தி பெர்க்ஸ் ஆஃப் பியிங் அ வால்ஃப்ளவர் – பாக்காம விட்றாதீங்க – (The Perks of Being a Wallflower)

the_perks_of_being_a_wallflower_posters

பாக்காம விட்றாதீங்க – தி பெர்க்ஸ் ஆஃப் பியிங் அ வால்ஃப்ளவர்

இந்த உலகில் மூன்றில் இரண்டு  பெண் குழந்தைகள், 10 வயதுக்குள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்று வருத்தப்படும் புள்ளிவிபர புலிகள், ஆண் குழந்தைகளின் பாதிப்பை கணக்கில் எடுப்பதில்லை. ஆண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவினால் ஏற்படும் பாதிப்பை கவித்துவமாகவும் கலகலப்பாகவும் சொல்லியிருக்கும் படம், தி பெர்க்ஸ் ஆஃப் பியிங் அ வால்ஃப்ளவர். தலைப்பை போலவே  படம் மனதை மயக்குகிறது.

புதிய பள்ளியில் சேரும் சார்லி (லோகன் லெர்மென்) இயல்பாகவே தனிமை விரும்பி. இனியாவது அனைவருடனும் சேர்ந்து வாழும் எண்ணத்துடன் பள்ளிக்கு வருகிறான். ஆனால் தயக்கமும் கூச்சமும் கொண்ட சார்லியால் யாருடனும் நட்பாக பழகமுடியவில்லை. எப்போதும் தனியனாக இருக்கிறான், ஆனால் இந்த விஷயம் தாய், தந்தையருக்கு கவலை தரக்கூடாது என்பதால், Tamil Hollywood Review ThePerksofBeingaWallflower 3கலகலப்பாக இருப்பது போல் நடிக்கிறான். சார்லி மிகவும் புத்திசாலியான மாணவனாக இருந்தாலும், வகுப்பறையில் எழுந்து பேசுவதற்கும், பதில் சொல்வதற்கும் தயங்குகிறான். இதை கண்டுபிடிக்கும் ஆசிரியர், அவனுடைய திறமையை வெளியே கொண்டுவர தன்னால் ஆன முயற்சிகளை எடுக்கிறார்.  உத்வேகம் தரும் சில புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொல்கிறார்.

பள்ளியில் மக்கு மாணவனாக இருக்கும் பாட்ரிக் அனைவராலும் நத்திங் பாட்ரிக் என்று கிண்டல் செய்யப்படுகிறான்.  ஒரு ஃபுட்பால் மேட்சில் பாட்ரிக்கை பார்க்கும் சார்லி, அவனுடன் பேசுவதற்கு முயல்கிறான். அப்போது அங்கே வந்து சேர்கிறாள் அழகு தேவதை எம்மா வாட்ஸன். அவர்கள் இருவரும் ஜாலியாக பழகுவதை பார்த்து காதலர்கள் என்று நினைக்கிறான், ஆனால் இருவரும் அண்ணன், தங்கை என்று தெரியவந்ததும் சந்தோஷமாகிறான்.

சார்லியின் கூச்சத்தை வினோதமாக பார்க்கும் எம்மா, அவனை ஒரு விருந்துக்கு அழைத்துச்செல்கிறாள். அங்கே தற்செயலாக பாட்ரிக்கும், பிரபல விளையாட்டு வீரன் பிராட்டும் முத்தமிடுவதைப் பார்த்து அதிர்கிறான். யாரிடமும் சொல்லக்கூடாது என்று பாட்ரிக் சத்தியம் வாங்கிக்கொள்கிறான். தோழியர்களுடன் பேசத் தெரியாமல் எதையெதையோ பேசுகிறான்.

