தெய்வ மகன் – ஃபாரஸ்ட் கம்ப்

Forrest_Gump_poster

பாக்காம விட்றாதீங்க – ஃபாரஸ்ட் கம்ப்

‘பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பது அல்ல, நீ என்ன செய்யவேண்டும் என்பதே உன் கவலையாக இருக்கட்டும்’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்த மொழிக்கு சிம்பிள் உதாரணம் வேண்டும் என்றால் ஃபாரஸ்ட் கம்ப் நாயகன் டாம் கேங்க்ஸைக்  காட்டலாம்.

forrest_gump_12_630_pxlwபாரஸ்ட் கம்ப் சராசரி  மனிதன் அல்ல. அதாவது சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் ஐ.க்யூ அளவு அவனுக்குக் கிடையாது. அதனால் அவனுக்கு பள்ளியில் இடம் கிடைக்காமல் போகிறது. தன்னுடைய கற்பை விலையாகக் கொடுத்து அவனுக்கு பள்ளியில் இடம் வாங்கித்தருகிறார் அவனது அம்மா. ஆனால் அவனுக்கு இதெல்லாம் தெரிவதில்லை, புரிவதில்லை. அவனுக்குப் பிடித்தவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்ய மட்டுமே தெரியும்.

கால் ஊனத்துக்கான சிறப்பு செருப்பு அணிந்துகொண்டு ஸ்கூல் பஸ்ஸில் ஏறுகிறான் ஃபாரஸ்ட் கம்ப். அவனை அநியாயத்துக்கு கிண்டல் செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து காப்பாற்றும் ஜென்னியை தன்னுடைய தோழியாக ஏற்றுக்கொள்கிறான். அவள் என்ன சொன்னாலும் கேட்கிறான். Forrest Gump2சில மாணவர்கள் அடிக்க வரும்போது, ‘நீ ஓடு…உன்னால் முடியும்’ என்று உற்சாகம் கொடுக்கிறாள் ஜென்னி. தோழியே சொல்லிவிட்டாள் என்றதும் ஊனமான கால்களைப் பற்றி கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் ஓடத் தொடங்குகிறான். ஓட்டம் என்றால் சாதாரண ஓட்டம் அல்ல, திகிடுமுகுடான ஓட்டம். அந்த ஓட்டம்தான் அவனுக்கு ரக்பி அணியில் இடம் பிடித்துத் தருகிறது. நாட்டிலேயே சிறந்த வீரனாக உருவெடுக்கிறான்.

இளைஞனாகும் ஃபாரஸ்ட் கம்ப் ராணுவத்தில் பணியாற்ற வேண்டிய சூழல் வருகிறது. எதிரிகள் நெருங்கியதும் உயிர் பிழைப்பதற்காக ஒவ்வொரு forrest_gump 6நபரும் தப்பித்துப் பிழைக்கும் சூழலில், ‘இப்போது என்ன செய்யப்போகிறாய்?’ என்று கேட்கிறார் மேஜர். அவரிடம், ’நீங்கள் என்ன சொல்வீர்களோ அதை செய்வேன்’ என்று ஒரு படைவீரனாக சொல்கிறான். ஏனென்றால் எந்தவொரு நெருக்கடி பற்றியும் அவனுக்குத் தெரியாது. எதிரிகளால் சுடப்பட்டு கிடக்கும் தன் அணித் தோழர்களை எல்லாம் ஆபத்துகளுக்கு இடையில் நுழைந்து காப்பாற்றிக்கொண்டுவருகிறான். தன் மீது எந்த நேரமும் வெடிகுண்டு வீசப்படலாம், துப்பாக்கிக்  குண்டு பாயலாம் என்பதைப் பற்றி அச்சமோ, மரண பயமோ அவனுக்குக் கிடையாது. அதனால் ஜனாதிபதியின் கையால் விருது வாங்கும் அளவுக்கு உயர்கிறான்

Forrest_Gumpராணுவத்தில் பணியாற்றிய நண்பன் ஒருவனுடன் விளையாட்டுத்தனமாக செய்துகொண்ட உடன்படிக்கைக்காக அவன் இறந்தபிறகு, மீன்பிடிக் கப்பல் வாங்கி வியாபாரத்தில் இறங்குகிறான். லாபம் கொள்ளை கொள்ளையாக கொட்டத் தொடங்க, அதில் செத்துப்போன நண்பன் வீட்டுக்கு பங்குத் தொகையை அனுப்பி வைக்கிறான். தன் பங்குப் பணத்தை ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்ய, அதுவும் லாபத்தைக் கொட்டுகிறது.

