உஷாரய்யா உஷார் – Point Break சூரர்கள் கமிங்

Point_Break_poster

இறக்கை போன்று ஆடையை பிரத்யேகமாக வடிவமைத்துக்கொண்டு பறக்கும் ஒருவன், சர்ஃபிங்  கில்லாடி ஒருவன், எப்பேர்ப்பட்ட மலைகளிலும் ஏறிவிடும் அசகாய சூரன் ஒருவன், மோட்டார் சைக்கிள் ரேஸ் வீரன் ஆகிய நால்வரும் சேர்ந்து உலகப்  பொருளாதாரத்தை அசைத்துப்பார்க்க முடிவு எடுக்கிறார்கள்.

தங்களால் இதனை  செய்யமுடியும் என்பதைக் காட்டுவதற்காக வங்கிகளுக்கு விமானத்தில் கொண்டுசெல்லப்படும் இரண்டு கண்டெய்னர் பணத்தை, வானில் இருந்து கீழே கொட்டுகிறார்கள். ஒரு கிராமம் முழுவதும் பண மழை பொழிகிறது. இந்தக் கில்லாடிகளின் கொட்டத்தை முறியடிக்க வருகிறான் அதிரடி நாயகன் லூக் பிரேசி.  அவர்களில் ஒருவனாக நுழைந்து, அவர்களின் திட்டத்தை முறியடிக்க நினைக்கிறான். ஒரு கட்டத்தில் அவர்கள் செய்வது தவறு இல்லை என்று தெரியவர, அவர்களுடன் இணைகிறான். இதனால் எஃப்.பி.ஐ. கவலை கொள்கிறது. நாயகனை திசை மாற்ற முடியுமா? புதிய சூரர்களிடம் இருந்து நாட்டின் பொருளாதாரத்தைக் காப்ப்பாற்ற முடியுமா என்பதை டிசம்பரில் வெளிவர இருக்கும் பாயிண்ட் பிரேக் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இப்போ Point Break டிரெய்லர் பாப்போம்

பின்குறிப்பு :

ஏற்கெனவே 1991-ம் ஆண்டு பாயிண்ட் பிரேக் என்ற பெயரில் வந்த படத்திலும் கிட்டத்தட்ட இதே கதைதான் இடம் பெற்றிருந்தது. ஆனால் அன்றைய கதாநாயகர்களுக்கு சஃர்பிங் தவிர  எவ்விதமான சிறப்புத் தகுதிகளும் இல்லை. இப்போது ஒவ்வொரு நபருக்கும் ஒரு கூடுதல் தகுதியைச் சேர்த்து புதிய தொழில்நுட்பத்தில் கலக்கியிருக்கிறார் இயக்குனர் எரிக்ஸன் கோர். இவர் இதற்கு முன்னர் இன்வின்சிபிள் என்ற படத்தை இயக்கியிருக்கிரார், தி ஃபாஸ்ட் அண்ட் தி ஃப்யூரியஸ்  படத்தில் கேமராமேனாக பணிபுரிந்தவர்.

(Visited 180 times, 32 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>