சரவணபவன் டயனோசர் – ஜுராசிக் வோர்ல்டு விமர்சனம்

Jurassic World Final TH

சரவணபவன் ஓட்டலின் இட்லி, சாம்பார் எப்போதும் ஒரே ருசியில்தான் இருக்கும். ஆனால் அந்த ருசி குறையாது, வயிற்றுக்கும் பிரச்னை செய்யாது என்பதால் நம்பி சாப்பிடலாம். அப்படித்தான் ஜுராசிக் பார்க் தொடங்கி வெளியான மூன்று பாகங்களிலும் டயனோசர்கள் என்னவெல்லாம் செய்யும் என்பது நன்றாகவே தெரியும். நாம் எதிர்பார்த்தபடிதான் இப்போது
ரிலீசாகியிருக்கும் நான்காம் பாகமான ஜுராசிக் வோர்ல்டு படமும் இருக்கிறது என்றாலும் தவிர்க்காமல் பார்க்கவேண்டிய படம்.

JurassicWorld_1ஜுராசிக் பார்க் முதல் பாகத்தில் இருந்து  22வது ஆண்டில் இந்த நான்காம் பாகம் தொடங்குகிறது. ஒரு தீவில் ஜூராசிக் வோர்ல்டு என்ற தீம்பார்க் மிகமிக பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் இருந்து ரசிகர்கள் ஜுராசிக் வோர்ல்டுக்கு வருகைதந்து விதவிதமான டயனோசர்களை பார்த்து ரசிக்கிறார்கள். டயனோசர் மீது ஏறி விளையாடுகிறார்கள். குட்டிக்கரணம் போடும் ரேப்டர் டயனோசர்களில் இருந்து நீருக்குள் மூழ்கியிருக்கும் ராட்சச டயனோசர் வரையிலும் விதவிதமாக இருக்கின்றன. ஆனால்
எல்லா டயனோசர்களின் ஜீன்களிலும் மாற்றம் செய்து, சரவணபவன் பாணியில்  சைவ  டயனோசர்களாக மாற்றி வைத்திருக்கிறார்கள். அதனால் எந்த பயமும் இல்லாமல் மக்கள் பக்கத்தில் வந்து தொட்டு ரசிக்கிறார்கள்.

BRYCE DALLAS HOWARD and CHRIS PRATT star in the movie  "Jurassic World", the long-awaited next installment of Steven Spielberg's groundbreaking "Jurassic Park" series. Colin Trevorrow directs the epic action-adventure from a draft of the screenplay he wrote with Derek Connolly. Frank Marshall and Pat Crowley join the team as fellow producers, and Spielberg returns to executive produce. "Jurassic World" will be shot in 3D and released by Universal Pictures on June 12, 2015. Photo Credit: Chuck Zlotnick/Universal Pictures and Amblin Entertainment, Inc.புதுசுபுதுசாக எதிர்பாக்கும் மக்களுக்கு கொஞ்சகாலத்தில் இந்த டயனோசர் காட்சிகள் அலுத்துப்போகவே  கூட்டம் குறைகிறது. அதனால் புது வகையான டயனோசர் உருவாக்கி மக்களை கவர திட்டம் போடுகிறார்கள். இதற்காக
தவளை, மீன், பச்சோந்தி தொடங்கி பல்வேறு டயனோசர்களின் ஜீன்களையும் கலந்து இண்டோமினஸ் ரெக்ஸ் என்ற புது டயனோசரை விஞ்ஞானிகள்  உருவாக்குகிறார்கள். இந்த காலகட்டத்தில்  டயனோசர் உலகத்தின் மேனேஜராக இருக்கும் சித்தியை  (பிர்சி டாலஸ் ஹாவர்டு) பார்க்கவும் விடுமுறையை ஜாலியாக கொண்டாடவும் இரண்டு சிறுவர்கள் வருகிறார்கள். இவர்கள் பார்வையில்தான் படம் விரிகிறது.

Jurassic-World-6இந்த தீம் பார்க்கில் சித்திக்கு ஒரு பழைய காதலன் (கிறிஸ் பிராட்) இருக்கிறான். அவன் முன்பு ராணுவத்தில் விலங்குகளை பழக்கும் பிரிவில் பணிபுரிந்தவன். இங்கு டயனோசர்களை பழக்கி வித்தை காட்டிக்கொண்டு இருக்கிறான். குழந்தைகள் சந்தோஷமாக சுற்றிப்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

