ம…ரண விளையாட்டு – கேபின் இன் த வுட்ஸ்

Tamil Hollywood Cabin in the Woods Poster

பாக்கவே பாக்காதீங்க – கேபின் இன் த வுட்ஸ்

புது வீட்டுக்கு குடி போனால் அல்லது கூட்டமாக பிக்னிக் கிளம்பினால், அது மரணத்தை நோக்கிய பயணம் என்பதுதான் ஆங்கிலப்படத்தின் எழுதப்படாத விதி. என்ன காரணத்திற்காக  சாகிறார்கள் என்ற நோக்கம்தான் மாறுபடுமே தவிர, மற்றபடி எல்லாமே ஒரே கழுதையாகத்தான் இருக்கும்.

Tamil Hollywood Cabin in the Woods 1அப்படித்தான் இந்தப் படத்திலும் கல்லூரித் தோழர்கள் ஐந்து பேர் வார இறுதியை சந்தோஷமாக கழிப்பதற்காக,  ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு மர வீட்டிற்குப் போகிறார்கள். அங்கே போனதும் அவர்களது செயலும் குணமும் மாற்றம் அடைகிறது. மிகவும் புத்திசாலியும் ஒழுக்கமும் நிறைந்த  கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், குடிகாரனாகவும் காதலியின் அடிமையுமாக மாறுகிறான். ஒழுக்கமும் அழகும் நிறைந்த கிரிஸ்டன் கன்னாலியின் மனமும், உடன் வந்த தோழன் மீது அலைபாய்கிறது. இதை எல்லாம் கவனித்து மார்ட்டி எச்சரிக்கை செய்வதை, யாருமே பெரிதாக கண்டுகொள்ளாமல் தங்கள் சந்தோஷமே முக்கியம் என்று இருக்கிறார்கள்.

Tamil Hollywood Cabin in the Woods 2உண்மையில், அந்த  ஐந்து நண்பர்களையும் மர வீட்டுக்குள் மாட்டிவைத்து, ஏதோ ஒரு பரிசோதனையை ரிச்சர்ட் ஜென்கின்ஸ், பிராட்லே வைட்ஃபோர்டு குழுவும் செய்கிறது. யார் முதலில் மரணத்தைத் தழுவுவார்கள் என்று ஐந்து பேரை வைத்து பந்தயம் நடக்கிறது. ஆராய்ச்சிக் குழுவினர் அனுப்பும் நச்சு கெமிக்கல்களை சுவாசிப்பதால்தான், அவர்கள் இயல்பு மாறி செயல்படுகிறார்கள். அளவுக்கதிகமாக போதை
எடுத்துக்கொண்டதால் மார்ட்டி மட்டும் நச்சுக்கு ஆளாகாமல் தப்புகிறான். தங்களைச் சுற்றி ஏதோ சூழ்ச்சி பின்னப்பட்டிருப்பதை உணர்கிறான். ஆனால் மற்றர்கள் யாரும் அவனை நம்புவதாக இல்லை. அவர்கள் தங்கியிருக்கும் மரவீட்டின் அண்டர்கிரவுன்டில் ஏகப்பட்ட சுவாரஸ்ய பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. அதில் ஒரு டைரியை எடுத்துப் படிக்கிறாள் கிரிஸ்டன். கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஒரு குடும்பத்தின் வாழ்க்கை கதை டைரியில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அந்த டைரியை படித்ததும், செத்துப்போன குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஜாம்பியாக அங்கு வந்து சேர்கிறார்கள். ஒழுக்கம் தவறி எப்போதும் செக்ஸ் வெறி பிடித்துத் திரியும் அன்னா கட்சிஸன் ஜாம்பிக்களால் கொடூரமாக கொலை செய்யப்படுகிறாள்.  அடுத்து கிரிஸ்டனை காதலிக்கும் நண்பனும் ஜாம்பிகளால் படுகொலை செய்யப்படுகிறான்.

Tamil Hollywood Cabin in the Woods 4உடனே மற்றவர்கள் அங்கிருந்து தப்பி வெளியேறுவதுதான் உசிதம் என்று வேனில் ஏறி தப்பிக்கிறார்கள். இப்படி யாரும் தப்பிவிடக்கூடாது என்று வேன் செல்லும் பாதையை வெடி வைத்து தகர்க்கிறது, வெளியே இருந்து கண்காணிக்கும் குழு. அந்தப் பாலத்தை பைக்கில் தாண்டி கடந்துவிடலாம் என்று அசட்டு துணிச்சலில் ஏறி விர்ரென வண்டியைக் கிறிஸ், கண்ணுக்குத் தெரியாத மின்சார வேலியில் மாட்டி சாகிறான். அதனால் மிச்சமிருக்கும் மார்ட்டியும் கிரிஸ்டனும் வண்டியை திருப்பிக்கொண்டு வேறு இடம் செல்ல முயல்கிறார்கள். ஆனால் அதற்குள்  மார்ட்டியும் ஜாம்பிக்களின் தாக்குதலுக்கு ஆளாகிறான்.

கொலைகளை நேரடியாக பார்த்துக்கொண்டிருக்கும் ஆராய்ச்சிக் கும்பல் குஷியாகிறது. தங்கள் விருப்பப்படி கிரிஸ்டனைத் தவிர அனைவரும் சாகடிக்கப்பட்டார்கள் என்று பார்ட்டி வைத்து கொண்டாடுகிறார்கள். கிரிஸ்டன் மரணம் அடைந்தாலும் சரி அதிக வேதனையை அனுபவித்து Tamil Hollywood Cabin in the Woods 3தப்பித்தாலும் பிரச்னை இல்லை என்கிறார்கள். அப்போது ஜாம்பிக்களிடம் இருந்து மார்ட்டி தப்பித்துவருவதை பார்க்கிறார்கள். அவன் கிரிஸ்டனையும் காப்பாற்ற முயற்சி செய்கிறான்.

