திக்திக் பரிட்சை – Exam

exam_poster

பாக்காம விட்றாதீங்க – எக்ஸாம்:

மொத்தம் பத்தே பத்து மனிதர்கள், படம் முழுவதும் ஒரே அறையில்தான் நடக்கவேண்டும். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் திகிலில் கரையவேண்டும் என்று சின்ன வட்டம் போட்டால் ஜெயிப்பது எத்தனை கடினம்? ஆனால் சைக்கோ திரில்லர் வகையைச் சேர்ந்த எக்ஸாம் திரைப்படம் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு சிக்ஸர் அடித்திருக்கிறது. வாருங்கள் எக்ஸாம் அறைக்குள் நுழையலாம்.

exam 1ஒரு நிறுவனத்தின் உயர்பதவி தேர்வுக்காக நான்கு ஆண்களும் நான்கு பெண்களுமாக எட்டுப் பேர் வருகிறார்கள்.  ஒவ்வொருவர் முன்பும் ஒரு பேப்பர் வைக்கப்பட்டிருக்கிறது. உள்ளே நுழையும் தேர்வாளர், ‘நீங்கள் இனி கண்ணாடிக்குப் பின்னே கண்காணிக்கப்படுவீர்கள். சரியாக 80 நிமிடங்களில் தேர்வு முடிந்துவிடும். டைம் செட் செய்துகொள்ளுங்கள். செக்யூரிட்டி அல்லது என்னிடம் பேச முயற்சிக்கக்கூடாது. பேப்பரை தவறாக பயன்படுத்தக்கூடாது. ஒரே ஒரு கேள்வி, ஒரே ஒரு பதில். வேறு ஏதாவது கேள்வி இருக்கிறதா?’ என்று கேட்டுவிட்டு நகர்கிறார்.  பாதுகாப்புக்கு ஒரு செக்யூரிட்டி மட்டும் ஆடாமல் அசையாமல் நிற்கிறார்.

பேப்பரைத் திருப்பித்திருப்பி பார்க்கிறார்கள். எதுவும் எழுதப்படவில்லை. பேப்பரில் ஒரு பெண் எழுதத்தொடங்க, உடனே செக்யூரிட்டி அந்தப் பெண்ணை வெளியே அனுப்புகிறான். எதுவும் எழுதக்கூடாது என்று தெரியவரவே ஏழு பேரும்  திகில் உறைந்து போகிறார்கள். நீண்ட EXAM 4மெளனத்திற்குப் பிறகு ஒருவன் பேசத் தொடங்குகிறான். செக்யூரிட்டி அல்லது கண்ணாடிக்குப் பின்னே இருக்கும் தேர்வாளரிடம்தான் நாம் பேசக்கூடாது. நமக்குள் பேசலாம் என்கிறான். அதேபோல் எழுந்து நடக்கலாம், சிரிக்கலாம் என்று எழுகிறான். அதன்பிறகுதான் அனைவரும் ரிலாக்ஸ் ஆகிறார்கள்.

நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து எது கேள்வி என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்வோம். அதன்பிறகு விடையை அவரவர் திறமையை வைத்து கண்டறியலாம் என்று முடிவெடுக்கிறான். அப்போது ஒரு வயதான நபர் exam-6மட்டும் பிரெஞ்சு மொழியில் எதையெதையோ பேச… அவனை வலுக்கட்டாயமாக பேப்பரை கிழிக்கவைத்து, வெளியே அனுப்புகிறான் வெள்ளையன்.

மீதமிருக்கும் ஆறுபேருக்கும் அடையாளம் வைக்கிறான் வெள்ளையன். இந்தியனை பிரெளன் என்றும் கருப்பனை பிளாக் என்றும் தன்னை வொயிட் என்றும் அழைத்துக்கொள்கிறான். அதேபோல் மூன்று பெண்களுக்கும் அவர்களது தலைமுடியைக் கொண்டு பிளாக்கி, பிரெளனி, வொயிட்டி என்று பிரிக்கிறான். அனைவரையும் கிட்டத்தட்ட அவன் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவருகிறான். அங்கிருக்கும் விளக்குகளை உடைத்துவிட்டால் இருட்டில் பேப்பரில் இருப்பதை படிக்கமுடியும் என்று உடைக்கிறார்கள். exam-5எதுவும் தெரியவில்லை. தீயை உருவாக்கினால் படிக்கமுடியும் என்று எரிக்க முயற்சிக்கும்போது, ஒரு பெண்ணிடம் பேப்பரைக் கொடுத்து எரிக்கவைக்கிறான். வெளியே போன நபரின்  பேப்பர் என்று நினைத்து எரிக்கிறாள். உடனே காவலன் அவளை வெளியே தள்ளிவிடுகிறான். ஏனென்றால் அவள் எரித்தது அவளது பேப்பரை.