Jurassic World-Raptors1புதிய ஜீன்களுடன் டயனோசர் உருவாக்கினால் அடுத்து என்ன நடக்கும் என்பதை அம்மா வயிற்றில் இருக்கும் குழந்தைகூட சொல்லிவிடும். அப்படித்தான் ஆகிறது. புத்திசாலித்தனமாக யோசித்து ஆய்வுக்கூடத்தில் இருந்து புதிய டயனோசர்   தப்பிக்கிறது. முதல் வேலையாக அதன் உடம்பில் பொருத்தப்பட்டிருக்கும் டிராக்கிங் சிப்பை கழட்டி எறிகிறது. காவலர்கள் அதனை தேடும்போது சுவரோடு சுவராக, மலையோடு மலையாக  பச்சோந்தி போல் நிறம் மாறி ஒளிந்துகொள்வதால் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. தன்னைத் தேடிவரும்  வீரர்களை எல்லாம்  லபக் லபக் என்று விழுங்குகிறது. அப்புறமென்ன அதகளம்தான். பூட்டி வைத்திருக்கும் அத்தனை டயனோசர்களையும் திறந்துவிடுகிறது. தப்பும் டயனோசர்கள் மனிதர்களை வேட்டையாடத் தொடங்குகின்றன.

jurassic-world-5உடனே அபாய மணி அடித்து பார்வையாளர்களை வெளியே விரட்டுகிறார்கள். சிறுவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டதும் வேறு வழியில்லாமல் சித்தி தன்னுடைய காதலன் உதவியை நாடுகிறாள். ஆபத்து வந்ததும் மீண்டும் காதலர்களாக மாறுகிறார்கள். ஆபத்தில் இருக்கும் சிறுவர்களை அழைத்துக்கொண்டு ஆராய்ச்சிக் கூடத்துக்கு வருகிறான். அங்கேயும் ரெக்ஸ் டைனோசரஸ் விரட்டி வருகிறது. இவன் பழக்கிவைத்திருக்கும் டயனோசர்களைக் கொண்டு ரெக்ஸ் டயனோசரை அழிக்க முயற்சிக்கிறான். அந்த குட்டி டயனோசர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ரெக்ஸ், அவற்றையும் jurassic-world-4மனிதர்களுக்கு எதிராகத் திருப்புகிறது. விரட்டல், மிரட்டல், தப்பித்தல், கண்டுபிடித்தல் எல்லாமே நாம் முந்தைய படங்களில் பார்த்ததைப் போலவே  அச்சுப்பிசகாமல் நடக்கிறது.

அதன்பிறகு இத்தனை நாட்கள் பழக்கிய டயனோசர்களுடன் ஹீரோ பேச்சுவார்த்தை நடத்தி, ரெக்ஸுக்கு எதிராகத் திருப்புகிறான். ஆனால் அவை எல்லாமே ரெக்ஸுக்கு இரையாகின்றன. ரெக்ஸ் டயனோசரிடம் இருந்து தப்பிக்கவும் முடியாமல் கொல்லவும் முடியாமல் தவிக்கிறார்கள். அதனால் முதல் பாகத்தில் பூட்டி வைக்கப்பட்டதைப் போன்ற பிரமாண்ட டிரெக்ஸ் Jurassic-World-Chris-Pratt-Motorcycle-Raptorடயனோசரை மோதவிடுவதற்கு முயற்சி எடுக்கிறார்கள். இரண்டு பிரமாண்ட மலைகளும் முட்டி மோதும்போது, யாரும்  எதிர்பாராத  ஒரு கிளைமேக்ஸ் நடக்கிறது.

இயற்கையை மீறுவதற்கு மனிதர்கள் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் எத்தனை அனர்த்தமாகும் என்பதற்கு சாட்சியாக ரெக்ஸ் டயனோசர் இருக்கிறது. அத்துடன் லாபம் சம்பாதிப்பதற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்த அளவுக்குப் போகும் என்பதற்கும் இந்த டயனோசரே உதாரணம்.

கொஞ்சம் ரசிக்க – டிரெய்லர்

பின்குறிப்பு :

முதல் இரண்டு பாகங்களை இயக்கிய ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் மூன்றாவது பாகத்தைப் போன்றே இந்தப் படத்திலும் எக்ஸிக்யூடிவ் புரடியூசராக மட்டுமே பணியாற்றியிருக்கிறார். இந்தப் படத்தை கோலின் டிரெவொரோ இயக்கியிருக்கிறார். தொழில்நுட்பத்தில் இந்தப் படம் புதிய எல்லையைத் தொட்டிருக்கிறது.

குழந்தைகள் தரும் மதிப்பெண்  :  90/100

தமிழ் ஹாலிவுட் மதிப்பெண்      :  65/100

(Visited 241 times, 18 visits today)

Related posts

One thought on “சரவணபவன் டயனோசர் – ஜுராசிக் வோர்ல்டு விமர்சனம்

  1. […] இருந்த ஜுராசிக் வோர்ல்ட் (விமர்சனம் இங்கே படிக்கவும்) ரிகார்டுகளை அடித்து […]

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>