பாக்கவே பாக்காதீங்க – பாசஞ்சர்ஸ் – 37 மார்க் (Passengers)

tamil-hollywood-passengers-review-poster

ஜெனிபர் லாரன்ஸ், கிறிஸ் பிராட் போன்ற அதிபிரபலங்கள் நடித்திருந்தாலும், திரைக்கதை சரியாக அமைக்கப்படவில்லை என்றால் தேறவே தேறாது என்பதற்கு சமீபத்திய உதாரணம் பாசஞ்சர்ஸ்.

5,000 பயணிகளுடன் அவலோன் எனப்படும் விண்வெளி கப்பல் ஹோம்ஸ்டெட் 2 என்ற கிரகத்தை நோக்கி பயணமாகிறது. அந்த கிரகத்தை சென்றடைவதற்கு 120 ஆண்டுகள் ஆகும் என்பதால், அனைவரும் தூக்கநிலையில் ஆழ்த்தப்பட்டுள்ளார்கள். தற்செயலாக விண்வெளி கப்பல் மீது மிகப்பெரிய வின்பாறை மோதிய விபத்தில் மின்சார பழுது ஏற்பட்டு நாயகன் ஜிம் பிரஸ்டனுக்கு (கிறிஸ் பிராட்) மட்டும்  விழிப்பு வருகிறது. விண்வெளி களத்தில் அத்தனை பேரும் தூங்கிக்கொண்டிருக்க தன்னந்தனியே விழித்துக்கொண்டு இருக்கிறான் ஜிம். அவனுக்கு துணையாக இயந்திர மனிதன் ஆர்தர் மட்டுமே இருக்கிறான். இன்னும் 90 ஆண்டுகள் கழித்துத்தான் அத்தனை பேரும் விழிப்பார்கள், அதற்குள் தான் செத்துப்போய்விடுவோம் என்ற எண்ணத்தில் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு ஆளாகிறான்.

tamil-hollywood-passengers-review-1அப்போதுதான் தூக்கநிலையில் இருக்கும் எழுத்தாளர் அரோராவை (ஜெனிபர் லாரன்ஸ்) பார்க்கிறான். அவளுடைய அழகிலும், அவளுடைய எழுத்துக்களிலும் தன்னை மறக்கிறான். தன்னுடைய தனிமையை மறைப்பதற்காக அரோராவை தூக்கத்தில் இருந்து எழுப்பிவிட முடிவு செய்கிறான். அப்படியே செய்தும் விடுகிறான்.

தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ளும் அரோரா, நிலையை எண்ணி மிகவும் கவலைப்படுகிறாள். அவளுடைய தனிமையையும் பயத்தையும் போக்குவதற்கு என்னென்னவோ செய்து, அவளுடைய மனதை கவர்ந்து டேட்டிங்கிற்கு ஒப்புக்கொள்ள வைக்கிறான். வேறு வழியில்லாத அரோரா சந்தோஷமாக அவனை ஏற்றுக்கொள்கிறான். இருவரும் தனிமையில் இனிமை காணும்போது, இயந்திர மனிதன் ஆர்தர் மூலம் உண்மை தெரியவருகிறது.

tamil-hollywood-passengers-review-2தனிமையை போக்கிக்கொள்வதற்காக ஜிம் தன்னை எழுப்பிய உண்மை தெரிந்ததும் கடுமையான ஏமாற்றத்திற்கும் கோபத்திற்கும் ஆளாகிறாள். ஜிம்மை கடுமையாக வெறுக்கிறாள். இந்த நேரத்தில் விண்வெளிக் கப்பலில் திடீரென பல்வேறு கோளாறுகள் ஏற்படுகின்றன. இந்த கோளாறு காரணமாக விண்வெளிக் கப்பலின் தலைமை மெக்கானிக்களில் ஒருவரான கஸ் (லாரன்ஸ் பிஸ்பர்ன்) விழித்துக்கொள்கிறார். விண்வெளிக் கப்பல் மிகுந்த ஆபத்தில் இருப்பதை சொல்லிவிட்டு செத்தும் விடுகிறார்.

ஆபத்தில் இருக்கும் விண்வெளி கப்பலை ஜிம்மும் அரோராவும் சேர்ந்து சரி செய்தார்களா, அரோராவும் ஜிம்மும் மீண்டும் சேர்ந்தார்களா? 90 வருடங்கள் உயிரோடு இருந்து கிரகத்தை அடைந்தார்களா இல்லையா என்பது போன்ற கேள்விகளிலேயே விடையும் இருக்கும். அதனால் மெனக்கெட்டு  படம் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் ஜெனிபர் லாரன்ஸ் என்று சொல்லவே தேவையில்லை. ஆக்‌ஷன் நாயகி என்பதில் இருந்து காதல் தேவதையாக மாறியிருக்கிறார். அழகுப் பொம்மையாக வரும் ஜெனிபருக்கு மட்டும்தான் மதிப்பெண்கள். மற்றபடி கிராவிட்டி, அப்பலோ 13 போன்ற படங்களில் பார்த்து சலித்த காட்சிகள் என்பதால்… ஸாரி…

ஜெனிபர் லாரன்ஸ் ரசிகர்களுக்கு  : 37 மதிப்பெண்

நமது மதிப்பெண் : 35 

டிரைலர பாத்து ஏமாறாதீங்க:

பின்குறிப்பு :

* ஹெட்ஹன்டர்ஸ், தி இமிடேசன் கேம் போன்ற படங்களின் மூலம் புகழ்பெற்ற மார்டென் டைல்டம் இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம்.

* இந்தப் படத்தில் நடித்ததற்காக ஜெனிபர் லாரன்ஸ்க்கு நிச்சயம் ஆஸ்கர் விருது வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்தப் படம் பட்டியலில் இடம் பெறவே இல்லை.

* இந்தப் படத்தில் நடித்தற்காக கிறிஸ் பிராட்டுக்கு 12 மில்லியன் டாலரும் ஜெனிபருக்கு 20 மில்லியன் டாலர் மற்றும் லாபத்தில் 30 சதவீதம் எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Passengers is a 2016 American science fiction adventure film directed by Morten Tyldum and written by Jon Spaihts. It stars Chris Pratt, Jennifer Lawrence, Michael Sheen, Laurence Fishburne and Andy García. The film tells about two people who wake up 90 years too soon from an induced hibernation on board a spaceship bound for a new planet. Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Don’t Watch, At Your Risk, Passengers Movie Review, Tamil Hollywood.

(Visited 493 times, 87 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>