பாக்காம விட்றாதீங்க – சினிமா மேதையின் மாடர்ன் டைம்ஸ் (Modern Times)

Tamil Hollywood modern_times poster. jpg

சார்லி சாப்ளின் இல்லாத சினிமா உலகத்தை யாருமே நினைத்துப் பார்க்கமுடியாது. உலகின் முதல் சூப்பர்ஸ்டார். நகைச்சுவை சிந்தனாவாதி. உலகை குலுக்கிய கலகக்காரர். சினிமா கலையின் உச்சத்தைத் தொட்டவர் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம். மவுன படங்களின் காலத்தில் இருந்து பேசும் படம் வரையிலும் வெற்றியை சுவைத்தவர். சாப்ளின் கைவண்ணத்தில் வெளியான ஒவ்வொரு படமும் தனித்தன்மை வாய்ந்தது என்றாலும், படங்கள் பேசத்தொடங்கிய பிறகும் பிடிவாதமாக மவுன படமாக இயக்கி மாபெரும் வெற்றி அடைந்த மாடர்ன் டைம்ஸ் படத்தை அதிஉன்னது என்ற பட்டியலில் சேர்க்கலாம். உழைப்பாளர்களுக்கு ஆதரவாகவும் முதலாளிவர்க்கத்திற்கு சம்மட்டியடியாகவும் வெளியான படம் இது..

பொருளாதார மந்தத்தால் 1930களில் வேலையும், சம்பளமும் கிடைக்காமல் மக்கள் அல்லாடுகிறார்கள். அதனால் எவ்வளவு வேலை கொடுத்தாலும் செய்வதற்கு தொழிலாளர்கள் தயாராக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தொழிற்சாலையில் நட்டுகளை முடுக்கும் வேலை Tamil Hollywood Modern Times Review 4செய்கிறார் சார்லியாக வரும் சாப்ளின். மனிதர்கள் அனைவரும் கிட்டத்தட்ட இயந்திரங்கள் போன்று நொடிகூட ஓய்வின்றி உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். சாப்பிடுவதற்காக வேலையாட்களுக்கு கொடுக்கப்படும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் ஒரு இயந்திரம் தயாரிக்கப்படுகிறது. அந்த இயந்திரத்தின் பரிசோதனை எலியாக மாட்டுகிறார் சாப்ளின். உணவுத்தட்டுடன் சாப்ளின் முன்பு வரும் இயந்திரம் இறைச்சி, சோளம், சீஸ் எல்லாம் கொடுத்து வாயை துடைத்துவிடுகிறது. மிகச்சிறப்பாக இயந்திரம் வேலை செய்கிறது என்று அனைவரும் சந்தோஷப்பட்டு, இயந்திரத்தின் வேகத்தை அதிகரிக்கிறார்கள். அவ்வளவுதான். ரொட்டி, சீஸ் எல்லாவற்றையும் வாயில் கொட்டி திக்குமுக்காடவைக்கிறது. அதன்பிறகு ஸ்பானருடன் பார்ப்பவர் மூக்கு, பட்டனை எல்லாம் திருகத் தொடங்குகிறார். மனநலம் தவறியதாக மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார் சாப்ளின்.

மனநலம் சரியாகி வரும் சாப்ளின் கையில் நன்னடத்தைக்கான கடிதம் இருந்தாலும் வேலை கிடைப்பது சிரமமாக இருக்கிறது. வேலை கிடைக்கும் இடத்திலும் அவர் எங்கே கைவைத்தாலும் ஏதேனும் எசகுபிசகாக நடக்கிறது. கப்பல் கட்டும் தளத்தில் வேலைக்கு சேரும் சாப்ளின் Tamil Hollywood modern_times review 1பழக்கதோஷத்தில் ஒரு ஆப்பை தட்டிவிட, கட்டப்பட்டுவரும் புதிய கப்பல், அப்படியே தண்ணீருக்குள் மூழ்கிவிடுகிறது.

கம்யூனிசக் கொடியை ஒருவன் கீழே போட்டுவிட்டு போக, அவனிடம் கொடுபதற்காக பின்னே போகிறார் சாப்ளின். அவருக்குப் பின்னே கொடியுடன் போராட்டக்குழு வருகிறது. சாப்ளினை தலைவன் என்று நினைக்கும் போலீசார், கொடியை பிடுங்க முயல, தீவிரமாக எதிர்க்கிறார். வேறு ஒருவரது கொடி என்ற ரீதியில் சாப்ளின் எதிர்ப்பதை தவறாக நினைக்கும் போலீஸ் சிறையில் அடைக்கிறது. இதுபோல் அவ்வப்போது சிறைக்கு போவதும் வருவதும் சாப்ளினுக்கு வழக்கமாகிறது.

யாருமே இல்லாத அனாதையாக அறிமுகமாகிறாள் நாயகி எலனாக வரும் பாலெட் காடெர்ட். பசிக்காக ரொட்டி திருடும் எலனை போலீஸ் விரட்டிவர, அவளுக்காக திருட்டு பட்டத்தை சுமக்கிறார் சாப்ளின். விடுதலையானதும் இருவரும் சந்திக்கிறார்கள். இருவரும் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார்கள். வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்று இருவரும் ஆசைப்படுவதை கவித்துவமாக படமாக்கி இருப்பார் சாப்ளின். வீட்டுக்கு வெளியே இருக்கும் மரங்களில் இருந்து பழங்கள் வீட்டுக்குள் எட்டிப் பார்க்கும். பால் வேண்டும் என்று நினைக்கும்போதே வாசலில் வந்து மாடு நிற்கும். பாத்திரத்தை வைத்தால் வேண்டிய அளவுக்கு, தானாகவே பால் கறந்துவிட்டு போகும். சாப்பாடு மட்டுமே பிரதானம் என்பதுபோல் இருவரும் ஆனந்தக் கனவு காண்பார்கள்.

