பாக்காம விட்றாதீங்க – ஆக்‌ஷன் சூப்பர் ஸ்டாரின் என்டர் த டிராகன் (Enter the Dragon)

Tamil Hollywood enter_the_dragon review poster 2

தற்காப்புக்கலையின் உச்சத்தை தொட்டவரான புரூஸ் லீ, தத்துவம் முதுகலை படித்தவர் என்பதும் ஆழ்ந்த தத்துவ ஞானம் உடையவர் என்பதும் பலருக்கு தெரியாது. கராத்தே கலையை உலகம் முழுவதும் கொண்டுபோய் சேர்த்த லீ, குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சி தொடர்களிலும் பல படங்களிலும் நடித்திருக்கிறார்.

சண்டைக்கு புரூஸ் லீ கொடுத்திருக்கும் விளக்கம் அதியற்புதமானது. களத்தில் எதிரி இருக்கக்கூடாது ஆனால் சண்டை நடக்கவேண்டும். ஒரு சீரியஸ் நாடகம் போன்று சண்டை அமையவேண்டும். போட்டி களத்தில் யார் வேண்டுமானாலும் எதிரியாக வரலாம், எப்படியாயினும் தாக்கலாம் என்பதால் அங்கு வேறு சிந்தனையோ, கனவோ இருக்கக்கூடாது. சண்டை குறித்த டென்ஷன் இல்லாமல் சண்டைக்கு தயாராக இருக்கவேண்டும். எதிரி தடுக்கும்போது தாக்கவும், எதிரி தாக்கும்போது தடுக்கவும் வேண்டும். சண்டை இல்லாத சண்டைதான் என் கனவு என்று சொன்னார் புரூஸ் லீ. இளவயதில் மரணம் அடைந்த காரணத்தால் சில படங்கள் மட்டுமே புரூஸ் லீ நடித்தார் என்றாலும், அவருடைய மாஸ்டர் பீஸ் என்டர் த டிராகன் படத்திற்கு ஏராளமான சிறப்புகள் உண்டு.

Tamil Hollywood Enter the Dragon review 8ஒட்டுமொத்த படமாக பார்க்கும்போது வித்தியாசமான காட்சி அமைப்பு, திடுக்கிடும் திரைக்கதை உத்தி, கண்களில் ஒற்றிக்கொள்ளும் ஒளிப்பதிவு, செவியை குளிரவைக்கும் இசை என எதுவுமே இல்லையென்றாலும் நரம்புகளை முறுக்கேறச் செய்யும் சண்டை காட்சிகளால் ரசிகனை கட்டிப்போடுகிறது என்டர் த டிராகன். இந்தப் படம் உலகெங்கும் உள்ள ஆக்‌ஷன் ரசிகர்களை அதிரவைத்தது. புரூஸ் லீ என்ற பெயர் மந்திரம் மாதிரி உச்சரிக்கப்பட்டது. அதனால் உலகை குலுக்கிய படங்களின் பட்டியலில் சேர்கிறது என்டர் த டிராகன்.

கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமே இல்லை. ஹாங்காங்கில் புகழ்பெற்ற தற்காப்புக்கலை நிபுணராக இருக்கிறார் லீ வேடத்தில் வரும் புரூஸ் லீ. திடீரென ஹான் என்பவரிடம் இருந்து உல்லாச தீவில் நடைபெறும் சண்டை போட்டியில் கலந்துகொள்வதற்கு அழைப்பு வருகிறது. உலகெங்கும் உள்ள தலைசிறந்த வீரர்கள் சண்டையில் கலந்துகொள்ள வருவதாக அறிவிப்பு வருகிறது. ஹான் நடத்த இருக்கும் தற்காப்புக்கலை போட்டியில் கலந்துகொள்வதா வேண்டாமா என்ற சிந்தனையில் லீ இருக்கிறான். அப்போதுதான் அவன் பெண்களை வைத்து செக்ஸ் தொழிலும், போதை மருந்து கடத்தலும் செய்வது தெரிகிறது. ஹான் மீதான குற்றச்சாட்டுகளை உண்மையா என்று கண்டறியுமாறு பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக்கொண்டதும் தீவுக்கு கிளம்புகிறார் லீ.

போட்டியாளர்களுடன் சண்டை போடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஹானுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டுவதிலும் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் இவர் பிரிட்டிஷ் ஏஜென்ட் என்பது தெரியவர, ஒட்டுமொத்த பாதுகாப்பு படையும் புரூஸ் லீக்கு எதிராக போராட வருகிறது. அத்தனை படைகளையும் அடித்து நொறுக்கி ஹானை புரூஸ் லீ ஜெயிப்பதுதான் மிச்ச கதை.

Tamil Hollywood Enter the Dragon review 4இந்தப் படத்தில் புரூஸ் லீயுடன் நடித்த ஜான் சாக்‌ஷன், ஜிம் கில்லி ஆகியோரின் சண்டைகளும் பாராட்டப்பட்டது என்றால் அதற்கு காரணமும் லீதான். இந்தப் படத்தில் புரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கதாக இருந்தது. இவரது வேகமாக கை, கால் அசைவுகளுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு ஒளிப்பதிவு தொழில்நுட்பம் வளரவில்லை என்பதால், ஒரு விநாடிக்கு 24 பிரேம் என்ற கணக்கை மாற்றி விநாடிக்கு 34 பிரேம் என்ற அளவில் காமிரா வேகம் மாற்றி படம் பிடிக்கப்பட்டது.

