பாக்கியராஜ்க்கு ஒரு பார்சல் – மெமண்டோ

memento_TH poster

பாக்காம விட்றாதீங்க – மெமண்டோ:

முதலும் முடிவும் இடியாப்பத்தில் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க முயற்சிசெய்தால் எப்படியிருக்கும் என்பதை கிறிஸ்டோபர் நோலனின்மெமண்டோ’ படம் பார்த்து தெரிந்துகொள்ளலாம். நேர்க்கோட்டில் கதை சொல்லி மகிழ்விப்பதைவிட, ரசிகனை குழப்பி அவனை சிந்தனையாளனாக அல்லது பைத்தியக்காரனாக மாற்றவேண்டும் என்ற நோலனின் திட்டம் இந்தப் படத்தில்தான் வெற்றிகரமாக நிறைவேறியது. நான்-லீனியர் எனப்படும் குழப்பமான திரைக்கதை பாணியில் படம் ஜிவ்வென வேகமெடுக்கிறது. இந்தப் படத்தை சுட்டுத்தான் சூர்யாவை வைத்து கஜினி என்றொரு படத்தை ஏ. ஆர். முருகதாஸ் எடுத்தார் என்பது உலகிற்கே தெரிந்த மோசடி. இந்தப் படத்தின் வெற்றியைப் பார்த்து மிரண்ட அமீர்கானை வைத்து இந்தியிலும் ஒரு கஜினி வெளியிட்டார். இனி, ஒரிஜினல் கஜினி ஸாரி மெமண்டோவுக்குப் போகலாம்.

Memento 2லென்னிக்கு வித்தியாசமான ஒரு நோய். அதாவது அவன் நினைவுகள் 15 நிமிடங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும். அதன்பிறகு பழைய விஷயங்கள் முழுமையாக மறந்துவிடும். இப்படி ஒரு கொடுமையான நோய் இருந்தாலும் உயிர் வாழத் துடிக்கிறான். ஒவ்வொரு கணத்தையும் ஞாபகப்படுத்துவதற்காக பல்வேறு தகவல்களை புகைப்படமாகவும், தன்னுடைய கையெழுத்தாகவும், உடம்பில் பச்சை குத்திக்கொண்டும் வாழ்கிறான். ஏனென்றால் அவனுக்கு ஒரு லட்சியம் இருக்கிறது.

மனைவியை இரண்டு திருடர்கள் கற்பழித்துக் கொன்றுவிட்டார்கள். அவர்களில் ஒருவனை அப்போதே சுட்டுக் கொன்றுவிட்டான் லென்னி. இரண்டாமவன் மறைந்திருந்து தாக்கியதால் இப்படியொரு ஞாபக மறதி பிரச்னைக்கு ஆளாகியிருக்கிறான் லென்னி. தன்னை தாக்கிவிட்டு தப்பியோடியவனை கொல்வதுதான், அவன் உயிர் வாழ்வதன் ஒரே லட்சியம். அந்தத் திருடனின் பெயர் ஜான் ஜி என்று நம்புகிறான்.

Memento 5தூங்கி எழும் லென்னி ஞாபகசக்தி இல்லாமல் விழிக்கிறான்.  போட்டோ, பச்சை குத்தியிருக்கும் தக்வல்களைப் பார்த்து தான் யார், என்ன செய்யவேண்டும் என்பதை உணர்கிறான். அப்போது அவன் நண்பன் என்று போலீஸ்காரன் டெடி வருகிறான். தன்னிடம்  இருக்கும் போட்டோவில் டெடி படம் இருப்பதைப் பார்த்து  நம்புகிறான். டெடி அழைத்துச்செல்லும் வனாந்திர பிரதேசத்துக்குச் செல்கிறான். லென்னிக்கு திடீரென சந்தேகம் வர டெடியின் போட்டோவை திருப்பிப் பார்க்கிறான். அதில் இவன் பொய் சொல்பவன், கொல்லவேண்டும் என்று எழுதியிருக்கிறது. உடனே டெடியைக் கொலை செய்கிறான்.