Tamil Hollywood modern_times review 2அங்காடியில் இரவு காவலாளி வேலை கிடைத்ததும் முதல் வேலையாக காதலியை வரச்சொல்லி, வயிறு நிரம்ப சாப்பிடச்சொல்லி, மெத்தையில் படுக்கவைப்பார். வழக்கம்போல் மீண்டும் திருடர்கள் ரூபத்தில் சிக்கல் வருகிறது. வேண்டப்பட்டவர்களை வரவழைத்து திருடிவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுகிறார் சாப்ளின். மீண்டும் விடுதலை, மீண்டும் வேலை, மீண்டும் போலீசுடன் போராட்டம், மீண்டும் விடுதலை என்று சாப்ளின் வட்டம் சுற்றுகிறது.

விடுதலையாகி வெளியே வரும் சாப்ளின், தன்னுடைய காதலி ஹோட்டலில் டான்சராக இருப்பதை அறிகிறார். அதே ஹோட்டலில் சர்வராக வேலைக்கு சேர்கிறார் சாப்ளின். அதன்பிறகு நடக்கும் அதகளமும், முடிவு என்ன என்பதையும் திரையில் பாருங்கள்.

பேசும்படம் வெளியான பிறகு எடுக்கப்பட்ட மவுனப்படம் என்றாலும் கடைசி நேர பாடலை மட்டும் சாப்ளின் பாடியிருக்கிறார். இயந்திரங்கள் மூலம் தொழிற்புரட்சி ஏற்படுத்தமுடியும் என்பதை சாப்ளின் நம்பினாலும், தொழிலாளர்கள் நசுக்கப்படுவதை பதிவு செய்யவே இந்தப் படத்தை இயக்கினார். நகைச்சுவை கோமாளி என்பதில் இருந்து மேம்பட்ட கலைஞனாகவும் மனிதாபிமானியாகவும் சாப்ளினை உலகறியச் செய்தபடம்.

IMDB : 8.5/10

நமது மதிப்பெண் : 82

முழு படத்தையும் பார்க்க:

பின்குறிப்பு :

  • இந்தப் படத்தை பேசும் படமாக எடுக்க நினைத்து வசனங்கள் எழுதினார் சாப்ளின், ஆனால், அதில் திருப்தி ஏற்படாமல் போகவே மவுன படமாக எடுத்தார்.
  • சாப்ளின் தயாரித்து இயக்கி 1936ம் ஆண்டு வெளியான இந்தப் படம் தொழிற்புரட்சியை கிண்டல் செய்வதாக விமர்சனம் செய்யப்பட்டு பல்வேறு நாடுகளில் தடை போடப்பட்டது.
  • இதுதான் சாப்ளின் எடுத்த கடைசி ஊமைப்படம். இந்தப் படம் எடுப்பதற்கு முன்பு மகாத்மா காந்தியை சந்தித்துப் பேசினார் சாப்ளின். இயந்திரங்களால் மனிதர்களுக்கு பெரும் தீமை நிகழும் என்று காந்தி சொன்னதும் இந்தப் படம் எடுப்பதற்கு ஒரு காரணம் என்றார் சாப்ளின்.
  • வழக்கமாக சாப்ளின் படம் சோகத்தில்தான் முடியும்.. இந்தப் படத்திற்கும் அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டது. சாப்ளின் மருத்துவமனையில் இருப்பதாகவும் நாயகி கன்னியாஸ்திரியாக சேவை செய்வதாகவும் எடுக்கப்பட்டு, அதன்பிறகு இந்த முடிவு மாற்றப்பட்டது.
  • இந்த படத்திற்குப் பிறகுதான் சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தப்பட்டு அமெரிக்கர்களால் ஒதுக்கப்பட்டார்.
  • சாப்ளினின் த கிட், சிட்டி லைட்ஸ், த கிரேட் டிக்டேட்டர் படங்களும் அவரது தனித்தன்மையை காட்டுவன. இதுவரை இல்லாத புதுமாதிரி சாப்ளினை அவரது லைம்லைட் படத்தில் தரிசிக்கலாம்

Modern Times is a 1936 comedy film written and directed by Charlie Chaplin in which his iconic Little Tramp character struggles to survive in the modern, industrialized world. The film is a comment on the desperate employment and financial conditions many people faced during the Great Depression, conditions created, in Chaplin’s view, by the efficiencies of modern industrialization. The movie stars Chaplin, Paulette Goddard, Henry Bergman, Tiny Sandford and Chester Conklin.

Modern Times was deemed “culturally significant” by the Library of Congress in 1989, and selected for preservation in the United States National Film Registry. Fourteen years later, it was screened “out of competition” at the 2003 Cannes Film Festival.

Modern Times Movie Review, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 237 times, 34 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>