சமந்தாவை இழுத்துவரும் இன்செப்ஷன்

Inception with Samantha final1

பார்க்காம விட்றாதீங்க – இன்செப்ஷன்:

நம்ம அப்துல்கலாம் விஞ்ஞானி வாழ்க்கைக்கு சலாம் போட்டதும், அடுத்த அஞ்சு வருஷம் ஜனாதிபதி மாளிகையில் மிகவும் சிரமப்பட்டு ஓய்வு எடுத்தார் அல்லவா? அந்த நேரத்தில்தான் அவருக்கு சமூக விழிப்புணர்வு ஏற்பட்டது. பதவியில் இருந்து இறங்கியதும் இந்தியா முழுவதும் சுற்றிவந்து, ‘கனவு காணுங்கள்… கனவு காணுங்கள்’ என்று மாணவர்களிடம் கதறிக்கொண்டே இருக்கிறார்.

ஆனால் அவர் சொன்னதை நம்ம ஆளுங்க யாரும் கண்டுக்கிடலை.  ஆனால் அமெரிக்க சினிமா இயக்குனர்  கிறிஸ்டோபர் நோலன் மிகச்சரியா புரிஞ்சிக்கிட்டார். அப்துல்கலாமின் தாரக மந்திரத்தை அடிப்படையாக வைத்து சிலந்தி வலையாக பின்னப்பட்டதுதான், ‘இன்செப்ஷன்’ திரைப்படம். இந்தப் படம் புரிகிறதோ இல்லையோ யார் கேட்டாலும், ‘அடேங்கப்பா…’ என்ற பாணியில் பாராட்டிவிடுங்கள். இல்லையென்றால் லூஸ் என்று சொல்லிவிடுவார்கள்.  ஏனென்றால் இது மூளையை சிந்திக்கத்தூண்டும் படமாம்.

inception-1024

கனவு காணும் அனுபவத்தை மாபெரும் கனவு உலகமாக மாற்றிக் காட்டியதற்காக கிறிஸ்டோபர் நோலனுக்கு ஒரு சபாஷ் போட்டுவிட்டு கதைக்குள் போகலாம். நம்ம டைட்டானிக் பட நாயகன் லியோனார்டோ டி காப்ரியோ ஒரு கனவுத்திருடனாக நடித்திருக்கிறார். பிறருடைய கனவுக்குள் நுழைந்து, அவர்களின் மூளைக்குள் இருக்கும் ரகசியங்களைத் திருடிவரும் குட்டியூண்டு திருடனாக இருக்கிறார். ஒரு வரியில் சொல்வது போல் அத்தனை எளிதான பணி அல்ல. இந்தப் பணியில் இறங்கியதால் மனைவியை இழந்து சட்டச்சிக்கலிலும் மாட்டியிருக்கிறார். இந்த நேரத்தில் ஒரு மாபெரும் கும்பல் இவரிடம் பேரம் பேசுகிறது.

inception_52.jpgகோடீஸ்வர அப்பா சாகக்கிடப்பதால் அடுத்து பொறுப்பு ஏற்க இருக்கும் இளைஞன் கனவில் புகுந்து, ‘இந்த பிசினஸ் இனி சரிப்படாது’ என்று இழுத்துமூடுவதற்கான எண்ணத்தை விதைக்க வேண்டும் என்ற ஆபத்தான வேலையை செய்யச்சொல்லிக் கேட்கிறார்கள்.  அப்படிச் செய்தால் அவருக்கு இருக்கும் அத்தனை சிக்கல்களில் இருந்தும் காப்பாற்றுவதாக  உறுதியளிக்கிறார்கள்.

இளைஞனின் கனவுக்குள் நுழைந்தால் மட்டுமே போதாது, கனவுக்குள் நுழைந்து அவரைத் தூங்கச்செய்து அடுத்த கனவு வரவழைத்து அந்தக் கனவுக்குள் நுழைந்து (தலை சுற்றுகிறதா?) மூளையில் எண்ணங்களை விதைக்க வேண்டும். இதனை எல்லாம் ஒரு விமானப்பயணத்துக்குள் செய்து முடிக்க வேண்டும் என்றாலும் ஒப்புக்கொள்கிறான் காப்ரியோ.

Inception-movie-image

கனவுக்குள் நுழைவதைவிட, கனவில் இருந்து வெளியே வருவது மிகவும் சிரமம்.  கனவுக்குள் இறந்துவிட்டால் அல்லது ஏதேனும் அடிபட்டால் நிஜவாழ்க்கையில் விழிப்பு வந்துவிடும். அதேபோன்று தான் இப்போது கனவுலகில் இருக்கிறோமா அல்லது நிஜவுலகில் இருக்கிறோமா என்பதை அறிந்துகொள்வதற்காக கையில் ஒரு பொருளும் வைத்திருப்பார்கள். ஆனாலும் கனவில் இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டத்தில் நுழையும்போது மரணம் ஏற்பட்டால் நிஜவாழ்க்கையில் கோமாவை சந்திக்கவேண்டி வரலாம்.

காப்ரியோ இளம் தொழிலதிபர் கனவுக்குள் நுழைந்து அவனை அடுத்தகட்ட கனவுக்குள் அழைத்துச்செல்கிறார். ஆனால் அவனோ, ‘இந்தக் கனவுதான் நிஜம்’ என்று கனவு நிலையில் வாழத்தொடங்குகிறான். அவனுக்குள் கனவு விதைத்து மீண்டும் நிஜ வாழ்க்கைக்கு இழுத்துவர முடிந்ததா என்பதை படத்தில் பாருங்கள்.

கொஞ்சம் ரசிக்க – டிரெய்லர்

சினிமாவை விட்டுத்தள்ளுங்கள். உண்மையிலேயே பிறர் கனவுக்குள் நுழைய முடிந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள். மனைவி உங்களுக்கு மரியாதை கொடுத்து கால் அமுக்கிவிடுவாள். முதலாளி நீங்கள் விரும்பும் நேரத்தில் எல்லாம் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கொடுப்பார். இதையெல்லாம்விட நடிகை சமந்தா உங்களைத் தேடிவந்து ‘ஐ லவ் யூ’ சொல்லி முத்தமழை பொழிவார்.

என்ன, கனவுக்குள் நுழைய நீங்க ரெடியா..?

பின்குறிப்பு :
2001-ம் ஆண்டு ‘இன்செப்ஷன்’ படத்தின் கதையை எழுதிவிட்டாலும், இதனை மேலும் மேலும் மெருகேற்றி படமாக்கி வெளியிட கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் எடுத்துக்கொண்டார் நோலன். இந்தக் கதையின் மீது லியோனார்டோ டி காப்ரியோவுக்கு ஆரம்பத்தில் பெரிய நம்பிக்கை இல்லையாம். கதை விவாதத்தில் அமர்ந்ததும், கதைகுள் மூழ்கி விவாதத்தில் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார்.

கொஞ்சம் தெரிஞ்சிக்க – மேக்கிங்

(Visited 385 times, 60 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>