சபாஷ் வாத்தியார் – ஃப்ரன்ட் ஆஃப் த க்ளாஸ் (Front of The Class)

Front of the Class (2008) TV Movie

Directed by Peter Werner

Shown: poster art

பாக்காம விட்றாதீங்க – ஃப்ரன்ட் ஆஃப் த க்ளாஸ்

தன்னிடம் இருக்கும் குறையை பிறரிடம் இருந்து மறைக்கத்தான் எல்லோரும் முயற்சி செய்வார்கள். தன்னுடைய குறையை  எவரிடமும் மறைக்காமல் வென்று காட்டிய ஒரு நிஜ மனிதனின் வாழ்க்கை படமே ஃப்ரன்ட் ஆஃப் த க்ளாஸ். இவன் தன்னம்பிக்கையின் உச்சகட்டம் என்பதால் நிச்சயம் பார்க்கவேண்டிய படத்தின் பட்டியலில் சேர்கிறது இது.

அவ்வப்போது   தன்னை அறியாமலே பக்பக் என்று கழுத்தை வெட்டிக்கொண்டு சத்தமாக சொல்கிறான் சிறுவன் பிராட் கோஹன். அவனுடைய தந்தையில் இருந்து பள்ளி ஆசிரியர், மாணவர்கள் வரையிலும் அவன் வேண்டுமென்றே அப்படி செய்வதாக நினைத்து கண்டிக்கிறார்கள். என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று  பிராட் சொல்வதை நம்ப மறுக்கிறார்கள். அதனால் அப்பா வீட்டில் இருந்து பிரிந்துபோக, முன்னிலும் அதிகமாக பக்பக் என்று சொல்லத் தொடங்குகிறான்.

tamil-hollywood-front-of-the-class-review-1ஒரு மனநல மருத்துவரிடம் கூட்டிச்செல்கிறாள் அம்மா. டைவர்ஸ் பிரிவினால் அப்பா இல்லாத வேதனைதான் அவனுக்கு இப்படி வெளிப்படுகிறது என்று சொல்லி, மருந்துகள் எழுதிக் கொடுக்கிறார். மருந்துகளால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை தெரிந்துகொள்ளும் பிராட், அதனை உட்கொள்ள மறுக்கிறான். அவன் கத்துவதை பொறுக்கமுடியாமல் பள்ளியில் இருந்து வெளியேற்றுகிறார்கள்.

தன்னால் அம்மாவுக்கும் தம்பிக்கும் துன்பம் என்று மிகவும் வருந்துகிறான் பிராட். அவனுடைய பிரச்னை என்னவென்று அறிந்துகொள்வதற்காக மருத்துவம் சம்பந்தப்பட்ட அத்தனை புத்தகங்களையும் படிக்கிறாள் அம்மா. அப்போதுதான் இது டோரட் சின்ட்ரோம் (Tourette syndromeஎனப்படும் ஒரு வகையான நரம்பு பிரச்னை என்பதை அறிகிறாள். மனநல மருத்துவரிடம்
tamil-hollywood-front-of-the-class-review-2இதை காட்டியதும், அவரும் ஒப்புக்கொள்கிறார், இதற்கு மருந்து கிடையாது என்றும்  சொல்கிறார்.

பிராட் போலவே இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களை சந்தித்தால், பிரச்னைக்கு ஏதேனும் தீர்வு கிடைக்கலாம் என்று போகிறாள். அந்த இடத்தில் பிராட் போலவே ஏராளமான பாதிப்புக்கு உள்ளானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைவரும் அந்த பாதிப்பில் உறைந்து கிடைப்பதைக் கண்டு, இனிமேல் இங்கு வரவேண்டாம் என்று கூட்டிக்கொண்டு கிளம்புகிறாள்.

வேறு ஒரு பள்ளிக்குச் செல்கிறான் பிராட். அங்கேயும் ஆசிரியரிடம் பிரச்னை உருவாகிறது. தலைமை ஆசிரியர் அவனை மியூசிக் ஹாலுக்கு வரச்சொல்கிறார். இசை நிகழ்ச்சி நடக்கும்போது, பிராட் மட்டும் அவ்வப்போது வித்தியாசமான ஒளி எழுப்புவதை கவனிக்கிறார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் அவனை மேடைக்கு அழைக்கிறார். ஏன் இப்படி செய்கிறாய் என கேட்கும்போது,
tamil-hollywood-front-of-the-class-review-3தனக்கு வந்திருக்கும் பிரச்னையை சொல்கிறான். உனக்கு நாங்கள் எந்த வகையில் உதவி செய்யமுடியும் என்று கேட்க, என்னையும் சாதாரண ஒரு மாணவனாக நடத்தினால் போதும் என்றதும், அத்தனை பேரும் எழுந்து கை தட்டுகிறார்கள். தனக்கு அங்கீகாரம் கிடைப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறான் பிராட்.

