ஆயிரம் பாட்டில் பீர் – குங்ஃபூ பாண்டா

Kungfupanda beer poster

பாக்காம விட்றாதீங்க  – குங்ஃபூ பாண்டா:

ராஜாவுக்குப் பிறகு  பதவி எனக்குத்தான் என்று நம்பியார் கையை பிசைந்துகொண்டு காத்திருப்பார். ஆனால் எங்கிருந்தோ வந்து குதிக்கும் எம்.ஜி.ஆர்.,  பதவியைப் பிடிப்பதுடன் நில்லாமல் ராஜா மகளையும் லவட்டிக்கொண்டு போய்விடுவார். இந்தக் கதையில் எம்.ஜி.ஆருக்குப் பதிலாக நம்ம குண்டு கல்யாணம் வந்து குதித்தால் எப்படியிருக்கும் என்பதுதான் குங்ஃபூ பாண்டா.

KungFu panda1

அழிவில் இருந்து சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றக்கூடிய வீரதீர நாயகன், அதாவது அடுத்த வாரியர் யார் என்பதை அறிந்துகொள்வதற்காக ஒரு மாபெரும் கூட்டம் காத்துக்கிடக்கிறது. பதவியைக் கைப்பற்றுவதற்காக  புலி, குரங்கு, பாம்பு, வெட்டுக்கிளி, கொக்கு ஆகிய ஐந்தும் தங்கள் திறமையைக் காட்டுவதற்காக காத்திருக்கிறார்கள். ஆனால், விதி வேறுவிதமாக அமைகிறது. அந்தப் போட்டியைப் பார்ப்பதற்கு சரியான நேரத்தில்கூட வரமுடியாத ஒரு குண்டு பாண்டா அடுத்த வாரியராக தேர்வாகிறது.

kung-fu-panda-stairs-gif’நடக்கவே சோம்பேறித்தனப்படும் தொப்பை பாண்டா எப்படி அடுத்த வாரியராக முடியும்?’ என்று ஆசிரியர் ஷீஃபூ எனப்படும் குட்டியூண்டு செங்கரடி சந்தேகம் கேட்க, ’இதுதான் விதி. அவனுக்கு சண்டை சொல்லிக்கொடுத்து வாரியராக மாற்றவேண்டியது உன்னுடைய வேலை’ என்று சொல்லிவிட்டு காற்றில் கரைந்துவிடுகிறது  தலைமை குருவாக இருக்கும் ஆமை.

kung-fu-panda-momoஎந்த நேரமும் எதையாவது தின்னவேண்டும் என்ற ஆசையுடனும்  மந்தபுத்தியாகவும் இருக்கும் பாண்டாவுக்கு சண்டை போட சொல்லிக்கொடுத்து ஷீஃபூ டயர்டாகி விடுகிறார். ஒரு கட்டத்தில் கொழுக்கட்டை சாப்பிடுவதில் பாண்டாவுக்கு இருக்கும் அலாதி ஆர்வம் இருப்பதைத் தெரிந்துகொள்கிறார். கொழுக்கட்டை தின்பதற்காக எதையும் செய்யும் என்பது தெரிந்ததும், அதையே வைத்து சண்டை கற்றுக்கொடுக்கிறார். அடிமைப்பெண் எம்.ஜி.ஆர் போல் இருக்கும் பாண்டா கொஞ்சம்கொஞ்சமாக நிமிர்கிறது.

KungFuPnda_2

அதற்குள் எதிர்பாராத ஆபத்து வருகிறது. கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த வில்லன் சிறுத்தை தப்பிவிடுகிறது. ஆட்சியைக் கைப்பற்றி, மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ‘வெற்றி ரகசியம்’  எனப்படும் சங்கேதத்தை  அடைய வருகிறது. சிறுத்தையுடன் போராடும் குரங்கு, பாம்பு, கொக்கு, புலி, வெட்டுக்கிளி தோற்றுவிடுகிறார்கள். அதனால் சிறுத்தையுடன் சண்டைபோட்டு பாண்டாவால் வெற்றி அடையமுடியாது என்று மக்கள் அவநம்பிக்கையுடன் ஊரைவிட்டு கிளம்புகிறார்கள். வெற்றி ரகசியத்தை நீ அறிந்துகொள் என்று அந்த பாதுகாப்பு ரகசியத்தை பாண்டாவிடம் ஒப்படைக்கிறது ஷூஃபி. அதை திறந்துபார்க்க அதில் எதுவும் எழுதப்பட்டிருக்காமல் வெறுமையாக இருக்கிறது. வெற்றிக்கான வழியும் கிடைக்கவில்லை என்று  நம்பிக்கை இழக்கிறது பாண்டா. அதனால் பாண்டாவை ஊருக்கு அனுப்பிவிட்டு, சிறுத்தையை எதிர்கொள்ளத் தயாராக காத்திருக்கிறது ஷூஃபு.