நாம் தங்கியிருக்கும் இடத்துக்குக் கீழே ஏதோ மர்மம் இருக்கிறது என்று தேடி, அங்கே இருக்கும் எலிவேட்டரை கண்டுபிடிக்கிறான். அந்த எலிவேட்டரில் போகும்போது, விதவிதமாக அழிக்கும் ஜந்துக்களை ஆராய்ச்சிக் குழுவினர் உருவாக்கி வைத்திறுப்பது தெரிகிறது. கிரிஸ்டன் முதலில் டைரி எடுத்துப் படித்த காரணத்தால், இவர்கள் அனைவரும் ஜாம்பிக்களால் வேட்டையாடப்பட்டனர். இவர்கள் வேறு ஏதேனும் ஒன்றை தொட்டிருந்தால் ராட்சச பாம்பு, டைனோசர், ஆவி என ஏதாவது ஒரு விசித்திரம் மூலம்  கொலை செய்யப்பட்டிருப்பார்கள் என்பது தெரியவருகிறது.

தப்பிய மார்ட்டினை கொல்வதற்காக ஒரு  படை அனுப்பப்படுகிறது. தாங்கள் தப்புவதற்காக, அறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் அத்தனை விசித்திர விபரீத உருவங்களையும் கிரிஸ்டனும் மார்ட்டியும் திறந்து விடுகிறார்கள். தேடி வரும் காவலர்களை விசித்திர உயிரினங்கள் தின்று தீர்க்கின்றன.

Tamil Hollywood Cabin-in-the-woodsதங்களை எதற்காக இப்படி ஓர் இடத்தில் மாட்ட வைத்து, கொலை செய்கிறார்கள் என்ற கேள்விக்கு விடை சொல்ல வருகிறாள் தலைமை நிர்வாகி. ஆண்டுதோறும் கடவுளுக்கு ஐந்து மனிதர்களை பலி கொடுத்து வருகிறோம். முதலில் கெட்ட பெண்ணை கொலை செய்தோம். அடுத்து புத்திசாலி, அடுத்து விளையாட்டு வீரன். இனி இந்த முட்டாளும் கன்னிப்பெண்ணான நீயும்தான் இருக்கிறாய். எங்கள் கருத்துப்படி, முட்டாளான மார்ட்டினை நீ கொலை செய்துவிட்டால், நீ உயிர் பிழைக்கலாம் என்கிறார்கள். மார்ட்டினை கொலை செய்து கிரிஸ்டன் உயிர் பிழைத்தாளா என்பதை கண்டிப்பாக நீங்கள் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் எல்லா ஹாரர் படங்களிலும் எப்படி முடிவு இருக்குமோ, அப்ப்டித்தான் இந்தப் படத்திலும் அமைந்துள்ளது. காட்சி அமைப்புகளும், ஜாம்பிக்களின் வருகையும், கண்காணிப்பு குழுவின் நடவடிக்கையும் ஆயாசத்தையே தருவதால், பார்க்கக்கூடாத படத்தின் பட்டியலில் சேர்கிறது கேபின் இன் த வுட்.

படத்தில் ஆறுதலான விஷயம் எதுவுமே இல்லையா என்று கேட்பவர்களுக்காக ஒரே ஒரு விஷயம். படத்தின் நாயகியாக வரும் கிரிஸ்டன் செமயாக இருக்கிறார்.

டிரைலர பாத்து ஏமாறாதீங்க:

பின்குறிப்பு :

*புகழ்பெற்ற நடிகர்கள் நடித்தால் படம் உருப்படியாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதற்கு இந்தப் படமும் ஓர் உதாரணம். அவெஞ்சர்ஸ், தார் படங்களில் நடித்திருக்கும்  கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், எந்த முக்கியத்துவமும் இல்லாத வேடத்தில் வந்து உயிரை விடுகிறார்.

* தொலைக்காட்சி தொடர்களில் கதை, வசனம் எழுதி புகழ்பெற்ற ட்ரூ காட்டர்ட் இயக்கியிருக்கும் முதல் திரைப்படம்.

*இந்தப் படத்தை 3டி தொழில்நுட்பத்தில் வெளியிடுவதற்கு ஆசைப்பட்டாராம் இயக்குனர். தயாரிப்பு தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால், கூடுதல் பணம் விரயமாவது தடுக்கப்பட்டது. ஆனால் படம் எப்படியோ ஹிட் அடித்தது  என்பதுதான் ஆச்சர்யமான தகவல்.

The Cabin in the Woods is a 2012 American horror comedy film directed by Drew Goddard in his directorial debut, produced by Joss Whedon, and written by Whedon and Goddard. The film stars Kristen ConnollyChris Hemsworth, Anna Hutchison, Fran Kranz, Jesse Williams, Richard Jenkins and Bradley Whitford. The plot follows a group of college students who retreat to a remote forest cabin where they fall victim to backwoods zombies, and two scientists who manipulate the ongoing events from an underground facility. Goddard and Whedon, having worked together previously on Buffy the Vampire Slayer and Angel, wrote the screenplay in three days, describing it as an attempt to “revitalize” the slasher film genre and as a critical satire on torture porn. Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Don’t Watch, At Your Risk, The Cabin In The Woods Review, Tamil Hollywood.

(Visited 413 times, 64 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>