படித்து முடித்து பெரியவனாகிறான் பிராட். அவனுடைய அப்பாவின் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்க்கச் சொல்கிறார். ஆனால் பிராட் மிகவும் தீர்மானமாக இருக்கிறான். நான் ஆசிரியராக மாறி, மாணவர்களுக்கு பாடம் நடத்தப்போகிறேன் என்கிறான். அடிக்கடி விநோத குரல் எழுப்பும் உன்னால் எப்படி மாணவர்களுக்கு பாடம் எடுக்கமுடியும் என்று கேள்வி எழுப்ப, என்னால் முடியும். நான் வேறு எந்த வேலையும் பார்க்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறான். வரிசையாக ஏராளமான பள்ளிகளுக்கு சென்று வருகிறான், அத்தனை இடங்களிலும் அவனுக்குத் தோல்விதான் கிடைக்கிறது. எங்களுடைய ஆசிரியர் குறை இல்லாதவராக இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.

tamil-hollywood-front-of-the-class-review-624 பள்ளிகளுக்குச் சென்ற பிராட், தன்னுடைய கொள்கையை கொஞ்சம்தளர்த்திக்கொள்கிறான். ஆசிரியர் வேலை கிடைக்கும்வரை வேலை பார்க்கிறேன் என்று அப்பாவிடம் செல்கிறான். 25வது பள்ளியில் அவனுடைய ஆர்வத்தை மதித்து வேலை கொடுத்து, இரண்டாம் வகுப்பு ஆசிரியராக பணியமர்த்துகிறார்கள்.

அந்தக் குழந்தைகளிடம் பிராட் எப்படி அறிமுகமாகிறான், எப்படி பாடம் நடத்துகிறான், எப்படி சிறந்த ஆசிரியர் விருது வாங்குகிறான் என்பதெல்லாம் அத்தனை இயல்பாக, அத்தனை மென்மையாக நகர்கிறது. இவனுடைய குறைகளை ஏற்றுக்கொள்ளும் அழகான காதலியும் கிடைக்கிறாள்.

tamil-hollywood-front-of-the-class-review-5உடலில் ஏதேனும் குறை இருந்தால் வாழ்நாள் முழுவதும் அழுதுகொண்டு இருக்கவேண்டும் என்றில்லாமல், தன்னுடைய குறை எங்கே இருக்கிறதோ, அதே பிரச்னையை மீறி சாதிக்கவேண்டும் என்று முடிவெடுத்து வென்றதில்தான் சாதனையாளனாக உயர்ந்திருக்கிறான் பிராட். நல்லாசிரியர் விருது வாங்கியதும் அவன் கொடுக்கும் உரை ஆயிரம் தன்னம்பிக்கை கட்டுரைகளுக்கு சமம். அதனால் நேரம் கிடைக்கும்போது குழந்தைகளையும் அமரவைத்து பார்த்து மகிழுங்கள். கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் பார்க்காம விட்றாதீங்க.

திடுக்கிடும் சம்பவங்கள், எதிர்பாராத நிகழ்வுகள் எதுவுமே படத்தில் இல்லையென்றாலும் சந்தோஷமாக படத்தை பார்க்கவைத்திருக்கும் இயக்குனர் பீட்டர் வெர்னரை பாராட்டாமல் இருக்கமுடியாது.

டிரைலர்  இதோ:

பின்குறிப்பு :

  • அமெரிக்காவை சேர்ந்த பிராட் சோஹனின் நிஜ வாழ்க்கை சம்பவங்கள் அடங்கிய இதே பெயரில் வெளியான நூலை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டது.
  • சின்னத்திரை நடிகராக இருந்து பெரியதிரைக்கு வந்திருக்கும் ஜேம்ஸ் ஓக் நடிப்பில் நிஜமாகவே பாதிக்கப்பட்டவராக மிரட்டியிருக்கிறார்.
  • ஏராளமான டெலிவிஷன் சீரியல் எடுத்திருக்கும் பீட்டர் வெர்னரின் வெற்றிகரமான சினிமா முயற்சி இது. இந்தப் படத்துக்கு எந்த விருதும் கிடைக்கவில்லை, பெரிய வசூல் வேட்டையும் ஆகவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

 

முழு படத்தையும் பார்க்க:

Front of the Class is a 2008 American drama film based on the book by Brad Cohen, Front of the Class: How Tourette Syndrome Made Me the Teacher I Never Had, co-authored by Lisa Wysocky.

The book was made into a Hallmark Hall of Fame TV movie starring newcomer James Wolk—a 2007 University of Michigangraduate and featuring Treat Williams and Emmy Award winning actress Patricia Heaton as Cohen’s parents.

Front of The Class, Front of The Class Movie Review, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 289 times, 51 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>