அழகு தேவதை – த ஹங்கர் கேம்ஸ்

The Hunger Games final

பாக்காம விட்றாதீங்க – த ஹங்கர் கேம்ஸ்:

அழகா இருந்தா திறமை இருக்காது, திறமை இருந்தா தெளிவு இருக்காது என்று பெண்களைப் பற்றி ஆண்கள் வைத்திருக்கும் அத்தனை கோட்பாடுகளையும் அடித்து நொறுக்கியவர் என்றால் அவர், தேவதைகளின் தேவதை நம்ம ஜெனிஃபர் லாரன்ஸ் மட்டும்தான். ஹாலிவுட் அழகிகள் அத்தனை பேரையும் ஓரம்கட்டி கமர்ஷியலில் நம்பர் ஒன் நிலையில் இருக்கும் ஜெனிஃபர், ஆக்‌ஷன் வேடங்களில் மட்டுமின்றி திறமையைக் காட்டி நடிப்பதிலும் டக்கர் பேபி. அதனால்தான் சில்வர் லைனிங் பிளே புக் படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதையும் வாங்கியிருக்கிறார். இவரை உலகின் உச்சத்திற்கு கொண்டுபோன த ஹங்கர் கேம்ஸ் படத்தைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

the-hunger-games-3பசியும் பட்டினியுமாக இருக்கும் 12 பிரதேசங்களை கட்டிக்காப்பாற்றி, தேவையான வசதிகளை செய்துதருகிறது ஒரு தலைமை அரசு. இதற்கு பிரதியுபகாரமாக வருடத்துக்கு ஒரு முறை நடக்கும் ஹங்கர் கேம்ஸ் போட்டிக்கு ஒவ்வொரு பிரதேசமும் இரண்டு ஆட்களை அனுப்பவேண்டும். இது சாதாரண விளையாட்டுப் போட்டி அல்ல, மரண விளையாட்டு. ஆம், இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் 24 பேரில் கடைசிவரை உயிரோடு இருக்கும் ஒருவர் மட்டுமே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்.  இந்தப் போட்டிக்கு 12 வயது முதல் 18 வயது வரையிலான நபர்களின் பெயர்கள் எழுதிப்போட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுகிறது.

the-hunger-games-212-வது பிரதேசம் சார்பாக நடக்கும் குலுக்கலில், ஜெனிஃபரின் தங்கையின் பெயர் வருகிறது. தங்கைக்குப் பதிலாக, தான் விளையாட்டில் பங்கேற்க முன்வருகிறார் ஜெனிஃபர். இதுவரையிலும் யாரும் இந்த விளையாட்டில் பங்கேற்பதற்கு தானே முன்வருவதில்லை என்பதால் திடீர் பாப்புலராகிறார் ஜெனிஃபர். இவர் பிரதேசத்தின் இன்னொரு போட்டியாளராக வருகிறார் நாயகன் ஜோஸ் கட்ஸர்சன்.

the-hunger-games-4போட்டியில் பங்கேற்கச் சென்றபிறகுதான் சில தகவல்கள் தெரியவருகின்றன. அதாவது முதல் இரண்டு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் இதற்கென தனியே பயிற்சி எடுத்துக்கொண்டு வருகிறார்கள். அவர்கள் ஒன்றாகச்சேர்ந்து முதலில் மற்ற அனைவரையும் கொன்றுவிட்டு, கடைசியில் தங்களுக்குள் சண்டை போட்டு ஜெயித்துக்கொள்கிறார்கள். அதனால் நன்றாகப் பயிற்சி பெற்ற சண்டையாளர்களுடன் மோதவேண்டிய நிலைக்கு ஜெனிபரும் ஜோஸும் ஆளாகிறார்கள்.

இந்த மரண விளையாட்டு நேரடி ஒளிபரப்பாக மக்களுக்கு காட்டப்படுகிறது. மக்களுக்கு கூடுதல் சுவாரஸ்யம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவும், அவர்களின் ஆதரவு வேண்டும் என்பதற்காகவும் தன்னை ஜெனிஃபரின் காதலனாக காட்டிக்கொள்கிறான் ஜோஸ். இது மக்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்குகிறது. அதனால் ஒரு பிரதேசத்தில் இருவரும் கடைசிவரை உயிரோடு இருந்தால் வெற்றியடைந்தவராக கருதப்படுவார்கள் என்று சலுகை அறிவிக்கப்படுகிறது. அதனால் படுகாயமடைந்த ஜோஸை தன்னுடன் பாதுகாக்கவேண்டிய நிலைக்கு ஆளாகிறார் ஜெனிஃபர்.

