காதல் ஓட்டை – தட்டத்தின் மறையத்து (Thattathin Marayathu)

Tamil Hollywood Thattathin Marayathu poster

பாக்கவே பாக்காதீங்க – தட்டத்தின் மறையத்து

மலையாளத்தில் சூப்பர்ஹிட் அடித்து, தமிழில் ரீமேக் ஆகும் தட்டத்தின் மறையத்து ஒரு படம் அல்ல… நல்ல பாடம். அதாவது காதல் படத்தை எப்படி எடுக்கக்கூடாது என்று விலாவாரியாக சொல்லிக்கொடுக்கும் பாடம்.

காதலிக்கச் சொன்னா கடுப்பேத்துறாங்க மை லார்டு என்ற அலற வைக்கும் அளவுக்கு முதல் காட்சி தொடங்கி கடைசி நொடி வரையிலும் காதல் பற்றி பேசிக்கொண்டே இருக்கும் திராபையான ஒரு படம்தான் தட்டத்தின் மறையத்து.

Tamil Hollywood nivin pauly in thattathin marayathuபோலீஸ் ஸ்டேஷனில் கைதியாக வைக்கப்பட்டிருக்கும் நிவின் பாலி பிளாஷ்பேக்கில் கதை சொல்கிறார். வேறு வேலைவெட்டி இல்லாத சப் இன்ஸ்பெக்டர் மனோஜ் கே.ஜெயனும் மற்ற காமெடி போலீஸாரும் சேர்ந்து கதை கேட்கிறார்கள்.

Tamil Hollywood  in Manoj k Jayan thattathin marayathuகுட்டிப்  பையனாக இருக்கும்போதே வினோத் அதாங்க நம்ம நிவின் பாலி ஒரு அழகான இஸ்லாம் சிறுமி மீது ஆசைப்படுகிறார். அந்த சிறுமியை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

Tamil Hollywood Isha Talwar thattathin marayathuகாலம் மாறுகிறது. இளைஞனாக மாறுகிறார் நிவின். ஒரு கல்யாண வீட்டில் சினிமா இலக்கணப்படி ஓடிப்பிடித்து விளையாடும்போது, கதாநாயகி ஆயிஷாவாக வரும் இஷா தல்வார் மீது மோதிவிடுகிறார். பர்தாவுக்கு பின் இருக்கும் ஆயிஷாவின் முகம் நிலவை விட பிரகாசமாக தெரிகிறது. (ஒருவழியாக தலைப்புக்கு அர்த்தம் சொல்லியாச்சு) அதன்பிறகு வழக்கம்போல் எல்லா ஆண்களுக்கும் வரும் காதல் அரிப்பு நிவின் பாலிக்கு வருகிறது. அதனால் அவரை விரட்டி விரட்டி காதல் செய்கிறார்.

Tamil Hollywood nivin pauly & Isha thattathin marayathuஅரசியல்வாதியும் தீவிர இஸ்லாமியருமான அப்துல்காதர் வீட்டில் வசிக்கும் ஆயிஷாவை சந்திப்பதே கடினம். அதனால் நண்பர்கள் துணையுடன் அப்துல்காதர்  வெளியூர் மீட்டிங்கில் இருக்கும்போது வீட்டுக்குள் இறங்குகிறார். இது தொடரும்போது ஒரு நாள் விஷயம் தெரிகிறது. அடித்துப்பிரித்து போலீஸ் ஸ்டேஷனில் சேர்க்கிறார்கள்.

Tamil Hollywood  in Manoj k Jayan 1 thattathin marayathuஆயிஷாவுக்கும் உன் மீது உண்மையிலே காதல் இருந்தால், உங்கள் இருவரையும் சேர்த்து வைக்கிறேன் என்று மனோஜ் கே.ஜெயன் சொல்லவே, அப்போதுதான் கல்யாணம் முடிக்க வேண்டும் என்றால் பணம் தேவைப்படும் என்பது புரிகிறது. உடனடியாக பணம் சம்பாதிக்கத் தொடங்குகிறார். போலீஸ் துணையுடன் ஹெல்மட் விற்கிறார். அதன்பிறகு பர்தா ஷாப் தொடங்குகிறார். கட்டுக்காவல் தாண்டி கடையைத் திறக்க வருகிறார் ஆயிஷா.

Tamil Hollywood Thattathin Marayathu song image 2அதன்பிறகு இருவரும் எப்படி ஒன்றுசேர்கிறார்கள் என்பதை, தயவுசெய்து வெண்திரையில் பார்க்க முயற்சிக்க வேண்டாம். ஏனென்றால் வழக்கமான காட்சிகளை வைத்தே படம் முடிகிறது.

பிறகு ஏன் படம் ஹிட் அடித்தது என்று கேட்டால்  இன்று ஹாட்டாக இருக்கும் நிவின் பாலியும் இஷாவும் முக்கியமான முதல் காரணம். அடுத்தபடியாக இன்று சினிமா பார்ப்பது வெறுமனே இளைய சமுதாயம் மட்டும்தான் என்பதால், அவர்களை மட்டுமே திருப்தி படுத்தினால் போதும் என்ற உயர்ந்த லட்சியத்தில் எடுக்கப்பட்டிருக்கும் ஜாலியான  காட்சிகள் மற்றும் வசனங்கள்.

மற்றபடி படத்தில் உருப்படியாக எதுவும் இல்லை என்பதால் பாக்கவே பாக்காதீங்க.

உங்களை எச்சரிப்பதற்காக இங்கே டிரைலர்:

பின்குறிப்பு :

*நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர், பாடலாசிரியர், இயக்குனர் என புகழ்பெற்றிருக்கும் வினீத் சீனிவாசனின் இரண்டாவது படம் இது. இவர் மலையாள நடிகர் சீனிவாசனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

*நிவின்பாலிக்கும் வினீத்துக்கும் நல்ல நட்பு இருப்பதால் அடுத்தடுத்த படங்களிலும் இவர்களது கூட்டணி தொடர்கிறது.

*ஒரு வடக்கன் செல்பி, ஜேக்கப்பின்டே சொர்க்கராஜ்யம் ஆகிய படங்களும் சீனிவாசன் கைவண்ணத்தில் உருவானதே.

Thattathin Marayathu (English: Behind the Veil) is a 2012 Malayalam musical-romantic drama film written and directed by Vineeth Sreenivasan, starring Nivin Pauly and Isha Talwar in the lead roles. The supporting cast includes Aju Varghese, Manoj K. Jayan, Sunny Wayne, Sreeram Ramachandran, Bhagath Manuel, Manikuttan, Sreenivasan, and Niveda Thomas.   Based on inter-caste relationship, it is being remade in Tamil as Meendum Oru Kadhal Kadhai for a 2016 release. Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Watch at your risk, Tamil Hollywood

(Visited 426 times, 54 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>