விக்ரமுக்கு ஒரு டி.வி.டி. பார்சல் – மிரக்கிள் இன் செல் நம்பர் 7

tamil-hollywood-miracle-in-cell-no-7-poster

பாக்காம விட்றாதீங்க – Miracle in Cell No.7

நடிப்பு என்பதை வெறுமனே நடிப்பாக மட்டும் எடுத்துக்கொள்ளும் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் வரிசையாக ஹிட் கொடுக்கிறார்கள். நடிப்பை ஒரு தவம் போல் செய்யும் கமல்ஹாசன், விக்ரம் போன்றவர்கள் வரிசையாக ஃபிளாப் கொடுக்கிறார்கள். இதை பார்க்கும்போது ஏதோ உள்நாட்டு சதி போல் தெரிந்தாலும், உண்மை என்ன தெரியுமா? மக்கள் நல்ல படம் பார்க்க ஆசைப்படுகிறார்களே தவிர வித்தியாசமான நடிப்பை பார்க்க விரும்புவதில்லை. இந்த உண்மை புரியாமல்தான் கமல்ஹாசனும், விக்ரமும் பாறையில் மோதி மண்டையை உடைக்கிறார்கள் . விக்ரம் நடிக்க விரும்பும்வகையில் வித்தியாசமான வாய்ப்பும் அதே நேரம் நல்ல கதை அம்சமும் உள்ள கொரியன் படம்தான் மிரக்கிள் இன் செல் நம்பர் 7. தெய்வத்திருமகள் போன்று தெரியும் என்றாலும், இது வேற லெவல்.

tamil-hollywood-miracle-in-cell-no-7-2ஆள் வளர்ந்த அளவுக்கு மூளை வளர்ச்சி அடையாத லியாங் ஹோ எப்படியோ ஒரு ஆறு வயது குழந்தைக்கு அப்பாவாக இருக்கிறார். மகள் மீது பாசத்தை கொட்டிகொட்டி வளர்க்கிறார். மகளுக்கு செய்லர்மூன் என்ற ஸ்கூல்பேக் வாங்கவேண்டும் என்று இருவரும் ஆசையாக இருக்கிறார்கள். அந்த பேக் விற்கும் கடையில் தினமும் போய் பார்த்து சந்தோஷம் அடைகிறார்கள். நாளை சம்பளம் வந்ததும் அந்த பேக் வாங்கிவிடலாம் என்ற நிலையில், ஒரு போலீஸ் கமிஷனர் அந்த பையை தன் மகளுக்கு வாங்கிக்கொடுக்கிறார். அதைப் பார்த்ததும் டென்ஷாகும் லியாங் ஹோ, அவருடன் சண்டைக்குப் போகிறான். அடித்து துவைத்து வெளியே அனுப்பிவிடுகிறார்கள்.

அடுத்த நாள் செய்லர்மூன் பை விற்பனையாகும் இன்னொரு கடை எனக்குத் தெரியும் என்று லியாங் ஹோவை tamil-hollywood-miracle-in-cell-no-7-1அழைத்துச்செல்கிறாள் போலீஸ் கமிஷனரின் மகள். இவனுக்கு முன்னே செல்லும் அந்த சிறுமி திடீரென செத்துக்கிடக்க.. எதுவும் அறியாத லியாங் ஹோ, அந்த சிறுமிக்கு செயற்கை சுவாசம் கொடுக்க முயற்சி செய்கிறான். அதேநேரம் ரத்தவோட்டம் நன்றாக செல்லவேண்டும் என்பதற்காக அந்த சிறுமியின் ஆடையை  தளர்த்தும் நேரம் ஒரு பெண் பார்த்துவிடுகிறாள். சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றுவிட்டதாக சொல்கிறாள். போலீஸ் வந்து பிடித்துப்போகிறது. அந்த சிறுமிதான் என்னை கூட்டிப் போனாள் என்று லியாங் சொல்வதை யாரும் நம்புவதாக இல்லை. முதல் நாள் போலீஸ் கமிஷனர் அடித்ததால், பழி வாங்குவதற்காக அவரது பிள்ளையை பலாத்காரம் செய்து கொன்றுவிட்டான் என்று கேஸ் பதிவாகிறது. அப்பாவை காணாமல் தவித்துப் போகிறாள் யே ஷங்க் எனப்படும் ஆறு வயது தேவதை.

சின்னப் பிள்ளையை பாலியல் பலாத்காரம் செய்ததற்காகவும் கொலை செய்ததற்காகவும் லியாங்கை, அவனது சக கைதிகள் கடுமையான tamil-hollywood-miracle-in-cell-no-7-3தண்டிக்கிறார்கள். ஆனால் ஒரு தருணத்தில் அறையில் இருக்கும் தாதாவை வேறு ஒருவன் கொல்ல முயற்சிக்கும்போது, இடையில் விழுந்து தடுக்கிறான் லியாங்க். அதனால் அவன் மீது கூட்டாளிகளுக்கு இரக்கம் வருகிறது.  உயிரை காப்பாற்றியதற்காக என்ன செய்யவேண்டும் என்று கேட்க, தன் மகளை பார்க்கவேண்டும் என்கிறான். கடினமான காரியம் என்றாலும் நிறைவேற்றித் தருவதாக சொல்கிறான் தாதா.

