேப்பினெஸ் படத்துக்கு ஒரு ‘ஓ’ போடுங்கள்.

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

பின்குறிப்பு :

இந்தக் கதை கிறிஸ் கார்ட்னர் என்பவரின் நிஜக்கதை. திடீரென மனைவியால் கைவிடப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறிய கார்ட்னர் கையில் அப்போது இரண்டு வயதுக் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தையை சமாளிக்க முடியாமல் கதறி அழுதாராம். அதன்பிறகு கஷ்டப்பட்டு ஸ்டாக் புரோக்கராக மாறி, இப்போது நம்பிக்கையூட்டும் பேச்சாளராக நாடெங்கும் உலா வருகிறார். இவர் எழுதிய, ‘பர்சூட் ஆஃப் ஹேப்பினெஸ்’ என்ற புத்தகத்தைத் தழுவித்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இவர் படத்தின் இறுதிக் காட்சியில் வில் ஸ்மித்தை பார்த்தபடி கடந்துசெல்லும் பயணியாக முகம் காட்டியிருக்கிறார்.

இந்தப் படத்தை வில் ஸ்மித் சிலருடன் சேர்ந்து தயாரிக்க, காப்ரியேல் முசினோ இயக்கியிருக்கிறார். இவர் உறவுகளை உணர்வுபூர்வமாக சொல்லும் சில இத்தாலி படங்களை இயக்கியவர். வில் ஸ்மித்தின் செவன் பவுண்ட்ஸ் படத்தையும் இயக்கியவர் இவர்தான்.

முழுப்படத்தையும் இங்கே பாருங்க:

https://www.youtube.com/watch?v=HYXgdQYu4AU

The Pursuit of Happyness, biographical, drama, Chris Gardner, Gabriele Muccino, Will Smith, Jaden Smith, Steven Conrad, memoir, Quincy Troupe, happyness, happiness, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 202 times, 44 visits today)

Related posts

One thought on “அப்பப்பப்பப்பப்பா

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>