மொட்டை ராக் கெட்ட ராக் – San Andreas விமர்சனம்

San_Andreas_poster

ஆட்டம் காணும்  சான் ஆன்ட்ரியாஸ்: 

ஆபத்து நேரத்தில் மக்களைக் காப்பாற்றும் உன்னதமான பணியில் இருக்கும் மொட்டை ராக், அப்படியொரு சிக்கல் நேரும்போது ஊர், உலகத்தைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தன்னுடைய மனைவி, மகளை பத்திரமாக காப்பாற்றுவதுதான் கதை. இதுபோன்ற ஆயிரத்தெட்டு கதைகளில் சில்வஸ்டர் ஸ்டோலனும் அர்னால்டும் நடித்ததை ராக் பார்த்ததே இல்லையோ?  சரி, கதைக்குள் ஸாரி, அப்படியொன்று இல்லை என்பதால் படத்துக்குள் போகலாம்.

கொஞ்சம் ரசிக்க – டிரெய்லர்

கண் எதிரே தன் மகளை காப்பாற்றமுடியாத சூழலுக்கு ஆளான ராக் (கதாப்பாத்திரத்தின் பெயர்  – ரே), அடுத்த மகளுக்கும் அப்படியொரு ஆபத்து நேரும்போது என்ன செய்கிறார் என்ற ஒன்லைனை வைத்து கதை பின்னியிருக்கிறார்கள். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் எப்போதும் ஆரம்பகாட்சி மட்டும் மிரட்டலாக இருக்கும். அப்படியொரு காட்சிக்கு முயற்சித்து மொக்கையாக அமைத்திருக்கிறார்கள். காப்பாற்றுவதற்கு ராக் இத்தனை சிரமப்படுவார் என்று தெரிந்தால், அந்தப் பெண்ணே கதவைத் திறந்துகொண்டு சாதாரணமாக மலையேறி வந்திருப்பார். ஓர் ஆங்கிளில் விபத்துப்பகுதியைப் பார்க்கும்போது படிக்கட்டு போன்று மிகச்சாதாரணமாக இருக்கிறது.

San-Andreas-Dwayne-Johnson & carlaஅந்தப் பெண்ணைக் காப்பாற்றி சாதனை படைத்த திருப்தியில் வீட்டுக்கு வந்தால்… மனைவி டைவர்ஸ் நோட்டீஸ் வைத்துவிட்டு காணாமல் போயிருக்கிறார்.  அவர் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ஆன்ட்ரியாஸ் நிலப்பரப்பு முழுவதும் பூகம்ப பாதிப்பு உண்டாகிறது. அந்த  பாதிப்பில் மனைவி சிக்கியிருப்பதை அறிந்தவுடன் கடமையை மறந்து மனைவியைக் காப்பாற்ற முயல்கிறார்.

பூகம்பத்தில் தப்புவதற்காக மக்கள் அனைவரும் கீழே ஓடிக்கொண்டிருக்க, மனைவி மட்டும் கட்டிட உச்சிக்கு வருகிறார். அதுவரை உடையாத கட்டிடத்தில் இருந்து மனைவியை கஷ்டப்பட்டு காப்பாற்றி தன்னுடன் ஹெலிகாப்டரில் ஏற்றிக்கொள்கிறார். பிரச்னை முடிந்தது, அடுத்து மகளைத் தேடலாம் என்று நினைக்கும்போது, அதைவிட பெரிய பூகம்பம் ஏற்படுகிறது.

San-Andreas-paulநகரம் முழுவதும் உள்ள பெரியபெரிய கட்டிடங்கள் எல்லாம் சரிந்து விழுகின்றன. ஒரு வேலைவெட்டி இல்லாத விஞ்ஞானி தன்னுடைய அறையில் இருந்து, ‘இதோ பூகம்பம் வரப்போகிறது’ என்று சொல்லிமுடிக்கவும் பூகம்பம் தோன்றவும் சரியாக இருக்கிறது. உடனே தன்னை பேட்டியெடுக்க வந்த பெண் நிருபரை மட்டும் தன்னுடன் இழுத்துக்கொண்டு டேபிளுக்குக் கீழே பதுங்கிக்கொள்கிறார். அவர் நடவடிக்கையைப் பார்த்தால், இதற்காக அவரே  பூகம்பத்தை(?) உருவாக்குவதுபோல் தெரிகிறது.

sanandreas2

பூகம்ப இடிபாடுகளில் சிக்கிக்கொண்டாலும், ஆங்கிலப்பட இலக்கணம் தவறக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தனக்கென்று ஒரு காதலனை தேர்வுசெய்துகொண்டு, அங்கிருந்து தப்புவதற்கு முயல்கிறார் ராக்கின் மகள் பிளேக். போகிற பக்கம் எல்லாம் கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன. ரோடுகள் எல்லாம் பள்ளமாக கிடக்கின்றன. பாலங்கள் எல்லாம் உடைந்துவிட்டன. ஆனாலும் தன்னுடைய கவனத்தை சிதறவிடாமல் அப்பா வந்து காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் தளராது நடக்கிறார் பிளேக்.