சிறைக்குள் ஒரு கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, அந்த நிகழ்ச்சிக்கு அவனது மகள் யே ஷங்க்கை ஆட வைக்கிறார்கள். அங்கிருந்து கடத்தி சிறையில் அவர்கள் இருக்கும் ஏழாம் நம்பர் அறைக்கு கொண்டுவருகிறார்கள். அப்பாவை பார்த்ததும் கதறி துடிக்கிறாள் யே ஷங்க். நீங்கள் கெட்டவரா என்று கேட்கிறாள்.

tamil-hollywood-miracle-in-cell-no-7-4நான் நல்லவன், ஆனால் இங்கே இருக்கும் அத்தனை பேரும் கெட்டவர்கள் என்று இயல்பாக சொல்கிறான் லியாங். சில நிமிடங்கள் கழித்து யே ஷங்கை கொண்டுபோய்விட முயற்சிக்கிறார்கள். ஆனால் கலை நிகழ்ச்சி நடத்திய குரூப் போய்விட்டதால், அறைக்குள் ஒளித்துவைக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். அந்த நேரங்களில் கைதிகள் செய்யும் கலாட்டா எல்லாமே வாய்விட்டு சிரிக்கும் ரகம். ஒருவழியாக மாட்டிக்கொள்ளவே, யே ஷங்கை வெளியே அனுப்பிவிடுகிறார்கள்.

லியாங் கொலை செய்யவில்லை என்றால் அங்கே என்ன நடந்திருக்கும் என்று கைதிகள்யோசிக்கிறார்கள். அப்போதுதான் பல விஷயங்கள் தெரியவருகிறது. போலீஸ் கமிஷனர் மகள் வேகமாக ஓடிச்செல்லும்போது பனியில் வழுக்கி விழுந்து, பின்னந்தலையில் அடிபட்டிருக்கிறது. அவள் விழுந்தபோது கைபட்டு பக்கத்தில் இருந்த செங்கல் அவள் நெற்றியில் விழவே பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலே செத்திருக்கிறாள் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

சிறை வார்டன் மூலம் இந்த விஷயத்தை சொல்லி லியாங்கை வெளியே அனுப்ப முயற்சி எடுக்கிறார்கள். வார்டனுக்கும் லியாங் உண்மையான குற்றவாளி இல்லை என்று தெரிந்தாலும் எதுவும் செய்யமுடியாத நிலை. ஆனால் ஒருவழியாக மீண்டும் கோர்ட்டுக்கு கூட்டிப் போகிறார்கள். tamil-hollywood-miracle-in-cell-no-7-6நடந்ததை அப்படியே கோர்ட்டில் சொல்லிவிடு, தப்பித்துவிடலாம் என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். கோர்ட்டுக்கு செல்லும்நேரம் போலீஸ் கமிஷனர் லியாங்கை சந்திக்கிறான். எப்படியோ உன்னால்தான் என் மகள் இறந்துபோனாள். நீ கோர்ட்டில் அப்படித்தான் சொல்லவேண்டும், எதையாவது மாற்றிச்சொன்னால் என் மகளுக்கு என்ன நடந்ததோ, அதுவே உன் மகளுக்கும் நடக்கும் என்கிறான்.

கோர்ட் ஆரம்பமாகிறது. உண்மையை சொல்லி தப்பித்தானா லியாங்.., அவனது மகள் எதிர்காலம் என்னவானது என்பதை அறிந்துகொள்ள படத்தைப் பாருங்கள். நிறைய நிறைய சிரிப்பையும் நிறைய கண்ணீரையும் நிச்சயம் வரவழைத்துவிடும். தந்தை – மகள் பாசத்தை இத்தனை உன்னதமாக விளக்கும் படங்கள் மிகவும் குறைவு. மரணம் ஒரு மனிதனை எப்படியெல்லாம் மாற்றும் என்பதும் ஒரு திகில் தருணம்.

டிரைலர்  இதோ:

பின்குறிப்பு :

 

முழு படத்தையும் பார்க்க:

https://www.youtube.com/watch?v=xV58N42G_zE

Miracle in Cell No. 7 (Hangul: 7번방의 선물; RR: 7beonbangui Seonmul; lit. “A Gift from Room 7″) is a 2013 South Korean film starring Ryu Seung-ryong, Kal So-won and Park Shin-hye. The film is a heartwarming comedy and family melodrama about a mentally challenged man wrongfully imprisoned for murder who builds friendships with the hardened criminals in his cell, and they help him see his daughter again by smuggling her into the prison. Miracle in Cell No.7 Movie Review, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Korean Moive, Korean Cinema, Korean Film, World Cinema, Tamil Hollywood.

(Visited 798 times, 65 visits today)

Related posts

One thought on “விக்ரமுக்கு ஒரு டி.வி.டி. பார்சல் – மிரக்கிள் இன் செல் நம்பர் 7

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>