Tamil Hollywood Review ThePerksofBeingaWallflower 4சார்லிக்கு வேறு யாரும் நண்பர்கள் கிடையாது என்பது எம்மாவுக்கு தெரியவர, கூடுதல் அன்பு கொட்டுகிறாள். இசை மீது பைத்தியமாக இருக்கிறாள் எம்மா, அவளுக்கு இசையை தேர்வுசெய்து கொடுத்து தானும் ரசிக்கிறான் சார்லி. சுரங்கப்பாதையில் காரில் செல்லும்போது இசையில் தன்னை மறந்து காற்றில் மிதப்பதுபோல் கைநீட்டி நிற்கிறாள் எம்மா. இசை தேவதையை பார்ப்பதுபோல் மெய்மறந்து ரசிக்கிறான் சார்லி. கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு போதிய மதிப்பெண் எடுக்கமுடியாமல் தடுமாறுகிறாள் எம்மா. அவளுக்கு டியூசன் எடுத்து பாஸ் செய்ய வைக்கமுடியும் என்கிறான் சார்லி. அப்படியே சொல்லிகொடுத்து அட்மிஷன் கிடைக்கவும் செய்கிறான். இதனால் இருவரும் மேலும் நெருங்குகிறார்கள்.

எம்மா வாட்ஸன் ஏற்கெனவே ஒருவனை காதலிப்பது சார்லிக்குத் தெரியும் என்றாலும், அவள் மீதான காதலை மறக்க முடியாமல் இருக்கிறான். ஒரு எழுத்தாளனாக விரும்பும் சார்லிக்கு அண்ணனும் தங்கையும் சேர்ந்து ஒரு டைப்ரைட்டர் வாங்கிக்கொடுக்க, தன்னுடைய மனதில் இருப்பதை எல்லாம் அதில் கொட்டுகிறான்.

Tamil Hollywood Review ThePerksofBeingaWallflower 2குழந்தை போல் நடந்துகொள்ளும் சார்லியை எம்மாவின் தோழி மேரி காதலிக்கத் தொடங்குகிறாள். சார்லியுடன் கைகோர்த்துக்கொண்டு, அவன் வீட்டுக்கே வந்து விஷயத்தை சொல்கிறாள். எப்படியோ சார்லிக்கு ஒரு துணை கிடைத்தது என்று பெற்றோர் சந்தோஷப்படுகிறார்கள். எம்மாவும் சார்லிக்கு ஒரு துணை கிடைத்ததில் ஆனந்தப்படுகிறார்கள். இந்த நேரத்தில் தோழர்கள் அனைவரும் குடித்துவிட்டு சுற்றி உட்கார்ந்து விளையாடுகிறார்கள். சீட்டு எழுதிப்போட்டு, அதில் வருவதை செய்கிறார்கள். சார்லியின் முறை வருகிறது. இந்தக் கூட்டத்தில் அழகான பெண்ணுக்கு சார்லி முத்தம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.  மேரிக்கு முத்தம் கொடுப்பான் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். மேரியும் அவன் முத்தத்திற்கு காத்திருக்கிறாள். ஆனால் சார்லியோ, அழகான பெண் என்றவுடன் எந்த யோசனையும் செய்யாமல் எம்மாவுக்கு முத்தம் கொடுக்கிறான். இதனால் கடுப்பாகும் மேரியும் எம்மாவும் கோபத்துடன் இடத்தை காலி செய்கிறார்கள்.

மீண்டும் தனியனாகிறான் சார்லி. இந்த நேரத்தில் பாட்ரிக்கின் ஹோமோசெக்ஸ் பற்றி தெரிந்த சிலர் கூட்டாக சேர்ந்து தாக்குகிறார்கள். அதை தடுக்கமுடியாமல் எம்மா அலறுகிறாள். அதைக் கண்டதும் தன்னுடைய அத்தனை ஆவேசத்தையும் காட்டி எதிரிகளை அடிக்கிறான் சார்லி. சண்டை போட்டு  பழக்கம் இல்லை என்பதால் சார்லியின்  கை கன்றிப்போகிறது. இதை தொடர்ந்து மீண்டும் சார்லியுடன் நட்பாகிறாள் எம்மா.

