குட்டீஸ்களுக்காக சங்குசக்கரம்

sathish

நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுக்க முழுக்க குழந்தைகள் படமாக சங்குசக்கரம் படத்தை பிரமாண்டமாக தயாரித்துவருகிறார் கே.சதீஷ். K Sathish (@sathishoffl)

புதுமுக இயக்குனர் மாரிசன் இயக்கத்தில் ஃபேன்டஸி படமாக தயாராகும் சங்குசக்கரம் வரும் கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு குதூகலம் தருவதற்காக வருகிறது.

இந்தப் படம் குறித்து பேசினார் கே.சதீஷ். மை டியர் குட்டிச்சாத்தான், அஞ்சலி போன்ற ஒரு சில படங்களே குழந்தைகளை மகிழ்வித்தன. அந்த வகையில் குழந்தைகளுக்குத் தேவையான நல்ல கருத்து மட்டுமின்றி மாய உலகையும் காட்டி மகிழ்விக்க வருறது சங்கு சக்கரம். அது மட்டுமின்றி படம் முழுக்க நகைச்சுவை கொட்டிக்கிடக்கும் இந்தப் படத்தின் முக்கியமான வேடத்தில் திலிப் சுப்பராயன் நடிக்கிறார். பசங்க படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த கீதா, நிசிகேஷ் ஆகியோர் கதையை கொண்டுசெல்ல, ஷபீர் இசை அமைக்கிறார்.

இந்தப்படம் குழந்தைகளுக்காக எடுக்கப்பட்டது என்றாலும் பெரியவர்களும் பார்த்து ரசித்து மகிழமுடியும் அளவுக்கு விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்து இருக்கும் என்கிறார் தயாரிப்பாளர் சதீஷ்.

குழந்தைகளோடு சங்குசக்கரம் பார்க்க தயாரா இருக்கீங்களா?

(Visited 106 times, 17 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>