ஏய், அவளா நீ? டேப்பில் சிக்கிய கிறிஸ்டன்

Kristen alicia

கிறிஸ்டனை போட்டுக்கொடுத்த மம்மி

kristen-stewartட்விலைட்’ ஹீரோயின் கிறிஸ்டன் ஸ்டுவர்ட்டுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. தன்னுடைய அழகாலும் இளமையாலும் இளசுகளை கிறங்கடிப்பவர்.  நம்ம நயன்தாரா மாதிரி எல்லா நேரங்களிலும் ஏதாவது ஒரு செய்தி அவரைப் பற்றி பரபரவென சுற்றிக்கொண்டு இருக்கும். எந்தப் படத்தில் நடித்தாலும் அந்தப் படத்தின் இயக்குநர் அல்லது நடிகருடன் சேர்த்து கிசுகிசுக்கப்படுவார். இருவரும் அங்கே சுற்றினார்கள், இங்கே தங்கினார்கள் என்று பேசப்படும். ஆனால் அடுத்த படத்துக்குப் போனதும் பழைய கிசுகிசு மறைந்து, புதிதாக ஒரு காதல் பறந்துவரும். அந்த வகையில் இதுவரையிலும் ’டுவ்லைட்’ ராபர்ட் பேட்டிசன், ’ஸ்னோவைட்ரூபெர்ட் சாண்டர்ஸ்,  பில்லி ஃப்ரூக் போன்ற பலருடன் காதல் என்று கிசுகிசு இருந்தாலும், எந்தக் காதலும் கிறிஸ்டனுக்கு நிரந்தரமாக தாக்குப் பிடிக்கவில்லை.

kristen-stewart-bisexual-girlfriend-alicia-cargile-dating-gay-01-A-G’எனக்கு இயல்பாக இருக்கப்பிடிக்கும், பொய்யாக நடிப்பவர்களை காதலிக்கப் பிடிக்காது’ என்று உறவு முறிவுக்கு ஆயிரத்தெட்டு காரணங்களை சொல்லி நகர்ந்துவிடுவார் ஸ்டுவர்ட். ஆனால் இதெல்லாம் உண்மையான காரணம் இல்லை என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது. ஆம், கிறிஸ்டனுக்கு அவளது உதவியாளரும் இசை பாடகியுமான அலிசியா கார்கிலியுடன் அந்தரங்க உறவு இருக்கிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார், கிறிஸ்டனின் அன்புத் தாயான ஜூல்ஸ்.  இந்த டேப்தான் இப்போது ஹாலிவுட்டை கலங்கடிக்கிறது.

அலிசியாவின் இசை எனக்கு ரொம்பப்பிடிக்கும் என்று அவ்வப்போது மீடியாவிடம் ஓப்பன் டாக் கொடுத்திருக்கிறார் கிறிஸ்டன். ஆனால் இப்போதுதான் அவருக்கு இசையைவிட அலிசியாவைத்தான் ரொம்பப் பிடிக்கும் என்பது தெரியவந்திருக்கிறது. அலிசியாவும் ஸ்டூவர்ட்டும் ஒரே மாதிரி டாட்டூஸ் கையிலும் தொப்புளிலும் குத்தியிருக்கிறார்கள்.  எங்கேயும் ஒன்றாக கைகோர்த்து நடக்கிறார்கள். ஆனாலும் தங்களுக்குள்  உறவு இருப்பது குறித்து கிறிஸ்டனும் அல்சியாவும் இன்னமும் எதுவும் சொல்லவில்லை.

ஒருவேளை, மெளனம் சம்மதத்துக்கு அறிகுறியோ?

(Visited 204 times, 16 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>