அழுக்கான அமெரிக்கா – அமெரிக்கன் பியூட்டி

American_Beauty_poster

பாக்காம விட்றாதீங்க – அமெரிக்கன் பியூட்டி:

பாரதிராஜா உயிர்ப்போடு இருந்த காலத்தில் சிவாஜி கணேசன், ராதாவின் பெருந்திணை காதலை முன்வைத்து, ‘முதல் மரியாதை’ என்ற அற்புதமான காதல் காவியத்தை உருவாக்கியிருப்பார். நல்ல சினிமா என்றாலும், உண்மைக்குப் பக்கத்தில் இராமல் நாடகத்தன்மை மேலோங்கி இருக்கும். நிஜமான ஒரு நடுத்தர வயது மனிதனின் காதல் உணர்வுகளை  அப்பட்டமாக சொன்னவகையில், ‘அமெரிக்கன் பியூட்டி’ படம் அசைக்கமுடியாத உயரத்தில் இருக்கிறது. அமெரிக்காவில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது, அங்கே மக்கள் சந்தோஷமாகவும் ஆனந்தமாகவும் வாழ்கிறார்கள் என்ற எண்ணத்துடன் கனவு காணும் அத்தனை மனிதர்களும் பார்க்கவேண்டிய  படம் இது.

american beauty7நாற்பதைக் கடந்துவிட்ட லெஸ்டர் (கெவின் ஸ்பேசி) நெருக்கடிதரும் வேலையை விடுகிறான். அடிக்கடி கணவன் இப்படி செய்வதால், பணம் சம்பாதிப்பதில் அதிக நாட்டமுடன் இருக்கும் அவனது மனைவி கோபமாகிறாள்.  இருவருக்கும் உறவு சீர்குலைந்து சண்டை நடக்கிறது. இவர்கள் சண்டையை வெறுப்புடன் வேடிக்கை பார்க்கிறாள் டீன் ஏஜ் மகள் ஜேன். குடும்பத்தில் மூன்று பேருமே நிம்மதியில்லாத எரிச்சலான மனநிலையில் வாழ்கிறார்கள்.

இந்த நேரத்தில் பக்கத்து வீட்டுக்கு  டீன் ஏஜ் இளைஞன் ரிக்கி குடிவருகிறான். அவனுடைய அப்பா கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பவராகவும், அவனது அம்மா மனநிலை பாதிக்கப்பட்டவராகவும் இருக்கிறார். ரிக்கி  பணம்american beauty4 சம்பாதிப்பதற்காக போதைப் பொருள் விற்பனை செய்வதையும், அவனிடம் சைக்கோத்தனம் இருப்பதையும் அறிகிறான் லெஸ்டர். அதனால் ரிக்கியுடன் நெருங்கிப் பழகவேண்டாம் என்று மகளுக்கு எச்சரிக்கை செய்கிறார். இதுபோதாதா… மகள் ஜேன் வேண்டுமென்றே ரிக்கியுடன் நெருங்கிப் பழகுகிறாள். இருவரும் ஒன்றாக சுற்றுகிறார்கள்.

இதனால் வெறுப்பில் இருக்கும் லெஸ்டர், மகளின் தோழி ஏஞ்செலாவை தற்செயலாக சந்திக்கிறான் லெஸ்டர். அழகும் இளமையும் பொங்கிவழியும் ஏஜ்செலா கிளுகிளுப்புடன் லெஸ்டரை பார்க்கிறாள். தனக்குள் மீண்டும் காதல் முளைத்துவிட்டதை உணர்கிறான் லெஸ்டர். அதுவரை american-beauty-mena-suvariஏனோதானோவென்று வாழ்ந்துகொண்டிருந்த லெஸ்டருக்கு வாழ்க்கை மீது ஆர்வம் வருகிறது. தொப்பையைக் குறைப்பதற்கு உடற்பயிற்சி செய்யவும், தன்னை அழகாக்கவும் முயற்சி செய்கிறான். இதைக் காணும் மகள் இன்னமும் எரிச்சலாகிறாள். உடற்பயிற்சிகள் செய்யும் லெஸ்டருடன் ரிக்கி நட்போடு பழக முயற்சிக்கிறான்.  இவர்களுக்கும் தவறான ஹோமோ உறவு இருக்குமோ என்று சந்தேகிக்கிறார்  ரிக்கியின் அப்பா.

