ஏகப்பட்ட ஜோக்கர்ஸ் – 41 மதிப்பெண்கள் (Joker Movie Review)

Tamil Hollywood joker review

ஒன்று அல்லது இரண்டு ஜோக்கர்களுடன் சீட்டு விளையாடத் தொடங்கினால், ஆட்டம் படு சுவாரஸ்யமாக இருக்கும். எடுக்கும் அத்தனை கார்டுகளும் ஜோக்கராக வந்துகொண்டே இருந்தால்… சந்தோஷப்படவும் முடியாமல் கீழே போடவும் முடியாமல் தடுமாற வேண்டும். அப்படி  பாராட்டவும் முடியாமல் திட்டவும் முடியாமல் குழப்பவைக்கும்   படம்தான் ஜோக்கர்.

Tamil Hollywood joker review 2மனநல தடுமாற்றத்தில் இருக்கும் மன்னர்மன்னனுக்கு சிகிச்சை அளிப்பதுதவிர அத்தனை காரியங்களிலும் பொன்னூஞ்சலும் இசையும் துணை நிற்கிறார்கள். கனவு ஜனாதிபதியாகவே மன்னர்மன்னன்  தொடரவேண்டும் என்பதுதான் அவர்களது ஆசையா என்ற எண்ணம் முதல் காட்சியிலே வந்துவிடுவதால், அடுத்தடுத்த காட்சிகள் எல்லாமே பட்டாசு தோரணமாகத்தான் தெரிகிறது. எஸ்.வி.சேகர் நாடகங்களில் ஆங்காங்கே கதைக்கு சம்பந்தமில்லாமல் டயலாக்கில் நகைச்சுவை தெறித்துக்கொண்டே இருப்பதுபோல், அரசாங்கத்திற்கு சாட்டையடி ஒவ்வொரு ஷாட்டிலும் விழுந்துகொண்டே இருக்கிறது. ஏன் இப்படி இருக்கிறார் மன்னர்மன்னன் என்ற கேள்விக்கு விடை வருகிறது.

ஒரு தண்ணீர் நிறுவனத்தில் வேலை செய்யும் சோமசுந்தரத்தின் காதலில் காட்சிகள் கவிதையாக தொடங்குகிறது.  சொன்னதை அப்படியே கேட்கும் சோமசுந்தரத்தின் மீது  ஒருவழியாக அவருக்கு ஈர்ப்பு வருகிறது. தான் வாழப்போகும் சோமசுந்தரத்தின் வீடு எப்படியிருக்கிறது என்று பார்க்கவரும் ரம்யா பாண்டியனுக்கு ஒரே ஒரு குறை. டாய்லட் கட்டிவிட்டால் கல்யாணம் என்கிறார். அதனால் கடன் எல்லாம் வாங்கி காரியம் சாதிக்க நினைக்காமல் அரசாங்கத் திட்டத்திற்கு பெயர் கொடுத்து காத்திருக்கிறார் சோமசுந்தரம். கீழ்மட்டம் தொடங்கி அத்தனைபேரும் தின்று தீர்த்துவிட, Tamil Hollywood joker review 5மிச்சமாக கிராமத்து மக்களுக்கு கழிவறை கோப்பை மட்டுமே கிடைக்கிறது. ஆனாலும் திருமணத்திற்கு சம்மதிக்கிறாள் ரம்யா.  திருமணம் முடிந்து இருவரும் சந்தோஷத்தில் மிதக்கிறார்கள். வயிற்றில் குழந்தை உருவாகிறது. இந்த நேரத்தில் கட்டிமுடிக்கப்படாத கழிவறை சுவர் விழுந்து, கோமா நிலைக்கு ஆளாகிறார் ரம்யா. அவர் துன்பப்படுவதை காண சகிக்காமல் கருணைக் கொலைக்கு மனு போட, தள்ளுபடியாகிறது. இந்த சிக்கல்களை தாங்கமுடியாமல் மனச்சிதைவுக்கு ஆளாகிறார் மன்னர்மன்னன்.