எல்லாம் முடிந்துவிட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு விடும்நேரத்தில் ஒரு மாபெரும் சுனாமி வந்துவிடுகிறது. அப்புறமென்ன, நின்றுகொண்டிருக்கும் மிச்சசொச்ச கட்டிடங்களும்  பொத்பொத்தென விழுகின்றன. அதில் ஒரு கட்டிடத்தில் தண்ணீருக்குள் சிக்கிக்கொள்கிறாள் பிளேக். அவளைக் காப்பாற்றிக் கொண்டுவந்து நெஞ்சில் கைவைத்து அழுத்திப் பார்க்கிறான் ராக். பலன் கிடைக்கவில்லை.

san-andreas-blakeஇந்த மகளையும் பறிகொடுத்துவிட்டோம் என்று எல்லோரும் அழுதுமுடித்த நாலைந்து மணி நேரம் கழித்து மீண்டும் நெஞ்சை அழுத்துகிறான் ராக். அப்போது நடக்கும் அதிசயத்தை நீங்களே பார்த்து எரிச்சல் அடையுங்கள்.

வாலிபால் பிளேயர் என்று சொல்லப்படும் பிளேக், குலுங்ககுலுங்க விளையாடுவார் என்று பார்த்தால், பூனைக் கண்ணுடன் காதலனுக்கு ஒரேஒரு சைடு முத்தம் மட்டும் கொடுத்து ஓரங்கட்டிக் கொள்கிறார். இது மினியேச்சர் ஷாட், இது கிரீன் மேட் என்று ரசிகர்களே தியேட்டரில் கமெண்ட்ரி கொடுக்கும் இந்தக் காலத்தில் உணர்வுபூர்வமான திரைக்கதை இல்லாமல் டெக்னிக்கல் விஷயங்களால் மட்டுமே ரசிகர்களை இழுக்க முடியாது என்பதை வெள்ளைக்காரர்கள் எப்போது புரிந்துகொள்ளப் போகிறார்களோ?

கொஞ்சம் தெரிஞ்சிக்க – மேக்கிங்

பின்குறிப்பு :

கதை நிகழ்வதாக சொல்லப்படும் சான்பிரான்சிஸ்கோ பகுதியில் இப்படியொரு பூகம்பம் நிகழ்வதற்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லை என்று நிஜமான விஞ்ஞானிகள் கடுப்பாக அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். அதேபோல் அணைக்கட்டு உடையும்போது, அங்கிருக்கும் யாராலும் ஓடவோ, தப்பிக்கவோ முடியாது. அப்படியே நேராக சொர்க்கத்துக்குப் போகவேண்டிதுதானாம்.

sanandreas3

டே ஆஃப்டர் டுமாரோ’, ‘2012’ படங்களின் மூலம் ஏற்கெனவே உலகத்தை அழித்துவிட்ட ரோலண்ட் எமரிச், இதனை நகைச்சுவை படமாகத்தான் பார்ப்பார் என்கிறார்கள் விமர்சகர்கள். ஏனென்றால் சில வருடங்களுக்கு முன்பே அவர் தொட்டுவிட்ட டெக்னிக்கல்  எல்லைகளைக்கூட இந்தப் படம் எட்டவில்லை.

கமலா தியேட்டருக்கு ஒரு பின்குறிப்பு :

இதுபோன்ற 3டி படங்களுக்குக் கொடுக்கப்படும் ஒரு கண்ணாடியின்  விலை 7 ரூபாய் 80 காசுகள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதற்கு 30 ரூபாய் வாங்கும் தியேட்டர் வட்டாரம் இதனை சரியாக துடைத்துக்கூட கொடுப்பதில்லை. மீண்டும் மீண்டும் மாற்றும்போது கூடுதல் கிராச் உள்ள கண்ணாடி கிடைப்பது அதிசயம்தான். ’மைடியர் குட்டிச்சாத்தான்’ காலத்து கண்ணாடியை மாற்றுங்கள் ப்ளீஸ்.

(Visited 293 times, 23 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>