என்னாது, டெய்லர் ஸ்விப்ட்டை ஏமாத்திட்டாளுகளா?

Taylor swift Bad Blood

பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட்டுக்கு எந்த முன்னுரையும் எழுதத் தேவையில்லை. ஏனென்றால் குரலைவிட அத்தனை அழகை அள்ளிக் கொடுத்திருக்கிறான் அந்த ஆண்டவன். கூகிள் ஆண்டவரைத் தட்டிப்பார்த்தால் ஏகப்பட்ட கெட்ட படங்கள் கொட்டிக்கிடக்கும். அதனால் தன்னுடைய இமேஜ் பாதிப்படைகிறது என்று, தனது படங்களை மட்டும் பிரத்யேகமாக ஏற்றியிருந்த இரண்டு வலைதளங்களை மட்டும் விலைபேசி வாங்கி மூடி பரபரப்பைக் கிளப்பினார்.

Taylor swift1இப்போது வெளியாகியிருக்கும் அவரது ’பேட் பிளட்’ மியூசிக் வீடியோ பெரும் ஹிட் அடிக்கவில்லை என்றாலும்  உலகெங்கும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. ஏன் என்பதில்தான் இருக்கிறது சூட்சுமம். இசை, பாடல் வரிகள் மற்றும் எடிட்டிங்கிற்காக பேசப்படவில்லை என்றாலும் ஒரு பெண்னின் பெயரைத் தேடுகிறார்கள்  என்பதுதான் பரபரப்புக்குக் காரணம்.

இதை ஸ்விப்ட் ஓப்பனாகவே அறிவித்திருக்கிறார். ‘என் எதிரியின் பெயரை மறைமுகமாக அம்பலப்படுத்தி இருக்கிறேன். அதுவும் குறிப்பாக சில சமயம் மட்டும் பழகும் ஒரு பெண் தோழியை பட்றிதான் இது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் அந்த பிரபலம் யார் என்பதை நீங்களும் அறிந்துகொள்ள முடியும். யார் என்று சொல்லுங்கள்’  என்று அறிவித்திருப்பதுதான் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. ஆனால் அந்தப் பெண்னுடன் தனக்கும் என்ன பிரச்னை என்பதை ஸ்விப்ட் சொல்லவே இல்லை.

ஆனால் இந்த ஆல்பத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார்கள். நடிகை, பாப் சிங்கர்ஸ், மாடல் என்று பலரும் ஸ்விட்டுக்காக நடித்திருக்கிறார்கள். அவர்களில் ஜெசிகா ஆல்பாசிண்டி கிராபர்ட், செலினா கோமஸ்ஜிஜி ஹாதித் போன்ற முக்கியப் புள்ளிகளுடன் கிட்டத்தட்ட 20 பேர் எட்டிப் பார்க்கிறார்கள். ஆக, எதிரிகள் இந்த வட்டத்திற்குள்தான் இருக்கிறார்களா?

பின்குறிப்பு: அம்மணியின் ஆண்டுவருமானம் இப்போது 1250 கோடி என்பதும் இன்னமும் காதல் வலையில் சிக்கவில்லை என்பதும் கூடுதல் தகவல். நம்மூர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடுவதற்கு ஆசையாக இருக்கிறது என்று சமீபத்தில் விருப்பம் தெரிவித்து இருப்பதும் அம்மணிதான்.  அதனால் தமிழர்களே நல்ல வாய்ப்பை நழுவ விடாதீர்கள். ஆறு வித்தியாசம் கண்டுபிடிப்பது போல் ஸ்விப்ட் எதிரிகள் பெயரை பட்டியல் போட்டு அவர் மனதில் இடம் பிடியுங்கள்.

(Visited 73 times, 8 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>