kungfu_panda-training

புறமுதுகிட்டுக் கிளம்பும் பாண்டாவும் தனது சமையல்கார தந்தையுடன் ஊரைவிட்டு கிளம்பும்போது, ‘நான் எதற்குமே லாயக்கில்லை. எனக்கு உங்களைப் போல் நன்றாக சமைக்கவும் தெரியாது. உங்களுக்கு என்று தனியே ஒரு சமையல் ரகசியம் இருக்கிறது, அதனால் சுவையாக சமைக்கிறீர்கள்’ என்கிறது.  அதற்கு அவர், ‘எல்லோரும் அப்படித்தான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் அப்படி எந்த ரகசியமும் இல்லை’ என்று சொல்வார். அப்போதுதான் பாண்டாவுக்கு வாழ்க்கைத் தத்துவம் புரிபடுகிறது.

வீரன் என்று நம்பினால்தான் வீரன் என்பது புரிகிறது. வெற்றிக்கான ரகசியம் வெளியே எதுவும் இல்லை என்பதும் புரியவரவே வீராவேசத்துடன் போர்க்களத்தில் இறங்குகிறது. சிறுத்தையை எதிர்த்து நிற்கும் காட்சிகளும், வெற்றிக்குப் பிறகு ஷூஃபுவிடம் ஜாலியாகப் பேசும் காட்சிகளும் கண்களுக்கும் மனசுக்கும் இதமானவை.

KungFu panda3

தத்துவம் பேசினால் யாருக்குமே பிடிக்காது என்பார்கள். ஆனால்  சொல்லும் விதத்தில் சொன்னால் எப்படிப்பட்ட தத்துவத்தையும் இதமாக சொல்லமுடியும் என்பதற்கு இந்தப்படமே சாட்சி.

’எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கிறது, எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்’ என்று ஸ்ரீகிருஷ்ண பகவான் சொன்னதை ஒரே வரியில், ‘காரணம் இல்லாமல் எந்தக் காரியமும் நடப்பதில்லை’  என்று  எளிமையாக சொல்கிறது  தலைமை குரு ஊக்வே எனப்படும் ஆமை.

நேற்று என்பது ஹிஸ்டரி, நாளை என்ன நடக்கும் என்பது தெரியாது அதனால் அது மிஸ்ட்ரி, இன்று மட்டுமே நிஜம் அதனால் இதுதான் பிரசண்ட் உன் கையில் இருக்கும் பொக்கிஷம் என்பதுபோன்ற பொன்மொழிகள் எல்லாம் சர்வசாதாரணமாக வந்து போகின்றன.  மனதில் ஏதேனும் உறுத்தல், சங்கடம், வருத்தம் இருக்கும் நேரத்தில் இந்தப் படத்தைப் பாருங்கள். ஆயிரம் பாட்டில் பீர் குடித்த சந்தோஷம் ஏற்படும்.

கொஞ்சம் ரசிக்க – டிரெய்லர்

பின்குறிப்பு :

இயக்குனர்கள் ஜான் ஸ்டீவென்சன்மார்க் ஒஸ்போர்ன் ஆகியோர் முதலில் இதனை ஆக்‌ஷன் படமாக எடுக்கத்தான் திட்டமிட்டிருந்தார்கள். அதன்பிறகே திரைக்கதையை ஆக்‌ஷன் காமெடியாக மாற்றினார்கள். 2008-ம் ஆண்டு படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் 2011-ம் ஆண்டு வெளியானது. இதன் மூன்றாவது பாகம் 2016-ம் ஆண்டு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து மேலும் மூன்று பாகங்கள் அடுத்தடுத்து  வெளிவர இருக்கின்றன.

இந்தப் படத்தின் அனிமேஷன் கேரக்டருக்கு  ஜேக் பிளாக், டஸ்டின் ஹாஃப்மென், ஏன்ஜெலினா ஜோலி, ஜாக்கிசான் போன்ற பிரபலங்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க தகவல்.

கொஞ்சம் தெரிஞ்சிக்க – மேக்கிங்

(Visited 167 times, 12 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>