கலகலப்பூ – சென்னை 28 (2) – 41 மதிப்பெண்கள்

Chennai 28 (2nd Innings) Movie Release Posters

இந்தியா ஜெயித்தாலும் தோற்றாலும் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது ஒரு சுகமான அனுபவம். அப்படியொரு அனுபவத்தை மீண்டும் கொடுத்திருக்கிறார் வெங்கட்பிரபு. கதைக்காக ரொம்பவும் மெனக்கெடாமல் வசனங்களாலும், கதாபாத்திரங்களாலும் கதையை நகர்த்தி ஜாலியான ஒரு மேட்ச் பார்த்த திருப்தியை கொடுத்துவிட்டார் என்பது மட்டும் உண்மை.

முதல் பாகத்தில் வந்தவர்களில் பெரும்பாலோ, கிரிகெட்டை மறந்து குடும்பம், குட்டி என்று செட்டிலாகி இருக்கிறார்கள் என்பதை நீட்டிமுழக்கி சொல்வதாக, படம் ஆரம்பமாகிறது. அத்தனை பேரும் ஓன்றுசேர்ந்து ஜெய் கல்யாணத்துக்காக தேனி போனதும் கதை சூடு பிடிக்கிறது. திடீரென தேனியில் சந்திக்கும் பழைய நண்பன் அரவிந்திற்காக கிரிக்கெட் விளையாடத் தொடங்குகிறார்கள். கிரிக்கெட் விளையாட்டையே மறந்தவர்கள் அரையிறுதியில் அடித்து நொறுக்கிறார்கள். அதனால் கடுப்பாகும் ஊர் டீம் கேப்டன் வைபவ், சென்னை டீமை வெல்வதற்கு மறைமுகமாக திட்டம் போடுகிறான்.

tamil-hollywood-chennai-600028-2-review-2சொப்பனசுந்தரியை வைத்து டீம் ஆட்களை மயக்கி போட்டோ எடுத்துவிடுகிறான். ஃபைனல் மேட்சில் தோற்றுப்போனால் போட்டோவை டெலிட் செய்துவிடுவதாக சொல்ல, அப்படியே தோற்றுப்போகிறார்கள். ஆனால் அந்த போட்டோ வைரலாக பரவிவிட, ஜெய் திருமணம் நின்றே விடுகிறது. இந்த களேபரத்தில் பொண்டாட்டிமார்கள் கோபத்தால் மீண்டும் நண்பர் குழு பிரிந்துவிடுகிறது. கல்யாணம் முடிக்காத பிரம்மச்சாரியான பிரேம்ஜியால் மீண்டும் பிரிந்த நண்பர்கள் எப்படி ஒன்று சேர்கிறார்கள், ஜெய் திருமணத்தை எப்படி நடத்திவைக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மீதி கதை.

சுளீர், பளீர் என்று வந்துவிழும் வசனங்கள் படம் முழுவதும் சிரிக்கவைக்கின்றன. ஆனால்,  படத்தை நகர்த்துவதற்கு அதுவே போதும் என முடிவு செய்திருப்பதுதான் கொஞ்சம் உதைக்கிறது. ஆளுக்கு ஒரு குணத்துடன் மனைவி, குழந்தைகள் என்று இருக்கும் சூழலில் நகைச்சுவைக்கு எவ்வளவோ வாய்ப்பு இருந்தும், அதை பயன்படுத்தாமல் உதிரி நகைச்சுவை வசனங்கள் மட்டுமே இருக்கின்றன. திரைக்கதையோட்டத்தில் ஆங்காங்கே புத்திசாலித்தனம் எட்டிப்பார்க்கிறது என்றாலும் பெரும்பாலும் காதுலபூ சமாச்சாரம்தான்.

tamil-hollywood-chennai-600028-2-review-1மிர்ச்சி சிவாவின் வாய் சவடால் இந்த பாகத்திலும் நன்றாகவே எடுபடுகிறது. ஜெய் நாயகனாக ஜொலிப்பார் என்று பார்த்தால், அவரும் துணை நடிகர் போன்று வந்து செல்வதாகத்தான் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஊர்க்காரர்கள் அத்தனை பேர் போட்டோவையும் கிராபிக்ஸ் செய்து அலப்பரை செய்திருப்பது நல்ல திருப்பம். ஆனால் சம்பந்தமே இல்லாமல் போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே கொலை செய்வதுபோல் பெரிய கூட்டமே நிற்பதும், பெண் வீட்டார் கோபமும் படத்தில் ஒட்டவே இல்லை. சனா அல்தாப்பின் அழகை பாடல் காட்சிகளில் மட்டும்தான் பார்க்கமுடிகிறது, மற்றபடி அவரும் எக்ஸ்ட்ரா பால் மாதிரிதான். யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் எல்லாமே ஸாரி ரகம்.

முதல் பாகத்தில் சென்னை அணியை ஓடஓட விரட்டிய சிறுவர்கள் அணி, மீண்டும் அதே தெனாவெட்டுடன் களம் இறங்குவது புதிய திருப்பம். அந்த அணியை வெல்வது நம்பும்படி இல்லையென்றாலும் சுவாரஸ்யம் இருக்கிறது.

முதல் மேட்சில் செஞ்சுரி அடித்து டீமை ஜெயிக்கவைத்த வீரர், அடுத்த மேட்சிலும் செஞ்சுரி அடிப்பார் என்று எதிர்பார்க்கும் சூழலில் 50 ரன் அடிக்காமல் அவுட்டானது போல் இருக்கிறது படம். கலகலப்புக்கு பஞ்சமில்லை என்றாலும் இன்னும் கொஞ்சம் மெனெக்கெட்டிருந்தால் மீண்டும் செஞ்சுரி போட்டிருக்கலாம்.

டைம் பாச ரசிகர்களுக்கு : 41 மார்க்

சினிமா ரசிகர்களுக்கு : 38 மார்க்

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

Chennai 600028 II is an Indian Tamil-language coming-of-age sports comedy film co produced, written and directed by Venkat Prabhu, who also produces the film along with S. P. B. Charan under Black Ticket Company and Capital Film Works. The film, which is a sequel to Chennai 600028 (2007), features several cast members from the earlier film including Jai, Shiva, Premji, Aravind Akash and Nithin Sathya. The film’s score and soundtrack is composed by Yuvan Shankar Raja.

(Visited 247 times, 64 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>