அடுத்த காட்சி.  பிளாக் ஒயிட்டில் காட்டப்படுகிறது. ஸெமி என்பவன் ஞாபக சக்தி இல்லை என்று சொல்லி, இன்சூரன்ஸ் பணத்தை வாங்க முயற்சிக்கிறான். அவன் பொய் சொல்வதை கண்டுபிடித்துவிடலாம் என்று ஏஜெண்டாக இருக்கும் லென்னி சொல்கிறான்.

Memento 8அடுத்த காட்சி. ஜான் ஜி-யின் நம்பர் பிளேட்டை வைத்து முகவரியை கண்டுபிடித்துவிட்டேன் என்கிறாள் நாடலி. அவள் போட்டோ லென்னியிடம் இருக்கிறது. ஆனாலும் நீ எனக்கு ஏன் உதவி செய்கிறாய் என்று கேட்கிறான். நீ முன்பு எனக்கு உதவி செய்திருக்கிறாய், அதற்கான நன்றிக் கடன் என்கிறாள். இப்போது நீ புதிய அறையில் தங்கு என்று ஒரு சாவியை எடுத்துக் கொடுக்கிறாள்.  அந்த அறையில் இருந்து எழுகிறான். அவனைத் தேடி டெனி எனும் போலீஸ்காரன் வருகிறான்.

செத்துப்போன போலீஸ்காரன் எப்படி திரும்ப வருகிறான் என்று  குழப்பமாக இருக்கிறதா… இப்போதே குழம்பிவிட்டால் விடுவோமா?

Memento 4அடுத்தடுத்த காட்சிகள் நகர்கின்றன. முகத்தில் அடிபட்டு ரத்தம் வழியும் முகத்துடன் வருகிறாள் நாடலி. எனக்காக ஒருவனை கொல்ல வேண்டும் என்கிறாள். நான் பணத்துக்காக யாரையும் கொல்வதில்லை என்கிறான் லென்னி. தெரியும், உன் மனைவியைக் கொன்றவனை பழி வாங்குவது சரியென்றால் இதுவும் சரி என்கிறாள்.

கருப்பு வெள்ளையில், ஸெமிக்கு உடல் ரீதியில் பிரச்னை இல்லை, மன நோய்க்கு ஆளாகிவிட்டார். அதனால் இன்சூரன்ஸ் பணம் தரவேண்டியதில்லை என்று லென்னி நிறுவனத்துக்கு நோட் அனுப்புகிறான்.

காட்சி மாறுகிறது. காதலனுடைய கார் வந்ததும் நாடலி வேகமாக எட்டிப் பார்க்கிறாள். உள்ளே லென்னி இருக்கிறான். ஸாரி சொல்லிவிட்டுக் கிளம்புகிறாள். ஆனால் லென்னி அவளை பின் தொடர்ந்து செல்கிறான். தனக்கு மெமரி லாஸ் இருக்கிறது, என்று சொல்லும் லென்னி, உன்னை Memento 1எனக்குத் தெரியுமா என்று கேட்கிறான். நம்பிக்கை இல்லாமல் சண்டை ஏற்பட, நாடலி முகத்தில் அடிக்கிறான் லென்னி.  ரத்தம் வழிகிறது.

ஸெமியின் மனைவி லென்னியைத் தேடி வருகிறாள். உண்மையில் என் கணவர் நடிக்கிறாரா என்ற உண்மையை மட்டும் சொல்லு என்று கேட்கிறாள்.

கோபத்துடன் அறையில் இருந்து வெளியேறும் நாடலி, அங்கேயிருக்கும் பேனாக்களை எல்லாம் எடுத்துக்கொண்டு காருக்குப் போகிறாள். இவளைப் பற்றி எழுதவேண்டும் என்று பதறிப்போய் பேனா தேடுகிறான் லென்னி. பேனா தேடிக்கொண்டு இருக்கும்போது அடிபட்ட முகத்துடன் உள்ளே வருகிறாள் நாடலி. எனக்காக ஒரு கொலை செய்யவேண்டும் என்கிறாள்.

