என்னம்மா இப்படி செத்துச்செத்து காதலிக்கிறீங்க

Sin_City_2005_poster

‘சின் சிட்டி’ விமர்சனம்:

ரத்தம் தெறிக்கும் கொலைகளை கலைத்துவமாகக் காட்டமுடியும் என்று நிரூபித்த வகையில் ஃப்ராங்க் மில்லருக்கு மெகா சல்யூட் அடித்துவிட்டுத்தான் விமர்சனத்துக்குள் நுழையவேண்டும். இந்தப் படத்தில் நொடிக்கு நொடி ரத்தம் வழிந்துகொண்டே இருந்தாலும், அத்தனைக்கும் பின்னே காதலே இருக்கிறது. அதுவும் கன்னாபின்னா காதல். படுவித்தியாசமான மூன்று காதல்கள் ஒன்றுக்கொன்று குறுக்கும்நெடுக்குமாக சந்திப்பதுதான் சின் சிட்டி. ஒரு காட்சியில் மூன்று காதலும் சந்திக்கிறது என்பதுதவிர தேவையற்ற குட்டையைக் குழப்பும் திரைக்கதை அமைப்புகள் இல்லை.

Sin City_Bruce_Willis_013

முதல் காதல் குழந்தைத்தனமும் கவிதை நயமும் நிரம்பியது. 11 வயதில் செக்ஸ் வெறிபிடித்த கும்பலிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிய புரூஸ் வில்லிஸை எட்டு வருடங்கள் கழித்து சந்திக்கிறாள் நான்ஸியாக வரும் ஜெசிகா ஆல்பா.  அப்போது புரூஸ் கிட்டத்தட்ட 70 வயது தாத்தாவாக, எந்த நேரமும் மரணத்தைத் தொட்டும் இதய நோயாளியாகவும்  இருக்கிறார். ஜெசிகாவை மீண்டும் எதிரிகள் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்று புரூஸ் வில்லிஸ் நிஜமாகவே கவலைப்பட, அவளோ, ‘நான் இத்தனை வருடங்களும் உங்களைத்தான் காதலுடன் நினைத்துக்கொண்டே இருந்தேன். நீங்கள்தான் என் வாழ்க்கை. உங்களுடன் இப்போதே நான் உறவுகொள்ள வேண்டும்’ என்றபடி அதற்கான ஆயத்தவேலைகளில் பரபரவென  இறங்குகிறாள். புரூஸ் வில்லிஸ் மறுத்துக்கொண்டே இருக்கும் நேரத்தில் கரடி போல் நுழைகிறது எதிரிகள் கூட்டம்.  அரசியல் பலமும் அதிகார பலமும் மிகுந்த எதிரிகளிடமிருந்து ஜெசிகாவை மீண்டும் தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றுகிறார் வில்லிஸ்.

sin-city

அடுத்த காதல் முரட்டுத்தனமானது.  ஒரே ஒரு இரவு மட்டுமே தன்னுடன் கழித்த அழகு தேவதை ஹோல்டிக்காக  மாபெரும் படையை எதிர்த்து துவம்சம் செய்யக் கிளம்புகிறான் மார்வ். ஹல்க் கதாபாத்திரத்தின் மினியேச்சர் என்று இவனை சொல்லலாம். கோபம் வந்தால் எத்தனை பேர் வந்தாலும் எதிர்த்து வெல்லும் உடல் பலமும் அறிவுத்திறனும் கொண்டவன். தன்னுடைய பலத்தை நம்பி  அடைக்கலம் வந்த ஹோல்டியைக் கொன்றது மட்டுமின்றி தன்னையும் போலீஸில் சிக்கவைக்க  எதிரிகள் முயற்சி செய்வது தெரியவர தப்பித்து எதிரிகளைத் தேடுகிறான்.