வாழ்க்கை மீது தனக்கு உற்சாகம் ஏற்படுத்திக்கொடுத்த ஏஞ்செலாவை நினைத்து அடிக்கடி கனவு காண்கிறான் லெஸ்டர். அவன் எண்ணங்களுக்கும் செயலுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் ஏஞ்செலாவும் கண் சிமிட்டுகிறாள். ’எனக்கு இயற்கையாகவே ஆசை அதிகம். அதனால் நிறைய  நபர்களுடன் உறவு இருக்கிறது, இப்படிப்பட்ட உறவு ரொம்பவும் பிடிக்கும்’ என்று லெஸ்டரின் ஆசையைத் தூண்டிவிடுகிறாள்.  ஒருவழியாக தன்னுடைய எண்ணத்தை ஏஞ்செலாவிடம் சொல்லியும் விடுகிறான் லெஸ்டர். சந்தோஷமாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று அவனை american beauty1ஆதரிக்கிறாள் ஏஞ்செலா.

லெஸ்டரும் ஏஞ்செலாவும் தனிமையில் சந்திக்கிறார்கள். தன்னுடைய வாழ்நாள் கனவு நிறைவேறப்போகிறது என்ற சந்தோஷத்தில் ஏஞ்செலாவுடன் பேசுகிறான் லெஸ்டர். அப்போது ஏஞ்செலா கொஞ்சம் பதட்டத்துடன், ‘உண்மையில் எனக்கு இதுதான் முதல் உறவு. சும்மா அலட்டலுக்காக நான் அப்படிப்பட்ட பெண் என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு திரிந்தேன். அதனால் முரட்டுத்தனமாக முயற்சி செய்யாதீர்கள்’ என்று குழந்தைத்தனமாக பேசுகிறாள்.

அந்தக் கணத்தில், தான் எத்தனை பெரிய தப்பு செய்ய இருந்தோம் என்பதை உணர்கிறான் லெஸ்டர். ஒரு டீன் ஏஜ் பெண்ணின் குழப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்ததை எண்ணி வருந்துகிறான். american beauty5இந்த நேரத்தில் திடீரென மர்ம நபரால் சுடப்பட்டு இறக்கிறான் லெஸ்டர். அவனைக் கொன்றது யார், என்ன காரணம் என்பதை எல்லாம் திரையில் பார்த்தால், அமெரிக்காவின் இன்னொரு அவலத்தை அறிந்துகொள்ளலாம்.

தனிமனித வாழ்க்கை அமெரிக்காவிலும் சின்னாபின்னமாகித்தான் கிடக்கிறது, டீன் ஏஜ் பிள்ளைகள் குழப்பத்தில் இருக்கிறார்கள், பக்கத்துவீட்டுக்காரரைப் பார்த்து பயப்படும் மனிதர்கள் அங்கேயும் இருக்கிறார்கள், பணத்துக்குப்பின்னே ஓடுபவர்கள் எல்லா தேசங்களிலும் ஓடிக்கொண்டேதான் இருக்கிறார்கள் என்பதை நேர்மையாக ஒப்புக்கொண்ட படம். ஆரம்ப காட்சி தொடங்கி ஒருசில காட்சிகள் ஆபாசம் போன்று தெரிந்தாலும் ஒப்புக்கொள்ள வேண்டிய நிஜம். அமெரிக்காவின் அழுக்கை அழகாக காட்டிய படம்.

கொஞ்சம் ரசிக்க – டிரெய்லர்

பின்குறிப்பு :

மேடை நாடகத்திற்காக ஆலன் பால் எழுதிய கதையை சினிமா திரைக்கதைக்கு மாற்றி இயக்கியவர் சாம் மெண்டீஸ். இவர் எடுத்த படங்களின் பட்டியலை சொல்வதைவிட, இவர் நம்ம டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட் ஆத்துக்காரர் என்றால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். இந்தப் படம் சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் உள்ளிட்ட ஐந்து ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ளது.

(Visited 1,020 times, 164 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>