ரோபோ காதலி – சைபோர்க் கேர்ள்

My Girlfriend Is a Cyborg

பாக்காம விட்றாதீங்க – சைபோர்க் கேர்ள்:

பொம்பளை மனசுல இருக்கிறதை கடவுளே கண்டுபிடிக்க முடியாது என்பார்கள். பொம்பளை உருவத்தில் இருக்கும் ரோபோவும் அப்படித்தான் என்று சொல்லும் சயன்ஸ்பிக்‌ஷன், ஆக்‌ஷன் கலந்த காதல் படம் சைபோர்க் கேர்ள். காதலின் மகிமையைச் சொல்வதற்கு ஆயிரத்தெட்டு திரைப்படங்கள் வந்துவிட்டன என்றாலும் இந்தக் காதல் கொஞ்சம் புதுசு. நீ உண்மையான காதலில் இருந்தால், இயந்திரம்கூட காதலைப் புரிந்துகொள்ளும் என்பதை இனிக்க இனிக்க சொல்லும் திரைப்படம் சைபோர்க் கேர்ள் திரைக்கதையைப் பார்க்கலாம்.

cyborg_she5நவம்பர் 22, 2007-ம் ஆண்டு 20 வயது இளைஞன் ஜிரோ தன்னுடைய பிறந்த நாளை தனிமையில் கொண்டாடுகிறான். தனக்குத்தானே பிறந்தநாள் பரிசு கொடுத்துக்கொள்கிறான். அப்போது ஒரு பெண்ணை பார்க்கிறான். அழகு என்றால் அத்தனை அழகு. வைத்த கண் வாங்காமல் அவளையே பார்க்கிறான். கடைகளுக்குள் நுழைந்து உடை, செருப்பைத் திருடிக்கொண்டு இவன் இருக்கும் டேபிளில் உட்காருகிறாள். கன்னாபின்னாவென்று ஆர்டர் செய்து ஏகத்தும் தின்பவளை ஆச்சர்யமாகப் பார்க்கிறான். ஜிரோ பில் கொடுக்க முயலும்போது, ‘நான் கொடுக்கிறேன்… நீ வெளியே நில்’ என்கிறாள். சந்தோஷமாக ஜிரோ வெளியேவர, ‘வேகமா ஓடு, தப்பிக்கணும்’ என்று பில் கொடுக்கமால் மின்னல் வேகத்தில் ஓடுகிறாள். பயமாக இருந்தாலும் வித்தியாசமான அனுபவத்தைக் கொண்டாடும் ஜிரோ, அவளுடனே வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆனால் அவளோ, ‘நான் நூறு வருடங்களுக்குப் பிறகான எதிர்காலத்தில் இருந்து வந்திருக்கிறேன். இப்போது கிளம்புகிறேன்’ என்றபடி போயேவிடுகிறாள்.

cyborg_she2அவள் நினைவாகவே இருக்கிறான் ஜிரோ. மீண்டும் ஒரு பிறந்த நாள். அதே பெண் மீண்டும் வருகிறாள். அவனுடன் இனிமையாக பிறந்த நாளை கொண்டாடுகிறாள்.  இனி நான் உன்னுடன் இருக்கப்போகிறேன் என்று அவன் வீட்டுக்கு வருகிறாள். எதற்காக என்று கேட்க, ‘நான் ஹருகா.  நீதான் 65 வருடங்களுக்குப் பிறகு என்னை உருவாக்கி, இப்போது உன்னை காப்பாற்றுவதற்காக  அனுப்பினாய்’ என்று அவனுடைய கிழப்பருவத்தைக் காட்டுகிறாள்.

உண்மைதான். கை, கால்கள் செயல்படமுடியாத ஜிரோ வாழ்வின் இறுதிக்கட்டத்தில் ஒரு ரோபோ பெண்ணை தயார் செய்து, தன்னுடைய இறந்த காலத்துக்குச் சென்று சில மாற்றங்களை செய்வதற்கு ஆணை பிறப்பித்திருக்கிறான். அதனால் இறந்த காலத்திற்கு வந்திருக்கும் ஹருகா, ஜிரோவை கண்ணுக்குள் இமைபோல் காப்பாற்றுகிறாள். புன்னகை மாறாத cyborg_sheஅவளது சிரிப்பிலும், அழகிலும், இளமையிலும் மயங்கும் ஜிரோ, ‘நான் உன்னை விரும்புவது புரிகிறதா… என்னை காதலிப்பதற்கும் உத்தரவு கொடுத்திருந்தேன் என்கிறான். ஆனால் ஹருகாவோ, என்னால் காதல் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியவில்லை என்கிறாள்.

ஜிரோவின் மனதை பாதித்த சில நிகழ்வுகளை மாற்றுகிறாள் ஹருகா. பள்ளிக் குழந்தைகளை கொலை செய்த தீவிரவாதியைப் பிடிக்கிறாள். முன்பு ஜிரோவின் கண் முன்னே நிகழ்ந்த ஒரு விபத்தில் இருந்து சிறுமியைக் காப்பாற்றுகிறாள். சின்னஞ்சிறு வயதில் அவன் வாழ்ந்த கிராமத்துக்கு அதே காலகட்டத்திற்கு அழைத்துச்செல்கிறாள்.  அவன் பாட்டியை, ஊர்வலத்தை, சின்ன வயதில் வளர்த்த நாயை எல்லாம் கண் எதிரே பார்த்து நெகிழ்கிறான். உருகிப்போன உன்னதமான தருணத்தில் காதலை சொன்னாலும் cyborg_she4கண்டுகொள்ளாமல் இருக்கிறாள் ஹருகா. அதனால் கோபமாகிறான். வேறு ஒரு பெண்ணுடன் டான்ஸ் ஆடினால் ஹருகாவுக்கு பொறாமை வரும் என வேறு பெண்ணுடன் பழகுகிறான். அந்தப் பெண்ணுக்கு தர்ம அடி கொடுத்து விரட்டுகிறாள் ஹருகா. இவளும் காதலிப்பதில்லை, வேறு பெண்ணுடனும் பழக விடுவதில்லைஎன்று கோபமாகும் ஜிரோ, இனி என் முகத்தில் விழிக்கவேண்டாம் என்று வீட்டைவிட்டு அனுப்பிவிடுகிறான்.

