முடியாதது எதுவும் இல்லை – த சஷாங் ரிடெம்ப்ஷன்

the-shawshank-redemption

பாக்காம விட்றாதீங்க – த சஷாங் ரிடெம்ப்ஷன்:

முயற்சி செய்தால் முடியாத காரியம் எதுவும் இல்லை என்ற பொன்மொழியில் பலருக்கு நம்பிக்கை கிடையாது. தலையெழுத்துப்படிதான் வாழ்க்கை நடக்கும் என்று சொல்லும் அவநம்பிக்கைவாதிகள் அவசியம் பார்க்கவேண்டிய திரைக்காவியம் ‘த சஷாங் ரிடெம்ப்ஷன்’.

the-shawshank-redemption-1தன்னுடைய மனைவியையும் அவளது கள்ளக் காதலனையும் சுட்டுக்கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெறுகிறான் நாயகன் டிம் ராபின்ஸ்.  குற்றம் செய்யவில்லை என்று அவன் சொல்வதை யாரும் நம்பவில்லை. மிகவும் பழமையான சஷாங் சிறைக்குள் ஆயுள்தண்டனை கைதியாக நுழைகிறான். இந்த சிறையைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்வது என்றால் நரகம். குண்டர்களும், ஹோமோக்களும் நிறைந்த இந்த நரகத்தில் இருந்து யாரும் தப்பித்துச் சென்றதாக சரித்திரம் இல்லை.

வங்கி அதிகாரியாக இருந்த டிம், தன்னுடைய  அமைதியான குணம் மூலம் மற்ற கைதிகளின் அன்பையும் நம்பிக்கையையும் சம்பாதிக்கிறான். சிறையில் 20 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் மோர்கன் ஃப்ரிமேன், கள்ளத்தனமாக வணிகம் செய்வதை அறிந்து அவரை சந்திக்கிறான். இங்கிருந்து தப்பிக்கமுடியுமா என்று டிம் கேட்க, ‘மரணத்துக்குப் பிறகுதான் சாத்தியம்’ என்கிறார். அவருக்கு கமிஷன் கொடுத்து சின்னஞ்சிறிய the-shawshank-redemption-5சுத்தியலை வெளியிலிருந்து வரவழைக்கிறான். பைபிள் படித்தது போக மீதமிருக்கும் நேரங்களில் எல்லாம் செஸ் காயின்களை கல்லில் வடிவமைக்கிறான்.

கண்டிப்புக்கு பேர் போன சிறை வார்டன் பாப் குண்டன்,  பைபிளில் இருந்து கேட்கும் கேள்விகளுக்கு மிகத்தெளிவாக பதில் சொல்கிறான். அதனால் அவனை தன்னுடைய அலுவலகத்தை நிர்வகிக்கும் பொறுப்புக்கு மாற்றிக்கொள்கிறார். சிறைச்சாலைக்கு  நூலகம் அமைக்கும் பணிக்காக பல இடங்களில் இருந்தும் அன்பளிப்பாக புத்தகங்கள் வாங்குகிறான் டிம். வார்டனுக்கு அடிமை போல் உழைத்து அவரது நம்பிக்கையைப் பெறுகிறான். ஆனாலும் அவ்வப்போது தண்டனை பெறுவதும், தினமும் அவர் பூட்ஸ் துடைப்பதும் நடக்கிறது.

the-shawshank-redemption-6பொதுவேலைக்காக கைதிகளைப் பயன்படுத்தி, அதற்காக லஞ்சப் பணம் பெற்றுக்கொள்கிறார் வார்டன். அந்தப் பணத்தை நிர்வகிக்க பினாமி வங்கிக் கணக்கைத் தொடங்கித் தருகிறான் டிம். அத்துடன் வரி ஏய்ப்பு செய்து கிடைக்கும் பணத்தையும் பினாமி வங்கிக் கணக்கில் முதலீடு செய்கிறான். இந்த நேரத்தில் அவனது லைப்ரரிக்கு அற்புதமான இசைத் தொகுப்பு கிடைக்கிறது. இதனை தான் மட்டும் ரசித்தால் போதாது என்று சிறை முழுவதும் ஒலிக்கச் செய்கிறான் டிம்.  பாதியில் யாரும் தடுத்துவிடக் கூடாது என்று அறையைத் தாழிட்டுக் கொள்கிறான். இசை முடிந்ததும் இதற்காக டிம்முக்கு தனிமைச் சிறையும் கொடுமையான தண்டனையும் கிடைக்கிறது. ஆனாலும் அதனை புன்முறுவலுடன் ஏற்றுக்கொள்கிறார்.