Tamil Hollywood Review ThePerksofBeingaWallflower 1நீ இதுவரை யாரையும் முத்தமிட்டதே  இல்லையா என்று சந்தேகமாக கேட்க, இல்லை என்கிறான் சார்லி. இதே கேள்வியை எம்மாவிடம் கேட்கிறான். நான் சின்ன வயதிலேயே முதல் முத்தம் கொடுத்துவிட்டேன் என்று சாதாரணமாக சொல்கிறாள். உன்னுடைய பள்ளி தோழனுக்கா என்று கேட்க, இல்லை என் அப்பாவின் ஆபிஸ் அதிகாரி என்று கண் கலங்க சொல்கிறாள். அப்போதுதான் சார்லிக்கு சட்டென அத்தையின் நினைவு வருகிறது. விபத்தில் செத்துப்போன அத்தை அவள். அத்தை சாகவேண்டும் என்று தான் நினைத்ததால்… அத்தை செத்துவிட்டாள் என்று மனதுக்குள் வருத்தப்படுகிறான் சார்லி. அத்தைக்கும் சார்லிக்கும் என்ன பிரச்னை என்பது  தெரியவரும்போது திரைப்படம் வேறு ஒரு வடிவம் எடுக்கிறது.

தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை எம்மா வாட்சன் ஜீரணித்துக்கொண்டு பயணப்படுகிறாள், ஆனால் அப்படி ஒரு விஷயம் தனக்கு நடந்ததை ஏற்கமுடியாமல்  மனநோயாளியாக வாழ்கிறான் சார்லி என்பதுதான் படத்தின் கரு. இந்த சிக்கலில் இருந்து சார்லி எப்படி வெளிவருகிறான் என்பதை திரையில் பார்த்து  அதிர்ந்து புரிந்துகொள்ளுங்கள்.

படம் முழுவதும் எம்மா அட்டகாசம் செய்கிறார். வயசுக்கும் அழகுக்கும் ஏற்ற வேடம் என்பதால் வெளுத்து வாங்குகிறார். எம்மா முத்தம் கொடுப்பதை பார்க்கும் அத்தனை ரசிகர்களும் சூடேறுவது நிச்சயம். கல்லூரி கலகலப்பு, சேட்டை, குறும்புகளுடன் ஒரு கனமான கத்தியையும் சொருகி அதிர வைத்திருப்பதால் இது, பார்க்கவேண்டிய படமாகிறது.

அத்தை, மாமா, சித்தப்பா போன்ற சொந்தங்களிடம் பெண் குழந்தையை மட்டுமல்ல, ஆண் பிள்ளையையும் விட்டுச்செல்லக்கூடாது என்பதை அழுத்தம்திருத்தமாக சொல்லும் படம். ஆசிரியர் மாணவர் உறவு எப்படி அமையவேண்டும் என்பதையும் தெளிவாக பேசுகிறது இந்தப் படம். நம்மூர் ஆசிரியர்கள் பார்த்து திருந்தவேண்டிய திரைப்படம்.

ஐ.எம்.டி.பி. மதிப்பெண் : 8/10

நமது மதிப்பெண் : 69

டிரைலர்  இதோ:

பின்குறிப்பு :

* ஸ்டீபன் செபாஸ்கி எழுதிய புத்தகத்தின் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். நாவல் எழுதிய எழுத்தாளரே திரைக்கதை எழுதி, இயக்கவும் செய்திருக்கிறார். ஒரு எழுத்தாளர் இயக்குனர் அவதாரம் எடுப்பது அரிய முயற்சியாக கருதப்படுகிறது.

* கல்லூரி படிக்காத எம்மா வாட்ஸனுக்கு அப்படியொரு உணர்வு கிடைக்கும் என்று சொல்லி நடிக்கவைத்தார் ஸ்டீபன். இவர் எம்மா வாட்ஸனின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

* சார்லியை போன்று தானும் சின்ன வயதில் உறவினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், தன்னுடைய சொந்தக் கதையையே கொஞ்சம் மெருகேற்றி இருப்பதாக  ஸ்டீபன் சொல்லியிருக்கிறார்.

* இந்தப் படம் வணிக ரீதியாகவும் விமர்சகர்களாலும் நல்ல முறையில் வரவேற்பு பெற்றது.

The Perks of Being a Wallflower is a 2012 American coming-of-age, drama film. An adaptation of the 1999 epistolary novel of the same name, it was written and directed by the novel’s author, Stephen Chbosky. The film stars Logan Lerman, Emma Watson and Ezra Miller.

Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 536 times, 133 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>