அவள் பேப்பரை வேண்டுமென்றே எடுத்துக்கொடுத்த வெள்ளையனைக் கண்டு அனைவரும் கோபமாகிறார்கள். ஆனால் அவனோ, நான் இப்போது
போட்டியில் இருந்து ஒருவரைக் குறைத்திருக்கிறேன் என்கிறான். உடனே அவனை தாக்குகிறான் பிளாக். அதனால் காயமடையும் வெள்ளையனைக் Exam-2காப்பாற்றுவதற்காக கண்ணாடி முன் கத்துகிறாள் பிளாக்கி, அவளையும் வெளியே அனுப்புகிறார்கள்.

இப்போது ஆண்களில் மூவரும் பெண்களில் வொயிட்டியும் மட்டும் இருக்கிறாள். கேள்வியை நான் கண்டுபிடித்துவிட்டேன் என்று எழுகிறான் வொயிட். அதாவது இங்கே இருக்கும் கடைசி நபர்தான் வெற்றியாளர் என்றபடி செக்யூரிட்டியிடம் இருக்கும் துப்பாக்கியை எடுத்துக்கொள்கிறான்.

உடனே பிரெளனி பயந்து வெளியேறிவிடுகிறான். துப்பாக்கியைப் பறிக்கமுயலும் கருப்பனை சுட்டுவிடுகிறான். தானே வெளியேறிவிடுவதாக செல்லும் வொயிட்டி, முழுமையாக வெளியேறாமல் ஒரு காலை உள்ளே வைத்தபடி ஒளிந்து நிற்கிறாள்.

“அனைவரும் வெளியே போய்விட்டார்கள். நான் ஜெயித்துவிட்டேன்” என்று EXAM 3கண்ணாடியைப் பார்த்து கத்துகிறான் வொயிட். இன்னமும் பரிட்சை நேரம் முடியவில்லை  என்று அவனையும் வெளீயே அனுப்புகிறான் செக்யூரிட்டி. அவன் போனதும் உள்ளே நுழைகிறாள் வொயிட்டி. பிரெஞ்சு மனிதன் உடைந்து போன கண்ணாடித் துண்டுவழியே எதையோ பார்த்ததை நினைவுக்குக் கொண்டுவருகிறாள். தன்னுடைய பேப்பரை எடுத்துப் பார்க்கிறாள்.

ஒரு கேள்வி, ஒரு பதில் என்று மட்டும் இருக்கிறது. அதனால், ‘வேறு ஏதாவது கேள்வி இருக்கிறதா?’ என்பதுதான் உண்மையான  கேள்வி. அதனால் சரியான நேரம் முடியும்போது, ‘நோ’ என்ற பதிலை சொல்லி பரிட்சையில் பாஸ் செய்கிறாள் வொயிட்டி. வெற்றி பெற்றுவிட்டதாக அவளுக்கு வாழ்த்து தெரிவிக்க, ‘எனக்கு இந்த வேலையில் சேர்வதில் விருப்பம் இல்லை. கொலை செய்யும் அளவுக்கு தேர்வு நடத்தவேண்டுமா?’ என்று ஆவேசமாகிறாள். அதன்பிறகு நடப்பது நல்ல திருப்பம் என்பதால் அதனை திரையில் பாருங்கள்.

தான் ஜெயிக்கவேண்டும், உயிர் பிழைக்க வேண்டும் என்ற சூழல் ஏற்படும்போது மனிதர்கள் எப்படியெல்லாம் மாற்றம் அடைவார்கள் என்பதைச் சொல்லும் வகையில் அற்புதமான திரில்லர் திரைப்படம். ஒரே அறைக்குள் காட்சிகள் முழுமையாக நகர்ந்தாலும் ஒரு நிமிடம்கூட பொறுமையை சோதிக்காத வகையில் அற்புதமான கதையமைப்பு. பார்க்கத்தவறாதீர்கள்.

கொஞ்சம் ரசிக்க – டிரெய்லர்

https://www.youtube.com/watch?v=fPF47FcsWcE

பின்குறிப்பு :

இந்தப் படத்தில் நடித்திருப்பவர்கள் யாரும் பெரிய நடிகர்கள் இல்லை. வலுவான திரைக்கதைக்கு பெரிய நடிகர்கள் தேவையில்லை என்பதை நிரூபித்துக்காட்டி வெற்றியைத் தந்துவிட்டார் இயக்குனர் ஸ்டுவர்ட் ஹெஸ்ல்டைன்.

Key _Telugu _Movie _Exam-remakeஇதேபோல் ஒரு படம் தெலுங்கில் பார்த்தமாதிரி இருக்கே என்று சிலர் புருவம் தூக்கலாம். இந்தப் படத்துக்கு எந்த உரிமமும் வாங்காமல், அப்படியே காப்பியடித்து நம்ம தெலுங்கர்கள், ‘கீ’ என்ற பெயரில் வெளியிட்டார்கள் என்பதில் இந்தியர்களாகிய  நமக்கெல்லாம் பெருமைதான்.

(Visited 218 times, 35 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>