காலங்கள் நகர்கின்றன. திருட்டுக் குற்றவாளி வில்லியம்ஸ் சிறைக்குள் நுழைகிறான். டிம் மனைவியை கொலை செய்தது தன்னுடைய கூட்டாளி என்று சொல்கிறான். இதனை கேட்கும் மோர்கன், வார்டனை அணுகி டிம்மின் வழக்கை மீண்டும் எடுக்கச் சொல்கிறார். டிம் வெளியே போனால் தன்னுடைய தில்லுமுல்லு கணக்கு, ஊழல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

1965-ம் ஆண்டு மோர்கனை சந்தித்து தன்னுடைய ஆசையை சொல்கிறான் டிம். நான் இங்கே இருந்து வெளியே போய் ஒரு சொகுசு கப்பல் நடத்த விரும்புகிறேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அங்கே வந்து என்னுடன் சேர்ந்துகொள்ளலாம்…’ என்று the-shawshank-redemption-2வருவதற்கான வழியையும், வழிச்செலவுக்கு பணம் இருக்கும் இடத்தையும் சொல்கிறான். டிம் மூளை குழம்பிப்போய் பேசுவதாக நினைத்து சிரிக்கிறார் மோர்கன்.

பயங்கரமாக இடி இடித்து மழை பொழியும் ஒரு நாள். இரவு கைதிகளை கணக்கெடுக்கும்போது டிம் காணவில்லை. சற்று நேரத்துக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்ட டிம் எப்படி மாயமாக மறைந்திருக்க முடியும் என்று வார்டன் அதிர்ச்சி அடைகிறார். அவன் அறையில் சோதனை போடுகிறார். சின்னச்சின்ன சிற்பங்களும், நடிகையின் மாபெரும் காலண்டரும் மட்டுமே இருக்கிறது. திடீரென எப்படி காணாமல் போனான் the-shawshank-redemption-4உனக்காவது தெரியுமா என்று நடிகையின் போஸ்டர் மீது கல்லைத் தூக்கிப் போட, சுவருக்குள் ஓட்டை தெரிகிறது.

அந்த போஸ்டரை கிழித்துப் பார்த்தால்… அந்த சிறை சுவருக்குள் ஆள் நுழையும் அளவுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மைல் தூரம் சுரங்கப்பாதை தோண்டி டிம் தப்பித்து இருப்பது தெரியவருகிறது. அத்துடன் போலீஸ் வருவதற்கு முன்பு பினாமி கணக்குகளில் இருந்து அத்தனை பணத்தையும் எடுத்துக்கொண்டு மாயமாக மறைந்துவிடுகிறான் டிம். அதோடு வார்டனின் தில்லுமுல்லுகளை ஆதாரத்துடன் பத்திரிகைகளுக்கும் அனுப்பிவிடுகிறார்.

the-shawshank-redemption-7கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக தப்புவதற்குத் திட்டமிட்ட டிம் எப்படி செயல்பட்டார் என்று மோர்கன் நினைத்துப்பார்க்கும் காட்சிகள் எல்லாமே புல்லரிப்பை வரவழைக்கக்கூடியவை. ஒரு வழியாக பரோலில் வெளிவரும் மோர்கன், முன்பு டிம் சொல்லியிருந்த இடத்தை அடைகிறார். அவன் சொன்னபடியே பணமும் வந்து சேர்வதற்கான வழித்தடமும் இருக்கிறது. அதை பின்பற்றிச்சென்று சொகுசுக் கப்பலில் இருக்கும் டிம்மை கண்டுபிடிக்கிறார். நாமும் அதுவரை பிடித்துவைத்திருந்த மூச்சை விட்டு நிம்மதி அடைகிறோம்.

சிறையில் இருந்து தப்பிச்செல்வது போல் இதுவரையிலும் ஆயிரக்கணக்கான படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் கொஞ்சம்கூட லாஜிக் சிக்கல் இல்லாமல் நிஜமான ஒரு எஸ்கேப் என்பதால்தான், இந்தப் படத்துக்கு ஐ.எம்.டி.பி.யில் 9.3 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. ஏன் எந்த நேரமும் கையில் பைபிள் வைத்திருந்தான், தன்னை துன்புறுத்திய ஹோமோ பார்ட்டிகளை என்ன செய்தான் என்பதை எல்லாம் படத்தில் பாருங்கள்.

கொஞ்சம் ரசிக்க – டிரெய்லர்

பின்குறிப்பு :

ஸ்டீபன் கிங்கின் குறுநாவலை அடிப்படையாகக் கொண்டு ஃப்ரான்க் டாராபோண்ட் இயக்கிய படம் இது. வசூல் ரீதியில் வெற்றியடையவில்லை என்பதுடன் அவார்டுகளும் வாங்கிக் குவிக்கவில்லை. ஆனாலும் விமர்சகர்களால் ஆஹா ஓஹோ என்று கொண்டாடப்பட்ட்டது.

இந்தப் படத்திற்காக டாம் ஹாங்க்ஸ், டாம் குரூஸ், நிக்கோலஸ் கேஜ் போன்றவர்கள் நாயகனாக தேர்வு செய்யப்பட்டு நடிக்கமுடியாமல் பின்வாங்க, கடைசியில் தேர்வானவர்தான்  டிம் ராபின்ஸ்.

(Visited 909 times, 89 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>