புரூஸ் லீ நடிப்பில் வெளியான ஃபிஸ்ட் ஆஃப் பியூரி மற்றும் ரிடர்ன் ஆஃப் த டிராகன் போன்ற படங்கள் ஏற்கெனவே வெளியாகி இருந்தாலும், என்டர் த டிராகன் படம்தான் உலகையே குலுக்கிய புரூஸ் லீயின் படம். ஆனால் இந்தப் படம் வெளியானதையும், மிகப்பிரமாண்ட வெற்றி அடைந்ததையும் பார்க்கத்தான் லீ உயிருடன் இல்லை. இந்தப் படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு தலைவலி என்று மாத்திரை போட்டு படுத்தவர், அதன்பிறகு எழாமலே மரணத்தை தழுவினார்.

சீன வம்சாவளியை சேர்ந்தவர் என்றாலும் அமெரிக்காவில் பிறந்தவர் புரூஸ் லீ. அதன்பிறகு பாரம்பரிய கல்வி பெறுவதற்காக சீனாவுக்கு அனுப்பப்பட்டார். தற்காப்பு கலையை ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்த லீ, சீன தற்காப்பு கலையை உலகம் முழுவதும் பரப்புவதற்காக பள்ளி ஒன்று தொடங்கினார். அவரது பள்ளியில் குங்பூ, கராத்தே, ஜூடோ, குத்துச்சண்டை ஆகிய அனைத்து வடிவங்களையும் ஒன்றுசேர்த்து புதிய கலையை கற்றுக்கொடுத்தார்.

Tamil Hollywood Enter the Dragon review 6சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கும் புரூஸ் லீக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்கவேண்டும் என்பதுதான் தீராத ஆசையாக இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு அத்தனை சீக்கிரம் அமையவில்லை. ரிடர்ன் ஆஃப் த டிராகன் வெற்றிக்குப் பிறகு அழைப்பு வந்ததும் உடனடியாக கையில் இருந்த அத்தனை பணிகளையும் தூக்கிப் போட்டுவிட்டு என்டர் த டிராகன் படத்தில் பணியாற்றத் தொடங்கினார். புரூஸ் லீ காலத்திற்கு பிறகு குங்ஃபூ கலை மூலம் பெரும் புகழ்பெற்ற ஜாக்கிசான் இந்தப் படத்தில் அடியாளாக சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.

புரூஸ் லீ வேகத்துக்கு இணையான ஸ்டண்ட் கலைஞர் இதுவரை சினிமாவுலகில் இல்லவே இல்லை என்பதை நிரூபித்திருத்திருப்பதால் என்டர் த டிராகன் பார்க்கவேண்டிய முக்கிய படங்களின் பட்டியலில் சேர்கிறது. இன்றைக்கும் இந்தப் படம் ஆக்‌ஷன் ப்ட ரசிகர்களின் பைபிள் என்று சொன்னால் மிகையில்லை.

IMDB : 7.7/10

நமது மதிப்பெண் : 65

டிரைலர்  இதோ:

பின்குறிப்பு :

  • புரூஸ் லீயின் மறைவுக்குப் பின்னர் 1973ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்காக ஹாலிவுட் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவுக்கு புரமோஷன் செய்யப்பட்டது. யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியையும், உலக அளவில் பிரமாண்டமான வசூலையும் அள்ளிக் குவித்தது.
  • இந்தப் படம் முழுக்க முழுக்க சண்டை காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டதால், அனைத்து வசனங்களும் டப்பிங் நேரத்தில்தான் சேர்க்கப்பட்டன.
  • குகைக்குள் நடக்கும் சண்டைக் காட்சியில் தொடர்ச்சியாக 51 எதிரிகளை புரூஸ்லி அடித்து வீழத்தி செல்வது ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது.
  • செக்ஸ் தொழிலாளிகளாக நடிப்பதற்கு நடிகைகள் தயங்கியதால், நிஜமான செக்ஸ் தொழிலாளர்கள் நடிக்க வைக்கப்பட்டார்கள்.
  • இதுதான் புரூஸ் லீ நடித்த கடைசி படம் என்றாலும், சில பகுதிகள் சேர்க்கப்பட்டு கேம் ஆஃப் டெத் 1978ம் ஆண்டு வெளியானது. புரூஸ் லீயின் மரணம் மற்றும் இறுதி சடங்கு காட்சிகள் படத்தில் இடம் பெற்றது.
  • கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டும் 8 ஆயிரம் கண்ணாடிகள் பயன்படுத்தி உடைக்கப்பட்டன.

Enter the Dragon is a 1973 Hong Kong-American martial arts film directed by Robert Clouse, starring Bruce Lee, John Saxon and Jim Kelly. This was Bruce Lee’s final film appearance before his death on 20 July 1973 at age 32. The film was first released on 26 July 1973 in Hong Kong, six days after Lee’s death.

Often considered one of the greatest martial arts films of all time, in 2004, the film was selected for preservation in the United States National Film Registry by the Library of Congress as being “culturally, historically, or aesthetically significant”. The film was often thought of as the one that sparked the “Kung Fu Kraze” both in the United States as well as beyond.

Enter the Dragon, Enter the Dragon Movie Review, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 337 times, 105 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>