மேதமைக்கு பரிசு ஆண்மை நீக்கம் – த இமிடேஷன் கேம் (The Imitation Game)

the-imitation-game-1-tamil-hollywood

பாக்காம விட்றாதீங்க – த இமிடேஷன் கேம்

இந்த உலகை ஆட்டிப்படைப்பதற்கு ஹிட்லர் வசம் இருந்த ஒரு வலிமையான ஆயுதம் எனிக்மா. ஒரு டைப்ரைட்டர் போல் இருக்கும் எனிக்மா என்ற இயந்திரத்தின் மூலம் தாக்குதல் நடத்தவேண்டிய இடங்களை சங்கேத வார்த்தைகளாக மாற்றி அனுப்புகிறார்கள்  ஜெர்மனியர்கள். இந்த சங்கேத வார்த்தைகளை கண்டுபிடிக்க முடியாமல் இங்கிலாந்து, பிரான்ஸ், சோவியத் யூனியன் போன்ற நாடுகள் தடுமாறிக்கொண்டிருக்க, கொஞ்சமும் சிரமம் இல்லாமல் முன்னேறிக்கொண்டே இருந்தார் ஹிட்லர். இந்த எனிக்மா அனுப்பும் சங்கேத வார்த்தைகளை கண்டறிவதற்கு 150 மில்லியன் மில்லியன் மில்லியன் சாத்தியக்கூறுகள் இருந்ததால், என்கோடிங்கை உடைப்பது சாத்தியமில்லாமல் போகிறது. இதனை உடைத்தது மட்டுமின்றி இன்றைய உலகை ஆட்டிவைக்கும் கம்ப்யூட்டருக்கு அடித்தளம் போட்ட ஆலன் ட்யூரிங் என்பவரது வாழ்க்கை கதையே த இமிடேஷன் கேம்.

Tamil Hollywood The Imitation Game Review

ஒவ்வொரு போரின் வெற்றிக்குப் பின்பும் ஏராளமான போர்வீரர்களின் தியாகம் இருக்கும், ஆனால் இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து வெற்றிக்குப் பின்னே ஆலன் போன்ற அறிவாளிகளின் கடுமையான உழைப்பும் இருந்தது என்பதை சொல்லும் வரலாற்று படம்.

ஆலன் ட்யூரிங் போலீஸ் விசாரணையில் இருக்கும்போது படம் ஆரம்பமாகிறது. யார் அவர் என்று விசாரிக்கும்போது கதை விரிகிறது. எனிக்மா இயந்திரத்தை ராணுவ வல்லுனர்களால் மட்டும் ஆராய்ந்துவிட முடியாது என்பதால், நாட்டில் இருக்கும் புத்திசாலியான சிலரை வேலைக்கு அமர்த்துகிறார்கள். அதில் ஒருவர்தான் கணிதவியல் மேதையான ஆலன் ட்யூரிங்.

the-imitation-game-6-tamil-hollywoodமிகவும் புத்திசாலித்தனம் நிறைந்த  எனிக்மா இயந்திரத்தின் சங்கேத வார்த்தைகளை உடைப்பதற்கு, அதைவிட புத்திசாலித்தனமான ஒரு இயந்திரத்தால் மட்டுமே முடியும் என்ற முடிவுக்கு வருகிறார் ஆலன். இதற்கு சக அறிவுஜீவிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு வந்தாலும், சர்ச்சிலின் ஆதரவு கிட்டுகிறது. அதனால் ஏகப்பட்ட பவுண்ட்ஸ்களை கொட்டி புதிய இயந்திரத்தை உருவாக்கத் தொடங்குகிறார். தன்னுடன் வேலை செய்யும் சில அறிவுஜீவிகளால் தனக்கு உபயோகமில்லை என்று நினைக்கும் ஆலன், குறுக்கெழுத்துப் போட்டி நடத்தி மிகவும் புத்திசாலித்தனமான இரண்டு பேரை தேர்வு செய்கிறார். அவர்களில் ஒருத்தி ஜோன் கிளார்க் ஆக வரும் கெய்ரா நைட்லி.

