சூர்யா மாஸ் மறக்க ‘த சிக்ஸ்த் சென்ஸ்’

the-sixth-sense-massu-final

பாக்காம விட்றாதீங்க  – த சிக்ஸ்த் சென்ஸ்:

பேயைப் பார்த்தாலே விழுந்துவிழுந்து சிரித்தபடி நடுங்கிக்கொண்டிருந்த தமிழ் ரசிகப் பெருமக்களை நிஜமாகவே சூப்பர் மொக்கை படம் கொடுத்து கடித்து  வைத்திருக்கிறார் சூர்யா. பேய், ஆவி, டிராகுலா எல்லாம் ஒன்றுசேர்ந்து தங்கள் மீதிருந்த பயத்தையும் அன்பையும் சூர்யா கெடுத்துவிட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் மானநஷ்டவழக்கு  போட இருப்பதாக தெரிகிறது. இந்த நேரத்தில் ஆறுதலுக்காக ஒரு நல்ல பேய்ப்படம் பார்க்க விரும்புபவர்கள் தைரியமாக, ‘த சிக்ஸ்த் சென்ஸ்’ படம் பார்க்கலாம். இந்தப் படத்தைப் பார்த்துத்தான், ‘மாசு’ படமே எடுத்திருக்கிறார்கள் என்று சொல்வதை நம்பவே  நம்பாதீர்கள்.

the-sixth-sense-4வழக்கமாக ஆங்கில படங்களில் துப்பாக்கியும் தோட்டாவுமாகத் திரியும் புரூஸ் வில்லிஸ்தான் கதாநாயகன். டாக்டர் மால்கம் என்ற குழந்தைகளுக்கான மனநல மருத்துவராக வருகிறார். உணர்வுபூர்வமாக அவரைத்தேடி வரும் நோயாளிகளை மிகவும் பொறுமையாக கையாள்கிறார். பொதுவாகவே ஆங்கிலேயர்களுக்கு இருக்கும் பிரச்னை இவருக்கும் இருக்கிறது. ஆம், மனைவிக்கும் இவருக்கும் கருத்துவேறுபாடு. இந்த நேரத்தில்  எப்போதும் தனிமையை மட்டுமே விரும்பும் ’கோல்’ (ஹேலி ஜோயல்) என்ற சிறுவனுக்கு உதவி செய்வதற்கு முன்வருகிறார் வில்லிஸ். ஆனால் இவரது முயற்சியை ஏற்க மறுக்கிறான் சிறுவன்.

sixth sense2ஜோயல் அம்மாவுடன் காரில் பயணம் செல்லும்போது தூரத்தில் ஒரு விபத்து நடக்கிறது. நீண்ட நாட்களாக எதுவும் பேசாத அவன், திடீரென அம்மாவிடம், ‘என்னால் இறந்தவர்களைப் பார்க்கமுடிகிறது’ என்கிறான். அவன் விளையாட்டாகப் பேசுகிறான் என்று அம்மா நினைக்கும்போது, ‘இங்கே நிகழ்ந்திருக்கும் கார் விபத்தில் ஒரு பெண் இறந்துவிட்டார்’ என்றான். சற்று நேரத்தில் அதையே ஒரு போலீஸ்காரனும் சொல்லிவிட்டுப் போக  நிலைமையின் தீவிரத்தை உணர்கிறாள். அதுமட்டுமின்றி பாட்டி மீது அம்மா வைத்திருக்கும் கோபத்தையும் தீர்த்துவைக்கிறான்.

சிறுவனுடன் நெருங்கிப்பழகும் வில்லிஸ் தினமும் அவனுக்கு ஆறுதல் சொல்வதற்கு வருகிறான்.  அப்போது ஆவிகளின் இயல்பை சொல்கிறான் ஜோயல். ’நிறைய பேர் தாங்கள் செத்துப்போனதை நம்புவது இல்லை. உயிருடன் இருப்பதாக நினைத்து சுற்றிக்கொண்டு இருப்பார்கள். உயிரோடு இருந்தபோது என்னென்ன வேலைகள் செய்தார்களோ அவற்றை எல்லாம் வழக்கப்படி செய்வார்கள்’ என்று சொல்கிறான்.

the-sixth-sense-3அப்போது சிறுவனிடம் தனக்கும் மனைவிக்கும் இருக்கும் உறவுக் குளறுபடி பற்றி பேசுகிறான் வில்லிஸ்.  மனைவி தூங்கியபிறகு  நிதானமாக அவளுடன் பேசினால் நிச்சயம் புரிந்துகொள்வாள் என்கிறான் ஜோயல். அப்படி செய்யும் புருஸ் வில்லிஸ் தற்செயலாக முதுகைத் தொட்டுப்பார்க்க, அங்கே ரத்தக்கறை தென்படுகிறது. இதற்கு முன்பு நடந்ததை நினைத்துப் பார்க்கிறான். சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த ஒரு மனநல நோயாளி தன்னை குளியலறையில் தாக்கியதை நினைக்கிறான். உடனே தன் கையையும் மனைவியின் கையையும் பார்க்க, இருவரது கையிலும் திருமண மோதிரம் இல்லையென்பதும்  தெரியவருகிறது.

the-sixth-sense-5இந்த நேரத்தில் படத்திற்கு புதிய பரிமாணம் கிடைக்கிறது. இதுவரையிலும் படத்தில் இடம்பெற்ற அத்தனை காட்சிகளையும் மீண்டும் நினைத்துப் பார்க்கவேண்டிய அவசியத்துக்கு ஆளாகிறோம்.  சிறுவனின் அம்மா உள்ளிட்ட சிலரிடம் புரூஸ் வில்லிஸ் சீரியஸாக பேசினாலும், அவர்கள் பதில் சொல்லாமல் போனதற்கு புரிய அர்த்தம் கிடைக்கும். அப்படியென்றால் புரூஸ் வில்லிஸ்..?

நீங்கள் நினைப்பது சரிதானா என்பதை படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். பேய்ப் படங்களுக்கே உரிய வீல் வீல் அலப்பறைகள், தலைகீழாக நடந்துபோதல், பவுடர் பூசிய முகங்கள், கதவுக்குப் பின்னே கத்தல் இல்லாமலும் திகில் திரில்லர் கொடுக்கமுடியும் என்பதற்கு ’த சிக்ஸ்த் சென்ஸ்’ படமே சாட்சி. இந்தப் படத்தை இயக்கிய மனோஜ் நைட் சியாமளன் ஓர் இந்தியர் என்பதில் நாம் நிச்சயமாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

கொஞ்சம் ரசிக்க – டிரெய்லர்

பின்குறிப்பு :

வெறுமனே 40 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட த சிக்ஸ்த் சென்ஸ்,  600 மில்லியனைத் தாண்டி வசூலை வாரிக் குவித்திருக்கிறது. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு வசூல் சாதனை செய்த 30 படங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. கமர்ஷியலாக வெற்றி பெற்றது மட்டுமின்றி சிறந்த சினிமா விமர்சகர்களாலும் இந்தப் படம் பாராட்டப்பட்டுள்ளது.

முழு படம் பார்க்க – Link

(Visited 495 times, 205 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>