ஜெனிஃபர் லாரன்ஸ் பராக் பராக்

Hunger Games Mockingjay 2

Hunger Games Mockingjay – Part II  Trailer

அழுத்தமான கதையமைப்பு, அதிரடிக் காட்சிகள், எதிர்பாராத திருப்பங்கள் என்று ஹங்கர் கேம்ஸ் பெயரில் தொடர்ந்து வெளியான படங்களை ரசிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், எல்லாவற்றையும்விட முக்கியமான முதல் காரணம் நாயகி  ஜெனிஃபர் லாரன்ஸ்தான். அவரது அதிரடியில் Hunger Games Mockingjay – Part II – ஹங்கர் கேம்ஸ் படங்களின் கடைசி பாகமாக வெளிவருகிறது.

jennifer Lawrence giphyமுதல் பாகமான ஹங்கர் கேம்ஸ் பார்க்காத துரதிர்ஷ்டசாலிகள் இந்த லிங்கில் அழகு தேவதை பக்கத்தை மட்டுமாவது படித்துவிட்டு இந்த டிரைலரைப் பார்த்தால் ஜெனிஃபர் லாரன்ஸ்  உடல் மொழியின் வலிமையை அறிந்துகொள்ளலாம். ஏன் அவருக்காக உலகெங்கும் ரசிகர்கள் அடித்துக்கொள்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

பஞ்சத்தில் வாழும் 12 பிரதேசங்களை  அடக்கியாளும் அராஜக ஆட்சிக்கு எதிராக ஒற்றை மனுஷியாக குரல் கொடுக்கிறாள் ஜெனிஃபர். அவளை ஒழித்துக்கட்டுவதற்காக அராஜகத் தலைமை எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டன. அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்ட  ஜெனிஃபர், விடுதலைக்கான இறுதிக்கட்டப் போரில் இறங்குகிறார். அவருக்கு எதிரே படைபலம், பணபலம், ஆயுதபலம், அராஜக பலம் நிரம்பிய கும்பல். இவருக்குப் பக்கபலமாக இருப்பது  சாதராண வில்லும்  இவரை விரும்பும் நாயகன் ஜோஸ் கட்ஸர்சன் மற்றும் இவர் விரும்பும் காதலன் லியாம் ஹெம்ஸ்வொர்த்.  உயிரைப் பணயம் வைத்து ஜெனிஃபர் எடுக்கும் முயற்சி வெற்றி அடைந்து மக்கள் நாயகியாக உயர்வதாகத்தான்  கதாசிரியர் சூஸன் கோலின் நாவலில் எழுதியிருக்கிறார். இதில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா, ஜெனிஃபருடன் இணையப்போகும் நாயகன் யார்  என்பதை நவம்பர் மாதம் திரையில் காணலாம்.

கொஞ்சம் ரசிக்க டிரைலர்

 

பின்குறிப்பு :

Hunger Games Mockingjay gifஜெனிஃபரின் வெற்றிச்சின்னமாகத் திகழும் மாக்கிங்ஜெ என்பது  நம்மூர் கிளியைப் போன்ற ஆனால் பெரிய பறவை. குரல் கொடுத்தால் பதிலுக்குக் குரல் கொடுக்கக்கூடியது. சர்வாதிகாரியின் சிலையை உடைத்துவிட்டு இந்தப் பறவை சின்னத்தைப் பதிப்பதில் வெற்றி அடைவாரா என்பதுதான் இறுதிப் பாகத்தின் ஒருவரிக் கதை.

(Visited 123 times, 16 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>