கெய்ராவின் புத்திசாலித்தனத்தால் கவரப்படுகிறார்  ஆலன். தன்னுடைய திட்டங்களை அவளுடன் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு பிற அறிவுஜீவிகளை மதிக்கத் தவறுகிறார்.  இது தவறு என்று ஆலன் எடுத்துச்சொல்லும் போதுதான் உண்மையை உணர்கிறார். அனைவரும் இணைந்து செயலாற்றினால் விரைவில் வெற்றி கிடைக்கும் என்பதை உணர்ந்து, அனைவருடனும் இணக்கமாக செயல்படத் தொடங்குகிறார்.

Tamil Hollywood The Imitation Game Review

இந்த நேரத்தில் ஆலன் ஒரு சோவியத் உளவாளி என்று புகார் கிளம்புகிறது. அதற்கு ஆதாரம் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்படுகிறார். இரண்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டபிறகும் கண்டறியமுடியவில்லை. இனி ஆலன் சரிப்பட மாட்டான் என்று மேலிடம் முடிவு செய்யும்போது, மற்ற அனைவரும் ஆலனுக்கு துணை நிற்கிறார்கள். அதனால் இயந்திரத்தின் மூலம் சங்கேத வார்த்தைகளை கண்டறிய மேலும் ஒரு மாதம்  கிடைக்கிறது.

இந்த நேரத்தில் ஜோனுடன் காதலில் விழுகிறான் ஆலன். ஜோனின் தோழியுடன் பேசும்போது ஒரு வார்த்தை பொறியாக வந்து விழுகிறது. ஜெர்மனியர்கள் அனுப்பும் எல்லா செய்திகளிலும் ஒரு ரகசிய குறியீடு இருக்கும் என தெரியவருகிறது. அதனை கண்டறிந்து மிஷினை இயக்குகிறான் ஆலன். அந்த இயந்திரம் சரியான குறியீட்டை காட்டும் ஒருசில நிமிடங்களில் ஆலன் காட்டும் முகபாவங்களுக்கு எத்தனை ஆஸ்கர் கொடுத்தாலும் ஈடாகாது.

ஒருவழியாக எனிக்மா அனுப்பும் சங்கேத பாஷையில் உள்ள தகவல்களை அறிந்துகொள்கிறார்கள். உடனடியாக எங்கு தாக்குதல் நடக்கப்போகிறது என்பதை அறிந்து தடுத்து நிறுத்துவோம் என்று சக அறிவுஜீவிகள் சொல்ல, வேண்டாம் என்கிறான் ஆலன்.

the-imitation-game-2-tamil-hollywoodதாக்குதல்களை இப்போது நிறுத்திவிட்டால், எனிக்மா அனுப்பும் தகவல்களை டிகோட் செய்துவிட்டதை ஜெர்மனியர்கள் அறிந்துகொள்வார்கள். அதன்பிறகு வேறு ஒரு வகையில் தகவல் அனுப்புவார்கள். நாம் அந்த சங்கேத வார்த்தைகளை கண்டறிய மேலும் மெனக்கெட வேண்டும். அதனால் எனிக்மா தகவல்களை நாம் கண்டறிந்த ரகசியம் யாருக்கும் தெரியக்கூடாது என்கிறார். ஆலனின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. அதன்பிறகான போரில் யார் உயிருடன் வாழலாம், யார் வாழக்கூடாது என்பதை பிரிட்டன்  தீர்மானிக்கிறது. இந்த வகையில் லட்சக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. இதன்பிறகுதான் ஜெர்மனியின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டு தோல்விக்கு தள்ளப்பட்டது.

