கமல் பாணியில் அர்னால்டு

Terminator final

மிரட்ட வருகிறது – டெர்மினேட்டர் ஜெனிசிஸ்:

கமலஹாசனிடம் ஒரு நல்ல குணம் உண்டு. புதுப் படத்தில் நல்லபடியாக நாலைந்து கேரக்டர் இருப்பதாகத் தெரிந்தால்… அத்தனை கேரக்டருக்கும் தனித்தனியாக ஆட்களைத் தேடி தயாரிப்பாளர் சிரமப்பட வேண்டாம் என்று நினைத்து, தானே அத்தனை கேரக்டர்களிலும் நடித்துவிடுவார். சென்னைக்கு ‘’ படவிழாவுக்கு வந்து அவமானப்பட்ட அர்னால்டு, ’உலக நாயகன்’ தந்திரத்தை எப்படியோ தெரிந்துகொண்டு திரும்பியிருக்கிறார். அதனால் அவரதுஅடுத்த படமான டெர்மினேட்டர் ஜெனிசிஸ்  கமலஹாசனின்  ராஜதந்திரத்தை அமல் படுத்திவிட்டார்.

ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் வெளியான டெர்மினேட்டர் முதல் பாகத்தில் வில்லனாக வருவார் அர்னால்டு. அந்தப் படம்தான் அவரை உச்சத்துக்கு கொண்டுபோனது. அதன்பிறகு நாயகனாகி, நல்லவராகவும் மாறிவிட்டார். அதனால் அடுத்தடுத்து வெளியான நான்கு பாகங்களிலும் நாயகனாக நடித்தார்.

இப்போது  ஐந்தாவது பாகம் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தில் நாயகனாக வரும் அர்னால்டு வில்லனை பந்தாட இருக்கிறார்.  வில்லனாக வருவது யார் தெரியுமா? அதுவும் அர்னால்டுதான். அதாவது முதல் பாகத்தில் வில்லனாக நுழைகிறாரே, அந்த காலகட்டத்தில் இன்றைய அர்னால்டு நுழைவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. கிழ மற்றும் இள அர்னால்டுகள்  அடித்துப்பிடித்து மோத இருக்கிறார்கள்.

கிழட்டு அர்னால்டுதான் ஜெயிக்கப்போகிறார் என்றாலும், பழைய அர்னால்டுக்காக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் அனல் பறக்கிறதாம். இந்தப் படத்தை தார்-2 படத்தை இயக்கிய ஆலன் டெய்லர் டைரக்ட் செய்திருக்கிறார்.  ஜூலையில் வெளிவர இருக்கும் இந்தப் படத்துக்காக இப்போதே அடித்துப்பிடித்து இடம் போட்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

படம் வெளிவரும் வரையிலும் சில டிரைலரை ரசியுங்கள் :

(Visited 104 times, 9 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>