தற்கொலைதான் வீரமா – மாவீரன் கிட்டு – 39 மார்க் (Maaveeran Kittu Movie Review)

times-tamil-news-maaveeran-kittu-review-poster

எந்த ஓர் போராட்டத்துக்கும் தற்கொலை தீர்வு அல்ல. ஆனால் தற்கொலையை மாபெரும் தியாகம், மாவீரம் என்று சொல்வதால், சுசீந்திரன் சொல்லவந்த கருத்து அத்தனையும் அடிபட்டு போகிறது.

அழுத்தம் திருத்தமாக சாதி பிரச்னையை பேசவேண்டும் என்பதற்காக 1987க்கு போயிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். இன்றும் சாதிப் பிரச்னை உச்சத்தில் இருக்கும்போது, எதற்காக மெனக்கெட்டு அந்தக் காலகட்டத்தை தேர்வு செய்தார் என்பதுதான் ஆச்சர்யம். சாதி பிரச்னை எல்லாம் அந்தக் காலகட்டத்தில் மட்டும்தான் இருந்ததோ, இப்போது இல்லையோ என்ற மாய தோற்றத்தை இன்றைய நகரத்து இளசுகள் மத்தியில் விதைக்கும் அபாயம்  இந்தப் படத்தில் இருக்கிறது.

Tamil Hollywood-maaveeran-kittu-review-1உயர் சாதி மக்கள் வசிக்கும் பாதையில் கீழ் சாதி பிணம் போகக்கூடாது என்ற பிரச்னையுடன் படம் ஆரம்பமாகிறது. நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு வழங்கினாலும், பிணம் மட்டுமே அந்த வழியில் போகும் நிலை ஏற்படுகிறது. இந்த நேரத்தில்தான் மாநிலத்திலேயே முதல் மாணவனாக +2வில் வெற்றி பெறுகிறான் கிருஷ்ணமூர்த்தி என்ற கிட்டு. அடுத்து கலெக்டருக்கு படிப்பதுதான் நல்லது என்று சின்ராசாக வரும் பார்த்திபன் சொல்வதைக் கேட்டு கலெக்டருக்கு படிப்பதற்கு தயாராகிறார். இவர் கலெக்டருக்கு படிப்பதை பொறுக்கமுடியாத மேல் மக்கள், இவரை என்ன செய்கிறார்கள் என்பதுதான் படம்.

இடையில் ஆணவக்கொலை வந்துபோகிறது. பாசமாக வளர்த்த மகளை சாதிக்காக பெத்த அப்பனே குத்திவிட்டு, ஸ்டேஷனில் பெருமையாக சரண் அடைகிறான். கீழ்சாதி மக்கள் படிக்கச் செல்வதால்தான் திமிராக நடக்கிறார்கள் என்று பஸ்ஸை நிறுத்தி வைக்கிறார்கள். அதனால் Tamil Hollywood-maaveeran-kittu-review-3சொந்தமாக பஸ் வாங்கி ஓட்டினால் அதற்கும் தீ வைக்கிறார்கள்.

ஆக, அடிமைப்பட்டு கிடக்கும் மக்களும் ஆட்டிவைக்க நினைக்கும் மக்களும் எப்போதும்போல் எதிரெதிர் பக்கம்தான் நிற்கிறார்கள். இவர்களை ஒன்றுசேர்க்க அல்லது பாடம் கற்றுக்கொடுக்க புத்திசாலி மாணவன் விஷ்ணு என்னமோ செய்யப்போகிறான் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. ஆனால் இரண்டாம் கதாநாயகன் போல், ஶ்ரீதிவ்யாவுடன் டூயட் பாடுவதில் மட்டும் கவனமாக இருக்கிறார். கதாநாயகனாக அறியப்படுவது பார்த்திபன் மட்டும்தான். ஊரையே மிரட்டிக்கொண்டிருக்கும் போலீஸ் ஆபிஸர், எதற்காக பார்த்திபனை பார்த்தால் மட்டும் பம்முகிறார் என்பது புரியாத புதிர்.

Tamil Hollywood-maaveeran-kittu-review-4ஏற்கெனவே ஊர் மக்களுக்கு தலைவனாக இருக்கும் பார்த்திபன், பெரிய தலைவனாக வேண்டும் என்ற ஆசையில் விஷால் எடுக்கும் முடிவு முட்டாள்தனமாக இருக்கிறது. இந்தப் படத்துக்கு காதல் பாடல்கள் எல்லாமே இடைஞ்சலாகத்தான் இருக்கிறது. அதேபோல் இந்தப் படத்திற்கு செட் பிராப்பர்ட்டி போல் எதற்காக சூரி என்று கேட்கவும் தோன்றுகிறது. யுகபாரதியின் வசனங்கள் மனதை நன்றாகவே தைக்கிறது. ஆனால் படம் முழுக டாக்குமென்ட்ரி வாடை வீசுவதை தவிர்க்க முடியவில்லை.

நல்ல விஷயத்தை படத்தில் சொல்ல வேண்டும் என்பதற்காக, நல்ல விஷயங்களை மட்டும் படம் முழுவதும் சொல்லக்கூடாது சுசீந்திரன்.

அதனால் படத்திற்கு 39 மார்க் என்பதே, சொல்லவந்த கருத்துக்காக மட்டும்தான்.

ஒட்டுமொத்த படமாக பார்த்தால் ஸாரி…

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

Maaveeran Kittu (English: Warrior Kittu) is an Indian Tamil-language period drama film written and directed by Suseenthiran. The film stars Vishnu and Sri Divya in lead roles while R. Parthiepan and Soori in important supporting characters. The movie is about a warrior who struggled to uphold the rights of the Tamil people in this land. Maaveeran Kittu Tamil Movie Review, மாவீரன் கிட்டு திரைப்பட விமர்சனம், Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Just see, Just watch, Tamil Hollywood

(Visited 172 times, 25 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>