பெண்களைக் கொன்று உடல்களைத் தின்றுவிட்டு தலைகளை மட்டும் அழகுப்பொம்மையாக மாட்டிவைக்கும் எதிரியைப் பார்த்து திகைக்கிறான். நாட்டின் உயர்ந்த பதவி வகிக்கும்  ஒருவரின் ஆதரவு அவனுக்கு இருப்பதை அறிந்தும், உள்ளே நுழைந்து அடித்து துவம்சம் செய்கிறான்.  எதிரியின் கை, கால்களை வெட்டிவிட்டு அவன் வளர்த்த நாயைவைத்தே அவன் உடலை உயிருடன்  தின்னவைப்பது குரூரத்தின் உச்சகட்டம்.

clive-owen-sin-cityஅடுத்தது அதிரடிக் காதல். பாலியல் தொழில் நடக்கும் ஒரு நகரப்பகுதிக்குள் முரடர்களை நுழையவிடாமல் தடுப்பதுடன் போலீஸுக்கும் கட்டுப்பாடு விதித்து முறைப்படி (?) தொழில் நடத்தும் கருப்புத் தலைவியின் ஆண்மைக் காதலனாக வருகிறான் கிளைவ் ஓவன். சரியான புரிதல் இல்லாமல் ஒரு போலீஸ்காரனை பாலியல் கும்பல் சுட்டுக்கொல்கிறது. இந்த உண்மை போலீஸுக்குத் தெரியவந்தால் சிக்கலாகும் என்பதால் அதனை மறைக்க முயல்கிறது. ஆனால் விஷயத்தை அறிந்துகொள்கிறது ஒரு கொடூர தீவிரவாதக் கும்பல்.  கிளைவ் ஓவனைக் கட்டுப்படுத்தி போலீஸ் சடலத்தை மீட்க வருகிறது. இந்தப் போராட்டத்தில் சரக் சரக்கென்று  எதிரி ஆட்களின் உடல்களை  வெட்டி வீழ்த்தி வெடிகுண்டு வீசி மீண்டும் அவர்களின் நகரப்பகுதியை கைப்பற்றுகிறார் கிளைவ். ஒரு  துரோகம் செய்யும் பெண்ணுக்கு பரிசாக மரணம் பரிசாகக் கிடைக்கும் காட்சியில் தொடங்கும் படம், அதேபோல் துரோகம் செய்யும்  இன்னொரு பெண்ணிடம் முடிகிறது. இதுதான் சின் சிட்டி.

sin cityகருப்பு வெள்ளையில் எடுத்திருப்பதாலே இந்தப் படம் கலைப்படமாக மாறிவிட்டதுடன் ரத்தம் மீதான பயத்தையும் குறைத்திருக்கிறது. தொடைகளுக்கு நடுவே சுடுவது, தலையைத் தனியே வெட்டுவது, உடல் பாகங்களை கூறுபோட்டு அறுப்பது போன்ற காட்சிகளை பார்க்க விரும்பாதவர்கள் கண்களை மூடிக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி காட்சிகளின் இயல்புத்தன்மை கெட்டுவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் சில பெண்கள் நிர்வாணமாக நடைபோடுவதால் குடும்பத்துடன் படம் பார்க்கும் எண்ணம் இருந்தால் கைவிடவும், நான்கு நாட்களுக்கு சாப்பாடு கிடைக்காது. கலைநயம், தொழில்நேர்த்தி, காட்சியமைப்பு, கதாபாத்திரங்களின் வலிமைகளை ரசிக்க விரும்பும் அனைவரும் மறக்காமல் பார்க்கவேண்டிய படம்.

முன்குறிப்பு : இந்தப் படம்  ஃப்ராங்க் மில்லர் எழுதிய மூன்று கிராபிக் நாவல்களை (The Hard Goodbye, The Big Fat Kill, That Yellow Bastard) அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டவை. இவற்றை யாராலும் படமாக எடுக்கவே முடியாது என்று எண்ணப்பட்டதாம்.

பின்குறிப்பு : கடந்த வருடம் சின் சிட்டி: எ டேம் டூ கில் ஃபார் – என்ற பெயரில் அடுத்த பாகம் வெளியானது. இதுவும் நாவலை அடிப்படையாகக் கொண்டது என்றாலும் உலக மக்கள் அனைவராலும் நாறடிக்கப்பட்டது. அதனால் தயவுசெய்து இதனையும் முன்னதையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

(Visited 240 times, 25 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>