நிஜமான தெறி – ஆக்‌ஷன் ஹீரோ பிஜு (Action Hero Biju)

Tamil Hollywood Action_Hero_Biju_(2016)_-_Poster

ஜஸ்ட் வாட்ச் – ஆக்‌ஷன் ஹீரோ பிஜு

சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரியைவிட அதிகாரம் நிறைந்தவராக ஒரு சப்-இன்ஸ்பெக்டரை காட்டும் பலவீனமான லாஜிக் என்றாலும், தன்னுடைய மீசையால் படத்தை தூக்கி நிறுத்துகிறார் நிவின்பாலி.. மாஸ் ஹீரோவாக ஒவ்வொரு காட்சியிலும் பில்டப் கொடுப்பதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இருந்தாலும், அடக்கிவாசித்தும் ஆக்‌ஷன் காட்டுகிறார்.

Tamil Hollywood Action_Hero_Biju_1கதை என்று எதுவுமே இல்லாமல் அட்வைஸ் தோரணங்களை நீளமாக கட்டி, அதையே திரைக்கதையாக மாற்றிவிட்டார்கள். கதை இல்லாமல் இப்படி காட்சிகளாக  வைத்திருப்பதால், ஆரம்பத்தில் மட்டும் பிஜுவை ரவுடிகள் குத்துவதைக் காட்டிவிட்டு படத்தை ஆரம்பிக்கிறார்கள்.

படத்தின் தலைப்பு முழு கதையையும் சொல்லிவிடுகிறது. எதற்கும் அடங்காத, யாருக்கும் அடிபணியாத நேர்மையான சப் இன்ஸ்பெக்டர் பிஜுதான் நிவின். என் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் ஒரே ஒரு ரவுடி மட்டும்தான் இருக்கவேண்டும், அது நான்தான் என்கிறார் நிவின். அதனால் தவறு செய்யும் அத்தனை ரவுடிகளையும் அடித்து நொறுக்கிறார். கேரளாவின் தேங்காய்க்கு புதிதாக ஒரு உபயோகம் கண்டுபிடித்து, அதனால் நொறுக்கும்போது நமக்கும் முதுகுப்பக்கம் வலிக்கிறது.

Tamil Hollywood Action_Hero_Biju_240 நாட்கள் வேலை பார்த்தேன், சம்பளம் தரவில்லை என்று ஒரு பெண் புகார் கொண்டு வருகிறார். மூன்று மாதங்கள் நிச்சயம் பணி புரிவேன் என்று அக்ரிமென்ட் கையெழுத்து போட்டுக் கொடுத்திருப்பதால், சம்பளம் தரமுடியாது என்று நிர்வாகத்தினர் சட்டம் பேசுகிறார்கள். உடனே ஆவேசமாகும் நிவின், அந்த கம்பெனியில் என்னென்ன சிக்கல் இருக்கிறது என்று கண்டுபிடிக்கத் தொடங்க.. உடனே செட்டில் செய்ய முன்வருகிறார்கள்.

வீட்டு தோட்டத்தில் மாங்காய் திருடிய சின்னப்பெண்ணை, நாய் கொண்டு கடிக்க வைத்த லோக்கல் வி.ஐ.பி-யை, புத்திசாலித்தனமாக கைது செய்து கும்கும் என்று கும்மி கோர்ட்டில் ஒப்படைக்கிறார். ஆற்றில் குழந்தையைத் தூக்கிப்போட்டு, தானும் தற்கொலைக்கு முயலும் பெண்ணை காப்பாற்றுகிறார். பிரிந்திருக்கும் கணவன், மனைவியை சேர்த்துவைக்க பாடுபடுகிறார்.

Tamil Hollywood Action_Hero_Biju_3பள்ளி மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாவதை கண்டுபிடிக்கிறார். அம்மாக்களை வரவழைத்து பிள்ளைகள் மீது கண்காணிப்பும் அக்கறையும் செலுத்தச்சொல்லிவிட்டு… கஞ்சா விற்பனை செய்பவனை போட்டுத் தாக்குகிறார். கஞ்சா விற்பனை எந்த அளவுக்கு பரவியிருக்கிறது, கஞ்சா குடித்துவிட்டு எப்படிப்பட்ட தவறுகள் நடக்கிறது என்பதை எல்லாம் ஒரு டாக்குமென்டரி பாணியில் எடுத்துச்சொன்னாலும், பாராட்டவே தோன்றுகிறது.

வேலைகளுக்கு இடையே திருமணம் முடிக்க இருக்கும் பெண்ணுடன் பேசுவதும் கொஞ்சுவதும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. வாக்கிடாக்கியை விளையாட்டாய் ஒருவன் சுட்டுக்கொண்டுபோக, விளையாட்டாகவே கண்டுபிடிக்கிறார் நிவின்.

கடைசியில் வருகிறது ரோகிணியின் கதை. வீட்டு வேலைக்காரியான ரோகிணி நகையை திருடிவிட்டதாக வீட்டுக்காரம்மா குற்றம் சாட்டுகிறாள். ரோகிணி வேலைக்கே போகவில்லை என்கிறார் அவரது கணவன். உண்மையை கண்டுபிடிக்கும்போது கண்களை கனக்கச் செய்கிறார். உணர்ச்சிகளைவிட சட்டம் பெரிது என்று Tamil Hollywood Action_Hero_Biju_4நிவின் சாதாரணமாக முடிவெடுத்து நகர்கிறார். இதுபோல் குட்டிக்குட்டியாக ஏகப்பட்ட சுவாரஸ்ய முடிச்சுகள் படம் நெடுக விரவிக்கிடக்கின்றன.

ஆரம்பத்தில் ரவுடிகளால் குத்தப்பட்ட நிவின் உயிர் பிழைத்தாரா என்பதை திரையில் பாருங்கள். ஒரு  நல்ல படத்துக்குத் தேவையான அழுத்தமான கதை, லாஜிக்கான திரைக்கதை எதுவுமே இல்லை என்பது உண்மைதான். ஆனால் இப்படியும்  ஒரு படத்தை பார்த்துவைப்போமே என்று சொல்லத்தோன்றுகிறது நிவின் பாலியின் நடிப்பு.

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

பின்குறிப்பு :

* முதன்முதலாக தன்னுடைய சொந்த தயாரிப்பாக இந்தப் படத்தை வழங்கியிருக்கிறார் நிவின்.

* இயக்குனர் அப்ரிட் சைனுக்கு இது இரண்டாவது படம். இவரது முதல்படமான 1983-லும் நிவின் பாலிதான் ஹீரோ.

* குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்திருக்கும் அனு இம்மானுவேல் இந்தப் படத்தில் கதாநாயகியாக வருகிறார், பேசுகிறார், காணாமல் போகிறார்.  அடுத்த படத்திலாவது நடிக்க வைக்கிறார்களா என்று பார்க்கலாம்.

 —

Action Hero Biju is a 2016 Indian Malayalam-language drama film directed and co-written by Abrid Shine in his second directorial venture. The film stars Nivin Pauly in the title role of police inspector Biju Paulose, a sub-inspector with the Kochi City Police. Nivin Pauly, Abrid Shine and Shibu Thekkumpuram produced the film under the banners Pauly Jr Pictures and Full On Studios. The film is written by Muhammad Shafeeq and Shine. Jerry Amaldev composed the original songs, while Rajesh Murugesan composed the background scoreAction Hero Biju Movie Review, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Just see, Just watch, Tamil Hollywood

(Visited 304 times, 46 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>