இத்தனை பெரிய வெற்றிக்கு காரணமாக இருந்த ஆலனுக்கு அரசு சார்பில் எவ்விதமான மரியாதையோ, மதிப்போ கிடைக்கவில்லை. ஆனால் ஆலன் ஹோமோ செக்ஸ் மீது விருப்பம் கொண்டவர் என்று குற்றம் சுமத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையா அல்லது ஆண்மையை அகற்றும் தண்டனையா என கேட்கப்படுகிறது. தன்னுடைய உயிரினும் மேலான இயந்திரத்தை பிரிய மனமின்றி ஆண்மை அகற்றும் தண்டனையை ஏற்றுக்கொள்கிறார். அதனால் பாதிக்கப்படும் ஆலன் 41 வது வயதில் தற்கொலை செய்துகொண்டார் என்கிறது வரலாறு.

the-imitation-game-7-tamil-hollywoodஒரு போரின் வெற்றி, தோல்விக்குப் பின்னே என்னவெல்லாம் இருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்லியிருப்பதால் பார்க்கவேண்டிய பட்டியலில் சேர்கிறது த இமிடேஷன் கேம்.

சின்ன வயதில் பிரிந்த நண்பன் கிறிஸ்டோபர் பெயரை இயந்திரத்துக்கு சூட்டியதுடன், அதை எப்போதும் பிரியக்கூடாது என்று நினைக்கும் ஆலனுக்கு வாழ்க்கை முழுவதும் தனிமை பரிசாக கிடைப்பதும் எந்த் கிடைத்ததும் அங்கீகாரம் கிடைக்காததும் மனதை கனக்கச்செய்கிறது. புத்திசாலித்தனமான வசனத்தின் மூலம் கணித மேதையாக ஆலனை அனைவரையும் அங்கீகரிக்கச் செய்வதன் மூலம் வெற்றியடைகிறார் இயக்குனர் மார்ட்டென்.

டிரைலர்  இதோ:

பின்குறிப்பு :

*எட்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டாலும், சிறந்த திரைக்கதை என்ற வகையில் ஒரே ஒரு விருது மட்டுமே இந்தப் படத்துக்கு       கிடைத்தது பெரும் ஏமாற்றமே. அதேபோல் ஐந்து கோல்டன் க்ளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு, ஒன்றுகூட கிடைக்கவில்லை.

*எழுத்தாளர் ஆன்ட்ரு ஹாட்ஸ் எழுதிய ஆலன் டூரிங் – த எனிக்மா என்ற புத்தகத்தின் அடிப்படையில்  எடுக்கப்பட்ட படம் இது.

*நார்வேயை சேர்ந்த மார்ட்டென் டைல்டும் இயக்கிய முதல் பிரிட்டன் திரைப்படம் இது.

*ஆலன் குறித்து நாட்டு மக்களுக்கு முழுமையாக தெரியவந்ததும் 2013ம் ஆண்டு இரண்டாம் ராணி எலிசபெத், ஆலன் மீதான குற்றங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் சார்பில் இதற்காக மன்னிப்பும் கோரப்பட்டது.

*ஆலன் ட்யூரிங் வேடத்தில் சிறப்பாக நடித்து என்று சொல்லமுடியாத அளவுக்கு வாழ்ந்த பெனிடிக்கிற்கு ஆஸ்கர் விருது கிடைக்காதது பெரும் ஏமாற்றமே.

முழு படத்தையும் பார்க்க:

The Imitation Game is a 2014 American historical drama thriller film directed by Morten Tyldum, with a screenplay by Graham Moore loosely based on the biography Alan Turing: The Enigma by Andrew Hodges(previously adapted as the stage play and BBC drama Breaking the Code). It stars Benedict Cumberbatch as real-life British cryptanalyst Alan Turing, who decrypted German intelligence codes for the British government during World War II. The Imitation Game Movie Review, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, War Movie, Tamil Hollywood.

(Visited 698 times, 166 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>