பள்ளித் தோழி ஜென்னியை தன்னுடைய காதலியாக கருதுகிறான் ஃபாரஸ்ட் கம்ப். ஆனால் அவளோ இடையிலேயே பாதை மாறி போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, விபச்சாரத்தில் சிக்கி சீரழிந்து நிற்கிறாள். அதனால் ஃபாரஸ்ட் கம்ப் வாழ்க்கையைக் கெடுக்கக்கூடாது என்று விலகிப்போகிறாள்.  இந்த Jenny-from-Forrest-Gumpநேரத்தில் அவனது அம்மா மரணத்தைத் தழுவுகிறாள். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஓடத்தொடங்குகிறான் ஃபாரஸ்ட் கம்ப். இலக்கு இல்லாமல் ஓடுபவனுக்குப் பின்னே மக்களும் ஓடுகிறார்கள் அவன் என்ன செய்தாலும் ஏதோ அர்த்தம் இருக்கிறது என்று நினைக்கிறார்கள். தாங்களாகவே புதுப்புது அர்த்தத்தை உருவாக்குகிறார்கள். அதனாலே அவன் நாட்டு மக்களிடையே ஒரு ஹீரோவாக உருவாகிறான். எதையும் செய்துமுடிக்கும் நாயகனாக மாறுகிறான்.

Forrest_Gump2தன்னை முட்டாள் என்று சொன்னாலும் சாகசக்காரன் என்று சொன்னாலும் ஒன்றாகவே ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்கிறான் கம்ப். விலகிப்போன தன்னுடைய காதலி ஜென்னியைத் தேடிவரும் ஃபாரஸ்ட் கம்ப், ஒரு பஸ் ஸ்டாப்பில் அமர்ந்துகொண்டு ஒரு பாட்டியிடம் இதுவரை நடந்த அவனது கதையைச் சொல்கிறான். பக்கத்தில்தான் காதலி வீடு இருக்கிறது என்றதும் எப்போதும் போல் சந்தோஷமான மனநிலையில் கிளம்புகிறான். எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட காதலி அவனை ஏற்றுக்கொண்டாளா என்பதை படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் ஈடுபாட்டுடன் விளையாடுபவனே வெற்றிபெறுவான் என்பதற்கு இலக்கணமாகத்தான் திகழ்கிறான் ஃபாரஸ்ட் கம்ப். பிறர் வகுத்த பாதையில் செல்லாமல் தன்னுடைய பாதையை தானே வகுத்துக்கொள்கிறான். கடின உழைப்பும் நம்பிக்கையுமே முக்கியம். அறிவுக்கும் வெற்றிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நம்பும் ஒவ்வொரு நபரும் பார்த்து ரசிக்கவேண்டிய படம் ஃபாரஸ்ட் கம்ப்.

கொஞ்சம் ரசிக்க – டிரெய்லர்

பின்குறிப்பு :

வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலைத் தழுவி ராபர்ட் ஜெமிக்ஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ஆறு ஆஸ்கர் விருதுகளை குவித்திருக்கிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக முதலில் ஜான் டிராவல்டோ தேர்வு செய்யப்பட்டார். ஆனால் பல்வேறு காலகட்டத்தில் உடம்பைக் குறைக்கவும் கூட்டவும் வேண்டிய தேவை இருந்ததால், டாம் ஹாங்க்ஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்தப் படம்தான்  இவரை புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றது.

* அடுத்த நொடி மறைத்து வைத்திருக்கும் அதிசயங்களை யாராலும் அறிய இயலாது, வாழ்க்கை அத்தனை அழகானது என்ற ரீதியில் படம்நெடுக விதைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கை மொழிகள் படத்தோடு ஒன்றச் செய்துவிடும். அதனால் நம்பிக்கை இழந்திருக்கும் உங்கள் நண்பர் யாருக்கேனும் ஏதேனும் பரிசு வழங்க விரும்பினால்ம் இந்த டிவிடி வாங்கி பரிசளியுங்கள்.

(Visited 484 times, 192 visits today)

Related posts

One thought on “தெய்வ மகன் – ஃபாரஸ்ட் கம்ப்

  1. […] ராபர்ட் செமிகிஸ். இவர் ஃபாரஸ்ட் கம்ப், காஸ்ட் அவே போன்ற படங்களின் […]

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>