In this image released by Lionsgate, Jennifer Lawrence portrays Katniss Everdeen in a scene from "The Hunger Games," opening on Friday, March 23, 2012.  (AP Photo/Lionsgate, Murray Close)

இந்தப் போட்டியில் வெல்வதற்காக ஜெனிஃபர் எத்தனை சிரத்தை எடுத்துக்கொள்கிறார் என்பதை எல்லாம் விட்டுத்தள்ளுங்கள். போட்டியில் பங்கேற்கும் சின்னஞ்சிறு குழந்தைகளை மனிதாபிமானம் இல்லாமல் போட்டியாளர்கள் வெட்டிக் கொல்வதும், அதை மக்கள் பார்த்து ரசிப்பதும் எதிர்கால உலகம் குறித்த அச்சத்தை  உணர்த்துகிறது. இப்போது நம் குழந்தைகள் வீடியோ கேம்ஸில் வில்லன்களை ரத்தம் சிதறச்சிதற சாகடித்துக் கொல்வதைத்தான்  இந்த ஊர் மக்களும் செய்கிறார்கள்.

the-hunger-games-6’போட்டியில் பங்கேற்பவர்களுக்கு கண்களில் மரண பயம் தெரியவேண்டும், வெற்றிபெற வேண்டும் என்பதைவிட உயிர் பிழைப்பதற்காக அவர்கள் கதறவேண்டும். அதுதான் பார்ப்பவர்களுக்கு இன்பத்தைக் கொடுக்கும்’ என்று சொல்லப்படும் சாடிஸ விதிமுறை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது என்பதை சொன்னதுதான் இந்தப் படத்தின் வெற்றி. அதனால்தான் ஆரம்பத்தில் என்னால் ஒருவரைக்கூட கொல்லமுடியாது என்று சொல்லும் நாயகியும் நாயகனும் ஒருவழியாக வெற்றிக்கோட்டைத் தொடுகிறார்கள்.

அப்போது மீண்டும் ஓர் அறிவிப்பு வருகிறது. ஒரே பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உயிரோடு இருந்தால் வெற்றிபெற்றவர்களாக கருதப்படுவார்கள் என்று சொல்லப்பட்ட உத்தரவு மாற்றியமைக்கப்படுகிறது. ஒரே ஒருவர் மட்டுமே உயிரோடு இருக்கமுடியும் என்று அறிவிக்கப்படுகிறது. அடுத்து நடப்பது என்ன என்பதை  படத்தில் பாருங்கள்.

the-hunger-games-5ஜெனிஃபரின் உடல்மொழியால் வெற்றிபெற்ற அதிரடி ஆக்‌ஷன் படமாக மட்டும் இதனை புறம்தள்ளக்கூடாது என்பதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. ஆதி காலத்தில் மனிதர்களுடன் மனிதர்களை மோதவைத்து ரசித்த கிளாடியேட்டர் டைப் விளையாட்டுதான் இப்போது குத்துச்சண்டை, வாள்சண்டை,  ஃபுட்பால், வாலிபால் என்று மாற்றமடைந்துள்ளன. இதன் அடுத்தகட்டம் நிச்சயம், ஹங்கர் கேம்ஸ் போன்றுதான் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. இனி செல்வந்தர்கள் தனியாகவும் இல்லாதவர்கள் அவர்களின் அடிமைகள் போல் தனியாக வாழவேண்டிய சூழல் எதிர்காலத்தில் உருவாகும் என்பதையும் எடுத்துச்சொன்ன வகையில் கவனிக்கத்தக்க  படமாக உருமாறுகிறது த ஹங்கர் கேம்ஸ்.

கொஞ்சம் ரசிக்க – டிரெய்லர்

பின்குறிப்பு :

சூஸன் கோலின் என்பவர் இதே பெயரில் எழுதிய நாவலை பின்பற்றி 2012-ம் ஆண்டு ஹேரி ரோஸ் டைரக்ட் செய்த, ’தி ஹங்கர் கேம்ஸ்’ உலகெங்கும் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. 2013-ம் ஆண்டு வெளியான இதன் அடுத்த பாகமான, ‘தி ஹங்கர் கேம்ஸ் – கேட்சிங் ஃபயர்’ சூப்பர் டூப்பர் ஹிட். 2014-ம் ஆண்டு மூன்றாம் பாகமான ‘தி ஹங்கர் கேம்ஸ் – மாக்கிங்ஜெய் 1’ படமும் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து இந்த வருடம் நான்காம் பாகம் ‘தி ஹங்கர் கேம்ஸ் – மாக்கிங்ஜெய் 2‘ வெளிவர உள்ளது.

பின்பின்குறிப்பு :

இந்தப் படத்துக்கு சம்பந்தமில்லாத விஷயம் என்றாலும் அழகுப்பாப்பா ஜெனிஃபரின் செல்போனில் இருந்து பலான படத்தை யாரோ சுட்டு, நெட்டில் உலவ விட்டுள்ளார்களாம்.  அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக ஜெனிஃபர் எச்சரிக்கை செய்திருப்பதால், உடனே எங்களிடம் ஒப்படைக்க வேண்டுகிறோம்.

 

(Visited 294 times, 50 visits today)

Related posts

2 thoughts on “அழகு தேவதை – த ஹங்கர் கேம்ஸ்

  1. […] துரதிர்ஷ்டசாலிகள் இந்த லிங்கில் அழகு தேவதை பக்கத்தை மட்டுமாவது படித்துவிட்டு […]

  2. […] பெறும் நடிகை அழகுப்புயல், ‘த ஹங்கர் கேம்ஸ்’ நாயகியான ஜெனிஃபர் லாரன்ஸ். அவரது […]

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>