அவெஞ்சர்ஸ் என்ற மிக்சர் பிரியாணி

avengers-age-ultron-full-poster-artwork

Avengers-Wide-posterஒவ்வொரு நபருக்கும் ஒரு பிரியாணி மீது ஆசை இருக்கும். சிக்கன், மட்டன், முட்டை, மீன் என்று ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் இவற்றை தனித்தனியாக சாப்பிடாமல், மொத்தமாக கலந்து சாப்பிட்டால் அதுதான் அவெஞ்சர்ஸ் – ஏஜ் ஆஃப் அல்ட்ரான்.

ஏகப்பட்ட கோடிகளை அள்ளவேண்டும் என்பதற்காகவே ஹல்க், கேப்டன் அமெரிக்கா, தோர், அயன் மேன், பிளாக் விடோ என்று ஏகப்பட்ட சூப்பர் ஹீரோக்களை ஒன்றுசேர்த்திருக்கிறார்கள். இத்தனை சூப்பர் ஹீரோக்கள் என்றால், எதிர்ப்பதற்கு வலிமையான வில்லன் வேண்டுமே?

பூமியைக் காப்பாற்றுவதற்காக இவர்கள் உருவாக்கிய அல்ட்ரான் ரோபோவே இவர்களின் எதிரியாக மாறுகிறது. அதாவது இந்த பிரபஞ்சத்தை மனித இனம் எதிர்காலத்தில் முற்றிலும் அழித்துவிடும் என்று நினைக்கிறது. அதனால் மனித இனத்தை முழுமையாக அழிப்பதற்கான செயலில் இறங்குகிறது. இதற்கு உதவியாக சூப்பர் நேச்சுரல் சக்திகளைக் கொண்ட க்யிக்சில்வர், ஸ்கேர்லெட் என்ற இரட்டையர்களைப் பயன்படுத்திக்கொள்கிறது.

தன்னைப் போலவே ஆயிரக்கணக்கான ரோபோக்களை உருவாக்கிக்கொள்ளும் அல்ட்ரான், மனித குலத்தை அழிக்கும் முயற்சியில் இறங்குகிறது. நகரத்தை அழித்து, கட்டிடங்களை தகர்த்து, ரோடு, பாலங்களை எல்லாம் உடைத்து வெறியாட்டம் ஆடுகிறது. நகர மக்கள் மொத்தம்மொத்தமாக சமாதியாகும்போது,  காரில் இருந்து கீழே விழும் ஒன்றிரண்டு பேரை காப்பாற்றும் முயற்சியில் சூப்பர் ஹீரோக்கள் காமெடி செய்கிறார்கள்.

எப்படித்தான் இத்தனை ரோபோட்களையும் அழித்து, மனிதகுலத்தை காப்பாற்றுவது என்று அவெஞ்சர்ஸ் குழு கவலைப்படும் நேரத்தில் ஒற்றைக்கண் மொட்டை பாஸ், நம்மூர் போலீஸ் போல் கடைசி நேரத்தில் ஒரு விண்கலத்தைக் கொண்டுவந்து அத்தனை பேரையும் அள்ளிக்கொண்டு போகிறார். அப்புறம் அடுத்த அவெஞ்சர்ஸ் தயாராவதைக் காட்டி படத்தை முடிக்கிறார்கள்.

அதிரடி படத்துக்கு இடையே ஹல்க், நடாசா இடையிலான மெல்லிய காதலும் அயர்ன்மேனின் இடைவிடாத நக்கல் பேச்சுக்களும் ஆறுதல் டானிக். அவெஞ்சர்ஸ் மூளையை வசியப்படுத்தும் ஸ்கேர்லெட் நல்ல சிந்தனை. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற தமிழ் பழமொழி, இவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இத்தனை சூப்பர் ஹீரோக்கள் நிறைந்த படம் பார்த்துவிட்டு வெளியேவந்தால், பிரியாணிக்குப் பதில் புளியோதரை சாப்பிட்ட ஏப்பம்தான் வருகிறது.

அடுத்த எச்சரிக்கை :

ஏகப்பட்ட மார்வெல் காமிக்ஸ் புத்தகங்களில் இடம்பெற்ற சூப்பர் ஹீரோக்களை, சினிமாக்களில் இடம்பெறச் செய்யும் முயற்சியாகத்தான் முதன்முதலில் அயர்ன் மேன் வெளியானது. அதன் சூப்பர்டூப்பர் வெற்றியைத் தொடர்ந்து ஹல்க், கேப்டன் அமெரிக்கா, தோர் போன்ற ஹீரோக்களும் தனித்தனியே சினிமாக்களில் வலம்வரத் தொடங்கினார்கள். இந்த ஹீரோக்கள் அத்தனை பேரையும் ஒன்றாக இணைத்து வெளியான தி அவேஞ்சர்ஸ் 1 மாபெரும் வெற்றியடைந்து 1.5 பில்லியன் சம்பாதித்துக்கொட்டவே, இதோ அவெஞ்சர்ஸ் – ஏஜ் ஆஃப் அல்ட்ரான் என்று மீண்டும் இணைந்துவிட்டார்கள்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆண்ட்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், பிளாக் பாந்தர் போன்ற புதிய ஹூரோக்களும் ஏற்கெனவே இருக்கும் தோர், கேப்டன் அமெரிக்கா, அயர்ன்மேன், ஹல்க் போன்றவர்களும் வரிசையாக குதிக்க இருக்கிறார்கள். அதையடுத்து மீண்டும் சூப்பர் ஹூரோக்கள் ஒன்றுசேர்ந்து, ‘அவெஞ்சர்ஸ் – இன்ஃபினிட்டி வார்ஸ்’ என இரண்டு பாகங்களாக 2018, 2019-ல் வெளிவர இருக்கிறது.

(Visited 305 times, 33 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>