அதன்பிறகு திடீரென ஜப்பானை குலுக்கும் மிக மோசமான ஒரு பூகம்பம் வருகிறது. ஆபத்தில் இருப்பவனை காப்பாற்றுகிறாள் ஹருகா. பல்வேறு Cyborg_She-3இடிபாடுகளில் இருந்தும் அவனை தப்பித்து அழைத்துச்செல்லும்போது ஒரு பெரும் கட்டிடத்தில் ஹருகாவின் இடுப்பு மாட்டிக்கொள்கிறது.  தான் மாட்டிக்கொண்டதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், தன்னைத் தேடிவரும் ஜிராவின் மீது கட்டிடம் விழுந்துவிடக்கூடாது என்று அடித்து தூரமாக வீசிவிடுகிறாள். ஹருகாவின் மரணம் நிகழ்கிறது.

உண்மையில் இந்த பூகம்பத்தில் சிக்கியதால்தான் ஜிராவின் உடல் செயல் இழந்துவிட்டது. விஞ்ஞானியான ஜிரா வாழ்நாள் முழுவதும் கடினப்பட்டு உழைத்து ஹருகாவை உருவாக்குகிறான். 65-வது வயதில் ஹருகாவை உருவாக்கி பிறந்தநாள் கொண்டாடும்போது மரணத்தைத் தொடுகிறான்.

cyborg_she135 ஆண்டுகள் கழிகிறது. ஒரு மியூசியத்தில் ஹருகாவை ஏலம் விடுகிறார்கள். செயல் இழந்துபோன ரோபோ என்றாலும் மெமரி சிப் இருக்கிறது. ஹருகாவைப் போலவே தோற்றத்தில் இருக்கும் கல்லூரிப் பெண் ஹருகாவை ஏலத்தில் எடுக்கிறாள். மெமரி சிப் மூலம் ஹருகாவின் எண்ணங்களைப் படிக்கிறாள் கல்லூரிப் பெண். அப்போதுதான் ஹருகாவின் மனதில் காதல் நிரம்பிவழிவதையும், பூகம்பத்தில் அவனை பத்திரமாக மீட்டபிறகே காதலை சொல்ல விரும்பியதையும் அறிந்துகொள்கிறாள்.

ஜிரா – ஹருகாவின் காதல் கல்லூரிப் பெண்ணை பாதிக்கிறது. இருவரும் காதல் உணர்வை அனுபவிக்கவில்லை என்ற எண்ணம வளை வதைக்கிறது. அதனால் மீண்டும் இறந்த காலத்தில் மிகச்சரியாக பூகம்பம் நிகழ்ந்துமுடிந்ததும் நுழைகிறாள். இவள் உருவமும் ஹருகாவும் ஒரே மாதிரி இருக்கிறது. அதனால் ஹருகா இடிபாடுகளில் இருந்து தப்பிவிட்டதாக மகிழ்ந்து அவளை கட்டிப்பிடித்து கதறுகிறான் ஜிரா.

நான்லீனர் வகையைச் சேர்ந்த குழப்பமான திரைக்கதை, அவ்வப்போது காலத்தில் முன்னும்பின்னுமான பயணம் போன்ற அத்தனை குழப்பங்களையும் தன்னுடைய அழகான  சிரிப்பின்மூலம் சுவாரஸ்யமாக்கி விடுகிறார் ஹருகா. காதலை விரும்பும் நபர்கள் நிச்சயம் பார்த்தே தீரவேண்டிய படம்.

கொஞ்சம் ரசிக்க – டிரெய்லர்

பின்குறிப்பு :

* ஜப்பான் மொழியில் வெளியான இந்தப் படத்தின் நிஜப்பெயர், ‘My Girl is a Cyborg’.  2008-ம் ஆண்டு வெளியாகி சூப்பர்டுப்பர் ஹிட் அடித்தது. மற்ற நாடுகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெயரையும் பெற்றது.

* ரோபோவாகவும் கல்லூரிப் பெண்ணாகவும் நடித்திருக்கும் ஹருகா,  நடிப்பில் காட்டியிருக்கும் வித்தியாசம் அபாரமானது. காதலை மறைத்து சிரிக்கும் போது கலங்க  வைக்கிறார்.

* தன்னுடைய பாட்டிதான் வளர்த்தார் என்று படம் முழுவதும் சொல்லிக்கொண்டே வருவான் ஜிரா. ஒரு கட்டத்தில், உண்மையில் அவள் எனது பாட்டி அல்ல… அம்மாதான். நான் தாமதமாக பிறந்த குழந்தை என்பதால் பாட்டி என்று அழைக்கச்சொன்னார் என்பதுபோல் ஆங்காங்கே ’அடடே’ ரக வசனங்கள் நிரம்பிக்கிடக்கின்றன.

முழுப்படத்தையும் இங்கே பாருங்க:

https://www.youtube.com/watch?v=lEA0XjvlUu4

(Visited 203 times, 32 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>