இந்திய நாட்டில் ஜனாதிபதிக்கு எந்த பவருமே கிடையாது என்பது வாண்டுக்குக்கூட தெரியும், செக்யூரிட்டி சொன்ன கதையைக் கேட்டு ஜனாதிபதியாக தன்னை மாற்றிக்கொள்கிறார் என்பதுதான் கொஞ்சமும் நம்பமுடியவில்லை. அதன்பிறகு ஜனாதிபதியாக Tamil Hollywood joker review 3அவர்  நடத்தும் போராட்டங்கள் அத்தனையும் ஆஹா ரகம். சசிபெருமாள், டிராஃபிக் ராமசாமி, நந்தினி போன்ற அறப்போராளிகளை கண்ணுக்குள் கொண்டுவந்து நிறுத்துகிறார். அதற்காக காவல்துறையால் கடுமையாக கவனிக்கவும் படுகிறார்.

படம் நெடுக ஷார்ப்பாக வசனம் விழுந்துகொண்டே இருக்கிறது. கேரக்டருக்கு ஏற்ப வசனம் என்பதில்லாமல் சகஜமாக  செக்யூரிட்டி கார்டு தொடங்கி ஸ்டேஷனில் இருக்கும் கைதி வரையிலும் மிகத்தெளிவாக படபடவென வசனங்களால் வெடிக்கிறார்கள்.  பொன்னூஞ்சல், ஜனாதிபதி தொடங்கி படத்தில் பங்குபெறும் அத்தனை பேருமா இப்படி வசனம் பேசவேண்டும்?

குடிப்பது தவறு என்று தெரிந்துதான் மக்கள் குடிக்கிறார்கள். தேர்வு செய்யப்படும் எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் கொள்ளையடிப்பார்கள் என்று தெரிந்தேதான் மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள். தாலுகா ஆபிஸ் தொடங்கி செகரட்டேரியட் வரையிலும் பணம்தான் பேசும் என்பதும் மக்களுக்குத் தெரியும். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் சட்டம் வெவ்வேறாகத்தான் செயல்படும் என்பதும் நடைமுறைதான். இவற்றை குத்திக்காட்டுவதுதான் நோக்கமா என்ற கேள்வி எழாமல் இல்லை.

Tamil Hollywood joker review 6இதுவரை மட்டுமல்ல இனிமேலும் யாரும் தொடுவதற்கு தயங்கும் கதை, மிகச்சரியான பாத்திரத் தேர்வு, கத்தி போல் வசனங்களில் ராஜுமுருகன் வெற்றி பெற்றிருக்கிறார் என்றாலும்  கருணைக் கொலையை மட்டும் எடுத்துக்கொண்டு கதை நகர்ந்திருந்தால் அணுகுண்டாக வெடித்திருக்கலாம்.

தீப்பொறி ஆறுமுகம் மேடைகளில் ஒன்றரை மணி நேரம் முழங்குவதைக் கேட்டு சந்தோஷமாக சிரித்து கைதட்டுவது போலத்தான் படத்தை ரசிக்கிறான் தமிழன். தின்று கொழுத்துவிட்டு முகப்புத்தகங்களில் தொலைந்துபோன தமிழன் எந்தப் போராட்டத்துக்கும் வரமாட்டான் இயக்குனரே…

சினிமா ரசிகர்களுக்கு – 41 மார்க்

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

Joker is a 2016 Indian Tamil language political satire film, written and directed by Raju Murugan (whose previous was Cuckoo) and produced by Dream Warrior Pictures. The film stars Guru Somasundaram and newcomers Ramya Pandian and Gayathri Krishnaa. Bava Chelladurai, Ramasamy and Bala Murugan in supporting roles. Joker Tamil Movie Review, ஜோக்கர் திரைப்பட விமர்சனம், Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Just see, Just watch, Tamil Hollywood

(Visited 284 times, 26 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>