ஸெமியை பரிசோதனை செய்யும் முயற்சியில் தன்னுடைய உயிரை அவரது மனைவி இழக்கிறாள். அதுதெரியாமல் டி.வி. பார்க்கிறார் ஸெமி.

Memento 3டெடியை கொல்ல முயற்சிக்கும்போது அவன் ஒருசில தகவல்களை சொல்கிறான். உண்மையில் உன்னுடைய மனைவியை திருடர்கள் கொல்லவில்லை. அப்போது உன் மனைவி உயிர் பிழைத்துவிட்டாள். உன்னை நோயில் இருந்து காப்பாற்றும் முயற்சியில்தான் மனைவி செத்துவிட்டாள். உன் நோயினால் நீதான் அவளை கொன்றுவிட்டாய். அந்த கேஸ் விவகாரத்தை நான் கவனித்துக்கொண்டேன். அதனால் உன்னை தாக்கிவிட்டுப் போன ஜான் ஜியை ஏற்கெனவே உனக்கு அடையாளம் காட்டிவிட்டேன். அவனை நீ கொன்றுவிட்டாய் என்று அதற்கு ஆதாரமாக எரிந்துபோன புகைப்படம் ஒன்றை காட்டுகிறான். என் உண்மையான பெயரும் ஜான் ஜி – அதனால் நானும் கொலைகாரனா என்று கேட்கிறான். போலீஸ்காரனைக் கொன்றதும் அதனை பதிவு செய்யாமல் அடுத்த ஜான் ஜி-யைத் தேடத் தொடங்குகிறான் லென்னி.

memento 7லென்னி போனில் பேசும் காட்சிகள் எல்லாம் நேர் வரிசையிலும் மற்ற ஒரிஜினல் படம் எல்லாமே ரிவர்ஸ் டெக்னாலஜியிலும் அமைந்திருக்கும். அதாவது கிளைமாக்ஸில் இருந்து படத்தை தலைகீழாகப் பார்ப்பது போல் காட்சிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரே ஒரு செகண்ட் படத்தைக் கவனிக்கவில்லை என்றாலும் ஒரு தடயத்தை காணத் தவறலாம்  எனும் அளவுக்கு நொடிக்குநொடி டீட்டெய்ல் விரவிக் கிடக்கிறது. போலீஸ்காரன் நல்லவனா, நிஜமாகவே மனைவியின் மரணத்துக்கு லென்னிதான் காரணமா, லென்னி ஏற்கெனவே ஒரு ஜான் ஜியை கொன்றுவிட்டானா, உயிர் வாழ்த்தான் இப்படி செய்கிறானா என்பதற்கு எல்லாம் படத்தில் எந்த விடையும் கிடையாது. ஏனென்றால் இதனை நீங்களே உங்கள் விருப்பத்திற்கேற்ப முடிவெடுத்துக்கொள்ளலாம். இந்தத் திமிர்தான் நோலனின் வெற்றி.

நம் ஊரில் இன்னமும் பாக்கியராஜைத்தான் திரைக்கதை ஆசான் என்று புகழ்ந்துகொண்டு இருக்கிறோம். ம்… என்னத்தை சொல்ல?

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

பின் குறிப்பு :

முதல் படமாக, ‘ஃபாலோயிங்’ வெளிவந்திருந்தாலும், மெமண்டோ படம்தான் கிறிஸ்டோபர் நோலனை உச்ச உயரத்துக்கு கொண்டுசென்றது. இப்போது உலகிலேயே இயக்குனருக்கென மட்டுமே படம் பார்க்கும் ரசிகர்கள் நோலனுக்குத்தான் அதிகம்.

மெமண்டோ படத்தை இப்போதைய நான் லீனியர் வடிவத்தில் இல்லாமல், கிரானஜிக்கல் எனப்படும் நேர்வரிசையில் கதைசொல்லும் வகையிலான டி.வி.டி-யும் கிடைக்கின்றன. ஆனால் இந்த வடிவத்தில் விறுவிறுப்பு ரொம்பவே கம்மி.

முழுப்படத்தையும் இங்கே பாருங்க:

https://www.youtube.com/watch?v=GZrV3Sw0TBY

(Visited 317 times, 59 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>